Monday, June 07, 2010

10 ஜூன்: சுமேரிய எழுத்துகள் பற்றி பேரா. சுவாமிநாதன்

எழுதுவதற்காக மனிதன் செய்துள்ள முயற்சிகள் சாதுர்யமானவை. எழுதத் தேவையான பொருள்களை உருவாக்க பனை மரமோ, பாபிரஸ் செடியோ இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? மரங்கள் அதிகம் இல்லாத சுமேரியாவில் மக்கள் களிமண்ணைப் பயன்படுத்தினார்கள். களிமண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது? சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்படுவதைப்போல சில முத்திரைகளை மட்டுமே உருவாக்கமுடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு! இந்தக் களிமண்ணில் உருவானதுதான் கிட்டத்தட்ட 4,000 வருடங்களுக்கு முந்தைய சுமேரிய எழுத்துமுறை. அதை வைத்து, சுமேரியாவின் சமூகம் தொடர்பான தெளிவான ஆவணங்களை அவர்கள் உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய கில்காமேஷ் என்ற காப்பியம் இன்றும் கிடைக்கிறது.

சுமேரியர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். அவர்கள்தான் வில், அம்பு, சக்கரம் ஆகியவற்றை முதலில் பயன்படுத்திய புதுமைக்காரர்கள். பத்தடிமானம், ஆறடிமானம் போன்ற எண் முறைகளை உருவாக்கியவர்கள். இன்றும் நேரத்தைக் குறிப்பிட ஆறடிமான முறைதான் பயன்படுகிறது. வட்டத்தின் கோணங்களும் ஆறடிமான முறையைத்தான் பின்பற்றுகின்றன. சுமேரியர்கள் கணிதம், மருத்துவம், வானியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினர். மந்திரங்கள், புராணங்கள், காப்பியங்கள் ஆகியவற்றை எழுதிவைத்தனர்.

சுமேரிய வரிவடிவத்தைப் பார்த்தால் அதனை எழுத்துகள் என்றே சொல்லமாட்டீர்கள்! சுமேரிய எழுத்துமுறை மிகவும் சுவாரசியமானது. ஆனால் அதைவிடச் சுவாரசியமானது, தொலைந்துபோன இந்த எழுத்துமுறையைப் போராடிக் கண்டுபிடித்த ஓர் ஆராய்ச்சியாளரின் கதை.

மேலும் தெரிந்துகொள்ள, வரும் வியாழக்கிழமை, 10 ஜூன் 2010, மாலை 6.30 மணிக்கு கிழக்கு மொட்டைமாடிக்கு வாருங்கள். பேரா. சுவாமிநாதனின் தொடர் லெக்ச்சர் வரிசையில் இரண்டாவது லெக்ச்சர் இது. முதல் லெக்ச்சரின் வீடியோவை இங்கே காணலாம்.
.

3 comments:

  1. இந்த சுமேரிய எழுத்துமுறைக்கு "க்யூனிஃபார்ம்" என்று பெயர்.

    ReplyDelete
  2. விவிலிய தொன்மங்களின் உண்மை வடிவங்கள் அல்லது மூல வடிவங்கள் இங்குதான் உதித்தன. சுமேரிய துதி பாடல்களிலிருந்தே ஏசுவின் போதனைகள் என இன்றைக்கு வலம் வரும் சில மிக பிரசித்தி பெற்ற வழக்காடுகள் உருவாக்கப்பட்டன. ஏசுவின் மரித்தல் புதைத்தல் உயிர்த்தெழுதல் என்கிற புராண நம்பிக்கையும் இங்கிருந்து பெறப்பட்டதே...இன்றைக்குத்தான் இதைப் பார்க்கிறேன். தெரிந்தால் கட்டாயமாக வந்திருப்பேன்...Just missed. யூட்யூப்லெல்லாம் போடமாட்டீங்களா? குறைந்த பட்சம் ஒரு பதிவாவது?

    ReplyDelete