ராமு எண்டோமெண்ட்ஸும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பை ஜூன் 6 அன்று வெளியிடுகிறார்கள். இரு தொகுதிகள், சுமார் 1100 பக்கங்களுக்கு மேல்.
நாள்: 6 ஜூன் 2010
நேரம்: காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை
இடம்: டேக் மையம் (TAG Centre) - சங்கரா ஹாலுக்கு எதிரில், டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை
டேக் மையத்தின் ஆர்.டி.சாரி வெளியிட, நடிகர் சிவகுமார் பிரதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். கதைகளில் சிலவற்றை திருப்பூர் கிருஷ்ணன், சுஜாதா விஜயராகவன், குடந்தை கீதப்பிரியன், ராமசாமி சுதர்சன் ஆகியோர் படிக்கிறார்கள். பிறகு இந்திரா பார்த்தசாரதியின் ஏற்புரை.
நிகழ்ச்சிக்கு வர விரும்புபவர்கள் முன்கூட்டியே பிரசன்னாவை மின்னஞ்சலிலோ (haranprasanna@nhm.in) அல்லது தொலைபேசியிலோ (95000-45611) தொடர்புகொள்ளவும். அழைப்பிதழுடன் வருபவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.
8.30 முதல் காலை உணவு. காலை உணவு முடிந்ததும் 9.30-க்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதன்பின் நிகழ்ச்சி முடியும்வரை அரங்கின் கதவுகள் திறக்கப்படா. எனவே நிகழ்ச்சிக்கு வரப் பதிவு செய்திருப்பவர்கள் முன்கூட்டியே வந்துவிடவும். பிறகு அனுமதிக்கப்படவில்லை என்று வருத்தப்படாதீர்கள். நன்றி.
இந்திரா பார்த்தசாரதி படைப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
//சுமார் 1100 பக்கங்களுக்கு மேல்.//
ReplyDeleteதுட்டு எவ்வளவு சார்? :-(
//நிகழ்ச்சி முடியும்வரை அரங்கின் கதவுகள் திறக்கப்படா.///
ReplyDeleteஇப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடுவது முறையல்ல. :-)
Thank you for the details. Will order when it is available online.
ReplyDeleteRegards,
Rajesh
இன்ஜினியரிங் கல்லூரி ரேஞ்சிக்கு இருக்கிறதே இந்த ரூள்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ். இப்படியெல்லாம் செய்து ஏன் ஒரு சிறந்த எழுத்தாளரின் பெயரை கெடுக்கிறீர்கள். நிகழ்ச்சியின் நடுவே கொட்டாவி விட்டால் கொட்டுவீர்களோ கொட்டாவி விடுபவர்களின் தலையில?
ReplyDeleteஇந்த அராஜகத்தை எதிர்த்து யாராவது போராட்டத்தில் குதிக்காமல் இருக்க என் அப்பன் முருகனை வேண்டிக்கிறேன்..!
ReplyDeleteபஞ்சகட்சம், மடிசார், பூணூல் என டிரெஸ் கோடு ஏதேனும் இருக்கிறதா என ஷோபா சக்தி கேட்கிறார்.எனக்கும் அதே சந்தேகம்தான்.
ReplyDeleteபேசாமல் வர்றவங்க காலில் ஒரு சங்கிலையும் சேர்த்து சேரோட கட்டி விடுங்க ஆட அசைய மாட்டாங்க
ReplyDeleteஅந்த நல்ல எழுத்தாளரை இதை விட நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவமானப் படுத்த முடியாது
ReplyDeleteஹரன் பிரசன்னா என்னுடைய அலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை மெயிலுக்கு பதிலும் தரவில்லை (முந்தைய அனுபவமும் அதே) அப்புறம் ஏன் அவருடைய contact details தருகிறீர்கள்?
ReplyDeleteகவி, உங்கள் மடல் எனக்கு எதுவும் வரவில்லை. முந்தைய அனுபவமும் அது என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் எது என்று தெரியவில்லை. எனக்கு வந்த எல்லா மடல்களுக்கும் நான் பதில் அனுப்பியிருக்கிறேன். எனக்கு வந்த எல்லா அழைப்புகளுக்கும் நான் பதில் சொல்லிவிட்டேன். இதையும் மீறி உங்கள் மடலும் அழைப்பும் தவறியிருந்தால் வருந்துகிறேன். மீண்டும் மடல் அனுப்புங்கள்.
ReplyDelete