Tuesday, June 01, 2010

ஜூன் 5: புத்தகம் போடலாம் வாங்க!

ஜூன் 3, தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழ்ப் பதிப்பாளர் தினமாகக் கொண்டாட முடிவெடுத்துள்ள கௌரா இலக்கிய மன்றமும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையமும் இணைந்து ஜூன் 5 அன்று திருச்சியில் தமிழ்ப் பதிப்பாளர் தினக் கருத்தரங்கு ஒன்றை நடத்துகிறார்கள்.

இடம்: திருச்சி கலையரங்கம், மேல் தளம்
நேரம்: மாலை 5 மணி
தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றுபவர்: த. சவுண்டையா, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்

கருத்தரங்கில் கலந்துகொள்வோர்:

1. இன்றைய சூழலில் பதிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நல்வாய்ப்புகள் - கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம்
2. நவீன தமிழ்ப் பதிப்புலகம் எதிர்கொள்ளும் சவால்கள் - உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரன்
3. நாளைய தலைமுறைக்கு பதிப்புத்துறை செய்யவேண்டியது என்ன? - கிழக்கு பதிப்பகம் பா.ராகவன்
4. பதிப்புலகில் வெற்றிபெறுவது எப்படி? - சீதை/கௌரா பதிப்பகம் ராஜசேகரன்

1 comment:

  1. //நாளைய தலைமுறைக்கு பதிப்புத்துறை செய்யவேண்டியது என்ன? - கிழக்கு பதிப்பகம் பா.ராகவன்//

    தங்கத் தலைவர் பாரா அவர்களை திருச்சிக்கு வரவேற்கிறோம்.

    கோயிஞ்சாமி ஃபேன்ஸ் க்ளப்,
    கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி.

    ReplyDelete