கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.
கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.
இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.
தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்.
யாரோ புண்ணியவான், Coimbatore என்ற பெயரில் ஒரு Coffee-Table வண்ணப் புத்தகத்தை அச்சிட்டு விநியோகிக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார். தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்காக சுமார் 450 பிரதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் வந்திருந்தவர்களுக்குக் கொடுக்கும் முன்னால் அங்கும் இங்கும் செல்பவர்கள் உள்ளே நுழைந்து ஆளுக்கு இரண்டு, மூன்று என்று அள்ளிக்கொண்டு சென்றனர். ‘கொங்கு வரலாறு’ என்ற பெயரில் யாரோ அடித்துத் தந்த புத்தகத்துக்கும் இந்தக் கதிதான். தைரியமாக கண் பார்வைக்கு முன்னால் தெனாவட்டாக வந்து அள்ளி எடுத்துச் செல்பவர்கள். அங்கும் இங்கும் ஓரப்பார்வை பார்த்து, சடாரெனக் குனிந்து அள்ளிக்கொண்டு செல்பவர்கள். இரவு யாரும் இல்லாதபோது திருடிச் செல்பவர்கள். பத்திரிகைக்காரர்களுக்கு என்று நான் எடுத்து வைத்திருந்த புத்தகங்களும் மறுநாள் காலை களவாடப்பட்டிருந்தன.
கொடுக்கப்பட்டிருந்த பைகளில் கண்ட கண்ட பொருள்களையும் வைத்து, முறைகேடாகப் பயன்படுத்தியதில், பை வார் பிய்ந்துபோக, அவற்றை மாற்றித்தாருங்கள் என்று வந்தவர்கள் பலர். எப்படி மாற்றித்தர முடியும் என்று சிறிதேனும் யோசித்தார்களா? இது என்ன, விட்கோவில் காசு கொடுத்து வாங்கிய பொருளா, மாற்றித்தர?
ஊரில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு நான்கு பைகள், மெமெண்டோக்கள் வேண்டும் என்று சொல்லிவைத்து, அதிகாரம் கொண்டோரிடமிருந்து வாங்கி எடுத்துக்கொண்டுபோன கண்ணியமான பதவிகளில் இருப்போர், பத்திரிகைக்காரர்கள். அழகிரி சொன்னாரு, கனிமொழி சொன்னாங்க, ஸ்டாலின் பெண்டாட்டி கேட்டாங்க என்று 15, 15 பைகளாக வந்து எடுத்துச் சென்ற போலீஸ்காரர்கள்.
எண்ணற்ற சால்வைகள், எண்ணற்ற மெமண்டோக்கள் (கண்ணாடிப் பெட்டகத்துக்குள் அடைக்கப்பட்ட, செப்பில் வெள்ளி(?)யால் அடிக்கப்பட்ட திருவள்ளுவர்கள்) என அனைத்தும் ஆங்காங்கு அவரவர்களால் முடிந்தவரை அள்ளப்பட்டன. வைத்துக்கொண்டு என்ன சாதனை செய்துவிடப் போகிறார்கள் என்று புரியவில்லை.
செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.
[இந்த ரகளைகள் அனைத்தையும் நேரில் கண்ட காரணத்தால் ஒரு துண்டு சோவனீர்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் முடிவாக இருந்து, எனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் தானம் தந்துவிட்டேன்.]
இலையப்பம்
5 hours ago
ஹ்ம்ம்...
ReplyDeleteபயிலரங்கில் நான் வைத்திருந்த குறிப்பேடு வந்திருந்த பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.இருமுறை என்னோட டேட்டா கார்டு திருடு போகும்நிலை இருந்தது.நான் சற்று உஷாராக இருந்ததால் தப்பித்தது .
ReplyDeleteநான் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தினசரி களை கேட்டு வாங்கி சென்றனர். மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்றனர். அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(
இது ஒரு பரம்பரை நோய் என்று அயர்லாந்தை சேர்ந்த அய்யாசாமி கண்டுபிடித்துள்ளார். கி.மு 200 முதல் கி.மு 300 வரையிலான காலத்தில் திராவிட இனத்தில் (தமிழினம்னே சொல்லலாமா?) இந்த நோய் தோன்றியிருக்கலாம் என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
ReplyDeleteநல்ல கோபம்!
ReplyDeleteஅரவிந்தன்: இன்னும் பலவற்றை நான் எழுதவில்லை. சாப்பாட்டு அரங்கில், தேநீர் வழங்கும் இடத்தில் நடந்தவை போன்ற அசிங்கங்களை எங்கும் பார்க்கவில்லை. மாடரேஷன் என்பதே இல்லாமல், வாங்கி வாங்கிச் சாப்பிட்டது; எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...
ReplyDeleteஎத்தனை எத்தனையோ பென் டிரைவ்கள் களவாடப்பட்டன. இலவசமாகப் பயன்படுத்த வைத்திருந்த கணினிகளின் ஆப்டிகல் மவுஸ்களைத் ‘தள்ள’ முயற்சி செய்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இலவசம் என்ற வார்த்தை எந்த அளவுக்கு நம் மக்களை ஆட்டிவைக்கிறது! திருடுதல் என்பது எவ்வளவு ஈனத்தனமான செயல் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்? ஐயன் திருவள்ளுவன் என்று வாய் கிழியப் பேசுவது இதற்காகத்தானா?
தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.
===
ஆனால் இவற்றையும் மீறி பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவைபற்றி எழுதுவதற்குமுன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
இதுமாதிரி ஏன் எனக்கு எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை என்று தெரியவில்லை :-)
ReplyDeleteமற்றபடி ஆஞ்சநேயர் கோயிலில் மிளகுப் பொங்கல் கொடுத்தால், அதை அடித்துப் பிடித்து வாங்கும் மனநிலையில் இருக்கும் சராசரித் தமிழன்தான் நானும் என்ற முறையில் உரிமையோடு ஒன்றை கேட்கிறேன். “தயவுசெய்து மாநாட்டு சிறப்பு மலர் இருந்தால் கொடுத்து உதவுங்கள்”. எனக்கு கொடுக்கப்பட வேண்டிய மாநாட்டு மலரை யாரோ ஒரு புண்ணியவான் அபேஸ் செய்துவிட்டாராம் :-(
இலவசமாய்ப் பெறுவதை இமாலய சாதனையாய் கருதும் பிச்சைக்காரத் தமிழன் :-(
ReplyDelete//எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...//
ReplyDeleteஉலகில் எங்கிருந்தாலும் இந்தியன் இப்படிதான்
உங்கள் கோபம் தணிந்தது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteNHM Converter and Writer போன்ற ஒரு மென்பொருள் செய்த பிறகு உங்களுக்கு கணினியில் தமிழ் எழுத்துருக்கான அடிப்படை என்ன என்று தெரிந்திருக்கும். அது தொடர்பான ஒரு கேள்வி. உலகத்தமிழ் மாநாட்டின் ஒரு தீர்மானமாக தமிழ் எழுத்துக்களில் மாற்றம் கொண்டு வருவதாக அறிந்தேன். இதன் தேவை மற்றும் நல்லது கெட்டதுகளை ஒரு பதிவாக போடுவீர்களா?
மாநாடுன்னா அப்டி இப்டின்னு இருக்காத்தான் செய்யும்...சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு? :-) மேலும் இந்தியர்களாக நாம் ஒன்றுபடும் விஷயமல்லவா? தமிழர்களை மட்டும் பிரிப்பது தேசஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக்கூடியது :-)
ReplyDeleteஅமைச்சர் பூங்கோதை கலந்துகொண்ட ஓர் அமர்விலும் இதேதான் நடந்தது. அமர்வில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு நிச்சயம் அமைதியாக அவரவர் இருக்கையில் அமர்ந்திருங்கள் என்று அறிவிப்பு வெளிவந்த மறு நிமிடமே, எனக்கு எனக்கு என்று அனைவரும் பாய ஆரம்பித்துவிட்டார்கள்.
ReplyDeleteஎனக்கு அருகில் இருந்தவர், தன் இருக்கையில் வந்து சேர்ந்த பரிசை (மாநாட்டு லோகோவுடன் கூடிய ஒரு மக்) வாங்கி பையில் திணித்துக்கொண்டு, இரண்டு வரிசை பின்னால் அமர்ந்துகொண்டார். அங்கிருந்தும் ஒன்று வாங்கிக்கொள்ள. மங்கி ஜம்ப் அடித்து அடித்து, மூன்று மக் வரை வாங்கியதைப் பார்த்தேன். அதற்கு மேல் அவரைத் தொடரமுடியவில்லை. யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை, கை தூக்குங்கள் என்று மைக்கில் கத்தியபோது, நம் தலைவர், தன் பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஒரு கையை வான் நோக்கி உயர்த்தினார்.
பழுப்பு கவரில் போட்டு என்னத்தையோ தருகிறார்கள் (தினமலர் நிறுவனரின் வாழ்க்கை வரலாறு) என்பது தெரிந்ததும், அது என்ன, ஏது என்றே தெரியாமல், இரு கைகளையும் ஒரே சமயத்தில் நுழைத்து, இரு பாக்கெட்டுகள் சிலர் அள்ளிக்கொண்டதைப் பார்த்தேன். வெளியில் அத்தை நிற்கிறார்கள் ஐயா என்று சொல்லி இன்னொன்றும் வாங்கிக்கொண்டார்கள். சிலருக்கு, பெரியப்பா நின்றுகொண்டிருந்தார்கள். சிலருக்கு, பெரியப்பாவின் மகனும்.
அன்லிமிடெட் சாப்பாடு என்றாலும், வயிறு லிமிடெட் அளவில்தான் இருக்கிறது என்பதை மறந்து, கிரேன் வண்டி போல் அள்ளி அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தார்கள். கோதுமை பாயசம் நான்கைந்து டப்பா உள்ளே போனதும், வயிற்றைப் பிடித்துக்கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்கினார்கள். ஐயகோ, அங்கே மலை வாழையும் பீடாவும் அல்லவா அடுக்கி வைக்கப்பட்டிருந்தன! அதனால் என்ன, சட்டென்று பாய்ந்து, ஒன்றிரண்டு பழங்களை கவ்வி, மூன்று, நான்கு பீடாக்களை அள்ளி கையில் பிடித்தபடி, பீடு நடை போட்டுச் சென்றார்கள். கை இடுக்குகளில், அக்வாஃபீனாக்கள்.
எதுவாக இருந்தாலும் சரி, எனக்கொன்று. எல்லோருக்கும் ஒன்று தருகிறாயா, எனில், எனக்கு இரண்டு தேவை. இரண்டுக்கு மேல் தருகிறாயா, எனக்கு ஒரு பெட்டி. ஒரு பெட்டி இனாமா, எனில் எனக்கு இரு பெட்டிகள். முடிவில்லா சுழற்சி இது.
என்னிடம் வந்து ஒருவர் கேட்டார். உங்களிடம் பாஸ் இருக்கிறதா? எனக்கு ஓர் உதவி செய்யுங்களேன். அங்கொன்று பெரிதாக கவர் போட்டு தருகிறார்கள். புத்தகம் மாதிரி தெரிகிறது. வாங்கி வந்து ஒன்று தருகிறீர்களா? உங்களிடம் பாஸ் இல்லையா என்று கேட்டேன். இருக்கிறதாம். ஏற்கெனவே இரண்டு வாங்கி வந்துவிட்டாராம். இன்னும் பிரிக்கக்கூடவில்லையாம்.
இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இப்படி ஆலாய் பறந்து அகப்பட்டதை வாங்கித் திணத்துக்கொண்ட அத்தனை பேரும் தமிழ் சேவை ஆற்ற பாஸ் வாங்கி வந்த சிறப்புப் பிரதிநிதிகள்.
வெளியில் இறங்கி நடந்தபோது, வெயில் சுள்ளென்று முகத்தில் அடித்தது. இரண்டு மைல் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் பாஸ் இல்லை. மேல் துண்டைத் தலையில் போட்டுக்கொண்டு கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள்.
அருகில், முறுக்கு, வறுகடை விற்றுக்கொண்டிருந்தார்கள். தேநீரும் கிடைத்தது. இந்தாப்பா, ஒரு டீ கொடு என்று நெற்றி வியர்வையைத் துடைத்துப்போட்டு விட்டு டிஸ்போசபிள் கப்பைக் கையில் வாங்கி ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்கள். தேநீர், ஐந்து ரூபாய். வறுகடலை, மூன்று ரூபாய். சில்லறையா கொடுப்பா எனறு கேட்டு வாங்கி பையில் போட்டுக்கொண்டார் கடைக்காரர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
இது தமிழர்கள் நோய் என்று சொல்ல முடியாது. இது ஒரு உலகளாவிய பிரச்சனை. :-) துபாயில் Gitex போனாலும் இதேதான் நடக்கும். களவு என்பதை விட இலவசத்திற்கு அடித்துக்கொள்ளும் ஆட்கள் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நோய்க்கு மருந்தே இல்லை. நேரடியாக திட்டியிருந்தாலும் கூட தடுத்திருக்க முடியாது. நம்ம ஆட்கள் தோல் கெட்டி ;-).
ReplyDeleteதமிழ் விக்கி/வலைப்பதிவு/உபுண்டு ஸ்டாலில் தன்னார்வலர் மாணவியின் செல்ஃபோனை அடித்து விட்டார்கள். NHM writer மென்பொருள் அரசு கொடுக்கும் சிடியிலேயே இருக்கிறது என சொன்னாலும் (அதைக் கையில் வைத்துக் கொண்டே) விடாது NHM சிடி வேணும் என்று அடம் பிடித்தவர்கள் ஏராளம். என்ன தர்ரீங்க இங்கன்னு நேரடியாக் கேட்ட நேர்மையாளர்களும் உண்டு.
ReplyDeleteகேட்கவே ரொம்ப கேவலமாயிருக்கு!
ReplyDeleteபத்ரி, இத்தனை வருடமாக உங்கள் பதிவை வாசிப்பதில் இத்தனை கோபமாய் ஒரு பதிவை பார்த்த நினைவேயில்லை. என்னடா இது தலைப்பின் தலைப்பே வழக்கத்திற்கு மாறாக இலக்கியத்தனமாய் இருக்கிறதே என்று சந்தேகித்துக் கொண்டே வந்தேன். சாட்டையடி அடித்துள்ளீர்கள்.
ReplyDeleteஇது தனிநபர்களின் குறையல்ல. ஒட்டுமொத்த சமூகததின் மனநிலையே இதுதான். இலவசம் என்று தெரிந்தால் அது தமக்கு உதவுமா இல்லையா என்று கூட தெரிந்து கொள்ளாமல் வாங்கி நிரப்பிக் கொள்வது. இவ்வாறான பலவிதமான பொது அநாகரிகங்கள் நம்மிடம் உள்ளன. வரிசையில் அமைதியாக நிற்காமல் இடித்துக் கொண்டு முன்னேறுவது, இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்த சினிமா அரங்கிலிருந்து இரண்டு விநாடிக்குள் வெளியேற முயல்வது .. என்று பல ஒழுங்கீனங்களைச் சொல்ல முடியும். இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டு நாம் பண்டைய தமிழர் நாகரித்தை சிலாகித்து பேசும் போது சிரிப்புத்தான் வருகிறது. இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன் என்கிற ஒப்புதலுடன் இதற்காக வெட்கமும் வேதனையும் அடைகிறேன். :-(
இந்து என்றால் திருடன் என்று ஒருவர் சொன்னார்.
ReplyDeleteஅவர் நடத்திய மாநாட்டில் திராவிடன் என்றால் திருடன் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
வாழ்க தமிழ்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா..
ReplyDeleteநமது அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையே இவற்றிற்கு காரணம்.
நம் கண் முன்னே, ஒருவன் பொருளையோ, அறிவையோ திருடினால் நாம் அவனை இழுத்துப் போட்டு உதைப்பதில்லை.
மாறாக “எதற்கு வம்பு” (அல்லது) “வேறு வேலையை கவனிப்போம்” போன்ற மனப்பான்மையினால் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம்.
உங்களுக்கும், எனக்கும் சமீபத்தில் சில நண்பர்களாலேயே ஓர் ஏய்ப்பு நடந்து முடிந்திருக்கிறது.
நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.
நேரம் வரும்போது, நான் உதை (உதை நேரடியானதாக இருக்க வேண்டியதில்லை) கொடுக்கப் போகிறேன்.
தமிழன் ஒரு அமைதியான தீவிரவாதி
ReplyDeleteவழுக்கி விழ்ந்தவனை பார்த்து சிரித்து பழகியவர்கள்.
நாட்டை விட்டு நாட்டை தாண்டினால் தான்
நாட்டு பற்றே வரும்.
மாநிலத்தை விட்டு மாநிலத்தை தாண்டினால் தான்
மொழி பற்றே வரும்.
எப்போதோ படித்த வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.
பல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனீய இந்து மதத்தின் கொடும் பிடியில் சிக்கி உழல்வதாலேயே இத்தகைய மனநோய் தமிழர்களையும் பீடித்துவிட்டது. உடனடியாகத் தமிழர்கள் அனைவரும் இஸ்லாத்தையோ அல்லது கிறிஸ்தவத்தையோ தழுவதன் மூலமே இத்தகைய பிச்சைக்கார மனநிலையிலிருந்து விடுபட முடியும்.
ReplyDeleteகணினி களவு போனது வருத்தமளிக்கிறது. தமிழ் இணையப் பயிலரங்கில் இருந்த எல்லா பொருள்களையும் ஒவ்வொரு நாளும் மறக்காமல் வீட்டுக்கு எடுத்து வந்தோம். ஒரே ஒரு பெண்ணின் செல்பேசி காணாமல் போனது. ஆனால், பலரும் கூடும் இடத்தில் இது எதிர்பார்க்கக்கூடியது தான்.
ReplyDeleteஆய்வரங்குக்குள்ளேயே இத்தனை குளறுபடிகள் நடந்திருப்பது வேதனையாக இருக்கிறது :(
தமிழ் வாழ்க !
ReplyDeleteதமிழ் நாட்டில் ஒரு மனிதனுக்கு 3 வேலை சாப்பாட்டுக்கு வழி செய்யுங்கள் .பிறகு தமிழ் செம் மொழி மாநாடு கொண்டாடலாம்
இங்கே பிச்சை எடுப்பவனும் தமிழன் தான் ! செம்மொழி மாநாடு கொண்டாடுபவனும் தமிழன் தான் ! .
தமிழன் உழைப்பவன் தான் நீங்கள் தான் இலவசமாக கொடுத்து கொடுத்து சோம்பேறியாக மாற்றி விடாதீர்கள் .
இன்னும் பத்து வருடங்களில் இப்படியே போனால் கலாம் கனவு காணமல் போய்விடும் !
தமிழனே விழித்து கொள் !
”திருடராய் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது தான் நினைவிற்க்கு வருகிறது.
ReplyDelete’ஆர்னால்ட்’ பாலா
படிக்கும் போதே குமட்டுகிறது.
ReplyDeleteஇ.பா சிறுகதை வெளியீட்டிலும் இதக் கண்டேன். 600 ரூ புத்தகம் 150 ரூபாய்க்கு என்றதும் பல பேர் 3-4 செட் வாங்க முண்டி அடித்தனர். ஆளாளுக்கு இப்படி வாங்கினால் பதிப்பாளருக்கு எப்படிக் கட்டுபடியாகும்? Subsidy கொடுத்தவர் நிலை என்னாவது?, என்றெல்லாம் யாரும் எண்ணியதாய் தெரியவில்லை. அப்படி வாங்கியவர்கள் எல்லாம் புத்தகத்தைப் படித்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.
ஜி.என்.பி நூற்றாண்டு மலர் வெளியிட ஏனோ ஜி.கே.வாசனை அழைத்திருந்தனர். நூல் வெளியானதும் எக்கெச்செக்க வெள்லை வேட்டிகள் தனக்கும் ஒரு ஓசி புத்தகம் வேண்டும் என்று கிட்டத்தட்ட மிரட்டி வாங்கிப் போனது.
பாவம் பதிப்பித்த ஜி.என்.பி குடும்பத்தினர். அவசரமாய் கொடுத்துவிட்டு அமைதியாய் புலம்பிக் கொண்டிருந்தனர்.
பத்திரிக்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறி 15 பேருக்கு மேல் புத்தகம் வாங்கி சென்றனராம். எந்த பத்திரிகையோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ஓட்டே ஓசி வாங்கித்தானே போடுகிறோம். இதுவும் இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று எடுத்துக் கொள்ள வெண்டியதுதான் என்று நினைக்கிறேன்
லலிதா ராம்
//கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.
ReplyDelete//
:-))
பத்ரி அப்படியே கண்ணாடியில் உங்களையும் பார்த்துக் கொள்ளவும்.
அட்டைப்படங்கள் இணையத்தில் எடுத்தது, சினிமாவை திரையிட்டு வந்தது என்று எல்லாம் நீங்கள் செய்யும்போது எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி செய்தீர்கள்.
பெருமையாக பதிவில் திரைப்படம் போடுவோம் என்று விளம்பரப்படுத்தியே செய்தீர்கள்.
அது உங்களுக்குத் தவறாகத் தரியவில்லை. யாராவது சொல்லும்வரை... இல்லையா?
**
அது போலத்தான்... பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே தெரிவது இல்லை ...
தவறு என்று தெரிந்தபின் அல்லது மனப்பூர்வமாக உணர்ந்தபின் திருந்திவிடுவார்கள். ஆனால் முதலில் தவறு என்று அவர்களைப் புரியவைப்பதில் இமாலயச் சிக்கல்.
அப்படியே புரிய வைத்தாலும் இதெல்லாம் ஒரு விசயமா என்று கூமுட்டை கோவிந்தசாமியாக "அஞ்சு பைசா திருடறது தப்பா!" என்று கெட்டுக் கொண்டு நியாயம் கற்பித்துக் கொள்ளலாம்.
.
கல்வெட்டு, உங்களை எதிர்பார்த்தேன். நன்றி.
ReplyDeleteஆம் பத்ரி, நானும் நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். :-)
ReplyDeleteமக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பது அடிப்படையான ஒரு மன நிலை. அதில் நீங்களும் விதிவிலக்கல்ல.
பல விசயங்கள் யாருக்கும் தவறு என்றே தெரிவது இல்லை (நான் உட்பட) அடுத்தவர் சொல்லும் வரை.
ஆனால் சுட்டிக் காட்டப்பட்டாலும் ஏற்காமல் கோவிந்தசாமித்தனமாக ஜால்சாப்பு சொல்வதைத்தான் ஏற்கமுடியவில்லை.
செம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.
ReplyDeleteபடித்து முடித்ததும் லேசாக சிரிப்பு வந்தது. ஆனால் கீழே உள்ள விசயத்தை படித்து முடித்ததும் அறையே அதிரும்படி சிரித்துக் கொண்டு இருக்கின்றேன்.
அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(.................................
தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.
நீங்கள் எப்பொழுதாவது இதைப் போன்று பார்ப்பீர்கள் போல?. அதனால் இந்த கோபம்........
அடுத்தமுறை பழகிப்போயிரும்..........
பக்கத்து வீட்டு காரங்க வீட்டுக்குள் வந்து இறங்கியதுமே ஒவ்வொருவரும் என்னன்ன கொண்டு வந்தாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அப்ப புரியல..... மாநாட்டுல என்ன கிடைக்கும்ன்னு நெனைச்சேன். ஆனால் இதை படித்த பிறகு தான் ஒவ்வொன்னா புரியது.........
அங்கிருந்தும் ஒன்று வாங்கிக்கொள்ள. மங்கி ஜம்ப் அடித்து அடித்து, மூன்று மக் வரை வாங்கியதைப் பார்த்தேன். அதற்கு மேல் அவரைத் தொடரமுடியவில்லை. யாருக்கெல்லாம் கிடைக்கவில்லை, கை தூக்குங்கள் என்று மைக்கில் கத்தியபோது, நம் தலைவர், தன் பையை கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஒரு கையை வான் நோக்கி உயர்த்தினார். ..............
அன்லிமிடெட் சாப்பாடு என்றாலும், வயிறு லிமிடெட் அளவில்தான் இருக்கிறது என்பதை மறந்து, கிரேன் வண்டி போல் அள்ளி அள்ளி வாயில் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
மருதன் இதை அடிக்கக்கூட முடியல. சிரிச்சு வயிறே புண்ணாப் போகுது..........
பத்ரி நீங்க கோபத்தோடு ஆதங்கமாய் எழுதிய விசயங்கள் எனக்கு கோபம் வருவதை விட ரொம்ப நேரம் சிரிக்க தான் வைத்தது. மன்னிக்கவும். ஆனால் நாகராஜ் சொன்னது தான் மொத்ததிலும் சரியானது.
நமது அளவுக்கதிகமான சகிப்புத்தன்மையே இவற்றிற்கு காரணம்.
நம் கண் முன்னே, ஒருவன் பொருளையோ, அறிவையோ திருடினால் நாம் அவனை இழுத்துப் போட்டு உதைப்பதில்லை.
ரொம்ப மகிழ்ச்சி உங்களின் இந்த பதிவுக்கு.
இதைப் போலத்தான் பாரா விடம் எதிர்பார்த்தேன்............(?)
தமிழனுக்கு மட்டும் என்று சொல்லாதீர்கள்..இயற்கையாகவே மனிதனுக்கு இந்த குணம் உண்டு. இலவசமாக உலகில் எங்கு எதைக் கொடுத்தாலும் மனிதன் முண்டி அடித்து வாங்கத் தான் செய்கின்றான். இதில் தமிழன் விதிவிலக்கல்ல.
ReplyDeleteகலவெட்டு,
ReplyDeleteகாபிரைட், ஃபேர்யூஸ் பற்றிய அறியாமையைக் / குழப்பத்தை செல் ஃபோன் திருடுவதுடன் ஒப்பிடுகிறீர்கள். யாராவது சொல்லும் வரை செல்ஃபோன் திருடுவது தவறு என்று தெரியாத நபரைக் கொஞ்சம் காட்டுங்களேன்.
Sir,
ReplyDeleteThe irony is that, the organizers of the event, i strongly doubt, would have meticulously embezzled crores of money - OUR TAX MONEY . [Even a loafer on the streets pays tax, when he buys something in the market].
the citizens, i think, get an opinion that - when they bulk-take something free from govt, they are acting as "robin-hoods", that they have to do to save their asses.
PS : An addition of a final line in your/ Maruthan's post to indicate a doubt of possible embezzlement by the organizers at the macro level - would have raised the post to the level of a poignant short story.
Thanks,
Venkat
ஃபிரியா கொடுத்தா ஃபினாயிலகுட குடிக்கிற ஜனங்க இருக்கிறவரைக்கும் இதெல்லாம் ரொம்ப சகஜம் சார்!பெஸ்ட்! பெ& டேக் இட்
ReplyDeleteஇந்த இடுகையின் தொனியில் தெறிக்கும் ’தமிழன்’ வெறுப்பைக் கண்டிக்கிறேன். இந்த நோய்க்கூறு தமிழனுக்கு என்றும் தனித்துவமானதல்ல. வறுமை/போட்டி சூழலில் உழலும் இந்திய,சீன, ஆசிய/ஆப்பிரிக்க மக்கள் அனைவருக்கும் பொதுவான ‘கிடைத்ததை சுருட்டிக்கோ’ மன்ப்பான்மையின் வெளிப்பாடு. இதைத் தமிழன் மேல் ஏற்றி (’நான் தமிழ் மாநாடுதானே பார்த்தேன்’ என்று சால்ஜாப்பு வரும், அதற்காக உங்களுக்கு சில தமிழனே சப்பைக்கட்டும் கட்டுவான், சிலர் குறுக்கேயும் பாய்வான் என்ன செய்வது எல்லாத்தையும் பார்க்கிறோமே) எழுதுவதில் உங்கள் மேட்டிமைத்தன்மையும் தமிழ் சமூக வெறுப்பும்(தமிழ் வெறுப்பல்ல அப்படியானால் வியாபாரத்துக்கு ஆபத்து என்பது நன்றாகவே தெரிந்ததுதான்) தெரிகிறது. குறைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
ReplyDeleteதிருட்டை மட்டும் தமிழன் மேல் ஏற்றும் நீங்கள், கோயம்புத்தூர்/ கொங்கு வரலாறு புத்தகங்களை இலவசமாக அளித்ததவர்களை மட்டும் ’யாரோ’ என்று அனானி பின்னூட்டம்போல விளிக்கும் பாணி ஏன்?
கல்வெட்டின் கேள்விகளை இடக்கையில் புறந்தள்ளிப்போகமுடியாது. //அறியாமையைக் / குழப்பத்தை // அறியாமையா? ஹாஹா... நல்ல ஜோக்.
இந்த நோய்க்கூறு வருத்தப்பட, தீர்க்கப்பட வேண்டிய ஒன்று, இதை வைத்து தமிழ் சமூகத்தை அளக்கும் உங்கள் நோய்க்கூறும்தான்.
(டிஸ்கி: அனானி/அல்லக்கை ஆட்டம் ஏதும் நடந்தால் பதில் தர தாமதமாகும்)
மிக அருமையான நகைச்சுவை, எள்ளல் நடை மருதன். இறுதி பாரா ஒரு சிறுகதை. (கதை விட்டுருக்கீங்கன்னு சொல்ல வரலை) விரிவா ஒரு பதிவு எழுதுங்கள் மருதன். சுதிர்.
ReplyDelete// அது போலத்தான்... பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே தெரிவது இல்லை ...
ReplyDeleteதவறு என்று தெரிந்தபின் அல்லது மனப்பூர்வமாக உணர்ந்தபின் திருந்திவிடுவார்கள். ஆனால் முதலில் தவறு என்று அவர்களைப் புரியவைப்பதில் இமாலயச் சிக்கல். //
Oh... What an excuse for this dirty behaviour...!!!!!!!
அய்ய..... கேக்கவே அசிங்கமா இருக்கு. இதுதான் தமிழர் பண்பாடா?
ReplyDeleteu r riled tat all ur ASS-KISSING was wasted
ReplyDeletebecos u didnot pick up any award
உன் ஓட்டுக்கு மட்டும் காசு கேக்கும் தமிழா... மற்றதெல்லாம் இலவசமாய் எதிர்பார்க்கிறாயே??? கசாப்புகடையின் கழிவிற்காக நீர் ஊறி வாய்பிளந்து காத்திருக்கும் ஞமலியினும் கேடானதடா உன் செய்கை. இதுதான் எழுமைக்கும் ஞாயிறு போற்றி வந்த திராவிடப் பண்பாடா??? அல்லது எழு ஞாயிறை நம்பியதால் வந்த சிரங்கேறிய புண் பாடா??? கண்மூடி மட்டும் இராதே, மண்மூடிப்போகும் உந்தன் பெருமை.
ReplyDeleteஹஹா......மனம் விட்டு சிரிக்கிறேன். இதனை நாள் நான் ஐரோப்பாவில் வசிக்கும் தமிழனா இல்லை தமிழ் பேசும் ஐரோபியனா என்று குழப்பம் இருந்தது...இப்போது எல்லாம் தெளிவு. நான் தமிழ் பேசும் ஒரு ஐரோப்பியன். பத்ரியின் சமீபத்திய சிங்கை மற்றும் மலேசியா பயணங்கள் தமிழரின் பெருமையை பறை சாற்றியிருக்கும். உதாரணம்...லேன்ட் ஆகும் முன்பே பெட்டி படுகையை எடுத்து கக்கத்தில் அடுக்கி கொள்ளும் தமிழன். இன்னும் கொடு இன்னும் கொண்டு என்று சண்டை போட்டு வாங்கி குடிக்கும் தமிழன். ஓசி என்றால் கழிவை கூட உண்ணும் தமிழன். நாகரிகம் என்றால் இது என்னது புது வார்த்தை என்பவன். "விடுங்க பாசு...காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கனும் என்று பெண்டாட்டியை அனுப்புபவன்..." கலைஞர் சும்மாவா இலவசத்தை அள்ளி வீசுனாரு..." அவருக்கு தெரியும் தமிழனின் யோககியதை!.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteSir,
ReplyDeleteIn my previous comment, by "organisers of the event", I did not refer to "INFITT" . I was referring to the state goverment and the ruling party.
Regards,
Venkat
I think, the topic is being hijacked here.
ReplyDeletePeople seem to revel in self-derision.
Kalvettu's comments - nails the point.
பலருக்கு தாங்கள் செய்வது தவறு என்றே தெரிவது இல்லை ...
- people would not have this mentality in a truly welfare state- where people believe the govt is truly altruistic.
தவறு என்று தெரிந்தபின் அல்லது மனப்பூர்வமாக உணர்ந்தபின் திருந்திவிடுவார்கள். -
the need of the hour is establishing a social-welfare seeking govt.
just as an example, some body from INFITT would be apt for the post of IT minister in tamil nadu rather than Poongothai. these kind of actions would instill safe and healthy mentality in citizens.
Regards,
Venkat
சூப்பர், இந்த மாதிரி கோபம் நிறைய பேருக்கு வரவேண்டும்.. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை
ReplyDelete//
ReplyDeleteசெம்மொழி அந்தஸ்து தமிழுக்கு வருகிறதோ இல்லையோ, பிச்சைக்காரன் அந்தஸ்து தமிழனுக்கு என்றுமே இருக்கும்.//
பத்ரி
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து விட்டது. ஆனால் பிற வாழும் இந்திய மொழிகளுக்கு உண்டா என்று தெரியவில்லை
பிச்சைக்காரன் அந்தஸ்து என்பது நாடு, மதம், மொழி சாராத ஒரு விஷயம் என்பது என் கருத்து
இலவச தொலைக்காட்சியும் இலவசம் தான் ; பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரி விலக்கும் இலவசம் தான்.
இலவசமாக அளிக்கப்படும் பொருளை பெறுவது பிச்சை என்றால், ஐந்து நட்சத்திர விடுதியில் complimentary break fast சாப்பிடும் அனைவரும் பிச்சைக்காரர்கள்
இதில் எந்த மொழியாவ்து விதிவிலக்கா
--
அது சரி
துணிக்கடையில் ஜவுளி வாங்கிய பின்னர் அவர்கள் தரும் துணிப்பையை வேண்டாம் என்று திருப்பி தந்தவர்கள் யார் :) :)
திருட்டு என்பது வேறு
ReplyDeleteஅதை யாரும் நியாயப்படுத்தவில்லை
ஆனால் இலவசமாக பொருட்களை பெற்றுக்கொள்வது என்பது நடைமுறை தானே
அதுவும் கருத்தரங்குகளில் இது போல் பொருடகள் விநியோகிக்கப்படுவது புதிதா
இதில் என்ன பெரிய குறை என்று தெரியவில்லை
--
ஜவுளிக்கடையில் அளிக்கப்படும் complimentary bigshopper பை, துணிப்பை, கைப்பை போன்றவற்றை வாங்க மாட்டேன் என்று திருப்பி தந்தவர்கள் யாராவது இருந்தால்....... உங்களுக்கு தலை வணங்குகிறேன்.... நான் அப்படி கிடையாது :) :)
.
ReplyDeleteஒரு மாநாடு என்றால் மக்களுக்கு அதில் நானும் கலந்துகொண்டேன் என்று பறைசாற்றிக்கொள்ள சில அடையாளங்கள் வேண்டும். சொவனீர் என்பது எடுத்துச் செல்லும் அடையாளம். அதன் நீட்சிதான் இன்னும் எனக்கு வேண்டும் எனது மாமாவிற்கு வேண்டும் என்று அதிகப்படியாக எடுத்துச் செல்வது.
திருட்டு தவறு.
மாநாட்டை நடத்தியவர்கள் அதற்கான விழா மலர் முதல் குறைந்த பட்ச சொவனீர் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். சில விவிஐபிக்களுக்கு மடும் சில சொவனீர் என்றால் சாதரணமானவர்கள் கிடைத்ததைச் சுருட்டப் பார்ப்பார்கள்.
இதில் உள்ளது தேவை மற்றும் தட்டுப்பாடு சம்பந்தப்பட்டது.
மக்களுக்கு சில விசயங்கள் தெரியாது. அல்லது அவர்கள் செய்வதைச் சரி என்றே நினைப்பார்கள் வேறு யாராவது சொல்லும் வரை.
உங்களின் இணையத் திருட்டு மற்றும் சினிமா பைரஸி / பொதுக்காட்சி விசயங்களில் நடந்தது இதுதான்.
உலக வரலாறு எழுதும் கதைபுத்தக வியாபாரிகளுக்கே இணையத் திருட்டு மற்றும் சினிமா பைரஸி / பொதுக்காட்சி குற்றங்கள் தெரியாதது அறியாமை என்றால் .... அவர்களுக்கு எந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வது?
என்ன கொடுமை பத்ரி இது?
**
குறைந்த அளவே உள்ளது அதாவது காத்திருந்தால் கிடைக்காது என்ற பட்சத்தில் முண்டியடித்துக் கொண்டு சண்டைபோட்டாவது பெற்றுக்கொள்ள முயல்வது அடிப்படை விலங்குக்குணம். இது இனம் மொழி நாடு கடந்து எல்லாருக்கும் உண்டு.
அமெரிக்காவில் தேங்க்ஸ்கிவிங் டேயின் போது பல பெருங்கடைகளில் முதலில் வரும் 100 பேருக்கு அல்லது சில எண்ணிக்கை மக்களுக்கு மட்டும் இலவசமாக சில பொருட்களையோ அல்லது குறைந்த விலையில் சில பொருட்களையோ கொடுப்பதாக அறிவிப்பார்கள். அதற்கு வெள்ளை முதல் கருப்பு மற்றும் பிரவுன் கலர் மக்கள் எல்லாம வரிசையில் காலை 4 மணிமுதல் டெண்ட் அடித்து காத்து இருப்பார்கள்.
பெஸ்ட் பை மற்றும் வார்மார்ட் கடைகளில் வருடா வருடம் இந்த இலவசத்திற்காக தள்ளுமுள்ளு ஏற்படும் சில நேரங்களில் அடிதடி சண்டை ஏற்படுவது மிகச்சாதரணம்.
Wal-Mart worker trampled to death by frenzied Black Friday shoppers
http://seattletimes.nwsource.com/html/nationworld/2008448574_shop290.html
***
எதற்கெடுத்தாலும் இலவசத்திற்கு / மானியத்திற்கு எதிரானவன் என்று சொல்லும் பத்ரி அண்ட் கோ கம்பெனி செய்யவேண்டியது....
1. உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் டீசல் பயன்படுத்தாதீர்கள். அதில் அரசின் மானியம் உள்ளது. அப்படியே பயன் படுத்தினாலும் , மானியத்தைக் கணக்கிட்டு பெட்ரோலிய அமைச்சகத்திற்கு மாதமாதம் பணததை அனுப்பி விடுங்கள்.
2. வீட்டில் அரசு மானியத்தில் வழங்கும் சமையல் கேஸைப் பயன்படுத்தாதீர்கள். இதிலும் அரசின் மானியம் உள்ளது. அப்படியே பயன் படுத்தினாலும் , மானியத்தைக் கணக்கிட்டு பெட்ரோலிய அமைச்சகத்திற்கு மாதமாதம் பணததை அனுப்பி விடுங்கள்.
3. உங்கள் அச்சுத் தொழிலில் ஏதாவது மானியம் அல்லது விலக்குகளை அரசு அறிவித்தால் அல்லது நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருந்தால்...ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
4. உங்கள் புத்தகங்களை தள்ளுபடி, கழிவு, கண்றாவி என்று விலை குறைத்து வாங்கத்தூண்டி மற்றவர்களை பிச்சைக்காரர்களாக மாற்றாதீர்கள். ஏன் என்றால் நீங்கள் கழிவு, மானியம், இலவசத்திற்கு எதிரானவர்கள்.
5.மேலும் புருனோ சொன்னதுபோல ஜவுளிக்கடைப் பை, ஸ்டார் ஓட்டல் காம்ளிமென்டரி எல்லாவற்றையும் விலக்கி வாழுங்கள்.
நீங்களும் வாங்காதீர்கள்.
உங்கள் நிறுவனம் சார்பாக கொடுக்கவும் செய்யாதீர்கள்.
6. அமெரிக்காவில் ஏதாவது காலேஜில் படித்து இருந்தாலும் அதில் பல மானியங்கள், பலரின் நன்கொடைகள், என்று உங்கள் கண்ணுக்குக் தெரியா பல விசயங்கள் உள்ளது. நீங்கள் பணம் கட்டிப் படித்து இருந்தாலும் அது பலபேரின் நன்கொடை , பல சாரிட்டி நிறுவனங்களின் வைப்பி நிதியில் இருந்து வரும் மானியம் போக கழிக்கப்பட்ட தொகைதான் உங்களிடம் வசூலிக்கப்பட்டது அப்படி வாங்கிய பட்டத்தை திருப்பி கொடுத்து விடுங்கள்.
இப்படியெல்லாம் சுய சுத்திகரிப்பு செய்துவிட்டு டமிலனின் இலவச மானிய புத்தியை கண்டியுங்கள்.
.
ஜவுளிக்கடையில் நீங்க ஜவுளி வாங்கல்லைன்னா இலவச பிக் ஷாப்பர் கிடைக்காது. ஹோட்டலில் நீங்க ரூம் போட்டு தங்கல்லைன்னா இலவச சிற்றுண்டி கிடைக்காது. இவ்விடங்களில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. உங்கள் காசை வாங்கிக்கொண்டு அவர்கள் கொடுக்கிறார்கள்.
ReplyDeleteஆனால் ஹோட்டலுக்குப் போய் ரூமே போடாமல் காம்பிளிமெண்டரி சிற்றுண்டி சாப்பிட எண்ணி அப்படிச் செம்மொழி மாநாட்டில் செய்தவர்களைப் பற்றித் தான் இங்கு பேச்சு.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமருதனின் நடை மிக அருமை, ரொம்ப நாளைக்கு பிறகு வயிறு சுளுக்க சிரிச்சோம்!!!
ReplyDeleteமற்றவர்களை ஒப்பிடும் பொழுது இது கொஞ்சம் அதிகம் நம்மவர்களிடம்,
வால்மார்ட் போன்ற வற்றை இதனுடன் ஒப்பிடக்கூடாது, இது வியாபார இடம் இல்லை,
நன்கு படித்த மற்றும் மொழிக்காக வந்தவர்கள், அவர்கள் நினைப்பது இது தான்,
நான் செலவு செய்து வந்திருக்கிறேன் எனக்கு அதற்கு பயனாக என்னவெல்லாம் கிடைக்கிறதோ அதை முடிந்தவரை எடுத்து செல்லவேண்டும் (Grab)
மேலும் நாம் உணர்வுபூர்வமாக திருப்தி அடைந்து இருக்கலாம், ஆனால் மற்றவர்கள் ??!!!
சஹ்ரிதயன்
திரு.பத்ரி அவர்களே! நீங்களே இப்படி பொத்தாம்பொதுவாக "தமிழர்களுக்கு பிச்சைக்கார அந்தஸ்து என்றும் இருக்கும்" என்று சொல்லியிருக்கக் கூடாது. நீங்கள் ஆந்திரா கர்நாடகாவிலோ, இல்லை வட இந்தியாவிலோ அவர்கள் மொழி சார்ந்த புத்தகங்கள் அடங்கிய கண்காட்சி நடத்தி அதில் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துப்பாருங்கள்..என்ன நடக்கிறது என்று. கல்லாப்பெட்டி கூட இருக்காது. திரும்பி வருவதற்குக் கூட யாரிடமாவது கடன் வாங்கித்தான் வர வேண்டும். இது மனித இயல்பு. இதற்கு இனச்சாயம், மதச்சாயம், மொழிச்சாயம் அல்லது இங்கே சிலர் உங்களைத் தாக்கியிருப்பதுபோல் சாதிச்சாயம் எதுவும் கிடையாது. நீங்களே நேரடியாக பாதிக்கப்பட்டதால்..உங்கள் மனம் கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்த வேளையில் ஒரு பதிவைத்தட்டி விட்டீர்கள். புரிந்துகொண்டு உங்கள் வார்த்தைகளைத் திரும்பப் பெறுவீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDelete//கார்த்திகேயன்....
ReplyDeleteதனக்கு தரப்படாததை பறித்தெடுத்துக்கொள்ளும் மனப்பாங்கைத்தான் இவ்விடுகை குறிப்பிடுகிறது.//
:-))))
பத்ரி,
நீங்களே கார்த்திகேயன் கேள்விக்கு பதில் சொல்லிவிடுங்களேன். கார்த்திகேயனும் தரப்படாததை பறித்தெடுத்துக்கொள்ளும் மனப்பாங்கை எதிர்க்கிறார் .
வணிக பயன்பாட்டிற்காக இணையத்தில் திருடப்பட்ட படங்களும், உங்கள் அலுவலக மொட்டை மாடியில் திரையிடப்பட்ட சினிமாவும் உங்களுக்காகவேயென்று அல்லது உங்கள் நிறுவனத்திற்காகவென்று பிரத்யோக அனுமதி அளிக்கப்பட்டு தரப்பட்டதா? அல்லது ஊரான்வீட்டு நெய்யே என்று சும்மா எடுத்துக் கொண்டீர்களா?
நீங்களாக எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இந்தப்பதிவு உங்களுக்கானதும்தான்.
.
வஜ்ரா..
ReplyDelete//ஆனால் ஹோட்டலுக்குப் போய் ரூமே போடாமல் காம்பிளிமெண்டரி சிற்றுண்டி சாப்பிட எண்ணி//
மாநாட்டில் இலவசமாகப் போய் காம்ளிமென்டரி கேட்கக்கூடாது அல்லது குடுத்தாலும் வாங்கக்கூடாது. சரியா?
விழாமலர் இத்யாதி போன்றவை சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டதாகா (வி.ஐ.பி) தவகல். அது உண்மையாயின்....
Q1.ஏன் சிலருக்கும் மட்டும் விழாமலர் கொடுக்கப்பட்டது? சில காம்ளிமென்டரி அயிட்டங்கள் கொடுக்கப்பட்டது?
Q2.அவர்கள் மாநாட்டிற்கு நுழைவுச் சீட்டை காசு கொடுத்து வாங்கி பார்க்க வந்தவர்களா?
Q3.மக்களின் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு விழாவில் ஏன் சிலருக்கும் மட்டும் இலவசங்கள் போகிறது? மாநாட்டிற்கு வந்தவர் அனைவருக்குமல்லவா கொடுத்து இருக்கவேன்டும்?
.
இங்குக் கல்வெட்டு என்பவர் காட்டும் பொலிடிக்கல் கரக்ட்னேஸ் சகிக்கவில்லை.
ReplyDeleteகார்த்திகேயன்,
ReplyDelete//ஏன் இந்த வெத்து கூச்சல் காசி/கல்வெட்டு? வேறு வேலை எதுவும் இல்லையா?//
என்னை விளித்து "வெத்து கூச்சல்" என்று நீங்கள் சொல்ல எல்லா உரிமையும் உள்ளது. ஏன் என்றால் நாம் பொது வெளியில் பேசிக் கொள்கிறோம் .
இருந்தாலும் ,உங்களைக்குறித்து எந்த விமர்சனமும் பின்னூட்டமும் நான் இடாத பட்சத்தில் நீங்கள் ஏன் இப்படி நீங்கள் சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. எப்படியோ அது உங்கள் விருப்பம்.
மேலும் பின்னூட்டங்கள் பத்ரியின் அனுமதியுடனே வருகிறது.நான் வெற்றுக்கூச்சல் போடுவதாக பத்ரி நினைத்தால் பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம்.
எனக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் இதைச் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் ஏன் பாவம் நேரம் செலவழித்து எனது "வெத்து கூச்சல்" பின்னூட்டங்களைப் படிக்கிறீர்கள்? வேண்டாம் உங்களுக்கு அந்த துன்பங்கள்.
எனது "வெத்து கூச்சல்" உங்களை நோக அடித்து அல்லது உங்களுக்கு நேரவிரயம் ஏற்படுத்தி இருந்தால் மன்னிக்க. :-((((((
.
பத்ரி,
பின்னூட்டங்களை வெளியிடுவதால் நீங்கள் எனது கருத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்பது அல்ல, எனது கருத்தைச் சொல்ல அனுமதிக்கிறீர்கள் என்பதே பொருள்.
எனது கருத்து, பதிவின் நோக்கத்தை திசைதிருப்பும் என்றால் கடாசிவிடுங்கள். கார்த்திகேயன் போன்றவர்களுக்கு அநாவசிய மன உளைச்சலை ஏற்படுத்த விரும்பவில்லை.
**
மன்னிக்க கார்த்திகேயன்.
.
நல்ல மறுமொழி. நன்றி மருதன்.
ReplyDeleteபோங்க சார், உங்க நேந்திரங்கா வறுவலை நான் சாப்பிட சோனியா காந்தியவா கேக்கணும்?
ReplyDeleteகொஞ்சம் விட்டா, வறுவல் பாக்கெட் விலை 60,000 கோடி ரூபாய்ன்னு கூட சொல்லுவீங்க போலிருக்கே.
மாநாட்டில் முடிந்ததை மட்டுமே சுருட்டிக்கொண்டேன். மீதி (இருந்தால்) அடுத்த வருடம் வீடு தேடி வரும்னு சொல்றாங்க.
இப்படிக்கு,
வெல்வெட்டு
சூறைத் தேங்காய்க்குப் பறக்கும் பண்பாடு ஆச்சரியமளிக்கவில்லை. இதற்கு ஒவ்வொருவரும் தத்தம் அரசியல் வண்ணம் பூசுவது வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக பா. ரெங்கதுரை, வஜ்ரா போன்ற ஜாதி வெறியர்கள் இது தமிழர், திராவிடர் குணமாக அல்லாத அந்த அரசியலின் பண்பாட்டுச் சீரழிவாக நிறுவ முயற்சிப்பது கேவலமாக உள்ளது. இது வெறும் தமிழர்/திராவிடர் பண்பாடல்ல, பரவலான இந்திய குணம் என்பதை இந்து ஞான மரபை அடிப்படையாக வைத்து ஜெயமோகன் கூட விளக்க வேண்டியதில்லை. இதற்கு ஒரு சிறு உதாரணம் அளிக்கிறேன்.
ReplyDeleteஇங்கு விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நடந்த அதே வேளையில், பூமிப்பந்தின் அடுத்த பக்கத்தில், அமெரிக்க நகரொன்றில் நடந்த நிகழ்ச்சியில் இந்துக்கள்/இந்தியர்கள் சூறைத் தேங்காய்க்குப் பறந்த காட்சி இது.
நாங்கள் வசிக்கும் பகுதியில் போன வாரம் புதிதாக ஒரு சர்ச் திறந்தார்கள். அதைக் கொண்டாட அல்லது சர்ச்சுக்கு ஆள் பிடிக்க ஒரு carnival ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது open to public நிகழ்ச்சி என்பதை மோப்பம் பிடித்த ஒரு இந்திய பெண்மணி (இவர் தமிழர் அல்ல) தன் தோழிகளுக்கு தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் செய்தியை ஒலிபரப்ப ஞானக்கூத்தனின் நாய் கவிதையில் வருவது மாதிரி அடுத்த ஓரிரு மணி நேரத்தில் அனேகமாக அந்தப் பகுதி இந்தியர்களுக்கெல்லாம் செய்தி எட்டிவிட்டது. பிறகென்ன. கோடைவிடுமுறையில் போரடித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு குடும்பம், குடும்பமாக குவிய ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டத்தில் பாதிபேர் இந்தியர்கள்/இந்துக்கள் என்று கேள்வி. மொழி, ஜாதி, தொழில், உணவுப் பழக்க (சைவம்/அசைவம்) வித்தியாசமில்லை. போனவர்கள் கிறித்தவத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக செல்லவில்லை. இலவசமாக கிடைக்கும் உணவு, ரங்கராட்டினம், சறுக்கு விளையாட்டு, பரிசுப் பொருள்கள் என்று ஜாலியாக ஒரு மாலையைக் கழிப்பதற்காக. அந்த சில மணி நேரத்தில் எத்தனை முறை வரிசையில் நிற்க முடியுமோ அத்தனை முறை நின்று எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளியிருக்கிறார்கள் அல்லது விழுங்கியிருக்கிறார்கள். இதில் விசேஷம் என்னவென்றால், ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கு விசேஷப் பரிசுகள் என்று ஒரு பகுதியில், நம் ஆட்கள் குடும்பம் குடும்பமாக வரிசையில் நின்று பரிசு வாங்கியிருக்கிறார்கள்.
சர்ச் இல்லையா. இலவச சாப்பாடு, பரிசுப் பொருட்களோடு சில மதப் பிரச்சாரப் புத்தகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து தாங்கள் இந்துக்கள் என்பதை மறக்காமல் கிறித்துவ மதப் பிரச்சாரங்களை குப்பையில் போட்டுவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து வழக்கம்போல ஞாயிறன்று கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு தங்கள் நாட்டு, மதக் கலாச்சாரத்தை உறுதி செய்துக்கொண்டார்கள்.
@தமிழ்ப்பிரியன்,
ReplyDelete@காசி ஆறுமுகம்:
நடந்தது தமிழ்ச் செம்மொழி மாநாடு. வந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். இப்படி இருக்கும்போது, நிகழ்ந்த செயல்களுக்காக தமிழர்களைப் பற்றி வருத்தப்படாமல் சீனர்களைப் பற்றியா வருத்தப்பட முடியும்?
”பறக்காவட்டி” என்கிற சொல்லை 30 வருடங்களிருக்கலாம், அதற்கு பின் காது கொடுத்து கேட்கவில்லை என்றாலும் படிக்க புல்லரிக்கிறது. பறக்காவெட்டி அல்லது வட்டி..?
ReplyDeleteஇலவசம் - உங்கள் நாட்டில் (மானிலத்தில்) தொ.கா.பெட்டி, மின்சாரம், கடன் தள்ளுபடி என பல உழைக்காமலே கிடைக்கிறதில் ஆரம்பித்து - எல்லாவற்றிலும் அரசு இயந்திரத்தை நம்பி இருக்கிறதிலும் தொடங்கி, ஓசியாக கிடைத்தால் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளும் பழக்கம் பரந்து ஒன்றாக மக்களிடையே கலந்து விட்டது போலும். ஒபாமா கூட எங்களை அது மாதிரி ஆக்க ரொம்ப முயற்சி எடுக்கிறார்.
//Anonymous said...
ReplyDeleteசர்ச் இல்லையா. இலவச சாப்பாடு, பரிசுப் பொருட்களோடு சில மதப் பிரச்சாரப் புத்தகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து தாங்கள் இந்துக்கள் என்பதை மறக்காமல் கிறித்துவ மதப் பிரச்சாரங்களை குப்பையில் போட்டுவிட்டு, ...//
நல்ல வேளை. ”மலம் துடைக்க வசதியாக கிறிஸ்துவ மதப் பிரச்சாரப் புத்தகங்களை டாய்லெட்டில் வைத்துக்கொண்டார்கள்” என்று சொல்லாமல் விட்டீர்களே. அதுவரை சரிதான்.
என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் "குறிப்பாக பா. ரெங்கதுரை, வஜ்ரா போன்ற ஜாதி வெறியர்கள் இது தமிழர், திராவிடர் குணமாக அல்லாத அந்த அரசியலின் பண்பாட்டுச் சீரழிவாக நிறுவ முயற்சிப்பது கேவலமாக உள்ளது" என்பதை "குறிப்பாக பா. ரெங்கதுரை, வஜ்ரா போன்ற ஜாதி வெறியர்கள் இது தமிழர், திராவிடர் குணமாக அல்லது அந்த அரசியலின் பண்பாட்டுச் சீரழிவாக நிறுவ முயற்சிப்பது கேவலமாக உள்ளது" என்று வாசிக்கவும்.
ReplyDeleteபின்னுட்ட தொடர்ச்சிக்காக
ReplyDeleteஏற்கனவே பலர் குறிப்பிட்டது போல, இது எல்லா நாடுகளிலும், குறிப்பாக, அமெரிக்காவிலும் நடப்பதுதான். கூட்டத்தைச் சமாளிப்பது என்பது ஒரு கலை. அதைப் பற்றி அமெரிக்கர்கள் கவலைப் படுவார்கள். இந்தியாவில் கூட்டச் சமாளிப்பு என்பது அடிதடிக் கலை.
ReplyDeleteமாநாட்டில் அடையாள அட்டை கொடுப்பதிலிருந்து தொடங்கியது குழப்பம். ஓர் இடத்தில், மாநாட்டு உறுப்பினர்கள் பதிவு என்று வைத்து ஒரே நேரத்தில் அடையாள அட்டை, மாநாட்டு மலர், பை, கோப்பை, என்று எது வேண்டுமானாலும் கொடுத்திருக்கலாம். அடையாள அட்டை கொடுக்கும்போது படத்தையும் ஆளையும் ஒப்பிட்டிருக்கலாம். இதை எல்லாவற்றையும் கணினியின் துணையோடு செய்திருக்கலாம்.
ஆனால், மாநாட்டில், தகவல் தொழில் நுட்பம் மிக மிகப் பின் தங்கியிருந்தது. இது போன்ற பெரிய மாநாடுகளை நிர்வகிக்கும் திறமை இல்லாதவர்கள், பட்டறிவு இல்லாதவர்கள் நடத்தியது போன்று இருந்தது.
இவ்வளவு ஆள் பலம் இருந்தும் மாநாட்டை நிர்வகிக்க முடியாமல் போனதற்கு ஏற்பாட்டாளர்கள்தாம் பொறுப்பேற்க வேண்டும். அது உத்தமம் மட்டுமல்ல.
இதில் யாருக்கு என்ன அதிகாரம் என்றே தெரியவில்லை. 2003லிம் சென்னையில் அரசின் பொறுப்பில் நடந்த மாநாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். 2003 மாநாடு தனியார் நடத்தியது போலத் தங்கு தடையில்லாமல் நடந்தது. ஏற்பாடுகளில் எதிலும் குறை சொல்ல முடியாது. ஓர் அரசால் இப்படி நடத்த முடியுமா என்று வியந்தே போனேன்.
கூட்டங்களைக் குறை சொல்வதற்கு முன்னால், ஏற்பாட்டாளர்கள் தங்கள் பொறுப்பையும் குறை சொல்லக் கற்றுக் கொள்வது நல்லது. இல்லையேல், இனி வரும் பெரும் கூட்டங்களையும், மாநாடுகளையும் நிர்வகிக்கத் தேவையான திறமைகளை வளர்க்காமல், தமிழ்க்கூட்டம் காட்டுமிராண்டிக் கூட்டம் என்று பழி போட்டுத் தம் கையாலாகாத் தனத்துக்குச் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு இருக்கலாம்.
கல்வெட்டு,
ReplyDeleteஉங்கள் ஒப்புநோக்கு தவறானது என்பதற்காகச் சொன்னது அது.
இன்னும் நீங்கள் அப்படியே தான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
சில வி.ஐ.பீ க்களுக்கு மட்டும் என்று தனியாக எடுத்துச் செல்லும் நாகரீகம் கூட (திராவிட) அரசியல் நாகரீகமே. Some are more equal than others என்ற எண்ணத்தால் வருவது.
அரசு அதிகாரிகளுக்கு ஏன் இந்த எண்ணம் வருகிறது என்பதற்கு George orwell இன் Animal Farm படித்தால் புரியும்.
//
ReplyDeleteவஜ்ரா போன்ற ஜாதி வெறியர்கள் இது தமிழர், திராவிடர் குணமாக அல்லாத அந்த அரசியலின் பண்பாட்டுச் சீரழிவாக நிறுவ முயற்சிப்பது கேவலமாக உள்ளது
//
கேவலமான திராவிட அரசியல் பண்பாட்டை எல்லாம் பெடஸ்டலில் ஏற்றி நல்ல பண்பாடு என்று சொல்ல முடியாது.
The emperor is naked என்று சொன்னால் திராவிட சொம்பு தூக்கி அனானிகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்...
ஜாதி, மதம், திராவிடம் என்று தயவுசெய்து திசை திருப்பாதீர்கள். அமிரிக்காவில் என்ன, உலகெங்கிலும் இது போன்று நடக்கிறது. மாநாட்டைப் பற்றி பேசும் போது நடந்ததைப் பற்றியும், வந்தவர்களைப் பற்றியும் தானே பதிவு செய்யமுடியும்.
ReplyDeleteஇரவில் பொருட்கள் களவு போவது, அதிகாரத்தின் பெயரால் பட்டப் பகலில் கொள்ளை அடிப்பது, ஓரளவு வசதி படைத்தவர்களும் பறக்காவெட்டிகளாக இருப்பது, தமிழ் வளர்ச்சிக்காக செயல்பட்டவர்களிடமும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது - இவற்றைத் தவிர்க்க முடியாதா என்ன?
இறுதியாக ஒன்று: குற்றத்தை மட்டுமே காண்பவர்கள் தாம் உருப்படியாக செய்தது என்ன என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
//கேவலமான திராவிட அரசியல் பண்பாட்டை எல்லாம் பெடஸ்டலில் ஏற்றி நல்ல பண்பாடு என்று சொல்ல முடியாது.
ReplyDeleteThe emperor is naked என்று சொன்னால் திராவிட சொம்பு தூக்கி அனானிகளுக்கு கோபம் வரத்தான் செய்யும்...//
வஜ்ரா,
திராவிடப் பண்பாட்டை நீர் பீடத்தில் ஏற்ற வேண்டுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உம்மைப் போன்றவர்கள் பீடத்தில் ஏற்றி வைத்திருக்கும் பாரத/இந்து பண்பாட்டின் லட்சணம் தான் சூறைத் தேங்காய்க்கு அலைவது என்பதைத் தான் சுட்டிக்காட்டியிருந்தேன். அது வெளிநாட்டுக்குப் போனாலும் மாறுவதில்லை. இதில் தமிழர்/தமிழரல்லாவதர், திராவிடர்/ஆரியர் என்ற வேறுபாடே இல்லை. ஒரே பொது அடையாளம் இந்துக்கள்/இந்தியர்கள் தான்.
Emperor களுக்கும் மேலான கடவுளர்களும், அவர்களுடைய ஏஜெண்டுகளுமே அம்மணமாக திரியும்போது the emperor is naked என்றால் என் கோபம் வரவேண்டும்.
பா. ரெங்கதுரை,
//நல்ல வேளை. ”மலம் துடைக்க வசதியாக கிறிஸ்துவ மதப் பிரச்சாரப் புத்தகங்களை டாய்லெட்டில் வைத்துக்கொண்டார்கள்” என்று சொல்லாமல் விட்டீர்களே. அதுவரை சரிதான். //
நல்ல ஐடியாவாக இருக்கே. உங்க அட்ரஸ் குடுங்க. அடுத்தமுறை இதுமாதிரி ஏதாவது கிடைத்தால் பேப்பரை குப்பையில் போடாம உங்களுக்கு அனுப்பச் சொல்கிறேன்.
//நல்ல ஐடியாவாக இருக்கே. உங்க அட்ரஸ் குடுங்க. அடுத்தமுறை இதுமாதிரி ஏதாவது கிடைத்தால் பேப்பரை குப்பையில் போடாம உங்களுக்கு அனுப்பச் சொல்கிறேன்.//
ReplyDeleteஉங்க எழுத்தோட துர்நாற்றம் போதுமே, பேப்பரை வேற ஏன் ரெங்கதுரையிடம் கேக்கறீங்க?
//வஜ்ரா...
ReplyDeleteசில வி.ஐ.பீ க்களுக்கு மட்டும் என்று தனியாக எடுத்துச் செல்லும் நாகரீகம் கூட (திராவிட) அரசியல் நாகரீகமே. Some are more equal than others என்ற எண்ணத்தால் வருவது.
அரசு அதிகாரிகளுக்கு ஏன் இந்த எண்ணம் வருகிறது என்பதற்கு George orwell இன் Animal Farm படித்தால் புரியும். //
வஜ்ரா,
யாரும் யாருக்கும் பெரியவரோ அல்லது சிறியவரோ இல்லை.
அதுவே எனது நிலைப்பாடும்.
பத்ரி சொல்வது...
//
[இந்த ரகளைகள் அனைத்தையும் நேரில் கண்ட காரணத்தால் ஒரு துண்டு சோவனீர்கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் முடிவாக இருந்து, எனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் தானம் தந்துவிட்டேன்.] //
1.இவருக்கு மட்டும் எப்படி சோவனீர் கிடைத்தது?
2.யாராவது கொடுத்தார்களா அல்லது எடுத்துக் கொண்டாரா?
3.அப்படியே யாராவது கொடுத்தாலும் இலவசங்களுக்கு எதிரான பத்ரி அதை மறுத்து இருக்க வேண்டும் அல்லவா?
4.ஒருவேளை விலை கொடுத்து வாங்கி இருக்கலாம்? அல்லது இவர் மட்டும் நுழைவுச் சீட்டை காசு கொடுத்து வாங்கி காம்ப்ளிமென்டாக சொவனீர் கொடுத்து இருக்கலாம்.
நுழையுச்சீட்டு எங்கே எந்த விலையில் விற்றது?
***
உங்கள் கொள்கைப்படியே பத்ரி எப்படி more equal than others ஆகிறார் ஒரு பொது விழாவில்?
நீங்கள் அவரைக் கேளுங்கள் முதலில். பின்னால் மற்றவர்களைக் குற்றம் சொல்லலாம்.
****
இலவசங்களை , சொவனீர்களை விமர்சிக்க வேண்டும் என்றால், பத்ரி அவரையும் விமர்சித்துவிட்டு அப்புறம் மேடையில் கவர்னர் பர்னால தொடங்கி பலருக்கும் கொடுக்கப்பட்ட விழாமலரில் இருந்து அர்ச்சனையை தொடங்கி இருக்க வேண்டும்.
ஒரு பொது விழாவில் இலவசமாக வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்றால் அதை அனைவருக்கும் பொது விதியாக வைக்க வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில் சிலருக்குமட்டும் இலவசங்களை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கும்போது சாமன்யன் அதை அடித்துக் கொண்டு பெற முயற்சிப்பான்.
**
பத்ரி நீங்கள் கூறியவற்றில் பலவற்றினை முன்னேற்பாடுகளின் மூலம் தவிரத்திருக்கமுடியும்.
ReplyDeleteஎனக்கு இரண்டாம்தடவை கூட பை கிடைக்க வாய்ப்பு 100 வீதம் இருந்தது நான் உண்மை சொல்லியதால் அப்படி கிடைக்கவில்லை.
இனிவரும் மாநாடுகளில் இவற்றினை தவிர்க்கலாம்
கல்வெட்டு: அவசரத்தில் ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் அளிக்கிறேன். தமிழ் இணைய மாநாட்டில் பங்குபெறப் பதிவு செய்த அனைவருக்கும் ஒரு பை, அந்தப் பையில் மாநாட்டுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம், சில சிடிக்கள், கடைசி நாளில் ஒரு பீங்கான் கோப்பை ஆகியவை தரப்பட்டன.
ReplyDeleteஇவை எதுவும் செம்மொழி மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கிடையாது. அவர்களுக்கு செம்மொழி மாநாட்டின் பை, வேறு சில சாமான்கள் கிடைத்திருக்கும். அந்தச் சாமான்கள், தமிழ் இணைய மாநாட்டுக்காரர்களுக்குக் கிடையாது. இரண்டு மாநாடுகளிலும் பதிவு செய்யாத பொதுமக்களுக்கு எதுவும் கிடையாது.
இந்த இருவர் தவிர, பொதுமக்கள் பலரும் உள்ளே நுழைந்து மாநாட்டுக்குப் பதிவு செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகளைக் கேட்டார்கள். கோவையில் இருக்கும் 15 லட்சம் பேரும் கேட்டால் இவற்றைக் கொடுக்கமுடியுமா? முடியாது என்பதையாவது நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ் இணைய மாநாட்டில் கட்டுரை வாசித்தவர்கள் மட்டுமல்ல, மாநாட்டின் பார்வையாளர்களாகப் பதிவு செய்தவர்களுக்கும் இவை அனைத்தும் கொடுக்கப்பட்டன. சாதி, மத, இன, நாடு வேறுபாடு காட்டாமல் கொடுக்கப்பட்டன. ஆனால் காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள், சும்மா அந்தப் பக்கம் வந்தவர்கள் ஆகியோர் கேட்டது ஒருபுறம். மாநாட்டுக்குப் பதிவு செய்தவர்கள் ஒரு பையை வாங்கிக்கொண்டு இரண்டாவது பை கேட்டது, திருட்டுக் கையெழுத்து போட்டு பைகளை எடுத்துச் சென்றது, நான்கைந்து பீங்கான் கோப்பைகளை சுருட்டிக்கொண்டது போன்றவையும் நடைபெற்றன. மறுபக்கம் செம்மொழி மாநாட்டு அரங்கிலிருந்து வந்து மிரட்டிக் கேட்டவர்கள், சும்மா உள்ளே நுழைந்து எடுத்தவர்கள் என்று ஒரு கோஷ்டி.
அடுத்ததாக நான் சுட்டிக்காட்டியது மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அல்லாது அந்நியர்கள் தயாரித்துக்கொடுத்திருந்த சில பொருள்கள். தினமலர் பத்திரிகை தயாரித்திருந்த ஒரு புத்தகம், மோசர் பேயர் உருவாக்கியிருந்த சிடி, CDAC உருவாக்கியிருந்த ஒரு சிடி, கோயம்புத்தூர் பற்றிய ஒரு காஃபி டேபிள் புத்தகம், கொங்கு வரலாறு பற்றிய ஒரு புத்தகம். (காசி ஆறுமுகம் இதைப் படித்தால் அவருக்கென்று ஒரு தகவல். நிஜமாகவே இந்தக் கடைசி இரண்டு புத்தகங்களை யார் உருவாக்கினார் என்று தெரியாது. அவற்றைப் பிரித்துப் படிக்கவும் இல்லை. என்னிடம் பிரதிகளும் இல்லை.) இந்தப் புத்தகங்களைத் தயாரித்தோர் அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லித்தான் கொடுத்தார்கள் - இவற்றில் பிரதி ஒவ்வொன்றையும் மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்களுக்கு ஆளுக்கு ஒன்று வீதமாகக் கொடுங்கள். ஆனால் நடந்தது வேறு. ஆக்கியோர் கேட்டுக்கொண்டவிதத்தில் நிறைவேற்றமுடியாமல் இடையில் வந்தவர்கள் ஆளுக்கு இரண்டு மூன்று என்று எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
This comment has been removed by the author.
ReplyDelete//உங்க எழுத்தோட துர்நாற்றம் போதுமே, பேப்பரை வேற ஏன் ரெங்கதுரையிடம் கேக்கறீங்க? //
ReplyDeleteஅனானி நண்பரே,
1 நான் எழுதியதில் எது துர்நாற்றம் என்று மேற்கோள் காட்ட முடியுமா?
2 ரெங்கதுரையிடம் பேப்பர் கேட்கவில்லை. பேப்பரை அவருக்கு அனுப்ப அவரிடம் அட்ரெஸ் தான் கேட்டேன். மதப் பிரச்சார பேப்பரில் மலம் துடைக்கும் ஐடியாவை கொடுத்தது ரெங்கதுரை. நீங்கள் கோபப்பட வேண்டியது அவரிடம் தான். அவர் மீதுள்ள ஏதாவது விசேஷமான பற்று தடுக்கிறதா?
பத்ரி :
ReplyDeleteபோதும்.
சிலர் சத்தம் செய்வதற்காகவே கேள்வி கேட்கிறார்கள். உங்கள் வேலையைப் பாருங்கள்.
இந்த இடுகையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் சொல்ல வந்தது புரியும். புரியாதது போல் நடிப்பவர்களின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.
பொதுவில் அவர்களின் கூச்சலுக்கு இடம் கொடுத்து அவர்களின் நுண்ணரசியல் தெரியாதவர்களைக் குழப்ப வேண்டாம்.
வார்த்தைகளுக்குள் பிரச்சனையைத் தேட முயல்பவர்கள் தேடிக்கொண்டே இருக்கட்டும்.
அவர்களுக்கு இன்னும் நிறைய சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
அப்போது மீண்டும் கத்தட்டும்.
இவ்விடுகைக்கு இது போதும்.
.
ReplyDeleteபத்ரி,
இதை நான் வளர்த்துக் கொண்டு போக விரும்பவில்லை. இருந்தாலும் பொதுப்புத்தியில் நின்று கொண்டு தன்னைத்தவிர அனைவரும் குற்றவாளிகள் என்று நீங்கள் சொல்லுவது ஏற்க முடியவில்லை. நீங்களும் அதில் ஒருவர் என்பதே எனது உரையாடலின் நோக்கம். இது உங்களுக்குப் புரியலாம் அல்லது புரியாமல் போகலாம். அது நீங்கள் நான் சொல்வதின் மையக்கருத்தை அணுகும் முறையில் உள்ளது.
இங்கே உரையாடலில் பங்கு கொள்ளும் அனைவரும் புரிந்து கொள்ள் வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவிலை.
***
இந்த மாநாடு எனது கருத்துக்களுக்கு ஒவ்வாத ஒன்று என்பதால் இதன் செயல்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. எனவே இந்த மாநாட்டில்
** பதிவு செய்தவர்கள்
** பதிவு செய்யாதவர்கள்
என்ற இரண்டு பிரிவினர் உள்ளார்கள் என்பதும் அதன் சட்ட திட்ட பாரபட்சங்களும் தெரியாது.
//இரண்டு மாநாடுகளிலும் பதிவு செய்யாத பொதுமக்களுக்கு எதுவும் கிடையாது.//
உங்களுக்கான கேள்விகள்
Q1. மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும் என்று பொது மக்களுக்கு தகவல் சொல்லப்பட்டதா?
Q2. எப்படி சிலர் மட்டும் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு பெற்றார்கள்?
Q3. மக்களின் வரிப்பணத்தில் நடத்திவிட்டு அதை மக்கள்விழாவாகச் சொல்லிவிட்டு , பதிவு செய்ய வேண்டிய தேவையை பொதுவில் விளம்பரப்படுத்தாமல் இருந்தால் ....நீங்கள் சொல்லும் //இரண்டு மாநாடுகளிலும் பதிவு செய்யாத பொதுமக்களுக்கு எதுவும் கிடையாது// இந்த விசயத்திற்கு யார் பொறுப்பு?
===
//இந்த இருவர் தவிர, பொதுமக்கள் பலரும் உள்ளே நுழைந்து மாநாட்டுக்குப் பதிவு செய்தவர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகளைக் கேட்டார்கள். //
Q4. பதிவு செய்தவர்களுக்கு பதிவு செய்யவும் , அதன் பெயரில் கிடைக்கும் பரிசுப் பொருளும் எந்த அடிப்படையில் அவர்களின் உரிமையாக, யாரால் கொடுக்கப்பட்டது? மேலும் எந்த அடிப்படையில் அந்த உரிமைகள் மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டது?
====
//கோவையில் இருக்கும் 15 லட்சம் பேரும் கேட்டால் இவற்றைக் கொடுக்கமுடியுமா? முடியாது என்பதையாவது நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.//
Q5. பொதுவான ஒரு விழாவில் ஏன் ? எப்படி சிலர் மட்டும் வரிப்பணத்தில் பை பெற்றார்கள்? கல்யாண வீடுகளில் மொய் செய்தவருக்கு மட்டும் பை தருவதில் கூட ஒரு நியாயம் உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் ஏன் சிலருக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. நீங்கள் மட்டும் தனித்துவமானவர் என்றால் இதை பொது விழா, மக்கள் விழா என்று சொல்ல வேண்டாம்.
====
//ஆனால் காவலுக்கு நின்ற போலீஸ்காரர்கள், //
Q6. உங்களின் பங்களிப்பைப்போல , மாநாட்டு பாதுகாப்பு என்பதும் ஒரு பங்களிப்பு இல்லையா? இவரின் பங்களிப்பு எந்த வகையில் உங்களிவிடக் குறைந்தது?
இவருக்கும் நீங்களாகவே பரிசு/ நினைச் சின்னம்/ மலர்/ சொவனீர் கொடுத்தால் என்ன? உங்களின் இந்த மனப்பான்மைதான் வருத்தம் தருகிறது.
====
//சும்மா அந்தப் பக்கம் வந்தவர்கள் ஆகியோர் கேட்டது ஒருபுறம். மாநாட்டுக்குப் பதிவு செய்தவர்கள் ஒரு பையை வாங்கிக்கொண்டு இரண்டாவது பை கேட்டது, திருட்டுக் கையெழுத்து போட்டு பைகளை எடுத்துச் சென்றது, நான்கைந்து பீங்கான் கோப்பைகளை சுருட்டிக்கொண்டது போன்றவையும் நடைபெற்றன. மறுபக்கம் செம்மொழி மாநாட்டு அரங்கிலிருந்து வந்து மிரட்டிக் கேட்டவர்கள், சும்மா உள்ளே நுழைந்து எடுத்தவர்கள் என்று ஒரு கோஷ்டி.//
விநியோகிக்க என்று ஒரு இடத்தில் பொருட்கள் இருந்தால் அவற்றை தேவைக்கு அதிகமாகவும் பெற்றுக் கொள்ள எடுத்துக் கொள்ள முனைவது உணவைச் சேமிக்கும் பழக்கம் கொண்ட எல்லா விலங்குகளுக்கும் உள்ள பொதுக்குணம். இதை நீங்கள் தமிழர்குணம் என்று மட்டும் சொல்வது தவறு.
===
//இந்தப் புத்தகங்களைத் தயாரித்தோர் அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லித்தான் கொடுத்தார்கள் - இவற்றில் பிரதி ஒவ்வொன்றையும் மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்களுக்கு ஆளுக்கு ஒன்று வீதமாகக் கொடுங்கள். //
இது விநியோக முறைக் குளறுபடி. அனைவரும் உள்ள ஒரு பொது இடத்தில் பேராளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட வேண்டிய ஒன்று பொதுப்பார்வைக்கு இருக்கத் தேவை இல்லை.
.
கல்வெட்டு:
ReplyDeleteதமிழ் இணைய மாநாடு நடக்கப்போகிறது என்று தமிழக செய்தித்தாள்களில் கடந்த பல மாதங்களாக முரசு அறைந்துவந்திருக்கிறார்கள். இணையச் சுட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திக்குறிப்புகள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. அவை அனைத்திலும், மாநாட்டில் கலந்துகொள்ள கட்டுரைகள் சமர்ப்பிக்கவேண்டும் என்பது பற்றியும், பார்வையாளராக வருவதற்கு எங்கு பதிவு செய்யவேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
உத்தமம் இணையத்தளத்தில் யாரெல்லாம் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று தெளிவாகச் சொல்லியுள்ளனர். பதிந்துகொள்ளக் கடைசித் தேதி எது என்றும் சொல்லியுள்ளனர்.
அது ஒரு பக்கம் இருக்க, இந்த மாநாடு தமிழ் இணையம், கணினி தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள், நிபுணர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கானது. ஒரு அறிவியல், பொறியியல் மாநாட்டு அளவுக்கு rigorous ஆக இல்லாவிட்டாலும் துறை நிபுணத்துவம் இல்லாதவர்களுக்கு எந்த வகையிலும் பயன் தரக்கூடியதல்ல. எனவே எல்லோரையும் உள்ளேவிடச் சொல்லி, குடியாட்சி முறையைக் காட்டிப் பேசுவது நியாயமல்ல.
மாநாடு நடக்கும் இடத்துக்கு பொதுமக்கள் வந்திருக்கவே கூடாது என்பதுதான் என் கட்சி. அப்படி வந்தாலும், தன்னார்வலர்கள் அவர்களிடம் பணிவாகச் சொல்வதைக் கேட்காமல், ‘ஏதாவது கொடு’ என்ற மனநிலை தென்பட்டதை எடுத்துச் சொன்னேன். ‘தமிழன்’ என்று குறிப்பாகச் சொன்னது தமிழர்களுக்கு வருத்தம் என்றால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நான் சார்ந்த சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம் உள்ளது. அந்த ஆதர்சத்துக்குச் சற்றும் அருகில் இல்லாமல் இருக்கும் ஒரு சமூகத்தை நோக்கி என் கோபத்தைக் காட்டினேன். பிற இந்தியர்கள், பிற வளரும் நாட்டவர்கள் என்று பிரச்னையை நீர்த்துப்போகச் செய்ய நான் விரும்பவில்லை.
இந்தப் பதிவை எழுதவே நான் லாயக்கற்றவன் என்று நீங்கள் கருதினால், மன்னிக்கவும், அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. என் கருத்தை என் வார்த்தைகளில் தொடர்ந்து சொல்லத்தான் போகிறேன்.
அடுத்து, மாநாட்டில் காவலுக்கு இருந்தவர்கள், துப்புறவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு என்ன தரவேண்டும் என்பதை அரசோ அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்திய அதிகாரிகளோதான் முடிவுசெய்யவேண்டும். செப்புத் தகட்டில் அடித்த திருவள்ளுவர் மெமண்டோக்கள்... தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்ற யாருக்கும் தரப்படவில்லை. எனவே செம்மொழி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்டன என்று யூகிக்கிறேன். பெட்டி பெட்டியாக நிறைய இருந்தன. யார் யாரோ தூக்கிச் சென்றார்கள். காவலர்களுக்கும் அவை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மாநாட்டு மலர் என்பது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் அடங்கிய ஒன்று. அதனையும் காவலர்களுக்கு அளித்தே தீரவேண்டும் என்று சொல்வது சரியானதாகத் தெரியவில்லை.
தினமலர் புத்தகம், கோயம்புத்தூர் புத்தகம், கொங்கு வரலாறு புத்தகம் ஆகியவற்றை இந்த மாநாட்டில் வழங்கி இருக்கக்கூடாது; ஏனெனில் பொது இடத்தில் ஒருவருக்குக் கொடுத்து இன்னொருவருக்குக் கொடுக்கவில்லை என்றால் அது நியாயம் இல்லை என்று நீங்கள் சொல்வதை ஓரளவுக்கு ஏற்கிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்க வருவோர் அனைவரும் முக்கியமானவர்கள்; இந்தப் புத்தக அவர்கள் கைக்குச் சென்றால் அவர்கள் கோயம்புத்தூர் பற்றியும் கொங்கு மக்கள் பற்றியும் நல்ல எண்ணங்களை ஏந்திச் செல்வார்கள் என்ற எண்ணத்தில் அந்தக் காரியம் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனாலும், இது இவருக்குத்தான் என்று அந்த விநியோகஸ்தர்கள் சொன்னால், நானாக இருந்தால் சரி என்று ஏற்றுக்கொண்டிருப்பேன்.
சேமிப்பு எண்ணம் கொண்ட யாருமே ஒன்று கொடுத்தால், மேற்கொண்டு நான்கு ஐந்தைச் சுருட்டிக்கொள்ளத்தான் முனைவார்கள் என்ற உங்கள் கருத்தை ஏற்கமுடியாமைக்கு வருந்துகிறேன். அந்த எண்ணம் தவறானது என்று நம்புகிறேன். சமுதாய உருவாக்கத்தில் மனிதன் தன் அடிப்படை விலங்கு எண்ணத்தைக் குறைத்துக்கொண்டுதான் வந்திருக்கிறான். மீண்டும் விலங்கு எண்ணம் வளரவேண்டும் என்றா நாம் எதிர்பார்ப்பது?
ஷப்பாஆஆ.. இப்பவே கண்ணைக் கட்டுதே!
ReplyDeleteகல்வெட்டுல அடிச்ச மாதிரி மொக்கை போடுறீங்களே கல்வெட்டு சார் :-)
பதிலே சொல்லத் தகுதியில்லாத கேள்விகளைக் கேட்கவும் ஒரு திறமை வேண்டும்.
ஜமாய்ங்க inscription சார்!
.
ReplyDeleteபத்ரி,
1 .பதிவு செய்துகொள்ளும் உரிமை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு இருந்து , அது விளம்பரப்படுத்தப்படும் இருந்து , மக்கள் அதைச் சரியாக பயன்படுத்தாமல் இருந்திருந்தால் அது மக்களின் குற்றம்.
2. இந்தக் குளறுபடிகளைக் கண்டிக்க உங்களுக்கும் எனக்கும் அனைவருக்கும் தார்மீக உரிமை உண்டு. அது தமிழன் என்ற ஒற்றைச் சொல்லினால் வரும் உரிமை.
3. ஆனால், ரோட்டில் ஒண்ணுக்கு போகக்கூடாது என்பது தொடங்கி உங்கள் நிறுவனம் செய்த தவறுகள் வரை ... அது தவறு என்று தெரியாததும் ... தங்களின் உரிமை,எல்லாரும் செய்கிறார்கள் நான் செய்தால் என்ன ? என்று நினைப்பதால் வரும் ஒரு நிலை. எடுத்துச் சொல்லலாம். திருந்த வாய்ப்பு உண்டு.
4. இப்படித்தான் வரிசையில் நிற்க வேண்டும் என்று தெரிந்திருந்தாலும் தேங்க்ஸ் கிவ்ங் டே குளறுபடி போல இப்படி நடக்கும் என்பதும் அஜெண்டாவில் இருக்க வேண்டும்.
5.சாப்பாட்டைச் சேமிக்கும் எறும்பு போல மனிதனின் விலங்குக்குணம்.
திருட்டும் , உடலுறவு விசயங்களும் சட்டம் போட்டே கட்டுப்படுத்தப்படுகிறது. விலங்குக்குணங்கள் சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இருப்பதாலேயே அடங்கி இருக்கிறது.
விலங்கு குணத்திற்கு செல்ல வேண்டாம். ஆனால் அதை கட்டுப்படுத்த செயல்முறைகள் இருந்தால் நல்லது.
6.காவலருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவரின் மேலதிகாரி செய்ய வேண்டியது. சரி, ஆனால் உங்களுக்காக உங்கள் தெருவில் காவல் பணி மேற்கொள்ளும் காவலருக்கு உங்கள் வீட்டு விசேசதில் கொடுக்கும் ஒரு பவண்டோ தாரளாமாகக் கொடுக்கலாம் அவர் விரும்பும் பட்சத்தில்.
காவலரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும் சொவனீர் அனைவருக்கும் தேவை என்பதும் உணரப்பட்டால் நல்லது.
**
விளக்கங்களுக்கு நன்றி !!
அடடா..!
ReplyDeleteபத்ரி ஸார்.. நீங்க ஏன் திரட்டில இணையலை.. நான் இப்பத்தான் இந்தக் கட்டுரைகளைப் பார்க்கிறேன்.. தற்செயலா வந்தேன்..! திரட்டிகளில் இணையாததால் என்னைப் போன்ற அன்பர்களுக்கு பெரும் நஷ்டம்..!
இதெல்லாம் என்ன ஸார் பெரிய கொள்ளை..? 450 கோடில ஒரு குடும்பமே கூட்டுக் கொள்ளையடிச்சிருக்காங்க.. அதைப் பத்தி பேசாம பொதுமக்கள் சுட்டுட்டுப் போன நூறு ரூபாயை பத்தி பேசுறீங்களே ஸார்.. இது கொஞ்சமும் நியாயமில்லை..!
450 கோடி செலவில் எத்தனை கோடி ரூபாயை கழகமும், குடும்பமும் சுருட்டியிருக்கும் என்பதைக் கணக்குப் போட்டுப் பாருங்கள்..!
பொதுவாக ஒரு பெரிய கூட்டத்தில், ஒரு 3%-6% பேர் சற்று வேறுபடுவார்கள். சட்டங்கள், விதிகள், இவற்றை இந்தக் கூட்டத்தில் மீறலாம், ”எல்லோரும் செய்கிறார்களே, நாமும் செய்யலாம்” என்ற எண்ணம் தோன்றும். சாலை விதிகளை மீறுபவர்கள், தேர்வுகளில் பக்கத்துத் தாளைப் பார்த்து எழுதுதல், போன்ற செயல்களைச் செய்பவர்கள் பொதுவாக இவ்வளவு அளவுக்குள் இருப்பார்கள்.
ReplyDeleteஆய்வரங்குக்குள் வந்த பதிவாளர்கள் 4000 பேருக்கு மேல். “விருந்தினர்கள்”, காவலர்கள், மற்றும் துணை புரிந்தவர் இன்னும் ஒரு 1000 பேர் என்று வைத்துக் கொள்வோம்.
5000 பேருக்கு ஒரு 150 முதல் 300 பேர் வரை இந்த அத்துமீறல் கும்பல் என்று கொள்ளலாம்.
300 பேர் செய்தால், எல்லோருமே செய்தது போல்தான் தோன்றும்.
5000 பேருமே செய்திருக்க முடியாது. ஏனெனில் மொத்தம் இருந்த பைகளே நானூற்றுச் சொச்சம்தான். செம்மொழி மாநாட்டுக் காரர்கள் அவர்கள் மலரைப் பேராளர்களுக்கு விடுதியிலேயே கொண்டு போய்க் கொடுத்து விட்டார்கள்.
இணைய மாநாட்டுக் காரர்களுக்கு அவர்கள் மாநாட்டுக்குப் பதிந்தவர்கள் அடையாள அட்டை மட்டுமல்ல, அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் போனது சற்று வியப்புதான்.
முதல் நாளிலேயே பேராளர்களுக்கு அடையாள அட்டை முதல், மாநாட்டு மலர் வரை எல்லாவற்றையுமே கொடுத்திருந்தால், இந்தத் “தாக்குதல்” நேர்ந்திருக்காது. வெறும் 3% பேரால், தமிழினத்துக்கே பழியும் வந்து சேர்ந்திருக்காது.
கைக்காசு போட்டு வெளிநாடுகளிலேயே தமிழ் மாநாடுகள் நடத்தி வருபவர்களுக்கும் இந்தப் பழியின் சுமை கூடியிருக்காது.
வாடிக்கையாளர் தொண்டு - கஸ்டமர் சர்வீஸ் - செய்பவர்களுக்கு வேத வாக்கு “வாடிக்கையாளரே கடவுள்.” எப்போது வாடிக்கையாளர்களை மட்டமாகப் பார்த்துக் கொண்டு, தம்மை உயர்த்திக் கொள்கிறோமோ அப்போது அந்தத் தொண்டின் தரம் தாழ்ந்து விடுகிறது.
இதைத்தான் இணைய மாநாட்டில் பார்த்தோம். ஏற்பாட்டாளர்கள் அடிப்படையையே கோட்டை விட்டு விட்டார்கள். அடையாள அட்டையை மட்டுமல்ல, பேராளர் பதிவுகள் எல்லாவற்றையும் உத்தமம் முன்னெடுத்துச் செய்திருக்க வேண்டும்.
செய்யவில்லை.
பேராளர்களுக்குக் குழப்பம் உண்டானைதை உறுப்பினர் கூட்டத்தில் சுட்டிக் காட்டியபோது தலைவர் வருத்தம் தெரிவித்தார். உறுப்பினர்களும் விட்டு விட்டார்கள்.
மொத்தத்தில் இவ்வளவு பெரிய மாநாட்டையும், அதன் கூட்டத்தையும் சரியாகப் பயன்படுத்தி இணையத்தைப் பற்றிய செய்திகளைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்ததைக் கோட்டை விட்டாயிற்று.
இலவச சூவனியர் தானே கேட்டார்கள்? இணையம் பற்றிய செய்திகளையும், அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கு விடையையும், ஆயிரக் கணக்கில் அச்சடித்து “சூவனியர்” ஆகக் கொடுத்திருக்கலாமே!
விக்கிப் பீடியா, மதுரைத் திட்டம், நூலகம், என்று பல வலைப்பக்கங்களிலிருந்து திரட்டிய செய்திகளை அச்சடித்துக் கொடுத்திருக்கலாமே! விளம்பரதாரர்கள் வந்திருக்க மாட்டார்களா என்ன? திரும்பிய இடமெல்லா நாய்ஹாவின் விளம்பரம் இருந்த போது, விளம்பரதாரர்களுக்கா பஞ்சம்?
ஆடத் தெரியவில்லையென்றால் கூடம் பற்றாதுதான்.
சார் , உங்கள் கோபம் , ஆதங்கம் எல்லாம் புரிகிறது... அனால் , அவர்கள் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை சரியாக புரிந்து கொள்ளவில்லை... அவர்களை விட அதிகம் பிச்சை எடுத்தது யார் என்பதையும் நீங்கள் சொல்லவில்லை...
ReplyDeleteதவறான இடத்தில் இருந்த , நல்லவர் என்பதால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு வருந்து கிறேன்...
ஒன்று செல்கிறேன்... நீங்களே ஒரு தமிழ் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்... ஆடம்பரம் வேண்டாம்.. விளம்பரம் வேண்டாம்... ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளட்டும்... அது எவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்காக நடக்கிறது, என்று பாருங்கள், தமிழர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்பது உங்களுக்கு புரியும்....
மேலும் சொல்ல இடம் இல்லை என்பதால், தனி பதிவில் சொல்லி இருக்கிறேன் ..
செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்களுக்கு பணிவான விளக்கம்
http://pichaikaaran.blogspot.com/2010/07/blog-post_8229.html
தமிழில் பின்னூட்டம் படிப்பதை இன்றுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். இருப்பினும் சரன், உண்மைத் தமிழன், மணி.மு.மணிவண்ணன் ஆகியோரது பின்னூட்டம் மனநிறைவைத் தருகிறது.
ReplyDelete//கண்ணன்: ஐரோப்பாவில் வசிக்கும் தமிழனா?..
எங்களைப் பார்த்து உங்களுக்கு சிரிப்பு வருவதைப் போல உங்களைப் பார்த்தாலும்தான் பாவமாய் இருக்கிறது. தமிழ் பேச ஆளில்லை என்றால் பதிவுகளைப் படித்து நேரம் கழிக்கவும்.
தங்கள் பதிவைப் பற்றி என் நண்பர் பாஸ்கர் சுட்டியபின் இன்றுதான் படித்தேன். வெகு நாட்களாக என்னுள் எழுப்பபட்ட கேள்விக்கு ஒரே விடை கிடைத்துவிட்டது. ‘ நோய்க்கூறு’ மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதை என் அனுபவத்திலும் உணர்ந்தேன்.
ReplyDeleteஎன் மகன் திருமண வரவேற்பிற்கு எங்கள் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்தோம். 650 அழைப்பிதழ் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், 350 அழைப்பிதழ் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தோம். இங்கு ஒரு விஷயம். எங்கள் அழைப்பிதழை ஒரு எவர்சில்வர் தட்டில் அச்சிட்டு தட்டையே ஒரு குங்குமச்சிமிழுடன் ஒவ்வொருவருக்கும் வீட்டிற்கு சென்று நேரில் அளித்தோம். எதிர்பார்த்தது 3000 பேர். வந்ததோ 5000 பேர். இதில் உட்கார்ந்து சாப்பிட 250 இருக்கைகள் 60 வட்ட மேஜைகளுக்கு அருகிலும், நின்று சாப்பிட 10 கேனோபிகளும் ஏற்பாடு செய்திருந்தோம். நாங்கள் செய்த அடுத்த தவறு ஒவ்வொரு சிற்றுண்டி வகைக்கும் பாக்கு மட்டையை பயன்படுத்தினோம். என்ன ஆயிற்று என்று உணர்ந்திருப்பீர்கள். ஆம். மாநாட்டில் நடந்த அதே அசிங்கம் நடந்தது. சமையல்காரர் திணறிவிட்டார். 110 பணியாளர்களும் திணறிவிட்டனர். இப்போதுதான் புரிகிறது. நம் மக்களுக்கு பண்பாட்டுக் கல்வி (அனைத்து பள்ளிகளிலும் பேருக்கு இருக்கிறது) கண்டிப்பாக கற்பிக்க்ப்பட்டு திருத்தினால் ஒழிய இந்நோய் தீராது.
எங்கள் இல்லத் திருமணத்திற்கு வந்த யாரையும் புண்படுத்தும் நோக்கில் இதை எழுதவில்லை. சாப்பிடாமல் சென்று விட்ட எங்கள் பள்ளிப் பெற்றோர்களுக்கு தனித்தனியாக மன்னிப்பு கேட்டு ஒரு கடிதமும் எழுதிவிட்டோம்.
கல்வெட்டு,
ReplyDeleteஅரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, நீங்களும் ஒரு சாமானிய தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். நன்றி. :-)
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )
( ஒருவேண்டுகோள் , நீங்கள் இது வரை இங்கு விவாதித்ததை எடுத்து விடுங்கள். அருகதை கிடையாது )
//பா. ரெங்கதுரை said...
ReplyDeleteபல நூற்றாண்டுகளாகப் பார்ப்பனீய இந்து மதத்தின் கொடும் பிடியில் சிக்கி உழல்வதாலேயே இத்தகைய மனநோய் தமிழர்களையும் பீடித்துவிட்டது. உடனடியாகத் தமிழர்கள் அனைவரும் இஸ்லாத்தையோ அல்லது கிறிஸ்தவத்தையோ தழுவதன் மூலமே இத்தகைய பிச்சைக்கார மனநிலையிலிருந்து விடுபட முடியும்//
ரெங்கு நீங்க என்ன சொல்ல வற்றீங்க? ஜாதி மானியம் கொடுக்கப் போறீங்களா?
--
ஜவுளிக் கடை பை மற்றும் பெட்ரோல் மானியம் பற்றிப் பேசுபவர்களே அப்போ மானியம் என்பதும் பிச்சைதானே? பெட்ரோலின் உண்மையான கொள்முதல் விலை என்ன? விற்பனைக்கும், கொள்முதலுக்குமான வித்தியாசம் என்ன? ஜவுளிக் கடையில் பை இலவசமாக வாங்கவா ஜவுளி வாங்குகிறார்கள்? விட்டால் ஏசி மானியமாகப் போடுகிறார்கள் ஸ்பேஸ் சூட் போட்டுக்கொண்டு போங்கள் என்பீர்கள் போல..
டாஸ்மாக்கில் மானியம் தரப்படுகிறதா? மினரல் வாட்டர், பெப்ஸி கோக் முதலானவையும் மானியமா? 15 பைசா கலர் தண்ணீரை 12 ரூபாய்க்கு விற்பவர்களுக்கு உங்கள் பதிலென்ன?
என்னமோ இங்கே எல்லாமே மானியத்தில் வாழ்க்கை தருவதுபோல நல்லா வக்காலத்து.. ஒன்றுக்குப்போவதுக்குக்கூட காசுதரவேண்டியுள்ளதே? ஏன் மானியத்தில் பொதுக் கழிப்பிடம் அமைக்கவேண்டியடுதானே? செம்மொழி முக்கியமா? சுகாதாரம் முக்கியமா? தலைமைச் செயலகத்திலிருந்து கத்திப்பாரா வரை எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் இருக்கின்றன?
மானியம் மானியம் என்று பீற்றிக் கொள்பவர்களே? பின் எதற்காக வருவாய்த்துறை என்ற ஒன்று இருக்கிறது? உங்கள் கூற்றுப்படியே பெட்ரோலை 20% லாபம் வைத்தே மக்களுக்கு விற்பனை செய்யுங்களேன் யார் தடுத்தது?
ReplyDeleteசரி போகட்டும் எதெல்லாம் அரசு மானியமின்றி லாபத்துக்கு விற்கிறது என்பதைச் சொல்ல துணிச்சல் இருக்கிறதா உங்களுக்கு.
அடிப்படை வசதிகள் ஏதும் தராமல் மக்களை என்றும் பிச்சையெடுக்க வைத்திருப்பதே ஆட்ச்சியில் நீடிக்கத்தான். மெத்தப் படித்த மேதாவிகளும் அடிவருடிகளுமே மானியத்தைக் கொண்டாடுவார்கள். வெட்கக்கேடு.
.
ReplyDeleteபத்ரி,
இங்கே Rangan Kandaswamy said...
என்பவர் எழுதியுள்ள பின்னூட்டத்தை எந்த அடிப்படையில் வெளியிட்டு உள்ளீர்கள்? அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்றாவது தெரியுமா?
காப்பிரைட் விசயத்தில் உங்கள் நிறுவனம் செய்த தவறுகளையும் (காப்பி ரைட் வயலேசன்) நான் அரசின் பொது அதிகாரபூர்வ அரசாணையை எனது தளத்தில் வெளியிட்டதையும் ஒப்பிடுகிறார்.
ஒன்று உங்கள் நிறுவனம் செய்ததாக நான் சொல்லும் காப்பி ரைட் வயலேசன்களிச் செய்யவில்லை என்று சொல்லுங்கள் அல்லது நான் இந்தப்பதிவில் http://kalvetu.blogspot.com/2010/07/blog-post.html
ல் செய்துள்ளதும் உங்கள் நிறுவனம் மீது நான் சொல்லும் காப்பி ரைட் வயலேசன்களும் ஒன்றே/ ஒப்பிடத் தக்கவையே என்று சொல்லுங்கள்.
ஏன் இப்படி பத்ரி? :-((((
.
கல்வெட்டு: ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டால் அத்துடன் நான் ஒத்துப்போகிறேன் என்ற எண்ணம் இல்லை. அப்படியென்றால் என் பதிவில் என் கருத்தைத் தவிர வேறு எதையும் பின்னூட்டமாக வெளியிட முடியாது. ரங்கன் கந்தசாமி யார் என்று எனக்குத் தெரியாது. அவர் விரும்பியதை அவர் எழுதியுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்காக நான் அவருடைய பின்னூட்டத்தை நிறுத்தப் போவதில்லை.
ReplyDeleteஎன்னைப் பொருத்தமட்டில் இந்தப் பதிவில் நான் மேற்கொண்டு எழுத எதுவும் இல்லை. ஆனால் மேற்கொண்டு வரும் பின்னூட்டங்கள் மிக ஆபாசமாக இல்லாதபட்சத்தில் அவற்றை வெளியிட்டே வரப்போகிறேன்.
இணையத்தில் இவ்வளவு நாள் இருக்கும் நீங்கள், இதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
மற்றபடி காப்புரிமை பற்றி நீங்கள் என்மீது சுமத்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பற்றி இங்கே நான் பதில் சொல்ல விரும்பவில்லை. வேண்டுமானால் தனியாக ஒரு பதிவில் செய்துகொள்ளலாம். எங்கள்மீது சுமத்தப்பட்ட அந்த “நான்கு” குற்றச்சாட்டுகளையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்டு, மாற்றங்கள் செய்துள்ளோம். ஆனாலும் திருடன், திருடன், காபிரைட் வயலேசன் என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். என்ன செய்வது?
மற்றபடி என் பதிவில் வரும் அனைத்துப் பின்னூட்டங்களுடனும் உடன்பட்டும் மறுத்தும் நான் எழுதியே ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?
.
ReplyDeleteபத்ரி,
//ரங்கன் கந்தசாமி யார் என்று எனக்குத் தெரியாது. அவர் விரும்பியதை அவர் எழுதியுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்காக நான் அவருடைய பின்னூட்டத்தை நிறுத்தப் போவதில்லை.
//
//மற்றபடி என் பதிவில் வரும் அனைத்துப் பின்னூட்டங்களுடனும் உடன்பட்டும் மறுத்தும் நான் எழுதியே ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? //
யார் விரும்பியதையும் யாரும் எழுதலாம்.
நீங்கள் மட்டுறுத்தல் வைத்து இருக்கும்போது குறைந்தபட்சம் யார் எதற்காக என்ன பேசுகிறார்கள் என்றாவது பார்ப்பீர்கள் என்று நினைத்தேன்.
எனது அனுமானம் தவறு . மன்னிக்க.
**
உங்களின் நிறுவனத் தவறுகள்/ செயல்பாடுகள் குறித்து நீங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு இருக்கலாம். பதிவுகள் வழியாக பொதுவில் மன்னிப்பு கேட்டதாக ஞாபகம் இல்லை.
கேட்க வேண்டிய தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் உரிமை.
அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்ட இணையச் சுட்டிகள் கொடுக்கவும் நிச்சயம் எனது பதிவிலேயெ வெளியிட்டு இனிமேல் இதைத் தொடராமல் / தொடாமல் இருக்கிறேன்.
**
அப்படி நீங்கள் கொடுக்காவிட்டாலும், இந்தப் பதிவில் இங்கே பின்னூட்டத்தில் நீங்கள் வருந்துக்கூறிய
//அந்த “நான்கு” குற்றச்சாட்டுகளையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கேட்டு, மாற்றங்கள் செய்துள்ளோம். //
இதையே உங்களின் கருத்தாக ஏற்று இனிமேல் இதுபற்றிப் பேசப்போவது இல்லை என்று உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
***
இடுத்துரைக்கும் நோக்கிலேயே இதுவரை பேசியுள்ளேன்.
தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்க. :-(((
அப்படி இருப்பின் எனது வருத்தங்களையும் , மன்னிப்பையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
உரையாடலுக்கு நன்றி !
.
//இணையத்தில் இவ்வளவு நாள் இருக்கும் நீங்கள், இதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.//
ReplyDeleteபத்ரி,
அவர் சொன்ன கருத்துக்களை வெளியிடுவது என்பது அதை நீங்கள் ஏற்றது ஆகாது என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும் அவர் பேசும் பேசு பொருளையாவது ( மட்டுறுத்தல் இருப்பதாலேயே ) சரி பார்ப்பீர்கள் என்று நினைத்தேன்.வேலைப் பளுவிற்கு இடையில் யாரும் அதைச் செய்யமுடியாது என்று உணர்ந்து கொள்கிறேன். பதிலுக்கு நன்றி.
நான் சட்டத்தை மீறுகீறேன் என்ற தொனியில் அவர் சொன்னதால் (இப்போது நான் அரசிற்கு நன்றி சொல்லாததே காரணம் என்று சொல்லிவிட்டார்) சட்டப்பிரச்சனைகளைச் சரி செய்யும் நோக்கில் கேட்டேன்.
.
அதென்ன தமிழனுக்கு மட்டும்? உலகத்துல இருக்கிற எல்லாருக்குமே,அதாவது எல்லாம் மனுசப்பயலுகளுக்கும் இருக்கிறதுதானுங்களே.
ReplyDeleteஅன்பின் பத்ரி
ReplyDeleteஇந்த வார ஓ பக்கங்களில் ஞாநி உங்களின் இந்த இடுகையைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
தமிழ்ப் பதிப்பாளரும் இணைய ஆர்வலரும் சிந்தனையாளருமான பத்ரி சேஷாத்ரி தன் வலைப்பதிவில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டையொட்டி நடந்த இணையத் தமிழ் மாநாட்டில் அவர் தொண்டராகப் பணியாற்றிய அனுபவங்களை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன்.
....
//பத்ரி மனம் நொந்து எழுதியிருப்பதை அலட்சியமாக ஒதுக்கிவிடமுடியாது. இலவசமாகக் கிடைக்கும் ஒரு பொருளுக்கு முண்டியடித்துப் போராடிப் பெறுவது, வேறு வழியில்லாமல் திருடுவது எல்லாம் வறுமை என்ற கொடுமையில் அல்லற்படுவோரில் சிலர் உலகம் எங்கும் செய்யும் செயல்தான். ஆனால் பத்ரி சுட்டிக்காட்டும் கோளாறு மெத்தப் படித்த, நல்ல சம்பளங்கள் வாங்குகிற மேல்தட்டு மனிதர்களின் நோய்க்கூறான மன நிலை பற்றியதாகும். பொது இடங்களில் ஒழுங்கு என்பதை துல்லியமாகக் கடைப்பிடிக்கும் அமெரிக்க சமூகத்தில் கூட பல இந்தியர்கள், தமிழர்கள் உட்பட அந்த ஒழுங்கை திருட்டுத்தனமாகவோ சாமர்த்தியமாகவோ ஏய்ப்பது என்பதில் ஈடுபடுவதைப் பற்றி இங்கிருக்கும் நண்பர்கள் சொன்னார்கள்.
500 கோடி செலவில் மாநாட்டை நடத்துபவர்கள் புறங்கைத் தேனை வழித்து நக்காமலா இருக்கப் போகிறார்கள் ? நான் ஒரு சிடி, ஒரு விழா மலர், ஒரு மக், ஒரு சால்வை, ஒரு கம்ப்யூட்டர் எடுட்துக் கொண்டு போனால், என் மாமன், மச்சான், பேரன் பேத்திகளுக்காக இன்னும் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு போனால் என்ன குறைந்துவிடும் என்ற மன நிலையில் பல சாதாரண, படித்த தமிழர்கள் இன்று இருக்கிறார்கள். அப்படி நினைத்தால் என்ன தவறு என்று நினைப்பவர்கள் பெருகி வருகிறார்கள் இந்த மன நிலை பெருகுவதற்குக் காரணம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், இருந்த, மாறி மாறி இருக்கும் அரசியல்வாதிகள்தான். ஊழலைப் பற்றி நம் சமூகத்தில் பெரிய கோபம் எதுவும் வராமல் இருப்பதற்குக் காரணம், வாய்ப்பு கிடைத்தால் நானும் அதை செய்ய்த் தயார்தான் என்ற மன நிலைக்கு சாதாரண மக்களை அரசியல்வாதிகள் தள்ளிக் கொண்டே வருகிறார்கள். கல்வி, உயர் படிப்பு எதுவும் நம்மிடம் ஒழுக்கங்களை வளர்க்க துளியும் பயன்ப்டவில்லை . சாமர்த்தியங்களை வளர்க்கவே பயன்படுத்தப்படுகின்றன.
மக்களும் ஊழல் பேர்வழிகளாக, பிச்சைக் காரர்களாக, கொள்ளைக்காரர்களாக மாறுவது ஊழல் அரசியல்வாதிகளுக்கு சாதகமான விஷயமாகும். கோபமும் அறச் சீற்றமான ரௌத்ரமும் மக்களிடம் தோன்றவிடாமல், போதையும், பிழைப்புவாத புத்தியும் பெருகச் செய்வதே அரசியல்வாதிகள் இதற்காகப் பயன்படுத்தும் ஆயுதங்கள்.
தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு என்றார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. அந்த குணம் நிச்சயம் பிச்சைக்காரத் தனமாகவோ,
கொள்ளையடிப்பதாகவோ இருக்க முடியாது. நம்மை மோசமான அரசியல்வாதிகளிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், கூடவே நம்மை நம்மிடமிருந்தே மீட்டெடுக்க வேண்டிய அவசரமும் ஏற்பட்டு விட்டது. இதைத்தான் பத்ரியின் கோபமான பதிவு எனக்கு உணர்த்துகிறது.//
அன்புடன்
வெங்கட்ரமணன்
கல்வெட்டு: காப்புரிமை, கிழக்கு மீதான குற்றச்சாட்டுகள், அவை தொடர்பாக நாங்கள் என்ன செய்துள்ளோம், இனி அதுபோன்ற தவறுகள் நேராமல் இருக்க என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்பது பற்றி கட்டாயமாக தனிப்பதிவு இடுகிறேன். அங்கே அது பற்றித் தொடருவோம். அடுத்த வாரத்துக்குள் அந்தப் பதிவை எழுதிவிடுகிறேன். இந்தப் பதிவில் வேண்டாம்.
ReplyDeleteஏற்கெனவே 80-க்குமேல் பின்னூட்டங்கள் சென்ற நிலையில் இந்தப் பக்கத்தைத் திறப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அத்துடன் இந்தப் பதிவின்மீதான தன் கருத்தை ஞாநி, ஓ பக்கங்களில் எழுதியுள்ளதாகக் கேள்விப்பட்டேன். எனவே காப்புரிமை பற்றியதைத் தனிப்பதிவில் வைத்துக்கொள்வோம்.
நன்றி.
வருந்தவேண்டாம் நண்பரே .... :(((
ReplyDeleteஐயையோ, பத்ரி, இத்தன நாள் கழிச்சு இப்பத்தான் இந்த பதிவு கண்ணில் பட்டது. உங்கள் கோபம் மிக மிக நியாயமானதே. கோவைவாசி என்ற முறையில் வெட்கித் தலை குனிகிறேன்.
ReplyDeleteஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக் கூட ரெண்டு தரம் வாங்கிக் குடிப்பவன் தான் நம் தமிழன். கடுமையான பசி பட்டினி பஞ்சத்திலும் கூட கண்ணியம் தவறாத எத்தனையோ உலக நாட்டு மக்களைக் கண்டிருக்கிறேன். தமிழனின் ஈன புத்தி அவன் ப்ரம்பரையாக வருவது. இதுதான் திராவிட இயக்கங்கள் கற்பித்த கடமை, கண்ணியம் கட்டுப்பாடு. இதையேதான் கருணாநிதி, ராஜா கோஷ்டி எல்லாம் அரசாங்கப் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் அவர்களைப் பார்த்து வளரும் மக்கள் தங்களால் இயன்றதை அடிக்கிறார்கள். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. இதை மாநாடு போட்டு உறுதி செய்திருக்கிறார்கள். இதைப் படித்ததும் .... [அனானிமஸ் எழுதிய ஒருசில பகுதிகள் ஒருவரது வேண்டுகோளின்படி நீக்கப்பட்டுள்ளது. -பத்ரி]
ReplyDelete