இதுதான் சிங்கப்பூர் பற்றிய கடைசிப் பதிவு. இதற்குமேல் நீட்டிக்க முடியாது. மறந்துபோய்விட்டது!
தமிழ்ப் புத்தக விற்பனையாளர்களைச் சந்தித்தபின், பாதி நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் கழித்தேன். நோக்கம், புத்தகங்களைப் பார்வையிடுவது அல்ல. அங்கே மூன்று காட்சிகள் நடந்துகொண்டிருந்தன. ஒன்று ரிஹ்லா - அரேபியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு வந்த வணிகர்கள் பற்றிய காட்சி. 10-வது தளத்தில் நடந்துகொடிருந்தது. (10 அக்டோபர் 2010 வரை தொடர்கிறது.)
ஹத்ராமிகள் எனப்படும் இவர்கள் பயன்படுத்திய இலச்சினைகள், குரான் கையெழுத்துப் பிரதி, உயில் முதலிய ஆவணங்கள், ஆடைகள், பாய் விரிப்புகள், ஆயுதங்கள், படகின் மாதிரி, களிமண்ணால் ஆன செங்கற்கள், எழுதுபொருள்கள், மேஜைகள், சடங்குகள் பற்றிய விவரங்கள் எனப் பலவும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆவணப்படமும் ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நான் மட்டும்தான் அங்கு உட்கார்ந்திருந்தேன். யேமெனில் மண்ணால் செய்யப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் இப்போது காங்கிரீட் வீடுகள் வருவதுபற்றிய படம். ‘காங்கிரீட் 100 ஆண்டுகள் வரைகூடத் தங்காது, ஆனால் மண் பல நூறு ஆண்டுகள் தாங்கும்’ என்று ஒரு வயதானவர் சொன்ன விவரம் மனத்தைவிட்டு அகலவில்லை.
வெளியே வரும்போது நூலக ஊழியர் ஒருவர் என்னை விசாரித்தார். எங்கிருந்து வந்தவன் என்று கேட்டார். அவர் பார்க்க சீனர் போலத் தெரியவில்லை. ஆனால் தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னார். இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று சொன்னதும், ‘நீங்கள் மும்பையிலிருந்து வரவில்லையே? அங்கு இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்’ என்றார். கொஞ்சம் தர்மசங்கடமான நிலையில் நான் நிற்பதைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். சிறிது நேரம் அவரிடம் பேசிவிட்டு நகர்ந்தேன்.
அடுத்து வில்லியம் ஃபார்க்வார் (William Farquhar) என்ற ஸ்காட்டிஷ்காரரைப் பற்றிய காட்சி நடக்கும் 7-வது தளம். சிங்கப்பூர் என்ற இடத்தை ஆரம்பித்துவைத்தவர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபில்ஸ் (Stamford Raffles) என்றால், அதை வளர்த்தெடுப்பதில் முக்கியமானவர் ஃபார்க்வார். 1791-ல், 17 வயதான இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். ஹைதர் அலி, திப்பு சுல்தானுக்கு எதிரான மைசூர் போர்களில் பங்கெடுத்தவர். டச்சுக்காரர்கள் கையிலிருந்த மலாக்காவைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தபோது ஃபார்க்வாரை அங்கே அனுப்பிவைத்தனர். அதன்பிறகு தென்கிழக்கு ஆசியாவிலேயே தங்கிவிட்டார் இவர்.
ராஃபில்ஸ் சிங்கப்பூர் என்ற தீவை ஒரு சிறு கிராமமாக வளர்த்தெடுக்க ஆரம்பித்தபோது, அதனைப் பெருநகரமாக ஆக்கமுடியும் என்ற கருத்தை முன்வைத்தவர் ஃபார்க்வார். ஆனால் அதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே எதிர்ப்பு இருந்தது. சிங்கப்பூர் வளர்ந்தால் பெனாங்கின் (இப்போது மலேசியாவைல் இருக்கும் பகுதி) முக்கியத்துவர் குறையும் என்று அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரி நினைத்தார். ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று சிங்கப்பூர் இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளதற்கு ஃபார்க்வார் மிக முக்கியமான காரணம்.
அந்த நன்று உணர்ச்சியில் உருவான காட்சி இது. மிகவும் அருமையாக இருந்தது.
அடுத்து பார்த்தது 10-வது தளத்தில் இருந்த எஸ்.ராஜரத்தினம் பற்றிய காட்சி. இலங்கையில் பிறந்து மலேயா வந்த இவர், சிங்கப்பூரின் முக்கியமான தலைவர் ஆனார். இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். லீ க்வான் யூவுடன் இணைந்து பீப்பில்ஸ் ஆக்ஷன் பார்ட்டி என்ற கட்சியை 1954-ல் உருவாக்கினார். தொழிற்சங்கம், பத்திரிகை, சிங்கப்பூரின் முதல் தொலைக்காட்சி நிலையம் என்று பல முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறார். 1959-ல் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற நாடானது முதற்கொண்டு ஆளும் அரசில் அமைச்சராக இருந்தார். சிங்கப்பூரும் மலேசியாவும் இணையப் போராடினார். ஆனால் வேறு வழியின்றி மீண்டும் இரு நாடுகளும் பிரிய முற்பட்டபோது சிங்கப்பூரை முன்னேற்றத் தொடர்ந்து பாடுபட்டார். சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சராக உலகெங்கும் சென்று நல்லுறவை வளர்த்தார். சீனர், மலாய், இந்தியர் என்றில்லாமல் சிங்கப்பூரர் என்ற உணர்வு வரவேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைத்த தேசியவாது இவர்.
ஆனால் இவர் தொடர்பான தகவல்கள் அவ்வளவு கோர்வையாகக் காட்டப்படவில்லை என்றே எனக்குத் தோன்றியது. வில்லியம் ஃபார்க்வார் காட்சியில் செலவிட்ட சில மணித்துளிகளில் அவரை முழுமையாக அறிந்துகொண்ட அளவு ராஜரத்தினத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
***
ஒரு நாட்டின் தேசிய நூலகம் இந்த அளவுக்கு அறிவைப் பரப்பும் செயலில் ஈடுபடுவது நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் முதற்கொண்டு அலுவலர்கள்வரை சிங்கப்பூருக்குச் செல்கிறார்கள். ஆனால் உருப்படியாக எதையுமே படைப்பதில்லை. இந்தியாவின் கலைச்செல்வங்கள் பற்றி, இந்தியாவின் முக்கியஸ்தர்கள் பற்றி, வரலாறு பற்றி எவ்வளவு அற்புதமான காட்சிகளை உருவாக்கலாம்? ஏனோ, நமக்கு அதுமாதிரி வாய்க்கமாட்டேன் என்கிறது.
குறைந்தபட்சம், தனியார் முயற்சிகளாக ஏதேனும் இப்படிச் செய்யமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
***
வியாழன் அதிகாலை கோலா லம்பூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். Nice என்ற பேருந்துச் சேவை. பெயரைப் போன்றே இருந்தது. ஆனால் வண்டியில் கூட்டமே இல்லை. என்னையும் சேர்த்து 8 பேர்தான் மொத்தமே! ஓர் இந்திய ஜோடி, ஒரு சிங்கப்பூர் சீனக் குடும்பம் (3 பேர்), என்னைப்போல இன்னும் இரண்டு பேர் தனித்தனியாக! ஓட்டுனர், பணியாளர் இருவர் சேர்த்து மொத்தமே 10 பேர்தான்! அந்தப் பேருந்தில் மொத்தம் 26 பேர் பயணிக்கலாம்.
சரியாக சொன்ன நேரத்துக்குக் கிளம்பி, குறிப்பிட்ட நேரத்துக்கு கோலா லம்பூரை அடைந்தது. வழியில் பாஸ்போர்ட் கண்ட்ரோல். இதற்கு முன், தரைமார்க்கமாக ஒரேயொரு முறைதான் நாடுகளைத் தாண்டியுள்ளேன். லன்டனிலிருந்து பாரிஸுக்கு யூரோ ரயில் மூலம் போனது. அங்கு ஒரே ஒரு புள்ளியில்தான் பாஸ்போர்ட் கண்ட்ரோல். இங்கே சிங்கப்பூர் எல்லையில் ஒருமுறை இறங்கி, சோதனை முடித்து, பாஸ்போர்ட்டில் அச்சு வாங்கிக்கொண்டு, மீண்டும் பேருந்தில் ஏறி, நான்கடி தள்ளி இறங்கி, மலேசிய குடியேறல் துறையில் மீண்டும் ஒரு ஸ்டாம்ப் வாங்கிக்கொண்டு, கஸ்டம்ஸ் தாண்டி, மீண்டும் பேருந்தில் ஏறி...
ஆனால் அற்புதமான சாலை, அழகான வனாந்திர சுற்றுப் பிரதேசம். போக்குவரத்துக்கு ஆகும் செலவு $58 மட்டுமே. வாய்ப்பு கிடைத்தால் இந்தப் பாதையில் காரிலோ அல்லது பஸ்ஸிலோ செல்லுங்கள் என்பேன்.
***
அடுத்து மலேசியா பற்றி இரண்டு அல்லது மூன்று பதிவுகள். சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நான் பேசியது ஒரு பதிவு. எப்படியும் இந்த வாரத்துக்குள் முடித்துவிடுவேன்.
வெண்முரசு 75, புதுவையில் நான்
5 hours ago
இந்த nice பஸ்ஸில் நானும் ஒருமுறை சிங்கையில் இருந்து கே.எல் போய்வந்தேன்.
ReplyDeleteகாலையில் ப்ரேக் பாஸ்ட், காஃபி எல்லாம் பஸ் ஹோஸ்டஸ் தர்றாங்க. வழியில் ஒரு இடத்தில் நல்ல கழிப்பறை வசதிகள் உள்ள இடத்தில் பத்து நிமிஷத்துக்கு ப்ரேக்..
Badri,
ReplyDeleteThanks for Singapore diaries.
Few weeks back, I searched through digitised newspapers archives of National Library, Singapore and came across interesting tidbits about A.K.Chettiar and review of a book on Indian National Congress. As you said, we can do wonders with our collections in India, especially, Connemara Public Library.
கடந்தவாரம் சிங்கப்பூர்-கோலாலம்பூர்-சிங்கப்பூர் பேருந்துப்பயணம். பயணம் மிக அருமை. குடும்பத்துடன் செல்லும்போது பைகளைத்தூக்கிகொண்டு செல்வது இமிகிரேஷனில் உள்ள தொல்லை.
ReplyDeleteநான் பயணம் செய்தது ஏரோலைனில். சாப்பாடு தருகிறார்கள். சில பேருந்துகளில் வைஃபை கோட உண்டு!
ur post proves wat a huge BORE U R and how ded and dull ur life is
ReplyDelete//நீங்கள் மும்பையிலிருந்து வரவில்லையே? அங்கு இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்’ என்றார். கொஞ்சம் தர்மசங்கடமான நிலையில் நான் நிற்பதைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.//
ReplyDeleteநல்ல பதிவு.நன்றி பத்ரி!
UNINTERESTING, UNINSPIRING, UNEXCITING,
ReplyDeletebore bore bore bore bore bore bore bore bore
//நீங்கள் மும்பையிலிருந்து வரவில்லையே? அங்கு இந்துக்கள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள்’ என்றார். கொஞ்சம் தர்மசங்கடமான நிலையில் நான் நிற்பதைப் பார்த்ததும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.//
ReplyDeleteFunny!! Muslims cn kill anyone they want. And eveybody minds own business but when hindu kills some jokers will ask question.
Badri, please realise you came out of an islamic exhibit, so logically the guy u met up is a muslim who lied to you that he is Buddhist. Please use your brains. He just wants to piss you off. When he said he is a buddist you should told him on his face, yea because its pay back time for the hindus. I just hope Hindus like you know how to talk back instead of getting bullied by this muslims.
When i was a 14 years old waiting for a bus in the bus stand, i remember one guy approach me and asked me whats my religion and when i said hindu, he asked how many gods we prayed too. I said many and he said in Islam we only pray to one god. Now i think of it and i wish i can bump into that jerk again coz this time i am most informed about that religion of peace.
BY the way i am a Singaporean who frequently visits the library but till now never went to see that islamic exhibit. Not interested. Muslims likes to show off.
You should have been here last year. They did a similiar exhibit on India commerating Rajendra Cholas 1000 years expenditure on S.E.A. Its a very worth it one.By the way not a single muslim visited this exhibit as it was full Rajendra chola' and india and temples and statues. Not an islamic interest i think. hehehe.
When i was a 14 years old waiting for a bus in the bus stand, i remember one guy approach me and asked me whats my religion and when i said hindu, he asked how many gods we prayed too. I said many and he said in Islam we only pray to one god.
ReplyDeleteஅடப்பாவமே! 14 வருடங்களுக்கு முன்பா? அச்சு அப்படியே என்னிடம் 2 மாதங்களுக்கு முன்பு ஒரு சிரியா நண்பர் கேட்டார்.அப்படியே அசந்திட்டேன்,இவர்களுக்கு வேறு வேலையில்லையா என்ற எண்ணம் கூட உருவானது.இத்தனைக்கும் அவர் மெத்த படித்தவர்.
என்னத்தை சொல்வது?