Tuesday, June 01, 2010

ஜூன் 3: சென்னை நகரெங்கும் புத்தகக் காட்சிகள்

ஜூன் 3, தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை உலகத் தமிழ்ப் புத்தகத் திருவிழாவாகக் கொண்டாட தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் (பபாஸி அல்ல... மற்றொரு சங்கம்) முடிவு செய்துள்ளது. இந்த நாளில் சென்னையில் ஐந்து பொது இடங்களில் ஒரு நாள் புத்தகக் கண்காட்சியை நடத்த உள்ளனர். இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சியிடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கண்காட்சி நடக்கும் இடங்கள்:

1. எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரை
2. நாகேஸ்வர ராவ் பூங்கா
3. நடேசன் பூங்கா
4. பனகல் பூங்கா
5. திருவான்மியூர் மாநகராட்சிப் பூங்கா

இந்த ஐந்து இடங்களிலும் நடக்கும் கண்காட்சியிலும் கிழக்கு பதிப்பகம் பங்கேற்கும். ஒவ்வொரு இடத்திலும் எத்தனை பதிப்பகங்கள் இருக்கும் என்று சொல்லமுடியாது. எப்படியும் ஒவ்வொரு இடத்திலும் பத்துக்குக் குறைவில்லாமல் பதிப்பகங்கள் கலந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.

5 comments:

  1. வட சென்னையில் உள்ளவர்கள் எல்லாம் படிக்காதவர்கள் என்றே முடிவு செய்து விட்டார்களா, அல்லது வணிக ரீதியாக அங்கே எடுபடாதா?

    ReplyDelete
  2. சுரேஷ் கண்ணன்: நல்ல அவதானிப்பு. இங்கு வணிக ரீதி என்று இல்லை. இடம் இலவசமாகக் கிடைக்கிறது. ஏனோ அடையார், திருவான்மியூர், மைலாப்பூர், தி.நகர் என்று முடிந்துவிட்டது. வட சென்னையில் சில இடங்களில் வைத்திருக்கலாம்.

    ஆனால் வட சென்னையில் புத்தகக் கடைகள் அதிகம் இல்லை என்பதும் அந்தப் பகுதியில் புத்தகங்கள் விற்பனை குறைவு என்பதும் யதார்த்தம்.

    ReplyDelete
  3. கலைஞர் பிறந்தநாளன்று நடப்பதால் தமிழுணர்வாளர்கள், செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பது போல இந்த கண்காட்சியையும் புறக்கணிக்க வாய்ப்பிருக்கிறதே? :-(

    ReplyDelete
  4. தமிழ்ப் பதிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் யார் யார், இதன் பின்னணி என்ன, எந்த சாதியினர் இச்சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் - என்பது போன்ற விவரங்களைத் தரமுடியுமா? தனிப் பதிவாக எழுதினால் உத்தமம்.

    ReplyDelete
  5. 1. http://www.dinamalar.com/General_detail.asp?news_id=2780&ncat=TN&archive=1&showfrom=6/1/2008

    2. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1846


    இவர்கள் கூறும் "உலகத் தமிழ்" இந்த ஆண்டு கொஞ்சம் விரிவடைந்துள்ளது.

    2008 இல் தி. நகரில் இருந்து ஒருவரும் + கே.கே நகரில் இருந்து ஒருவரும் சேர்ந்து இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்டார்கள். இருவருமே ஆட்சியாளரைப் புகழ்ந்து பலன் பெற்றவர்கள்தான். ஒருவருக்கு உயர் விருதும் கிடைத்தது. இன்னொருவர் வருமானத்தைத் தந்துகொண்டிருப்பதை அரசு நாட்டுமையாக்க முனைந்தபோது எழுந்த மரபுரிமைப் பிரச்சனையில் கொஞ்சம் விலகியவர். இவர்கள் இருவருமே இந்த "உலகத் தமிழ்" என்பது ஏதோ தமிழ் மொழியானது அவர்கள் கொல்லைக்குள் மட்டும் பேசப்படும் மொழியென்று நினைத்த முட்டாள்கள் என்றுதான் எண்ண முடிகிறது. "உலகத் தமிழ்" என்று அறிவிக்கும்போது குறைந்த பட்சம் மற்றைய தமிழ்பேசும் நாடுகளில் உள்ள லெட்டர்பேட் டமிலர்களையாவது ( கோவைக்கு வர இருக்கும் டமிலர்களைப் போல் ) பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கவில்லை. பத்திரிகைகளில் வந்த செய்தியோ வழமைபோல் ஊடக வன்முறையில் அமைந்து \\ உலகம் முழுவதும் உள்ள தமிழ் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கொண்டாடுவார்கள். \\ என்ற எதிர்வுகூறல் இருந்தது.

    2008 இல் அறிவித்த இருவருமேகூட 2009 இல் கொண்டாடவில்லை. 2009 இல் அறிவித்த இருவரில் ஒருவரின் அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைத்து இன்று ஏதாவது "உலகத் தமிழ்" புத்தக தின நிகழ்ச்சி இருகிறதா என்று கேட்டதற்கு நாள் முழுவதும் அவர் பாத் ரூமில் இருக்கிறார் என்ற பதிலே கிடைத்தது.

    அவர்கள் இருவருக்கும் இனி கிடைப்பதற்கு ஏதுமில்லை என்ற கைவிட்ட நிலையில், இந்த ஆண்டு புதிதாக சிலர் கிளம்பியுள்ளார்கள்.

    புகழ் போதைக்கு மயங்குகிறவர்கள் "ஏமாற்றப்படுகிறோம்" என்று உணரும்வரை இப்படியானவர்கள் காட்டில் மழைதான்.

    ReplyDelete