கோவை நல்ல ஊர். இங்கு மக்கள் மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். செம்மொழி மாநாடு போன்ற விழா நடந்தால் கூட்டம் கூட்டமாக அதனைக் காண வருகிறார்கள்.
திமுக நல்ல கட்சி. அதன் தொண்டர்கள், தலைவரின் அறைகூவலைக் கேட்டு, தமிழகம் எங்கிருந்தும் கிளம்பி கோவை வந்துள்ளார்கள். ஒரு நாள் தமாஷா முடிவடைந்ததும் அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் தமிழ் இணைய மாநாடும் நடைபெற ஆரம்பித்துள்ளது.
ஐடி கார்ட், தங்கும் அறை, போக்குவரத்து வசதி, டாய்லட் வசதி என்று பலவற்றிலும் பலருக்குக் குறைகள் உள்ளன. சில குறைகள் களையப்பட்டு, பல குறைகள் மாற்றமே இல்லாமல் அப்படியே தொடர்கின்றன.
கோபம், வருத்தம் அனைத்தையும் மீறி, பங்கேற்போர் குடும்பத்தோடு வந்து தமிழக அரசின் விருந்தோம்பலை மெச்சுகிறார்கள்.
இணையத்தில் - முக்கியமாக ட்விட்டரில் - செம்மொழி மாநாட்டைத் திட்டுகிறார்கள். இணைய மாநாட்டைப் பற்றி பொதுவாக எப்போதுமே யாருக்குமே நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை.
நீங்கள் தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தீர்கள் என்றால் என்னைச் சந்திக்கலாம். ஓரிரு நிமிடங்கள் நாம் பேசவும் செய்யலாம்.
Thursday, June 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
பத்ரி நல்ல பத்ரி. அவர் வாசகர்கள் அவர் பதிவு போட்டதும் உடனே வந்து படிப்பார்கள். மொக்கை பதிவு என்று தெரிந்ததும் திரும்பிப் போய் விடுவார்கள்.
ReplyDeleteநன்றி பத்ரி :-)
நபநப
ReplyDeleteSir,
ReplyDeleteWill you be available in the NHM stall tomorrow? Why is that we do not any update on the book fair?
சின்ன பதிவு.. சிரிப்பு பத்ரி! ;-)
ReplyDelete//
ReplyDeleteஇணையத்தில் - முக்கியமாக ட்விட்டரில் - செம்மொழி மாநாட்டைத் திட்டுகிறார்கள். //
அப்படி திட்டுபவர்களின் அரசியல் தெரியாதா நமக்கு
தமிழுக்கு மாநாடென்ற வயிற்றெரிச்சல் அவர்களுக்கு
அதுவும் மாநாடு கன கம்பீரமாக நடப்பதை அறிந்து மேலும் எரிச்சல்
உங்கள் பதிவுகளில் சில நாட்களாக என் பதில்கள் வெளியாவதில்லை :-((
ReplyDelete