Monday, January 09, 2012

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கத்தினர் உள்ளே வந்து மலையாள மனோரமா கடையை மூடவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன் கேட்டுக்கொண்டார்களாம். இன்றும் வருவார்கள் எனவும் கடையை மூடாவிட்டால்... என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் தகவல். இதனை நேரடியாக உறுதி செய்துகொள்ள எனக்கு சோர்ஸ் கிடையாது. மே 17 இயக்கத்தைப் பற்றித் தெரிந்துள்ள நபர்கள் தகவல் சொல்லவும்.

காரணம், முல்லைப் பெரியாறு தொடர்பான விவகாரத்தில் பொதுவாக கேரளப் பத்திரிகைகளும் குறிப்பாக மலையாள மனோரமாவும் எடுத்துள்ள நிலைப்பாடு. இதற்காக புத்தகக் காட்சி அரங்கில் அவர்களுடைய கடையை அவர்களாகவே மூடிவிட்டுப் போய்விடவேண்டும் என்று சொல்வது அநியாயமானது. துண்டுப் பிரசுரம் விநியோகியுங்கள். எதிர்ப்புக் கடிதம் எழுதுங்கள். வேறு வகையில் அவர்களைப் புறக்கணியுங்கள். ஆனால் இந்த ஃபாசிச நடவடிக்கை ஆபத்தானது.

அடுத்து மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்களை ஒழித்துக்கட்டுங்கள் என்பார்களா? அடுத்து, கேரளா என்ற சொல்லோ, மலையாளம் என்ற சொல்லோ வரும் புத்தகங்களை ஒழிக்கவேண்டுமா?

இதே நேரம் மற்றொரு தகவலும் முக்கியமானது. சனிக்கிழமை அன்று நக்கீரன் பிரச்னை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நக்கீரன் ஜெயலலிதாமீது அவதூறான செய்தி ஒன்றை வெளியிட்டது. அதனால் வெகுண்டெழுந்த அதிமுக முரடர்கள் நக்கீரன் அலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தினார்கள். நக்கீரன் ஸ்டால் புத்தகக் கண்காட்சியில் அமைந்திருந்தது. நக்கீரன் கடையை மூடிவிட்டார்கள் என்று பிரசன்னா எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் மீண்டும் திறந்துவிட்டார்கள் என்று மற்றொரு செய்தி அனுப்பினார்.

ஞாநி இன்று என்னிடம் பேசும்போது, நக்கீரன் கடையைத் தாக்க அல்லது தொந்தரவு கொடுக்க அதிமுகவினர் சுமார் 60 பேர் அங்கு வந்ததாகவும், காவல்துறையினர் இடைமறித்து அவர்களைத் திரும்ப அனுப்பிவிட்டதாகவும் சொன்னார். அந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நக்கீரன் கடை மூடப்பட்டுள்ளது.

ஆக, ஆளும் கட்சிக்கும் முதல்வருக்கும் எதிரான, பொதுவாகவே உண்மை பற்றிக் கவலைப்படாமல் சென்சேஷனலாக எழுதக்கூடிய ஓர் அமைப்பின் கடைக்கும் புத்தகக் காட்சியில் இடம் உண்டு; இருக்கவேண்டும். அதுதான் சரியான நடைமுறை. இந்தப் பின்னணியில் மே 17 இயக்கத்தின் அராஜகம் செயல் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

மலையாள மனோரமா கடை தொடர்ந்து இருக்கவேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக அதை மூட முயற்சி செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்படவேண்டும்.

[சில மாற்றங்கள் செய்துள்ளேன். ரகளை என்பதை ஆர்ப்பாட்டம் என்று தலைப்பில் மாற்றியுள்ளேன். உள்ளே சில வரிகளை மாற்றியுள்ளேன்.]

76 comments:

  1. But you are giving ideas to who want to create trouble. This is one of the saddest episodes in the otherwise peaceful relations between the two states. Ask any one to threaten all Malayali businessmen to leave Tamil Nadu or as MGR is a Malayali, let everyone ignore him. How absurd these look, the same way targetting Keralite people here and Tamil people there seems to be a mere political mechanization rather than organized campaign to deliver balance position of Mullaiperiyar.

    ReplyDelete
  2. ஒரு வேளை சாரு சொன்னா மலையாளிங்க கேப்பாங்களோ?, ஏன்னா!, அவர் என்ன எழுதினாலும், பேசினாலும் மலையாளிங்க விழுந்து விழுந்து கேக்கறாங்கன்னு பதிவு பூரா எழுதினாரு.

    அவர் ராசி அப்படி.....அவர் யாரை ஆதரிக்கறாரோ அவங்க பொழப்பு தமிழ்நாட்ல நாறீடுது. :(

    ReplyDelete
  3. தம்பி நீ விளம்பரம் தேடுரியா ??

    ReplyDelete
  4. யார் இந்த பத்ரி சேஷாத்ரி? என்று நண்பர்கள் சிலரிடம் கேட்டபோது அந்த ஆள் ஒரு மீடியா கிரிமினல் ஆச்சே அவரை எல்லாமா தொலைகாட்சியில் வைத்திருக்கிறார்கள் என்று அவர்கள் கேட்டார்கள்.

    ReplyDelete
  5. பத்ரி எதோ பத்தவைக்கிறது போல் தெரிகிறது, அது என்ன ரகளை ஜனநாயக ரீதியாக கடைமுன் முழக்கமிட்டு கடையை மூட சொன்னால் அதற்கு பெயர் ரகளையா.. கொக்கா மக்கா என்ன ஒரு சிந்தனை ரகளை என்றால் என்ன என்று முதலில் போய் படிச்சு தெரிந்துகொள்..

    ReplyDelete
  6. தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான முல்லைபெரியாறு அணையில் தமிழர்க்கு எதிராக செய்தி வெளியிடும் மலையாள மனோரமாவையும் வியாபாரத்திற்கு செய்திகள் வெளியிடும் நக்கீரனையும் ஒன்று சேர்த்து எழுதியுள்ளார். ஜெயலலிதா பிரச்னையும் தமிழர் வாழ்வாதார பிரச்னையும் எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாதவை. இது சிறு குழந்தைக்கும் தெரியும். இதய்யேல்லாம் யாரும் நம்பமாட்டார்கள்.

    ReplyDelete
  7. Why dont you write about excesses by malayalee goons on our farm labour returned from kerala which was also featured in bbc tamil radio/Ananda vikatan.
    Thanks

    ReplyDelete
  8. எது அராஜகம் நீங்க பன்னுவதா.... மே 17 பன்னுவதா...?

    ReplyDelete
  9. பொய் சொல்வதைப் பிழைப்பாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள். இரு மாநில உறவு சீர் கெட்டாலும் அவர்கள் செய்தது தவறு இல்லை. ஆனால், அவர்களைக் கண்டித்து யாரேனும் குரல் கொடுத்தால் அது அராஜகம் - ரகளை. மிகவும் நன்றாக புரிந்தது நடுநிலையாளரே.

    கவின்
    சென்னை

    ReplyDelete
  10. தமிழ் என்று சொல்லி ரவுடித்தனம் பண்ணுகிறார்கள் இந்த வேரிவாதிகள் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இவருகளுக்கும் வித்தியாசம் இல்லை. மே 17 ஒரு இன வெறி வாத பாசிச அமைப்பு

    ReplyDelete
  11. பத்ரி.....
    உங்க சாரு - ஜெமோ வை தமிழகத்தின் பிரதிநிதிகளாக அனுப்பி முல்லை பெரியாரை சால்வ் செய்யுங்களேன்..............

    நீங்களே முல்லை பெரியார் தீர்பை திருடி பதிப்பித்து, உழைத்தது மொழியாக்கம் செய்தவருக்கே வக்கில் நோட்டிஸ் அனுப்பியவர் ஆயிற்றே.

    தொடரட்டு உங்கள் தமிழ் தொண்டு

    ReplyDelete
  12. புத்தகம் வாங்க சென்றிருந்த நான் அந்நிகழ்வு நடக்கும்போது அங்குதான் இருந்தேன். அப்படி ஏதும் அவர்கள் அராசகம் செய்ததாக எனக்கு தோன்றவில்லை. பதாகைகளோடு அக்கடைக்கு முன் கோசம் இட்டபடி நின்றார்கள். பின் BAFASI-யிலிருந்து அமைப்பாளர் ஒருவர் வந்து அக்கடை அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். பின் மே 17 இயக்க தோழர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர். இது இப்படி இருக்க நீங்கள் அராசகம் செய்ததாக போட்டுள்ளது முற்றிலும் தவறு. அதுவும் நீங்கள் நேரடியாக ஏதும் பார்க்கவில்லை என்று ஆரம்பத்திலேயே செய்தி போட்டுள்ளீர்கள். யாரோ ஒருவர் சொன்னதையெல்லாம் அப்படியே போட்டுவிடுவீர்களா...? பத்திரிக்கை தர்மம் இதுதானா...?முதலில் அறம் சார்ந்து செய்தியை வெளியிட கற்றுகொள்ளுங்கள்...பொய் செய்தியை புனையாதீர்கள்...

    ReplyDelete
  13. கடைசி அனானி... நீங்கள் அங்கே இருந்தாலும் நீங்கள் சொல்வது தவறு. அந்தக் கடையை அப்புறப்படுத்தச் சொல்லிக் கேட்டு மிரட்டியது தவறு. நல்லவேளையாக கடை அப்புறப்படுத்தப்படவில்லை. இன்று தி ஹிந்து செய்தியைப் படியுங்கள். http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2789054.ece

    ReplyDelete
  14. ஹிந்து ஒரு பார்ப்பன பாசிச பத்திரிகை, அதையெல்லாம் ஆதாரமாக சொல்வதே பிழை

    ReplyDelete
  15. மிரட்டல், ரகளை என்று கூறும் தி இந்து மற்றும் இதர ஊடகங்களுக்கு நான் பகிரங்க சவால் விடுகிறேன். ரகளை செய்ததற்கும், மிரட்டல் விடுத்ததிற்கும் ஆதாரம் காட்ட தயாரா...?

    மக்கள், ஊடகங்கள் முன் ஆதாரம் காட்ட நான் தயார்.

    அங்கு தாழ்மையுடன் வேண்டுகோள்-தான் விடுக்கப்பட்டது.

    மிரட்டல், ரகளை போன்ற வார்த்தைகளை பயன்படுத்தவேண்டாம். அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. பொதுமக்கள் பலரும் அவ்வார்பாட்டத்திற்கு ஆதரவளித்தது உங்களுக்கு தெரியுமா?.

    முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்று 1979-லிருந்து தவறான செய்தியை முதன் முதலில் போட்டதே இந்த மலையாள மனோரமா பத்திரிக்கைத்தான்.

    The May 17 Movement protesters raised their voice in a democratic manner.

    ReplyDelete
  16. பெரியார் சொல்வதை போல், ஒரு பார்பனன் என்றுமே பார்பனன் தான். அவனால் வேறு ஒரு இனத்தின் நியாயத்துக்காக, நீதிக்காக குரல் எழுப்பவோ, போராடவோ முடியாது, என்பது இந்த பதிவில் தெழிவாக தெரிகிறது.

    ReplyDelete
  17. திருமுருகன்Tue Jan 10, 12:07:00 PM GMT+5:30

    Badri said...

    கடைசி அனானி... நீங்கள் அங்கே இருந்தாலும் நீங்கள் சொல்வது தவறு. அந்தக் கடையை அப்புறப்படுத்தச் சொல்லிக் கேட்டு மிரட்டியது தவறு. //

    நாங்கள் செய்யாத ஒன்றை, ”ரகளை- மிரட்டல்” என்று தொடர்ந்து நீங்கள் பேசும் பட்சத்தில் அதற்கான பதிலை சட்ட ரீதியாக சொல்ல வேண்டி வரும். ஆகவே உங்களது வாசகத்தை திரும்ப பெற்று மன்னிப்புக் கோர வேண்டுகிறோம். ”ரகளை- மிரட்டல்” என்று திரித்துப் பேசினால் நாங்கள் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
    திருமுருகன் கா.
    மே பதினேழு இயக்கம்

    ReplyDelete
  18. மாணிக்கம்Tue Jan 10, 12:20:00 PM GMT+5:30

    மிரட்டினார்கள் என்கிறீர்கள். மிரட்டுபவர் ஏன் கோசங்களை எழுப்ப வேண்டும் மக்களும் ஒன்று கூட வேண்டும். கமுக்கமாக மிரட்டிவிட்டல்லவா செல்வார்கள்.

    ஒரு அமைப்பினர் மிட்டியிருந்தால் தற்போது என்ன நடந்திருக்கும்? அந்த அமைப்பினரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு ஏதாவது சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துவிட்டு, கண்காட்சியில் அவர்கள் அரங்கை தொடர்ந்து நடத்தியிருப்பார்கள். ஆனால் நேற்று ஒரு காவலரின் பாதுகாப்போடு நடத்தினார்கள். எதுவும் நடக்கவில்லை இன்று அரங்கு மூடப்பட்டுள்ளது.

    காவல் துறையின் அறிவுறுத்தலின் பேரில்தான் மூடப்பட்டிருக்கும். காவல்துறை மக்களின் உணர்வுகளைப் புரிந்து அறிவுறுத்தியிருக்கும்.

    ReplyDelete
  19. உண்மையை சொல்லுங்கள் எப்பொழுது என் தமிழ் மக்களுக்காக உங்கள் வாயை திறப்பீர்கள்

    ReplyDelete
  20. வன்மையாக கண்டிக்கிறேன் பத்ரி. மிக மலிவான முறையில் எழுதி இருக்கிறீர்கள். எனக்கும் மலையாள மனோரமாவை வெளியேறச் சொல்வதில் உடன்பாடு இல்லைதான். ஆனால் மே 17 இயக்கத்தினர் மிரட்டலும் விடுக்கவில்லை, ரகளையும் செய்யவில்லை. இந்தக் காணொளியை பாருங்கள் புரியும் :


    http://www.youtube.com/watch?v=L4LEy7tq518&feature=g-all-u&context=G2e381e1FAAAAAAAAAAA

    ReplyDelete
    Replies
    1. படிச்சும் பொய் சொல்லறன் சோவின் வாரிசு

      Delete
  21. செந்தில்Tue Jan 10, 01:24:00 PM GMT+5:30

    அன்புள்ள பத்ரி,

    நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வின் ஒளிப்படக் காட்சியை பார்த்தேன். அதில் நீங்கள் சித்தரித்துள்ள படி ரகளையோ, மிரட்டலோ, பாசிச நடவடிக்கைகளோ இல்லை.

    துண்டறிக்கைகளும், புறக்கணிக்க வேண்டும், வெளியேற்ற வேண்டும் என்ற முழக்கங்கள் மட்டுமே மிகவும் கட்டுப்பாட்டுடன் எழுப்பப்பட்டது.

    இப்போது நீங்களும் இந்து நாளிதளும் புத்தகக் கண்காட்சியில் நடந்த நிகழ்வைச் சித்தரித்துள்ளபடியே மலையாள மனோரமா முல்லைப் பெரியாறு அணை பற்றி முதன்முதலாக 70களில் ஒரு புனைவைச் செய்தியாக்கி இரு மாநில உறவைக் கெடுத்தது.

    உங்களைப் போன்ற பொய்யர்களை அடையாளம் காட்ட தமிழக மக்களுக்கு என்னதான் யோசனை வைத்துள்ளீர்கள். இந்து, மலையாள மனோரமா, கிழக்கு போன்ற ஊடக பயங்கரவாத நிறுவனங்களை உருவாக்கி வளர்த்து அவற்றின் மீது அவற்றின் பாணியிலேயே தாக்குதல் தொடுக்கலாமென்று கூறுவீர்களா?

    அதுவும் நடக்கும். ஆனால் அது நடக்கும் வரை, அப்பாவித் தமிழர்களுக்கு இதுபோல போராடி எதிர்ப்பைத் தெரிவிப்பது தவிர்த்து வேறு வழியில்லை.

    ReplyDelete
  22. //ஆக, ஆளும் கட்சிக்கும் முதல்வருக்கும் எதிரான, பொதுவாகவே உண்மை பற்றிக் கவலைப்படாமல் சென்சேஷனலாக எழுதக்கூடிய ஓர் அமைப்பின் கடைக்கும் புத்தகக் காட்சியில் இடம் உண்டு//

    என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் தொனி ஆளும் கட்சிக்கு எதிராக யாரும் எழுதக் கூடாது என்பது போல் இருக்கிறது...உங்கள் சாயம் வெளுத்துவிட்டதா பத்ரி?

    ReplyDelete
  23. திருமுருகன்: சில வார்த்தைகளை மாற்றியுள்ளேன். இது தார்மிகக் காரணங்களுக்காக. தவறு என்றால் அதை மாற்றிக்கொள்ள நான் பின்வாங்குவது கிடையாது. முதல் பத்தியிலேயே ‘என்பதும் தகவல்’ என்றும் விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்றும் கேட்டிருக்கிறேன்.

    மற்றபடி, வழக்கு, அது, இது என்றால், சந்திக்க நான் தயார். உங்கள் இஷ்டம்.

    ReplyDelete
  24. சம்மந்தமே இல்லாம எதுக்கு இங்க நக்கீரன் பத்திரிகைய இழுகிரிங்க...

    ReplyDelete
  25. நண்பர் பத்ரி, முழுவதுமாக அந்த வரிகளை நீக்கி மன்னிப்பு கேளுங்கள். இந்த தவறான வரிகளை எழுதியதற்கு அவதுறு பரப்பியதர்க்கு மன்னிப்பு கேட்க வேண்டியதும் உங்கள் தார்மீக கடமை இல்லையா? மன்னிப்பு என்று கட்டுரையில் கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்???

    ஆதாரம் இல்லாமல் ரகளை என்று எழுதியதற்கு மன்னிப்பு என்று கேட்பதில் நீங்கள் இழக்க போவது ஒன்றும் இல்லை. நன்றே செய்! இன்றே செய்!!!

    ReplyDelete
  26. பாபு: மன்னிக்கவும்... செய்த மாற்றத்துக்குமேல் வேறெதுவும் செய்வதாக இல்லை. என் அடிப்படைக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். மாற்றியுள்ளேன்.

    ReplyDelete
  27. திருமுருகன்Tue Jan 10, 06:08:00 PM GMT+5:30

    Badri said... //சில வார்த்தைகளை மாற்றியுள்ளேன். இது தார்மிகக் காரணங்களுக்காக. தவறு என்றால் அதை மாற்றிக்கொள்ள நான் பின்வாங்குவது கிடையாது. முதல் பத்தியிலேயே ‘என்பதும் தகவல்’ என்றும் விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்றும் கேட்டிருக்கிறேன்.
    //

    சரிபார்க்கப் படாத தகவல்களுடன் வெளியாகும் உங்கள் கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களைப் போலுள்ளது உங்கள் பதில்..
    சில வார்த்தைகளை மாற்றினால் எண்ண அர்த்தம் உருவாகும் என்பது புரியாமலா இது நாள் வரை பதிப்பகம் நடத்தினீர்கள் பத்ரி. நம்பும்படியாக இல்லை. வார்த்தைகளின் அர்த்தம் கூட புரியாதவர் வரலாறுகளை புரிந்து கொள்ள முடியுமா என்ன?...இதில் வரலாற்றுப் புத்தகங்களை வேறு பதிப்பிக்கிறீர்கள்.. ரகளை என்பதற்கும் ஆர்பாட்டம் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதா?.. மிரட்டலுக்கும் - கோரிக்கைக்கும் வித்தியாசம் தெரியாத சமூக-அரசியல் தற்குரியா நீங்கள்... மலையாள மனோரமா பொய்ச் செய்தி பரப்பி மக்களிடையே பீதியையும், வன்முறையையும், அதனூடாக உழைப்பாளிகளுக்கு வேலையின்மையையும் இருபக்கங்களிலும் உருவாக்கியது.. அந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாகவே பேசினோம். காணொளியில் அனைத்தும் உள்ளது... மலையாள மனோரமாவை கண்டிக்க முடியாத நீங்கள், எங்களின் சனநாயக போராட்டத்தை கொச்சைப் படுத்துவதில் என்ன நேர்மை உள்ளது?.... மலையாள மனோரமாவின் ஊழியர்கள் அனையை இடிக்க வேண்டும் என்று ஒருநாள் போராட்டமும் நடத்தியவர்கள்.. அவர்களின் கேரள தேசிய பாசத்தை பாராட்டுகிறேன். எங்களை போன்று ரகளை செய்ய வேண்டாம், மிரட்ட வேண்டாம் அவர்களை போல இந்த மக்களுக்கு ஆதரவாக என்றாவது பேச முடியுமா உங்களால்... நான் உங்களை விட மலையாள மனோரமாவை மதிக்கிறேன். எனது எதிர்ப்பு அவர்களின் பொய்ச் செய்தி பரப்பலுக்கு மட்டுமே.. ஆனால் நேர்மையற்ற வணிகம் சார்ந்த உங்கள் நிலைப்பாடுகள், முழுமையாக எதிர்க்கப்பட வேண்டிய நபராக உங்களை எனக்கு காட்டுகிறது. உங்களின் நேர்மையை புரிந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி பத்ரி.

    ReplyDelete
  28. திருமுருகன்: இப்போது நீங்கள்தான் அவதூறு செய்கிறீர்கள். ஆனால் நான் அதற்கும் இங்கே இடம் கொடுப்பேன். இதுதான் வித்தியாசம்.

    ReplyDelete
  29. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நம்புகிறோம்.ஏன் இப்படி எழுதிவிட்டு அசிங்கப்பட வேண்டும்.இது உங்களை போன்றோர் செய்யக்கூடாதது by.Jose

    ReplyDelete
  30. Badri said...
    //பாபு: மன்னிக்கவும்... செய்த மாற்றத்துக்குமேல் வேறெதுவும் செய்வதாக இல்லை. என் அடிப்படைக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. சில வார்த்தைகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். மாற்றியுள்ளேன்.// பத்ரி..உங்க அடிப்படைக் கருத்து என்னங்க?? அரவேக்காட்டுத்தனாமா எதையாச்சும் எழுதிட்டு அப்பறம் கோடு போடுறதா??? ஆதிமுக 60 பேர் வந்த்தா சொல்லி இருக்கிங்களே..அவங்களப் பற்றி ஒரு கட்டுரை எழுதிருக்கலாமே?? ஏன் எழுதல உங்க அடிப்படைக் கருத்து அதுக்கு இடம் குடுக்கலயா??? - அருண் சொக்கன்

    ReplyDelete
  31. நட்புடன் நான்Tue Jan 10, 07:02:00 PM GMT+5:30

    மலையாள மனோரமா சார்ந்து மே 17 இயக்கம் முன்னெடுத்து சென்ற போராட்டம் ஒரு இயக்கம் தனது தேவைக்காக செய்தது அல்ல.. அது ஒட்டு மொத்த தமிழகத்தின் குரல்.. உங்களுக்கு எது வேண்டுமானாலும் பெரிதாக இருக்கலாம்.. எங்களுக்கு இனமே பெரிது.. எங்கள் இனத்திற்கு எதிராக செயல்படுபவர்களை எங்கள் மண்ணில் கண்டிக்க எங்களுக்கு உரிமை உண்டு.. ஒரு நிலைபாடை எடுங்கள்.. உங்களுக்கு முக்கியம் தமிழ் இனமா அல்லது மலையாள மனோரமா வா என்று.. அதன் பின் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.. தவறான ஒரு பதிவை நியாய படுத்த முயற்சிக்க வேண்டாம் தோழரே.. இது தவறான ஒரு இடத்திற்கு உங்களை இட்டு செல்லும் என்பது திண்ணம்.. இந்த பதிவிற்காக வருந்துகிறேன் என்று சொல்லி விட்டு செல்வதே சால சிறந்தது..

    ReplyDelete
  32. If it is "Publishers association of South India", how can we protest against Kerala publishers? We have water disputes with every other south Indian state. So, by extension we will protest against all? But then we may have issues with many TN publishers as well. Some of us don't like capitalism/communism/hinduism/XYZism. We will keep protesting/removing one by one. Soon we'll have nothing left.

    ReplyDelete
  33. பத்ரி அம்பி, ஏன் இவாளுக்கு பயந்து எழுதினதை மாத்துர. நம்மவா ஆட்சி நடக்குதுடா. எதுக்கும் பயப்படாதே. பூணூலை கெட்டியா புடிச்சுண்டு தைரியமா எழுது.

    ReplyDelete
  34. பன்முக அறிவு என்ற புத்தகத்தை குழந்தைகளுக்கு சிபாரிசு செய்த பத்ரி அவர்களே , அடிப்படை அறிவு , அடிப்படை அறிவு என்று ஒன்று மட்டுமாவது உங்களிடம் இருக்கிறதா ?

    ReplyDelete
  35. பத்ரி அவர்களே,
    நீங்கள் முதலில் எழுதியதை மாற்றியதன் மூலமாக நீங்கள் எழுதியது தவறு என்று நீங்களே ஒத்துக் கொள்வது போல் ஆகிறது..

    செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் என்ன தயக்கம்?

    - பாலா

    ReplyDelete
  36. Badri- First off - I salute for allowing to post everyone's comments. Secondly - I really appreciate your correction after clarification from Thiru. Thirdly- I hope you already watched the youtube evidence hence it was a protest not riot. Fourth - Already these hindu, thinamalar idiots are creating insults for brahmins, please don't create the situation depicting that all brahmins are against tamils, this has been going on for sometime and it hurts Tambrahms(including myself). My request is try to think as a Tamil first and then the rest.

    ReplyDelete
  37. badri,
    neenga publisher enra uraiyil ithai pathivu pannukireerkala?
    ezhuthum urimai iruppathu pol maruppu therivikkum muraiyum ullathai maruppathen!uruthipaduththappadaatha thakavalkalai ezhuthuvatharku ithu enna naavalaa?sirukathaiyaa?
    ellaa iyakkangalilum brahmanarkal ullanar.

    ReplyDelete
  38. Thank for revealing you true colours.You are one more moron from Hindutva camp.Your publication must be boycott.May be you would call the act of boycotting your god damned publication as an act of TERRORISM.If Eelam Tamils must NOT fight for their independence from a terrorist state on the basis of self-determination using armed struggle for self-defence & if Tamil Nad Tamils must NOT protest in a non-violent way for their rights then, what must Tamils do?They must be dumb in front of people liek you who procure them and slaves in front of people who enslave them?I know that you have no regard for Malayalees too ,else you wouldn't support an media prostitute firm like Malayala Manorama that propagates myths about Mullaiperiyaaru dam.What is your stand on Malayala Manorama's fake propaganda that Mullaiperiyaaru dam is weak,though expert committee appointed by the Supreme court has said that the dam is safe?Keralam government has said in the supreme court that even if the Mullaiperiyaaru dam collapses then all the water will get collected in Idukki dam.SO why are anti-Tamils + anti-Malayalis making fake propaganda that the dam is weak?The videos of May 17's protest is available in youtube.I see NO threatening or violence in it.Shouting slogans and placing a demand is a democratic way.If you don't believe in democracy then in what do you believe Badri?

    ReplyDelete
  39. பத்ரி - ஏன் விசயத்தை திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்? இது கேரளப் பத்திரிக்கைக்கோ, மலையாள ஊடகங்களுக்கோ எதிரான போராட்டம் அல்ல. பெரியாறு அணையில் நில நடுக்கம் என்று திட்டமிட்டு பொய்யை முதன் முதலில் பரப்பிய, இரு மாநில மக்களுக்கு இடையே கலகத்தை உண்டு பண்ணிய மக்கள் விரோத மலையாள மனோரோமா என்கிற நிறுவனத்துக்கு எதிரான போராட்டம்.

    லாபம் மட்டுமே குறிக்கோள், அதற்கு மேல் மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் பத்திரிக்கை என்கிற பெயரில் ஒழிந்துகொள்வதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அந்த வியாபார நிறுவனங்களை மூடச் சொல்லுவதற்கு போராட்டம் நடத்தினால் என்ன தவறு?

    சரி இவ்வளவு வியாக்யானம் சொல்லும் நீங்கள் பொய்யைப் பரப்பும் இத்தகைய மலையாள மனோரோமா என்கிற நிறுவனத்திற்கு எதிராக எத்தகைய கண்டணங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்? அப்படி எதுவும் இதுவரைச் செய்யாத நீங்கள் அத்தகைய நிறுவனங்களை எதிர்ப்பவர்களை மீது விமர்சனம் சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது?

    இரு மாநில மக்களுக்கிடையே கலகத்தை உண்டு பண்ணும் இத்தகைய நிறுவனங்களைக் கண்டிக்காமல் அத்தகைய நிறுவனங்களை எதிர்ப்பவர்களைக் குறை சொல்லுவதில் உங்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று சொல்லுகிறோம். நேரடியான பொது விவாதத்திற்குத் தயார் என்றால் சொல்லுங்கள், கிழக்குப் பதிப்பகத்திலேயே சந்திக்கலாம்.

    ReplyDelete
  40. திரு. பத்ரி.. ஜனநாயக ரீதியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தை ரகளை என்று குறிப்பிட்டதற்காக நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அவை அனைத்துமே அபத்தம்தான்.. மனித வாழ்க்கையில் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாதது! ஆனால் அந்த தவறைச் சுட்டிக் காட்டுகையில் ஒப்புக் கொள்வதற்கும் அதற்காக வருந்துவதற்கும் யாருமே தயங்கக் கூடாது.. நேர்மையாளர் யாரும் தயங்காமல் ஒப்புக் கொள்வர்..வருந்துவர்.. நீங்கள் நேர்மையாளரா இல்லை வீண் அகந்தை கொண்டவரா என்பதை உங்களுடைய அடுத்தடுத்த பதில்கள் காட்டிக் கொடுத்து விடும்.. மலையாள மனோரமா புத்தகக் காட்சியில் பங்கு பெற உரிமை உள்ளது என்கிற உங்கள் வாதத்தைப் போலவே அவர்களை எதிர்த்து வெளியேறு என்கிற கோஷத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முல்லைப் பெரியாறு பிரச்னையில் தீவிரமாக ஈடுபடும் இயக்கத்தினருக்கும் உரிமை உள்ளது!! உண்மையிலேயே இதை நீங்கள் பதிவு செய்ய நினைத்தால் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலகாரணமான மலையாள மனோரமாவின் செய்கைகளையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்..
    உங்கள் மீது எனக்கும் அதிருப்தியே.. உங்கள் கண்கள் அனைத்தையும் பார்க்க வேண்டும்..காதுகள் அனைத்தையும் கேட்க வேண்டும்..உங்கள் விரல்கள் அனைத்தையும் கணினியில் பதிவு செய்தல் வேண்டும்.####.[சில மாற்றங்கள் செய்துள்ளேன். ரகளை என்பதை ஆர்ப்பாட்டம் என்று தலைப்பில் மாற்றியுள்ளேன். உள்ளே சில வரிகளை மாற்றியுள்ளேன்.]#### this is not enough.. and this is not right too..

    ReplyDelete
  41. enna sir panradhu? Bharathi "Rowthirapazhagu"nu sollittaan. neenga ezhudhirundhaa pagaivanaik kaNdu "moothiram ozhugu"nu ezhudhiruppeenga.

    ReplyDelete
  42. @ Reflections Sorry Guys its in your DNA. Without genetic memory activation you people have a pre-determined mode that is ANTI-Tamil you can never be Tambrahms, only brahmins and keep praising your sacred sanskrit and calling tamil nesha. There is no difference Subrahmaniya swamy-Cho ramasamy-Gnani-Kala chuvadu and now it got clear Badri and kilakku pathipagam is from the same gang.

    But we are gonna ruthlessly suppress all your famous snake tactics you people are famous for. Thats why you are people are rightly found as venomous and dangerous in the tamil community which can never be tamed or changed. You guys get the hell out of tamilnadu and do your politics and fourth grade tactics outside elsewhere.

    ReplyDelete
  43. ஆமாம் இவர்கள் ரொம்ப யோக்கியாமனவ்ங்க... இவனுங்களுக்கு வாயில் விரல் வைத்தால் கூட கடிக்க தெரியாது....

    இவர்கள் யோக்கியதை என்ன என்பதை தான் பார்தோமே மலையாளிகளின் கடைகளை உடைப்பது, அவர்கள் தாக்குவது என்று. அது என்னமோ தெரியல... கார்த்திகை மாதம் மாலை போட்ட நேரத்தில் சண்டையை ஆரம்பித்து இரு மாநில போக்குவரத்தை தடுத்தவர்கள்,

    கிறிஸ்துமஸ் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் தனது மூட்டை முடிச்சை கட்டி கொண்டு வேறு இடத்தில் பிரச்சனை செய்யதயாராகிவிட்டார்கள்.. ஏன் அவர்கள் போராட்டம் கிறிஸ்துமஸ் முன்பு நின்றுவிட்டது என்று கேட்க கூடாது. சிகப்பு சட்டைகளுக்குள் தொங்கி கொண்டு இருக்கும் சிலுவைகள் ஒரு ரிமோட் கண்ரோல் என்பது அறிவுள்ளோர் புரிந்து கொள்வர்....

    \\நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கத்தினர் உள்ளே வந்து மலையாள மனோரமா கடையை மூடவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன் கேட்டுக்கொண்டார்களாம். இன்றும் வருவார்கள் எனவும் கடையை மூடாவிட்டால்... என்றும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் தகவல். \\

    பத்ரி எவ்வளவு "சரியாக கேள்விபட்டேன் என்றும் சொல்லியதாக தகவல் என்றும்" எழுதியுள்ளார். அதற்கு வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். டிசம்பரை திசம்பர் என்று எழுதி தனது தமிழ் பற்றை காட்டும் அதிபுத்திசாலிகளுக்கு பத்ரி எழுதிய தமிழ் புரியவில்லையா என்ன?

    \\all brahmins are against tamils, \\

    இதில் நடுவில் பஞ்சாயத்து வேறு.

    இவர்கள் தமிழ் பற்றை தான் இலங்கையில் போர் ந்டக்கும் பொழ்து பார்தோமே? பல வருடங்களாக இலங்கை அகதிகள் முகாமில் வேதனைபடும் மக்களுக்கு உதவி செய்ய் ஒருத்தனுக்கும் துப்பு இல்லை... ஆனால் கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்க மட்டும் வருவார்கள். கேட்டால் தமிழ் பற்று...

    போங்கடா நீங்களும் உங்கள் தமிழ் பற்றும்....

    கேவலமா ஒரு புத்தக கடையின் முன்பு ஆர்பாட்டம் செய்கிறார்கள். இதுவே ஒரு கோழை செயல்...

    இதை தவறாக எழுதிவிட்டார்கள் என்று சொம்பு தூக்க ஒரு கூட்டம் வேறு....

    இன்று மானம் கெட்ட தனமாக ராஜபக்சே உறவினர் ஒருவர் இராமேஸ்வரம் கோயில் சாமி கும்பிட வந்தார் என்று கூறி தாக்கியுள்ளனர் இந்த டமிழ் போராளிகள்....தைரியம் இருந்தால் ராஜபக்சேவிடம் மோதி இருக்க வேண்டும்... அதை விட்டு விட்டு ஒன்னு விட்ட சித்தபா... மக வையித்து பேரன் என்று அவர் சொந்த பந்தகலை தாக்குகிறார்கள் கோழைகள்.. இந்த அதிபுத்திசாலிகள் போர் நடக்கும் பொழுது என்ன கிழித்தார்கள்... இந்தியவை பற்றி வாய் கிழிய பேசிய இவர்கள் சீன கம்யூனிஸ தீவிரவாதியை பற்றி ஏன் வாயே திறக்கவில்லை....கேட்டால் தமிழ் பற்று திராவிடம் என்று மழுப்புவது....

    இவர்கள் ரௌடிதனத்திற்கு தமிழை வேறு இழுக்கிறார்கள். தமிழ் மெல்ல சாகும் என்று சொன்னது இவர்களை நினைத்து தானோ?

    ReplyDelete
  44. Hello Mr. Badri,

    Could me tell me the rate which you fixed to write an absolute lie like this?

    ReplyDelete
  45. \\நாங்கள் செய்யாத ஒன்றை, ”ரகளை- மிரட்டல்” என்று தொடர்ந்து நீங்கள் பேசும் பட்சத்தில் அதற்கான பதிலை சட்ட ரீதியாக சொல்ல வேண்டி வரும்\\

    ஹாஹா இதற்கு எல்லாம் கேஸ் போட வேண்டும் என்றால் நீங்கள் பேசும் ஆபாச வார்த்தைக்கும் பயங்கரவாத பேச்சுக்கும் என்ன என்று சொல்வது...

    \\உங்க சாரு - ஜெமோ வை தமிழகத்தின் பிரதிநிதிகளாக அனுப்பி முல்லை பெரியாரை சால்வ் செய்யுங்களேன்..............\\

    ஏன் உங்க சிகப்பு சட்டைகாரங்கள தான் ஒட்டு போட்டு உட்கார வைச்ச் இருக்காங்க... அவங்கள் போய் கேளுங்க.. ஒரு புத்தக கடைகாரை பார்த்து இப்படி எழுதுவது உங்களுக்கே ஒவராக தெரியவில்லை...

    அது சரி... தமிழ் நாட்டில் அணு உலை வெடித்து விடும் என்று பயப்படுவது போல் அணை உடைந்து விடும் என்று பயப்படுகிறார்கள்...

    நிலம் நடுக்கம் வந்தால் அணு உலை உடையுமாம். ஆனால் அணை உடையாதம்....

    இரண்டுமே பொய் ஆனால் இப்படி முரண்பாடாக பேசுவது தான் பகுத்தறிவு...

    அதே பகுத்தறிவு தனம் தான் இந்த பின்னூட்டதிலும் தெரிகிறது

    ReplyDelete
  46. @@@Reflections said...
    Badri- First off - I salute for allowing to post everyone's comments. Secondly - I really appreciate your correction after clarification from Thiru. Thirdly- I hope you already watched the youtube evidence hence it was a protest not riot. Fourth - Already these hindu, thinamalar idiots are creating insults for brahmins, please don't create the situation depicting that all brahmins are against tamils, this has been going on for sometime and it hurts Tambrahms(including myself). My request is try to think as a Tamil first and then the rest.@@@@

    Well said Mr.Reflections....

    I am a Telugu born in TN... I will stand in solidarity with my mother land TN even if there is gonna be fight between TN and AP... I am a supporters of Tamil Nadu and its welfare first...

    I didnt ask you to remove the complete article... Just Say sorry along those lines which you showed as deleted...

    Just ask sorry and show you decency...

    See how good a tamilian first of Tambrham posted in the above comment... Be like that Badri... We are amidst our beloved Tamil community... Don't Betray the Tamil Community.. Don't taint them unnecessarily... May 17 is excellent team of youths, which does all its works in a democratic way... Appreciate that, if you cant keep quiet and don't taint them....

    Keep up May 17...

    ReplyDelete
  47. மன்னிக்க தெரிந்தவன் மனுஷன் மன்னிப்பி கேட்க தெரிந்தவன் பெரிய மனுஷன்! மன்னிப்பி கேட்க தெரியாதவன என்னனு சொல்ல? உங்களை நன்பேண்டா நிகழ்ச்சியில் போட்டதற்கு புதியதலைமுறை வெக்கப்படும்!

    இளன்

    ReplyDelete
  48. Badri, sorry to see your post based on unverified source/news. I just bought few books from Kizakku but that does not mean I endorse your writings :((

    I do support Mullai Periyaru agitation in any form against anyone as a Tamil from Tamilnadu.

    ORB Raja ( you may remember this old friend in USA)

    ReplyDelete
  49. மலையாளிங்கள துரத்தறதுக்கு முன்னாடி இவனுங்கள துரத்தனும். அதெப்பிடிடா ஒருத்தர் நேர்ல பாத்தேன்னு சொல்றாரு அப்பிடி பாத்திருந்தாலும் தப்புன்னு சொல்ற? ரொம்ப ஆடுணா அடுத்து நீங்கதான் செத்த அமைதியா இருங்கோ!

    ReplyDelete
  50. ரகளை ஆர்ப்பாட்டம் என்று ஒரே ரகளையா இருக்கே ,புத்தக விழாவில வந்து குழப்பம் விளைவிக்க கூடாது என்று சொல்வதில் என்ன தவறு

    முல்லை பெரியார் பிரட்சினையால் இங்க இருக்கற மலையாளத்தானை எல்லாம் விரட்டனும்னு துடிக்கிற தமிழின தங்கங்களே உங்க கண்ணுல ஜாய் அலுக்காஸ்,முத்தூட் மற்றும் மலையாள மனோரமா தான் தெரியுது.அதை விட அதிகமா அவங்க இருக்கற இடம் மருத்துவமனைகள்.
    தமிழ் பெண்களை மானபங்க படுத்தி விட்டார்கள்,பழி வாங்கினால் தான் அடங்குவேன் என்று துடிப்பவர்கள் எந்த மருத்துவமனையில் நுழைந்தாலும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் மலையாள நர்ஸ்களை பார்க்கலாம்.அங்கே இருக்கும் நோயாளிகளை சுத்தபடுத்தி ,அவர்களின் மூத்திரத்தை எடுத்து கொட்ட போகும் போது வழி மறித்து தமிழ் கலாச்சார தண்டனையான வாயில் மலத்தை திணிப்பது,மூத்திரத்தை கொட்டுவது போன்றவற்றை நிறைவேற்றி மலையாளத்தானுக்கு பாடம் புகட்டலாம். நம்ம கலாசாரத்தை நிலைநாட்டிய மாதிரியும் இருக்கும்.மலையாளத்தானை பயமுருத்துன மாதிரியும் இருக்கும்.

    மருத்துவமனையில் வேலை செய்பவர்களுக்குள் காதல் வந்தால் அரிவாள் எடுத்து கொண்டு வெட்ட அலைவது மலையாள வெறியர்கள் அல்ல,தமிழ் நல்லவர்கள் தான்.

    மலையாளத்தான் புது அணை கட்ட வேண்டும் என்று சண்டை போடுவதால்,போராட்டம் நடத்துவதால் அவர்கள் அனைவரையும் வெளியேற்றி விட வேண்டும் என்று பொங்கும் நல்ல தமிழ் உள்ளங்கள் இங்குள்ள மருத்துவமனைகளில் பீ துடைக்க எங்கிருந்து ஆட்களை அழைத்து வருவார்கள்.அது என்ன படிக்காமல் தமிழ்நாட்டில் பீ அள்ளும் தொழிலாளிகளும் தமிழ் பேசாதவர்கள் தான்.படித்து விட்டு நோயாளிகளின் பீ,சீழ் துடைக்கும் தொழிலாளிகளும் தமிழ் பேசாதவர்கள் தான்.நம் தமிழ் கலாசாரம் எவ்வளவு உயர்ந்தது.
    என் உறவினர் பெண் அரசு கல்லூரியில் நர்சிங் படித்தவர்.அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது தமிழர்கள் நர்ஸ் வேலையை விரும்பாதவர்கள்,மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்று மிகவும் கஷ்டப்பட்டார்கள்.திருமணதிற்கு பிறகு அந்த பெண்ணை வேலைக்கும் அனுப்பவில்லை.இவ்வளவு நல்ல சமூகத்தை வைத்து கொண்டு(சில தமிழ் சாதியினர் என் பெண்ணை படிக்க வைக்காமல் திருமணம் கட்டி கொடுப்பேனே தவிர நர்சிங் படிக்க வைக்க மாட்டேன் என்று கலாசார பெருமையை நிலை நாற்றுபவர்கள்)நாம் எப்படி தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட ஆண்டவன் அனுமதிப்பான்.

    ReplyDelete
  51. ஆலந்தூர் முனிசிபாலிட்டிக்கு வர பாலாறு தண்ணீர பக்கத்துல இருக்குற ஊர்களுக்கு தர கூடாதுன்னு எதிர்த்து போராட்டம் எல்லாம் நடந்தது .இப்பவும் தாம்பரம் முனிசிபாலிட்டிக்கு வர தண்ணீரை மிக அருகில் இருக்கும் பஞ்சாயத்துகளுக்கு தர (தெருவுக்கு இந்த பக்கம்,அந்த பக்கம் )எதிர்ப்பு.
    இந்த அழகில இரு மாநிலங்களுக்கு இடையே ஆனா பிரச்சினைக்கு இங்கு பல ஆண்டா வசிப்பவர்கள்,தொழில் செய்பவர்களை துரத்தனும்னு போராடறது எதுக்காகன்னு புரியல.
    மருத்துவமனைகள் எல்லாம் வேலை செய்யற மலையாள செவிலியர்களை விரட்டி விட்டு இழுத்து மூடி விட்டால் தமிழன் ஒத்துமையா ஆயிட்டான்னு சந்தொஷபடுவீர்களா.ஹிந்து,தினமலர் எல்லாம் எதிர்ப்பா இருந்தாலும் ஸ்டால் வைக்கலாம் ஆனா மலையாள மனோரமா வைக்க கூடாது.ஒரே கொழப்பமா இருக்கு.
    இளையராஜவ திட்டறது(அவர் மாசம் பல லட்சம் வங்கி கடன் கட்டனும்,பல பேருக்கு சம்பளம் கொடுக்கணும்னு ஆயிரம் தேவைகள் இருக்கும்.தொழில் செய்யாம இருந்தா யார் பணம் கொடுப்பாங்க) ,புத்தக விழாவ தொந்தரவு பண்றதுன்னு எதுக்கும் பிரயசொனம் இல்லாம .போராட்டங்கள் தேவையா
    1979 இல இருந்து குறைச்ச அளவு குறைச்சது தான்.அதை ஏத்த முடிஞ்சுதா.பிரட்சினையை எப்படி சுமூகமாக தீர்க்க வேண்டுமே என்று பார்க்க வேண்டுமே,முயற்சிக்க வேண்டுமே தவிர ஊத்தி பெருசாக்குவதால் என்ன லாபம்

    ReplyDelete
  52. parpana malayaliya tamilnatla saivam pesaravanga ippidi thoratha vendiya list perusu

    ReplyDelete
  53. I saw the mentioned youtube video. Many have observed that the protest was not violent. Yes, I agree that it was non-violent -- in so far the videographed portions are concerned. But, not every non-violent protest is good/desirable. If you don't like a book/paper because it spreads lies, then you can write a book countering the same or write a counter article in a paper or write a blog. Or take them to court if that is feasible. What is the point of disturbing a book fair? Are the protesters trying to economically hurt that particular publisher? Even if that is acceptable, is it even feasible to economically hurt -- given their popularity in their state? How could it help if they are prevented in Chennai book fair? Just because we prevent our people from reading what they write, will their propaganda disappear from earth? I saw better crowd @ Chennai book fair this year compared to last year -- I hope protests such as these won't disturb that.

    ReplyDelete
    Replies
    1. // But, not every non-violent protest is good/desirable. If you don't like a book/paper because it spreads lies, then you can write a book countering the same or write a counter article in a paper or write a blog. Or take them to court if that is feasible. //

      Do you think its a joke to anyone to just like that write a book, open a journal and who has the money to file a case.

      so if some one doesnt have money for these he shut everything and "lie back, when rape is inevitable".

      Sorry if this is you people description of democracy "hell with it" and we will break this system and wipe these betrayers from this land.

      Delete
  54. ஆடு நனயுதுன்னு ஓநாய் கவலை பட்டதாம்.

    ReplyDelete
  55. poovannan ungal karuthu mekavum mattamaka ulathu

    ReplyDelete
  56. thiru badri avanga porulatharatha tamizhu natla thadukaruthula enna thapu

    ReplyDelete
  57. திரு பத்ரி அவர்களே,
    நான் உங்கள் பதிப்பகத்திலிருந்து பல புத்தகங்களை வெளிநாட்டில் வசித்தும் வாங்கியுள்ளேன். ஆதை நினைத்து தற்பொழுது வெட்கப்படுகிறேன்.
    உங்களுடைய இந்த தமிழின விரோத போக்கை நான் முன் அறியேன். ஏதிர்வரும் காலங்களில் நான் மட்டுமல்ல எனது நண்பர்களும் உங்களிடம் புத்தகங்கள் வாங்காமல் புறக்கணிப்பு தொடரும்.
    நன்றி.

    ReplyDelete
  58. நண்பர் பத்ரி,
    அறிவும் பண்பும் மேலோங்க நூல் பல கல் என்பார்கள். பலப்பல நூல்களை பதிப்பித்து வெளியிடும் (விற்பனை மட்டுமே குறிக்கோளா??) தாங்கள் இப்படி நிலை பிறழலாமா? பண்பை தொலைத்து வம்பை விலைக்கு வாங்கும் செயல் இது என்பது புரியவில்லையா? ஆளுமை, பொருள் சார்ந்த வலியோர் சிலர் மதியை செழுமையாக்கும் நூலைவிட விதியை செழுமையாக்கும் பூணூலே பெரிது என்று தமிழினத்தின் மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தங்களுக்கும் இடம் உறுதி என்றே நினைக்கிறேன். வலியவந்து புலிவாலைப் பிடித்திருக்கிறீர்கள்.... போகப்போக ஓட்டம் புரியும்!

    ReplyDelete
  59. எங்கே தான் வெளியிட்ட புத்தகங்களுக்காக தானும் பாதிக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் பத்ரி போராட்டத்தை எதிர்த்திருக்கிறார். இது வரும் முன் காப்போம் யுக்தி. பார்ப்பனன் என்றைக்கும் சுயலாப்த்தை கருத்தில் கொண்டே ஈடுபடுவான்.

    ReplyDelete
  60. பத்ரி, சென்ற வருடமோ அதற்கு முந்தைய வருடமோ, தீவிரவாத இயக்கங்கள் பற்றிய புத்தகங்களுக்கு போலீஸ் வெறும் வாய்மொழி உத்தரவு மூலம் தடை விதித்தது. அதை எழுத்து பூர்வமாகக் கேட்காமல், நீதி மன்றமும் செல்லாமல், பிரபாகரன், எல்டிடிஈ, உல்ஃபா, அல் காயிதா- பயங்கரத்தின் முகவரி போன்ற புத்தகங்கள் கண்காட்சியில் கிடைக்காது என்று அறிவித்துவிட்டீர்கள். (ஆதாரம் -பா.ராகவனின் பதிவு.

    அந்தத் தடை மட்டும் ஃபாஸிசம் இல்லையா? அதை ஏன் நீங்கள் எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை?

    சரவணன்

    ReplyDelete
  61. சோ,ராம்,ஞானி வரிசையில்
    மற்றொரு பத்திரிக்கைப் புற்று...

    இதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை...

    ReplyDelete
  62. முனியாண்டி .Thu Jan 12, 03:59:00 PM GMT+5:30

    தமிழ், தமிழர் என்று இவர்கள் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. திரு முருகன் காந்தி தமிழ்நாட்டு பிரபாகரன் ஆக முயற்சி செய்கிறார். இவர் அமைப்பு வடிவமே பாசிசம் தான். ( பிரபாகரனை போல ( ரசபட்சேவை விட தமிழர்களை அதிகம் கொன்றது பிரபாகரன் தான் ) . இந்த அமைப்பு வன்முறையின் மூலம் தன்னை தனித்து காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது. இவர்கள் இங்கு கடைகளை அடித்து நொறுக்குவதால் , கேரளாவில் இருக்கும் தமிழர்கள் பாதிக்கப்படுவதை பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. இவர்கள் எண்ணம் எல்லாம் தி.மு.க. போல தமிழை சொல்லி வயிறு வளர்ப்பது தான்

    ReplyDelete
  63. If they want to show their love for Tamil they can do some service to the people of Tamil Nadu like patching chennai roads or helping poor senior citizens..
    These kind of chauvinist exhibition does not help anybody.. They are curse to the Tamil society

    ReplyDelete
  64. சரவணன்: ‘ஆதாரம்: பா. ராகவன் பதிவு’ என்று எதைப் படித்துவிட்டு ஆதாரம் காட்டுகிறீர்கள்? நீங்கள் சொன்ன அனைத்துப் புத்தகங்களும் அல்ல. செல்லமுத்து குப்புசாமியின் ‘பிரபாகரன் - ஒரு வாழ்க்கை’ மற்றும் மருதனின் ‘விடுதலைப் புலிகள்’ - இரண்டு புத்தகங்கள் மட்டுமே. அந்த இரண்டு புத்தகங்களையும் எடுக்கவேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டது. பபாஸி அதனை வலியுறுத்தியது. எனவே அவற்றை எடுத்துவிட்டு, தொடர்ந்து காவல்துறையிடம் பேசினோம். அவர்கள் கியூ பிராஞ்ச் போய் பேசச் சொன்னார்கள். அங்கிருந்து அவர்கள் அரசு வழக்கறிஞரிடம் கருத்து கேட்டு, பின் பிரச்னை ஏதும் இல்லை, விற்கலாம் என்று சொன்னபோது ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தன. அன்றிலிருந்து தொடர்ந்து விற்று வருகிறோம். அதற்குப் பிறகு பா.ராகவனின் ‘பிரபாகரன்: வாழ்வும் மரணமும்’ வெளியானது.

    இப்போது உங்கள் கேள்வி என்ன என்று திரும்பக் கேளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பா. ரா.வின் இப்பதிவைக் குறிப்பிட்டேன்.
      *** http://www.writerpara.com/paper/?p=433 ****

      அதில் அவர் 7 புத்தகங்களைப் பட்டியல் இடுகிறார். தொடர் நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்று தெரியாது. ஒவ்வோர் இடமாக வெறுமே பேசிக்கொண்டிருக்காமல் உடனடியாக நீங்கள் நீதி மன்றம் சென்றிருக்கலாம். குறைந்தபட்சம் இச்செயலை வன்மையாகக் கண்டித்து வலைப்பதிவு இடுகையாவது எழுதியிருக்கலாமே!


      ****
      (இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.
      பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:
      1. அல் காயிதா
      2. தாலிபன்
      3. விடுதலைப் புலிகள்
      4. உல்ஃபா
      5. பிரபாகரன்
      6. லஷ்கர்-ஈ-தோய்பா
      7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)
      இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கிறது. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
      இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

      *******

      சரவணன்

      ******

      Delete
    2. நன்றி. தீவிரவாதம், புத்தகம் என்றெல்லாம் பேச்சு வந்தது. ஆனால் நான் குறிப்பிட்ட அந்த இரு புத்தகங்களைத்தான் அப்புறப்படுத்தச் சொல்லியிருந்தார்கள். நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான வழிகளை மேற்கொண்டு காவல்துறையிடம் பேசியபின், புத்தகங்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தன. இப்போதும் தொடர்ந்து கிடைக்கின்றன.

      சம்பந்தப்பட்ட துறையுடன் நேரடியாகவும் கடிதம் மூலமும் போராடியபின், கருத்துரிமை நிலைநாட்டப்பட்டது.

      Delete
  65. This is utter non-sense..reading badri for past 6 years i know badri is not the man of this article..terming him anti-tamil just because of this article is just non-sense..i have started worrying abt our race .நம்மோட ஆற்றாமை நமக்கெதிராக மாறுவது.its bad..really bad..see the unity of malayalis.even those here are blatantly supporting them..whereas us?

    ReplyDelete
  66. சம்பவத்தை ஒழுங்காக விசாரிக்காமல் எழுதிவிட்டு பிறகு சால்ஜாப்பு செய்துகொண்டிருக்கிறீர்கள். உங்களது இந்தச் செயல் உங்கள் வெளியீடுகளின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. உங்கள் வெளியீடுகள் மிகவும் மேம்போக்கானவை என்பது எனது கருத்து. ஆகையால் ஏற்கனவே ஒதுக்க ஆரம்பித்திருந்தேன். சாருநிவேதிதா ரொம்ப சொல்றாரேன்னு அவர் புது நாவலை காசு கொடுத்து புத்தகக் கண்காட்சியில் உங்கள் அரங்கிலிருந்து வாங்கி வந்துவிட்டேன். ஆனால் சம்பவத்தை திரித்து எழுதும் உங்களின் போக்கே உங்களது வெளியீடுகளிலும் இருக்கலாம் என்று நினைப்பதால் அப்புத்தகத்தை வாசிக்க மனமில்லை. அப்படியே வைத்திருக்கிறேன். திருப்பிக் கொடுத்தால் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுப்பீர்களா? பணம் கிடைக்கும் என்றால், எனது நண்பர்களிடமும் உங்கள் புத்தகங்களை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete
  67. காமெடி பீஸூங்க ஆட்டம் நெம்ப ஜாஸ்தியா இருக்கே பின்னூட்டங்களில்!

    ReplyDelete
  68. oh...who ever support the mallue(may be supporting for something else also) please give the answer to who are moved from kerala to tamilnadu with family (losing all their resource & wealth too). Some time hard treatment need to compansate friends............

    ReplyDelete
  69. நீ யாருன்னு நெறைய பேருக்கு தெரியாம இருந்ந்தது
    இப்ப அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்
    உன் சுய விளம்பரம் ஒ கே தான
    என்ன பொழப்புடா இது

    ReplyDelete