குமார், நாகப்பட்டினத்தில் நான் வசித்த அதே தெருவில் - பெருமாள் வடக்கு மடவிளாகம் - வசித்தவர். எங்களுக்கெல்லாம் பெரிய அண்ணா. இவர் தினமும் கையில் T-Square எடுத்துக்கொண்டு பாலிடெக்னிக் போகும்போது நான் மூன்றாவதோ என்னவோ படித்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறார். நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் பற்றி எழுதியிருக்கிறார்: ஒன்று | இரண்டு | மூன்று
பெங்களூர் இலக்கியத் திருவிழா
5 hours ago
நன்றி திரு பத்ரி.
ReplyDeleteஉங்களிடம் பேசிய ஞாபகமாகவே "அந்த பனியன்" photoவை 2ம் பதிவில் போட்டுள்ளேன்.
பத்ரி மற்றும் குமார் அவர்களே, நானும் பெருமாள் மட விளாகத்தில் தான் வசிக்கின்றேன். (மேல மட விளாகம்) ஆனந்த் வீட்டிற்கு அருகில். உங்களை எல்லாம் பார்த்து இருக்கின்றேனா என்று சரியாக தெரியவில்லை.
ReplyDeleteநாகை நண்பர்கள் யாஹூ குழுமத்தின் மூலம் குமார் அவர்களிடம் மின் அஞ்சல் தொடர்பு உண்டு.
பத்ரி, உங்க வலைப்பூ பற்றி சில சமயம் அறுசுவை பாபு அண்ணன் அவர்களிடம் பேசியது உண்டு. சொல்ல போனால் உங்களால் தான் வலைப்பூ பக்கம் கடந்த வருடம் வந்தேன்.(அண்டகாக்கை என்ற பதிவு, சரியாக ஞாபக இல்லை) இந்த வருடம் எழுத ஆரம்பித்து உள்ளேன்.
சந்தப்பம் அமைந்தால் உங்கள் இருவரையும் சந்திக்க முயல்கின்றேன்.
குமார், இப்பொழுதாவது அடையாளம் கண்டு கொண்டீர்க்களா?
பத்ரி, குமார் மற்றும் சிவா,
ReplyDeleteநானும் நாகப்பட்டினம்தான். தற்போது சிங்கையில் இருக்கிறேன்.
பத்ரி, உங்கள் வீடு ஜி.எஸ்.பிள்ளை வீட்டிற்கு அருகிலா? ஒரு ஆடிட்டர் அலுவலகம் இருக்கிறதல்லவா..?
சலாஹுத்தீன்: இல்லை, அது பெருமாள் சந்நிதி. நாங்கள் சொல்வது பெருமாள் மடவிளாகம். கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களும்.
ReplyDeleteசிவா: நீங்கள் குமாரைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை, என்னைப் பார்த்ததே ஞாபகம் இல்லையென்றால்:-) அடுத்த முறை நான் நாகை வரும்போது சந்திப்போம்!
நன்றி பத்ரி. தற்பொழுது நான் சூடானில் உள்ளேன். இந்தியா வரும் போது கட்டாயம் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
ReplyDeleteமாயவரம் மாஃபியா மாதிரி, இது என்ன நாகப்பட்டினம் மாஃபியாவா? நடத்துங்க, நடத்துங்க :-)
ReplyDeleteநன்றி நாகை சிவா & சலாஹுதின்.
ReplyDeleteமடவிளாகம் பற்றி எழுதயிருக்கிறேன்.அதில் நீங்கள் பார்திராத,கேள்விபடாத விஷயங்களையும் பார்கலாம்.
என்னுடன் இருந்த,விளையாடிய & படித்த ஒரு நண்பனைக் கூட இணையத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
அது தான் இப்படிப்பட்ட முயற்சி.
நான் பெரிய எழுத்தாளன் இல்லை அதனால் பொற்குற்றம் & சொற்குற்றம் பொறுத்தருள்க.