நியூ ஹொரைசன் மீடியா (New Horizon Media) என்னும் நிறுவனத்தை நாங்கள் தொடங்கி இரண்டாண்டுகளுக்குமேல் ஆகிறது.
முதல் படியாக இந்த நிறுவனம் 'கிழக்கு பதிப்பகம்' எனும் தமிழ் பதிப்பு பிராண்டை உருவாக்கி பொதுவான துறைகளில் அச்சுப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. வாழ்க்கை வரலாறுகள், அரசியல் வரலாறுகள், நாடுகள், நிர்வாகவியல், நிதி, தன்னம்பிக்கை நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்ற துறைகளில் நூறுக்கும் அதிகமான புத்தகங்களை இதுவரை வெளியிட்டுள்ளோம்.
இந்த நிதியாண்டில் அடுத்த கட்ட வளர்ச்சியாக மேலும் மூன்று தமிழ் பதிப்புகளை - imprints - உருவாக்க உள்ளோம். ஒன்று இந்துமதம் சார்ந்த புத்தகங்களுக்காக. இரண்டாவது உடல் நலன், உடலை வருத்தும் நோய்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் (பொதுவாக "ஆரோக்கியமான வாழ்வு") தொடர்பானது - இந்த இரண்டிலும் புத்தகங்கள் ஜூலை மாதம் முதல் கடைகளில் கிடைக்கும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.
மூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்.
பா.ராகவன் தலைமையிலான ஆசிரியர் குழு இவை அனைத்தையும் கவனித்துக் கொள்ளும்.
ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிட ஓர் imprint ஒன்றையும் தொடங்கியுள்ளோம். புத்தகங்கள் வெளிவர 2-3 மாதங்கள் ஆகும். பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்.
மேற்கண்ட புத்தகங்கள் தவிர கிழக்கு பதிப்பகம் வழியாக இதுவரை உருவாக்கியுள்ள புத்தகங்கள் விரைவில் மின்புத்தகங்களாகக் கிடைக்கும். அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். விரைவில் இவை பற்றிய தகவல்களும் வெளியாகும்.
இப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே. முழுநேர அறிவியல் பதிப்பு ஆசிரியராக விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்.
சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் 3,000 சதுர அடி உள்ள முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் குடிபுகுந்துள்ளோம். புத்தகங்கள்மீது அக்கறை உள்ள நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் நேரில் வந்து என்னுடன் பேசலாம்.
விண்திகழ்க!
3 hours ago
வெரி குட். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமின் புத்தகங்கள் வரும் போது அறிவிப்பு ஒண்ணு போடுங்க..
//அத்துடன் ஒலிப்புத்தகங்கள் உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம். //
ReplyDeleteநல்லதொரு முயற்சி..மிக அத்தியாவசியமானதும் கூட..
வாழ்த்துகள் பத்ரி, தங்கள் தொழிலும் சேவையும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....
ReplyDeleteநன்றி
வாழ்த்துக்கள் பத்ரிக்கும் மற்றும் கிழக்கு பதிப்பு நண்பர்களுக்கும்.
ReplyDeleteஆழ்வார்பேட்டையில் அலுவலகமா? வெற்றி பளிச்சென்று தெரிகிறதே!
//இந்துமதம் சார்ந்த புத்தகங்களுக்காக
ReplyDeleteஆரோக்கியமான வாழ்வு"
குழந்தைகளுக்கான//
அனைத்து நல்ல தலைப்புகள். வாழ்த்துக்கள். அறிவியல் தொடர்ப்பான புத்தங்களையும் விரைவில் வெளியீடுவதற்கு வாழ்த்துக்கள்.
முக்கியமாகக் குழந்தைகளுக்கான பதிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி!
ReplyDeleteமகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி - சொ. சங்கரபாண்டி
Fabulous efforts, Badri.
ReplyDeleteWishing you the very best of luck,
Srikanth
மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteMr. Badri
ReplyDeleteCongrats. Looking forward to seeing the books in science field and in audio format of the same........(am sure they will become my driving companion).
wish you to get youngest business man award....
with best wishes
CT
மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteநல்லெண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல நிகழ்வுகள்.
நல்வாழ்த்துகள், நன்றிகளும்.
முயற்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்வாழ்த்துகள்
www.HosurOnline.Com
பத்ரி,
ReplyDeleteநல்ல முயற்சி. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
//இப்போதைக்கு இருக்கும் ஆதங்கம் தமிழில் நல்ல தரத்தில் எளிய அறிவியல் புத்தகங்களைக் கொண்டுவர இயலாமையே.//
உண்மைதான். தமிழில் நல்ல தரமான அறிவியல் நூல்கள் வர வேண்டும். பாரதியின் கனவை நனவாக்குகிறீர்கள். உங்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது.
மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நன்றி.
பத்ரி தமிழில் நல்ல பதிப்பகங்கள் காலத்தின் தேவை.அண்மைக்காலமாக புத்தகங்களின் மீள் பதிப்புகள்,புதிதாக வெளிவருபவை,மொழிபெயர்ப்புகள் என்று புத்தகங்களின் வருகை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் ஆனால் அவற்றின் தரம் பற்றிப் பேசினால் ஏமாற்றம்தான் எஞ்சும்.
ReplyDeleteகிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் தரம் பாராட்டுக்குரியது.அதேநேரம் உள்ளடக்கத்தில் இன்னும் கொஞ்சம் கூடிய கவனத்தேர்வு வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் அசோகமித்திரன்,எஸ்.ராமகிருஷ்ணன் தொகுப்புகளும் ஆதவனின் வரிசைகளும் வாங்கினேன் அவற்றின் செய்நேர்த்திக்காகப் பாராட்டுக்கள்.
யேசுராசாஉடன் பேசிக்கொண்டிருக்கையில் ஆதவனின் திரையுலகம் பற்றிய கட்டுரைகள் பற்றிச் சிலாகித்தார் அவற்றைத் தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணமுள்ளதா?
//ஆதவனின் திரையுலகம் பற்றிய கட்டுரைகள் //
ReplyDeleteஈழநாதன் : இன்னும் கொஞ்சம் விவரம் ப்ளீஸ்
வாழ்த்து(க்)கள் பத்ரி.
ReplyDeleteநல்ல முயற்சி.
மின் புத்தகம் வரும்போது சொல்லுங்க.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் பத்ரி!
ReplyDeleteதங்கள் பதிப்பகங்களின் மூலம் சிறப்பான புத்தகங்கள் வெளிவரவும் அதிலும் குறிப்பாக தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வெளிவரவும் என் எண்ணங்கள்.
Children's Book Trust, குழந்தைகளுக்கு அருமையான தரமான புத்தகங்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. குழந்தைகளுக்கான புத்தகங்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதாக இருந்தால் CBT-யின் புத்தகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
my best wishes...
ReplyDeleteபிரகாஸ் யேசுராசா ஈழத்தில் வதியும் கவிஞர் சிறந்த திரை விமர்சகரும் கூட அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஆதவனைப் பற்றிக் குறிப்பிட்டார் ஆதவன் டில்லியில் இருந்தபோது எழுதிய திரைப்பட விமர்சனங்கள்,சினிமாக் கோட்பாடு பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை அவற்றை யாராவது பதிப்பித்தால் நல்லது என்றார் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட கட்டுரைகள் அவரது இயற்பெயரான சுந்தரம் என்னும் பெயரிலே எழுதப்பட்டவை என்று கேள்விப்பட்டேன்.
ReplyDeleteஆர் வெங்கடேஷ் ஆதவனின் எழுத்து மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் கிழக்கு தொகுக்கும் ஆதவனின் நூல்வரிசைகளுக்கு அவரே தொகுப்பாளராக இருக்கிறார் அவரைக் கேட்டால் மேலதிக விபரம் கிடைக்கக்கூடும்.
வாழ்த்துக்கள்.
ReplyDelete....
/மூன்றாவது, குழந்தைகளுக்கான imprint. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வெளியாகும். 3-8 வயதுள்ள குழந்தைகளுக்காக வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகங்களும், 9-14 வயதானவர்களுக்காக எழுத்தும் படங்களும் சரிசமமாக உள்ள புத்தகங்களும் வெளிவரும்./
நல்ல விடயம். அவசியமானதும் கூட.
நன்றி ஈழநாதன். நான் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டு விசாரிக்கிறேம். விவரங்கள் கிடைத்தால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ReplyDeleteI read an article in JV on blue
ReplyDeletetooth wrtten by R.Venkatesh, it
was well written.
Badri and NHM team,
ReplyDeleteBest wishes. The quality of Kizhakku books are much better than other publishers. Keep up the good work and also the growth..!
Looking forward to newer series and books.
A Personal request: May be you should look at bringing out books of writings from Dr.Jaybee of Malaysia. (Agathiyar group). Lot of material he has written in Net which can get into Hinduism area which you can publish.
Usha: R.Venkatesh is now a VP in vikatan group, I believe. He writes Digital Ju.vi in Junior vikatan these days
- Alex P
வாழ்த்துகள் பத்ரி சார்.
ReplyDeleteநேற்று காலை டான் தொலைக்காட்சி சேவையில், சென்னை புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் உங்களது பேட்டினை கண்டேன், உங்களது கிழக்கு பதிப்பகம் பற்றியும் அறிந்து கொண்டேன்.
சென்னை வரும் போது கட்டாயம் உங்கள் பதிப்பகம் வந்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்க இருக்கிறேன்.
குழந்தைகளுக்கான நல்ல நல்ல புத்தகங்களை குறைந்த விலையிலும் தரமாகவும் கொடுக்க வேண்டுகிறேன்.
- பரஞ்சோதி
அன்புநிறை ஈழநாதன், ஐகாரஸ் பிரகாஷ், நண்பர்களுக்கு,
ReplyDeleteஇந்தப் பதிவை தாமதமாகப் படித்தேன்.
உண்மை. ஆதவனுக்கு திரைப்படங்களைப் பற்றி நிறைய ஆர்வம் இருந்திருக்கிறது. கணையாழியில் நல்ல திரைப்படங்களைப் பற்றி விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்குச் சென்று அதனை முழுமையாக கவர் செய்து கணையாழியில் எழுதியிருக்கிறார். நான் இவற்றையெல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன். அத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு "கண்ணோட்டம்" என்றொரு பத்தியையும் கணையாழியில எழுதியிருக்கிறார் ஆதவன். இதையும் தொகுத்திருக்கிறேன். ஆதவனின் கட்டுரைகளை முழுமையான ஒரு தொகுதியாக வெளியிட வேண்டும் என்று விருப்பம்.
என் தோடுதல் இன்னும் தொடர்கிறது. சமீபத்தில் ஆதவனின் மேலும் மூன்று சிறுகதைகளைக் கண்டுபிடித்துள்ளேன். ஆதவன் சிறுகதைகள் அடுத்த பதிப்பில் அவை இடம்பெறும்
நேசமுடன்
வெங்கடேஷ்
பத்ரி சார்!
ReplyDeleteஎன் நண்பர் ஒருவர் மிக அருமையாக அறிவியல் விஷயங்களைத் தமிழில் எழுதுகிறார்.... அவர் ஒரு புத்தகம் வெளியிடலாம என யோசனையில் இருக்கிறார்... அறிவியல் புத்தகங்களை வெளியிட எந்த பதிப்பகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியுமா? அவரது Blogனை தயவுசெய்து ஒரு முறை விசிட் செய்துப் பாருங்கள்.... அவரது எழுத்தாற்றல் புரியும்....
www.smoothtalk.blogspot.com
லக்கிலுக்: உங்களது மின்னஞ்சல் முகவரி என்னிடம் கிடையாது. உங்களது பின்னூட்டம் பார்த்தேன். உங்கள் நண்பர் மின்னஞ்சல் முகவரியை எனக்குக் கொடுத்தால் அறிவியல் புத்தகங்கள் தொடர்பாக நான் அவரிடம் பேசுகிறேன்.
ReplyDelete