Tuesday, June 13, 2006

வங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை

கடந்த சில வாரங்களாகவே இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இது வெளிப்படையான all-out war அல்ல. Low intensity conflict எனப்படும் வகையைச் சார்ந்தது. ஆனால் இதில் ஓர் அவலம் சாதாரண மக்கள்மீது நடத்தப்படும் வெறித்தாக்குதல்கள். வங்காலை எனுமிடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் - கணவன், மனைவி, இரு சிறு குழந்தைகள் - படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் கோரமான முறையில் வயிற்றுக்குக் கீழ் கிழிக்கப்பட்டு கயிற்றில் சுருக்கு மாட்டித் தொங்க விடப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளைச் செய்தது ராணுவத்தினராகத்தான் இருக்கும் என்று உள்ளூர் மக்கள் சொல்கின்றனர்.

ஆனால் இலங்கை அரசு மறுத்து, கொலை செய்யப்பட்டவர் புலிகள் எதிர்ப்பாளர் என்பதால் புலிகள் அவருக்குத் தண்டனை கொடுத்துள்ளனர் என்கின்றனர்.

இலங்கை அரசின் மறுப்பு ஏற்கக்கூடியதல்ல. புலிகள் கடுமையான தண்டனை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை நிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.

இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் எதிலும் வரவில்லை என்று பலர் ஏற்கெனவே எழுதியுள்ளனர். கடந்த ஒருவாரமாக Airtel Broadband மூலம் என்னால் [எச்சரிக்கை: மனத்தை பாதிக்கக்கூடிய படங்கள் உள்ளன] தமிழ்நெட் தளத்துக்குச் செல்ல முடியவில்லை. நேற்றிரவுதான் அங்கு சென்று சில படங்களைப் பார்க்க முடிந்தது. Airtel Broadband-ல் வலிந்து சென்சார் செய்திருப்பார்கள் என்று நினைக்கமுடியவில்லை. இருந்தாலும் ஏன் இந்தத் தளம் மட்டும் கடந்த ஒருவாரமாகக் கிடைக்கவில்லை என்பது புரியவில்லை.

இந்தியாவில் சன் டிவி முதல் எங்கும் இதைப்பற்றிய செய்திகள் இல்லை. "Vankalai" என்று கூகிள் நியூஸ் தேடலுக்குச் சென்றால் பிபிசி செய்தி ஒன்று மட்டும்தான் உலக அளவிலான செய்தி நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்ட செய்தியாக உள்ளது. மற்றதெல்லாம் ஈழத்தமிழர், இலங்கை செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள்.

ராணுவ அத்துமீறல் பற்றி ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் ஏதாவது சொல்லியிருக்கிறதா என்றால் கடைசியாக அவர்களது தளத்தில் இலங்கை பற்றிய செய்தி மார்ச் 2006 மாதத்தில் எழுதப்பட்ட ஒன்றாக உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்குச் சென்று நிலவரத்தைக் கண்டறியவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டும். இதுநாள்வரையில் வெளியுறவு அமைச்சகம் மட்டுமே இலங்கைப் பிரச்னையில் தொடர்பு கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் இனியும் அப்படி இருந்துவிடக்கூடாது.

கருணாநிதியும் ராமதாசும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தி இந்த மாத இறுதிக்குள்ளாக இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

இந்தியா அவசர அவசரமாக இலங்கை அரசுக்கு ஒரு demarche அனுப்பி, ராணுவம் நடத்தும் extra-judicial கொலைகளை - முக்கியமாக வங்காலை கொலைகளை - தாம் வன்மையாகக் கண்டிப்பதாகச் சொல்லவேண்டும்.

பார்க்க: Failed State and Illiberal Democracy that is Sri Lanka, கில்லி

31 comments:

  1. //கருணாநிதியும் ராமதாசும் ஒன்றிணைந்து மத்திய அரசை வலியுறுத்தி இந்த மாத இறுதிக்குள்ளாக இந்திய எம்.பிக்கள் குழு இலங்கை செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

    இந்தியா அவசர அவசரமாக இலங்கை அரசுக்கு ஒரு demarche அனுப்பி, ராணுவம் நடத்தும் extra-judicial கொலைகளை - முக்கியமாக வங்காலை கொலைகளை - தாம் வன்மையாகக் கண்டிப்பதாகச் சொல்லவேண்டும்.//

    நிச்சயமாக இந்தியா சிங்கள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் என் தனிப்பட்ட எதிர்பார்ப்பும்.

    ReplyDelete
  2. மிகவும் அவசியமான பதிவு .ஈழ்த்தில் நடப்பது செய்திகளாகக் கூட இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது .அகதிகள் வருகை பற்றியோ ,சமீபத்திய படுகொலைகள் பற்றியோ தமிழகத்தில் அதிகாரமுள்ள அரசியல் கட்சிகள் கூட கண்டனமோ வருத்தமோ தெரிவிக்க காணோம் .இது மிகவும் வருந்தத்தக்கது.

    ReplyDelete
  3. பத்ரி,
    இது மிக முக்கியமான தருணமாகவும், முக்கியப் பிரச்சினையாகவும் படுகிறது. ஆனால் இந்திய அரசோ அல்லது நமது ஊடகங்களோ இதில் தலையிடாமல் இருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. உலக சமூகத்தின் பார்வை குறித்தோ அல்லது இந்தியப் பார்வை குறித்தோ சரியான அலசலும் இந்திய ஊடகங்கள் செய்வதில்லை. இவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்களா? அல்லது இது உண்மையிலேயே அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லையா?

    இரண்டாவது வினா இங்கு தேவையே இல்லை. உயிர்கள் இழக்கப்படும் போதே அது முக்கியப் பிரச்சினை ஆகி விடுகிறது.

    தவறு யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். அது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. குறைந்த பட்சம் இதனைத் தவிர்க்கும் விதமாகவாவது விவாதங்கள் அரங்கேற்றப் பட வேண்டும். நேபாளப் பிரச்ச்சினையின் அளவிற்கு எல்லாம் கவனம் தேவை என்றெல்லாம் சொல்வது என் கருத்தல்ல. அது இந்தச் சூழலில் நடக்காத காரியமும் கூட.

    ஐரோபிய நாடுகளுக்கோ அல்லது ஜப்பானுக்கோ இருக்கும் அக்கறை கூட நம் அரசுக்கு ஏன் இல்லை?

    இந்திய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் வாதிகள் ஏன் வாய் திறந்து பேசுவதில்லை? இந்திய மனத்தினை அரித்துக் கொண்டிருக்கும் பயமா? இல்லை எனில் தடையாக இருப்பது எது?

    ஒரு இந்தியனாக, இந்தியாவில் இருந்து இதையாவது பேச வேண்டும்.

    பத்ரி,
    உங்களின் சமூகம், அதன் நிகழ்கால பிரச்சினைகள் குறித்தான பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதுண்டு.(பின்னூட்டம் அதிகமிட்டதில்லையென்ற போதிலும்). விசாலமான பார்வை கொண்ட தங்களைப் போன்றவர்கள், முக்கியமான ஊடகமாக வளர்ந்து வரும் வலைப்பதிவு ஊடகத்தில் இலங்கைப் பிரச்சினை குறித்தான இந்தியப் பார்வையை முன்னெடுத்துச் செல்லலாம் எனத் தோன்றுகிறது. இந்திய மனநிலையில் படிந்து கிடக்கும் புகைத் திரையினை விலக்கலாம். இது என் கருத்து. யோசித்துப் பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி,
    உங்கள் பதிவு மூலம் ஆக்குறைந்தது தமிழ் நாட்டு மக்களுக்காவது உண்மை தெரிந்தால் பெரியவிடயம், நிச்சயமாக கணணி பாவிக்காத மக்களிடம் இந்த செய்திகள் சென்றடையாது, செய்திகள் மக்களை சென்றடையாது இருப்பதில் இந்திய அரசும் ,பத்திரிக்கைகளும் மிக கவனமாக இருக்கின்றன.

    ReplyDelete
  5. பத்ரி இது ஒரு முக்கிய பதிவாக இருப்பதால் பலரும் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தில் முத்தமிழ் கூகிள் குழுமத்திலும் இட்டிருக்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  6. தமிழன் என்கிற உணர்ச்சியை உசுப்பேற்றியெல்லாம் இதனை அணுகத் தேவையில்லை. இங்கே அனைவரும் எதிர்பார்க்கிறதே போலக் குறைந்தபட்ச மனிதாபிமானமாவது வெளிப்படுத்தப்படலாம்.

    இணையத்தை தாண்டி இப்பிரச்சினை குறித்தான செய்திகள் ஒரு சராசரித் தமிழனைச் (ஓட்டு மொத்த இந்தியர்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது) சென்று சேர்ந்தாலே பெரிய விடயம்.

    ReplyDelete
  7. என்ன செய்வது

    இலங்கை தமிழர் என்றாலே புலிகள் என்பர்
    புலிகள் என்றாலே ராஜீவ் என்பர்

    தமிழராய் பிறந்ததிற்காக அவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்கவேண்டுமோ தெரியவில்லை.

    ReplyDelete
  8. இந்தப் பதிவுக்கு 'நன்றி'யெல்லாம் தேவையில்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது சென்று போய்ச் சேரவேண்டுமென்றால் கீழ்க்கண்ட சிலவற்றைச் செய்யவேண்டும்.

    1. அங்கும் இங்குமாக தோன்றியதை எல்லாம் எழுதாமல், விளக்கமாக இதுவரையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது ராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்களை ஆதாரத்துடன் சிறு பிரசுரமாக (PDF கோப்பு) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி அதனை பல்வேறு அஞ்சல் குழுக்கள், நண்பர்களது மின்னஞ்சல் முகவரி போன்றவை மூலம் பரப்ப வேண்டும்.

    2. அதே பிரசுரத்தை தமிழில் அச்சடித்து அத்துடன் கலர் படங்களையும் சேர்த்து தமிழக.புதுச்சேரி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

    3. ஆங்கிலத்தில் அச்சடித்த (படங்களுடன்) பிரசுரத்தை பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலில் அனுப்பவேண்டும்.

    4. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தமிழில் ஒரு பிரதியும் நாட்டின் அனைத்து ஆங்கில நாளேடுகளுக்கும் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும் அனுப்பி வைக்கவேண்டும்.

    5. அனைத்துத் தொலைக்காட்சி சானல்களுக்கும் இதே விவரங்களை அனுப்பவேண்டும்.

    இந்தப் பிரசுரங்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகள் ஏதும் இல்லாது செய்யவேண்டும். இலங்கை ராணுவம் பொதுமக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் உரிமைமீறல்களை மட்டும் ஆதாரங்களுடன் முன்னிலைப்படுத்தி இவற்றைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லுமாறு இந்தப் பிரசுரம் அமைய வேண்டும்.

    அப்படிச் செய்யாவிட்டால் - அதாவது விடுதலைப் புலிகள் ஆதரவு வார்த்தைகளைச் சொல்வதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று எதையாவது சொல்லி அடிப்படை நோக்கத்தைக் கவனிக்க விட்டுவிடுவார்கள்.

    முக்கிய நோக்கம் - இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் குறிவைத்து கொடூரமாகத் தாக்குவதை நிறுத்துவது. அவ்வாறு இலங்கை அரசை நெருக்கச் சொல்லி இந்திய அரசை வற்புறுத்துவது.

    இதற்கு இலங்கைத் தமிழர்களும், அவர்களுக்கு ஆதரவு தரும் இந்தியத் தமிழர்களும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.

    ReplyDelete
  9. அல்லைப்பிட்டிப் படுகொலை
    http://www.nitharsanam.com/?art=17276
    (சிறிலங்காக் கடற்படையும் ஈ.பி.டிபியும் சம்பந்தப்பட்டுள்ளதாக பன்னாட்டு மன்னிப்புச் சபை தெரிவித்திருந்தது)
    கொல்லப்பட்டோர் விவரம்:
    மூன்று பிள்ளைகளின் தந்தையான ஏபிரகாம் றொபின்சன் (வயது 28)
    ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுதாஸ் (வயது 28)
    பாலச்சாமி கேதீஸ்வரன் (வயது 25)
    பாலச்சாமி கேதீஸ்வரனின் மனைவி அனஸ்எஸ்த்தர் (வயது 25)
    பாலச்சாமி அனஸ்எஸ்த்தர் தம்பதிகளின் மகன் தனுஸ்காந் (வயது 04), மகள் யதுசா ( 04 மாதம்)
    நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஸ் நவரத்தினம் (வயது 50)
    ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அந்தோனிமுத்து (வயது 64)
    வர்த்தகர் சிவநேசன் (வயது 56)
    காயமடைந்தோர் விவரம்:
    எஸ்.மோகனாம்பிகை (வயது 46)
    கொல்லப்பட்ட வர்த்தகர் சிவநேசனின் மனைவியான அம்பிகாபதி (வயது 38)
    ரி.செல்லத்துரை (வயது 61)"
    ************************
    ஜெனிவாப் பேச்சின்பின் நடந்த அரசபடுகொலை விவரங்களடங்கிய ஆவணம்.
    http://www.eelampage.com/pdf_files/Press_Statement_from_Political_HQ_of_LTTE.pdf
    ************************
    கார்த்திக் ரமாசின் பதிவு
    http://karthikraamas.net/pathivu/?m=200602

    மேற்கண்டவற்றிலுள்ள விவரங்களின் உண்மைத்தன்மையில் குழப்பமிருக்க வாய்ப்பில்லை.

    ReplyDelete
  10. //புலிகள் கடுமையான தண்டனை வழங்கக்கூடியவர்கள் என்றாலும்கூட குழந்தைகளை நிச்சயமாக இதுபோன்று கொன்றிருக்க மாட்டார்கள்.//
    அது மட்டுமல்ல, அந்தப் பிஞ்சுகளின் தாயார் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதிலிருந்து தெரிகிறதா, இதனை யார் செய்திருப்பார்கள் என்று. பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
  11. பத்ரி , எல்லாரும் தங்களின் இயலாமையை சொல்லி கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் போது நீங்கள் ஆக்கபூர்வமாக செய்யக்கூடியவற்றைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். நானும் நீங்கள் சுட்டிக்காட்டியமாதிரி சிந்தித்திருந்தேன்.உதவிகள் ஏதாவது தேவைப்பட்டால் தொடர்புகொள்கிறேன்.
    நன்றி.

    சுரேஸ் (அவுஸ்திரேலியா).

    ReplyDelete
  12. பத்ரி, ஆக்கபூர்வமான செயற்பாடுகளைப்பற்றி கூறியுள்ளீர்கள். இதே போன்று நானும் சிந்தித்திருந்தேன்.ஏதாவது உதவிகள் தேவைப்படும்போது நிச்சயமாக தொடர்புகொள்கிறேன்.

    நன்றி.
    சுரேஸ்(அவுஸ்திரேலியா)

    ReplyDelete
  13. பத்ரி,
    அம்னெஸ்டி இண்டர்நேஷனல் ஏப்ரலிலும், மேயிலும் (அல்லைப்பிட்டி வன்கொலைகள்), இறுதியாக ஜூன் 9 இலும் (http://web.amnesty.org/library/Index/ENGASA370152006?open&of=ENG-LKA)
    இலங்கை நிலவரங்களைப் பதிந்துள்ளது. வங்காலைக் கொலைகள் இன்னும் இற்றைப் படுத்தப் படவில்லை.

    ReplyDelete
  14. நல்ல வகையில் சொல்லியுள்ளீர்கள். இன்றைய இந்திய அரசியல் போக்கில் முதல்வருக்கும்;பாமக வுக்கும் உள்ள ஆளுமையைப் பிரயோகித்து;இலங்கையரசிற்கு தங்கள் காட்டமான எதிர்ப்பைத் தெரிவித்து; இந்த அநியாயக்,கொடூரக் கொலைகளைத் தவிர்க்கலாம். முயல்வார்களா,,,?????
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  15. உங்கள் முயற்சியும் பதிவும் பாராட்டப் பட வேண்டியது. தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு இருக்கும் பலத்திற்கு இன்னும் நிறையச் செய்யலாம். ஏனோ வாளா விருக்கிறார்கள்.

    ReplyDelete
  16. உண்மையாகவே ஆக்கப் பூர்வமான சிந்தனை, நல்ல முயற்சி. ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்து தான் பார்க்கலாமே.

    ReplyDelete
  17. பத்ரி, ஒருங்கிணைப்பு முயற்சிகளோடு, தமிழ், ஆங்கில ஊடகங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து அதிகம் எழுதப்படுதல் இது குறித்த முயற்சிகளுக்கு பயன் தரும்.

    ReplyDelete
  18. எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது.

    While every one has the maturity not to blame the entire Sikh COmmunity for Indira's assasination or the entire RSS etc for Ganhi's murder, why do most of the people say that India should just watch and ignore Sri Lankan Army killing innocent citizens by such acts and even air raids.

    For the past fwe decades, Sri Lanka is perhaps the ONLY COUNTRY to drop bombs within the area which it claims as its own lands and refuses to part with

    Do you kill your OWN citizens

    And few say that India should not interfere just because LTTE killed Rajiv Gandhi

    If you follow the same logic you should sent all the Sikhs out of India (how absurd !!!)

    ReplyDelete
  19. வணக்கம் பத்ரி,

    வெறும் வலைப்பதிவில் மட்டும் நின்றுவிடாது செயற்பாட்டு ரீதியாகவும் காரியம் ஆற்ற முன் வந்த உங்களைப் போன்றவரின் ஆதரவு எமக்குத் தேவை.உங்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னும்,தமிழகத்தை எமது தாயாகவும், தமிழ் நாட்டுத் தமிழரை எமது உடன் பிறப்புக்களாகவும் கருதுகிறோம்.

    நீங்கள் கேட்டபடி கீழ் உள்ள இணைப்புக்களில் சில கோப்புக்கள் உள்ளன, அவற்றைத் தரவிறக்கி உங்கள் நண்பர்கள்,உறவினர்,மற்றும் உங்களுக்குத் தெரிந்த பத்திரிகை நண்பர்கள்,அரசியல் வாதிகளுக்கு அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    http://sooriyan.com/index.php?option=content&task=view&id=3138&Itemid

    http://connecttamils.com//images/MISC/This_is_not_a_junk_file_%20%21.ppt

    நன்றி

    ReplyDelete
  20. To that Anony who has a doubt

    The answer is simple , loud and clear, because we all are Indians and it happened within India, neither Indra nor Gandhi was killed by a terrorist coming from another country. That is the main difference. Mathi kettu poi pesakoodaathu. Rajiv was killed by Tigers. Till date they did not surrender Prabakaran to India. You first surrender Prabakaran to India before seeking any help or mercy from India. Till then any Indian will view any Srilankan Tamil Issue linked with Rajiv's killing only. Unless Srilankan Tamils dump Prabakaran and Tigers, India should not show any mercy on LTTE and should help Srilankan Govt in cleanseing them.

    What is the proof that these murders were commited by Srilankan army? I say it is a propaganda by Tigers at a moment this terorrist organization is getting banned all over the world. Let a clear investigation go thru and find out who the real killers are. Till then let us hold any accusation against Srilankan Govt.

    When Tigers use kids as suicide bombers wont they kill kids in a gruesome manner? Here Tigers are also suspect.

    Daily hundreds of Hindus are getting killed inside India, Did any of these Puli supporters express your sympathy and condemnation ever? Did any of these guys express sympathy with Pandits any time? Did any of these Eealam supporters condemn innocent Hindus killed in Kasi, Delhi, Coimbatore and all across India each and every day. Why should be bother much about you?

    Dear friends we have more things to worry about, condemn and sympathize with within India. This killings in Vangalai looks like a ruse a cruel drama enacted and set up by Tigers to gain international sympathy. An orchestered campaign is going on in the blog world towards that direction. Let us not fall for the bait.

    Again proudce Prabakaran and Pottu Amman before seeking our sympathy or condemnation or help.

    ReplyDelete
  21. நீங்களெல்லாம் பாசிசவாதிகள். கொலைகளை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். இது மேலும் மேலும் கொலைகளைத் தூண்டத்தான் செய்யும். நீங்கள் புலிப்பாசிசத்துக்குத் துணை போகிறீர்கள்.

    என்று நான் சொல்லவில்லை. சிறிரங்கன் கவிதை பொழிகிறார்.

    ReplyDelete
  22. ஏனோ நம் அரசியல் தலைவர்கள், இந்த விசயத்தில் பெரிய அளவில் எவரும் குரல் கொடுக்கவில்லை. மீடியாக்களும் கண்டு கொள்ளாதது மிகவும் வருத்தமான விசயம்.

    அனாமி,
    நீங்கள் கூறிய கருத்தில் சிறிதும் நியாயம் இல்லை. பல அப்பாவிகளின் உயிரை கொன்ற குவித்த தீவிரவாதிகளுடனும், அவர்களுக்கு உதவி புரியும் நாட்டு தலைவர்களுடனும் அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். ஆனால் அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தால் அதை கண்டு கொள்ள மாட்டீர்கள். அவ்வளவு ஏன் நம் இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதது. அதை குறித்து ஒரு முறை கூட கடுமையாக இலங்கை அரசை நம் இந்திய அரசு கண்டிக்காத ஏன்? தயவு செய்து உண்மை புரியாமல் இலங்கை ராணுவத்துக்கு வக்காலத்து வாங்காதீர்கள். அது மட்டும் இல்லாமல் இந்த பதிவு விடுதலை புலிகளுக்கு ஆதரவான பதிவு இல்லை. அநியாமாக ஈழ தமிழர்கள் கொள்ளப்படுவதை கண்டிக்கும் பதிவு. அவ்வளவு தான். இலங்கை ராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு சாட்சி இருக்கா என்று கேட்பது சிரிப்பை வரவழைக்கிறது.

    ReplyDelete
  23. Tigers Killed Rajiv Gandhi

    The question was Why you are punishing ALL THE TAMILIANS

    ReplyDelete
  24. // Did any of these guys express sympathy with Pandits any time? Did any of these Eealam supporters condemn innocent Hindus killed in Kasi, Delhi, Coimbatore and all across India each and every day. Why should be bother much about //

    Even Srilanka did not condemn this. But India rushes help to Srilanka (for example during Tsunami)
    inspite of a jawan of Srilankan Army attacking Rajiv Gandhi

    Any how, from your post, I knew the answer

    There are a lot of people who hate tamilians just because they are tamilians

    ReplyDelete
  25. அவ்வளவு ஏன் நம் இந்திய மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் அடையும் துன்பங்கள் கணக்கில் அடங்காதது. அதை குறித்து ஒரு முறை கூட கடுமையாக இலங்கை அரசை நம் இந்திய அரசு கண்டிக்காத ஏன்?

    Can you answer

    இலங்கை ராணுவம் செய்யும் அத்துமீறல்களுக்கு சாட்சி இருக்கா
    So who burned the Jaffna Library

    Do you mean to say that the recent air strike in Tamil Land was by LTTE ????

    ReplyDelete
  26. அனானி, மன்னிக்கவும். இலங்கைத் தமிழர்களும் இந்துக்களே. இங்கே நாம் பேசிக்கொள்வது அங்கே சீரழியும் பொதுமக்களைப் பற்றித்தான்; போராளிகளைப் பற்றியல்ல.

    சாமானியனுக்கான தீங்கு யார் மூலமாக நிகழ்ந்தாலும் அது ஆராயத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமாகும். யார் கொன்றது என்கிற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், இத்தகைய பாதகங்கள் நடப்பது இங்கே எத்தனை பேருக்குத் தேரியும்? ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்துடன் (அல்லது அதற்கான விருப்பதுடன்) இந்தியாவில் செயல்படவில்லை என்பதில் பத்ரி கருதுவது போலவே, என்னைப் போன்ற பலரும் நினைக்கிறோம். பெயரை வெளிப்படுத்தி நீங்கள் நினைப்பதைச் சொல்லியிருந்தால் இன்னும் பாராட்டத்தக்கதாய் இருந்திருக்கும்.

    ReplyDelete
  27. //What is the proof that these murders were commited by Srilankan army? //

    அண்ணே அந்தப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரி சொல்கிறாள். ஏன் அந்த மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வெளிப்படையாக பி.பி.சியில் சொல்கிறார்.

    சரத் பொன்சேகா மீதாக கொலை முயற்சியைப் புலிகள்தான் செய்தார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் வராதது போலவே வங்காலைப் படுகொலை தொடர்பிலும் இராணுவம்தான் செய்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் வரவாய்ப்பில்லை. சந்தேகம் கொள்பவர்கள் தெரிந்தும் இராணுவத்தைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்தான்.
    இது பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  28. Dear Mr.Kuppusamy Chellamuthu

    You may be too young to know anything about the fates of Amirthalingam, Padhmanabha, Rajiv etc to ask me to come out with my name. Ask Srirengan if you need more data about the betrayals of Tigers. Let the Tigers get cleansed , I will come out open with my name, till that date, please bear with me just as an anony. I know about the cunning evil designs of Tigers more than any of you here.


    I agree and condemn any atrocity committed against any common/innocent man. I condemn such killings irrespective of who would have done that. My question was very simple, when 4 people got killed all you guys raise a big cry, conduct petition campaign and blame the entire media, bloggers and all sundry for not sumpathizing/condemning the death of 4 people. But did you show the same concern when hundreds of Hindus all across India are getting killed each day by Islamic terrorist animals or did you condemn the killings committed by Tigers on innocent Sinhalese? Who will cry for those innocents? Tell me? Do you think only Srilankan Tamils have any value for life?

    The same Badri who is now starting petition campaign against the killings of innocent people, justifed the killings of innocent children by Islamic terrorists in Beslan. The same Badri who is now shedding croc tears justified the London Bomb blasts and wrote that those innocent public deserve such punishment. Now he is condmening the killings of few Srilankan Tamils? Did anybody say 'Hypocircy" ? What moral authority does he possess in writing to Indian MLAs and MPs?

    I treat all human beings same. But you guys play double standard between lives. You hupocrites would justify if children are charred to death in Beslan, you hypocrites would support the London bomb blast terrorists at the same time all you want to support only if a signle Srilankan Tamil get killed?

    The same media kept silence on so many other killings too. Did you any of you come out and shouted like this for those media's hypocricy?

    Again I can only sympatheize for the loss of innocent lives but I can not accuse Srilankan Govt unless they are proved guilty. Let saner people dont play for the tunes of Tigers. For me all your sudden sympathy and love for the death of few Srilankan Tamils sound very hallow, dubious and motivated. Please dont play politics over dead corpses. All these campaign going on in this Tamil Net world have ulterior motives behind them. They want to achieve their own agenda over few dead bodies.

    Why should India bother about the death of Srilankan Tamils? They have their own intelligent sources, perhaps they would have already found the murders were carried out by LTTE themselves. Why should India worry about a population that betrayed several times before, that killed its own leader, its own soldiers. Why should India extend support for a thankless crowd. The same Srilankan Tamils joined hands with Jeyavarthane and attacked Indian soldiers right? Why should we cry for them? Is the Indian Govt a servant maid for these thankless bunch of traitors?

    The same Peyarili once wrote in his blog that he hates India and he would never visit India and he never wants any help from India, why such an India basher now wants sympathy and support from the same India that he and his people hate that much.

    In my opinion India should not poke its nose in Srilankan affairs, It is their own internal problem, let them solve it. At the best India can help Srilankan army in quelling the terrorist Tigers that will be good for India too.

    ReplyDelete
  29. Anonymous:

    நான் எந்த பயங்கரவாதத்தையும் எப்பொழுதும் ஆதரித்ததில்லை. எந்த ஓர் உயிரும் மற்றோர் உயிருக்குக் குறைவானது என்று சொன்னதில்லை.

    நீங்கள் குறிப்பிடும் பெஸ்லான், லண்டன் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே.

    பெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்
    நியூ யார்க், மேட்ரிட், லண்டன்

    1. தீவிரவாத இயக்கங்கள் குழந்தைகளைக் கொன்றால் சரி; அரசு கொன்றால் சரியல்ல என்று நான் சொல்லவில்லை.
    2. பொதுவாக அரசுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக நடக்கும் செயல்கள் பரவலாக அனைவருக்கும் சென்று சேர்கிறது. ஆனால் அரசு கட்டவிழ்த்துவிடும் வன்முறை வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது. அதுவும் வெளியே தெரியவேண்டும் என்பதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும்.
    3. நான் விடுதலைப் புலிகள் ஆதரவாளன் கிடையாது. அவர்களது பல செயல்கள் இன்று ஈழத்தமிழ் மக்களுக்குக் கெடுதலை விளைவித்துள்ளது என்று நான் நினைக்கிறேன்; அவற்றைப் பற்றி எழுதவும் செய்திருக்கிறேன்.
    4. இந்தக் கடிதத்தின் நோக்கம் - இலங்கை அரசு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடும் வன்முறை இந்திய அரசியல்வாதிகளுக்குத் தெரியவேண்டும் என்பதே. இந்திய அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்தாலும் (அல்லது செய்யாவிட்டாலும்) முழுவதுமாகத் தெரிந்துவிடுகிறது. நேற்றைய அனுராதபுரம் பேருந்து வெடிப்பு பற்றி விளக்கமாக அத்தனை செய்தித் தொலைக்காட்சிகளிலும் வந்துவிட்டது. ஆனால் இன்னமும் வெங்காலை, அல்லைப்பிட்டி போன்றவை பற்றி ஒரு செய்திகூடக் கிடையாது.
    5. இந்தியா யார் பக்கம் சேரவேண்டும், சேரக்கூடாது ஆகியவை பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. இலங்கை ராணுவம் அப்பாவி மக்கள்மீது நிகழ்த்தும் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கவேண்டும் என்றுமட்டும்தான் சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  30. To the anony who wrote the earlier note..

    I agree completely.

    LTTE wants the war desperately now. That is why they indirectly defeated the peace candidate and supported indirectly this Rajapakse. This means that they know the war will be started but they wanted to show the world that they are victims in this war. That is why this outrage is staged and the Tamil community is prodded like this to show that the entire tamil community is outraged. That is why the photos such as this is propagated with out any iota of shame or respect for the dead. So they got already a few people who would accuse the SLA and try to get the maximum mileage out of this.
    This is so obvious to a fault. Even an imbecile with iota of brain would know that this is LTTE game to get the victimhood on its head. And this will help when it goes and kills 60 civilians in sinhalese area which would be termed as revenge killing. Did these same people make the same kind of accusation against LTTE when they killed 60 civilians in Sinhalese area? Are not you guys claim that LTTE is more or less a state? Does not make its work as state terrorism? When needed, you guys claim Eelam is more or less separate state. When needed same guys claim, that LTTE is an organization!

    There are few idiots who would claim that LTTE is playing a strategic game in making the Rajapakse elected. Let us say for an argument this is done by SLA (which it is not), even then is this not because of the LTTE making the Rajapakse elected?

    Shame on you people.

    ReplyDelete
  31. அன்புள்ள பத்ரி,
    உங்கள் முயற்சியின் பிரதிபலிப்புகள் ஏதாவது இருந்தால் அறியத் தரலாமே.

    வங்காலையிலும், அல்லைப் பிட்டியிலும் நடந்த தமிழர்கள் மேலான படுகொலை யார் செய்தது என்ற வாதம் இங்கில்லை. இப்படியான படுகொலைகள் நடப்பதைத் தடுக்க தமிழர் முன்வரவேண்டும் என்பதே அறை கூவல்.

    ReplyDelete