தில்லியைச் சேர்ந்த ஜாக்சன் ஏர்லைன்ஸ் (Jagson Airlines) புதுச்சேரியிலிருந்து சென்னை, திருப்பதி, பெங்களூருக்கு சிறு விமானச் சேவையைத் தொடங்க உள்ளனர். 18 இருக்கைகள் கொண்ட Dornier 228 விமானம் இந்தச் சேவைக்குப் பயன்படுமாம்.
இதில் 50% இருக்கைகள் - 9 இடங்கள் - புதுச்சேரி அரசே எடுத்துக்கொள்ளும் - தன் உபயோகத்துக்கு அல்லது பிறருக்கு விற்க. இதன்மூலம் குறைந்தது 50% இடங்களையாவது விற்பனை செய்யலாம் என்ற உத்தரவாதத்துடன்தான் ஜாக்சன் இந்தச் சேவையைத் தொடங்குகிறது.
இப்பொழுது சென்னை - புதுச்சேரி ஒருவழிப் பயணத்துக்கு ரூ. 1,721 என்று ஜாக்சன் நிர்ணயித்திருப்பதாகவும் அதனை புதுச்சேரி அரசு ரூ. 1,000க்குக் குறைக்க விரும்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்பான செய்திகள்:
The Hindu: Flight from Pondy likely on June 14
New Indian Express: Flights from Pondicherry postponed
மனநோய்…
5 hours ago
பரவாயில்லையே! அவ்வளவு அதிகமாக தெரியவில்லை.
ReplyDeleteஇந்த சேவையை பாண்டியில் இருந்து சென்னை வருவதற்கு உபயோகப்படுத்துவேன்.
சமீபத்தில் சென்னை to பாண்டி போக 4 மணி நேரம் ஆனது அதுவே திரும்பும் போது 6 மணிக்கு மேல் ஆகிவிட்டது.