Monday, June 16, 2008

பட்டாம்பூச்சியின் படபடக்கும் இறக்கைகள்

ஸ்ரீதர் நாராயணன் எனது தசாவதாரம் பற்றிய பதிவில், பதிவைவிடச் சிறப்பான பின்னூட்டம் ஒன்றைப் பதிந்திருக்கிறார். தசாவதாரம் படத்தில் கேயாஸ் தியரி அடிப்படை சொல்லப்படுகிறது என்பது ஒன்று. அடுத்து தசாவதாரத்தின் ஒவ்வோர் அவதாரத்துக்கும் நெருக்கமான ஓர் அவதாரத்தை படத்தில் காண்பிக்கமுடியும் என்பது இரண்டாவது. ஸ்ரீதரின் தியரியை அங்கேயே சென்று படித்துவிடுங்கள்.

உண்மையில் தசாவதாரத்துக்கு நெருக்கமான பாத்திரங்களைச் செய்வதாக இருந்தால் கதையில் வேண்டிய மாற்றங்களை அழகாகச் செய்திருக்கலாம். இரண்டு, மூன்று ஆண்டுகளாக எடுத்த படம் இது. ஜார்ஜ் புஷ் என்ன அவதாரம் என்று ஸ்ரீதர் சொல்லவில்லை. ஒருவேளை வட இந்தியர்கள் புத்தரை ஓர் அவதாரம் என்று சொல்வதைப்போல புஷ் அவதாரத்தை புத்தர் அவதாரமாகக் கருதலாமோ:-) அல்லது உலகை ஒருவழியாக அழிக்க, ஆங்காங்கே அணுகுண்டைப் போடலாம் என்று கருத்து சொல்வதால் இவரும், ஃபிளெட்சரும் சேர்ந்து கல்கி அவதாரத்தில் பாதிப் பாதி என்று சொல்லலாமோ?

கேயாஸ் தியரி இன்று எங்கோ அறிவியலில் ஆரம்பித்து அரைகுறை சூடோ சயன்ஸ் விஷயம்வரை வந்தாயிற்று. டான்சிங் வு லி மாஸ்டர்ஸ், டாவோ ஆஃப் பிசிக்ஸ் மாதிரிதான் இது என்பது எனது தாழ்மையான கருத்து.

படபடக்கும் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் எங்கோ, வேறு எங்கோ ஓர் உலகில் நிகழ்வுகளை மாற்றக்கூடும் என்பது பேச்சுக்கு, சுவாரஸ்யத்துக்கு நன்றாக இருக்கும். ஒரு மூடிய நேரிலா சிஸ்டத்தில் தொடக்க நிலையில் ஏற்படும் மிகச்சிறு மாற்றங்கள்கூட நேரம் கடக்க கடக்க, பெரும் மாற்றங்களை உண்டாக்கும் என்பது கண்டறியப்பட்ட உண்மைதான். இதனை மனித நிலைப்பாடுகளுக்கும் இயக்கங்களுக்கும் மாற்றிப் பார்ப்பது மனிதனின் அடங்காத கற்பனை வளம்தானேயன்றி வேறொன்றுமில்லை.

11-12ம் நூற்றாண்டில் எறியப்பட்ட சிறு கல்துண்டு, டெக்டானிக் தகடுகள் உரசுவதை அதிகமாக்கி சுனாமியாக மாற்றக்கூடுமா? சுனாமி நிகழ்ந்தது இந்தோனேசியா அருகில் டெக்டானிக் தகடுகள் உரசியதால். சிதம்பரத்தில் எறிந்த கல் சிலை இந்தோனேசியா போய், தகட்டு இடைவெளியில் மாட்டி, உரசலை அதிகமாக்கி (அப்பொது நசுங்கிச் சேதமடைந்திருக்காதோ?) சுனாமியின்போது சிறிதும் சேதமடையாமல் இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்டு, மீண்டும் இந்தியக் கடற்கரைக்கே வந்து சேர்ந்தது என்பது நம்பத்தகுந்த கற்பனையாகத் தோன்றவில்லை.

கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொள்ளுமாறு பட்டாம்பூச்சியை கிராபிக்ஸில் பறக்கவிட்டார்களேதவிர, மேற்கொண்டு செல்லவில்லை. கோவிந்தராஜர் மூலவர் சிலையைக் கடலில் எறிந்ததால், தொடர்ந்த சரித்திர நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு, அதனால் கோவிந்த் என்பவர் பிறந்து, அமெரிக்கா சென்று, கொல்லுயிரி ஒன்றைக் கண்டுபிடித்து, அதனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடப்பதாகக் காட்டியிருந்தால், கேயாஸ் தியரியை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கலாம்.

ஆனால் இங்கே அந்த நூல் அவ்வளவு சரியாக வரவில்லை.

ஏதோ, கேயாஸ் தியரி பற்றி பேசுவதற்காவது வாய்ப்பு கொடுத்தார்கள் என்று சந்தோஷப்படுவோம்.

10 comments:

  1. //நம்பத்தகுந்த கற்பனையாகத் //

    Oxymoron? :-)

    இன்னமும் சிறப்பாக சிம்பிளாக செய்திருக்கலாம்தான்.

    ReplyDelete
  2. http://www.hindu.com/2008/06/16/stories/2008061659811000.htm

    what is your view on this ?

    NITs (RECs) used to have students from most of the Indian states including people from North East etc resulting in sort of some national integration.

    will this new criteria result in only few state students getting into top tier NITs while the low score (even that will be in 90% or more) students getting into Silchar etc ?

    - Suresh

    ReplyDelete
  3. காப்ரா தன் பல கருத்துக்களை பிறகு மாற்றிக்கொண்டார். காப்ராவுக்கும் கென் வில்பருக்கும் நடந்த நீண்ட விவாதம் pseudo-science குறித்தும் new-age குறித்தும் பல தெளிவுகளை ஏற்படுத்தியது.

    pseudo-science ஒரு வகை 'reductionism'. mysticism உட்பட எல்லாவற்றையும் இயற்பியலின் மூலம் விளக்க முற்பட்டு அனைத்தயும் ‘Matter'ஆக சுருக்குகிறது.

    அதே போல் new-age ஒரு வகை ‘elevationism'. இயற்பியல் உட்பட அனைத்தையும் கடவுள் காரணிகளால் விளக்க முற்பட்டு அனைத்தயும் 'elevate' செய்கிறது.

    உளவியலிலும் இதே போல் - Freud முதல் வகை என்றால் Jung இரண்டாம் வகை. Lacan முதல் வகை என்றால் Viktor Frankl இரண்டாம் வகை.

    மற்றபடி கமலின் இந்த மாதிரி பல கருத்துக்கள் எனக்கு உவப்பானவை அல்ல. அதே போல் ‘சிதம்பரத்தில் எறிந்த கல் சிலை இந்தோனேசியா போய், தகட்டு இடைவெளியில் மாட்டி, உரசலை அதிகமாக்கி....' போன்றவையும்.

    ReplyDelete
  4. ஸ்ரீதர்: கற்பனைகூட நம்பத்தகுந்ததாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகள் படம், அல்லது புருடா என்று அழைக்கப்படும்:)

    பராகா (சரியான உச்சரிப்பா?): pseudo-science, new-age பற்றி நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். உங்களது பதிவு பக்கம் போய்ப் பார்த்தேன். அதிகமாக ஒன்றும் எழுதவில்லையே?

    காப்ரா விஷயம் என்னவென்றால், அவர் தனது கருத்துகளை மாற்றிக்கொண்டாலும், அவரது பழைய புத்தகங்கள் இன்னமும் விற்பனையாகின்றனவே? அதற்கு மேலும், Code Name God போன்ற புத்தகங்களும் வந்து நம் கழுத்தை அறுக்கின்றனவே? அதுதான் பிரச்னை.

    இதற்காகவே காத்திருக்கும் பலரும் இதான், இந்த குவாண்டம் மெக்கானிக்ஸ்தான் நமது வேதத்தில்/குரானில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்கள் (பார்க்க: ஜெயமோகனின் பதிவு) என்று குதிப்பது தாங்கமுடியாமல் இருக்கிறது.

    ReplyDelete
  5. இந்த வகை reductionism /elevationism எல்லா இடங்களிலும் உள்ளது. Code Name God, Tao of Physics, Dancing WuLi Masters எல்லாம் ஒரு பக்கம் என்றால், ராமச்சந்திரனின் ‘Phantoms in the Brain', Steven Pinkerன் ‘How the Mind Works', Dawkinsன் ‘The God Delusion' போன்றவை மறு எல்லை.

    பத்தாங் கிளாஸ் போர்டு எக்ஸாமுக்கு பிறகு இப்பொழுது தான் தமிழில் (திணறத் திணற) எழுத ஆரம்பித்துள்ளேன். கென் வில்பர் குறித்து ஒரு அறிமுக பதிவை எழுதிக் கொண்டு இருக்கிறேன். தமிழில் கலைச்சொற்கள் தெரியாமல் அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். Reductionism, Elevationism என்பதற்கு தமிழில் என்ன? கலைச் சொற்களின் தொகுப்பு எங்காவது இணையத்தில் உள்ளதா? அதே போல் ஒரு நல்ல இணையத் தமிழ்-ஆங்கில அகராதியும் எதுவென்று சொன்னால் மிக உதவியாக இருக்கும்.

    ஜெயமோகனின் அந்தக் கட்டுரை நீங்கள் சொன்ன WuLi Masters, Tao of Physics போன்றவற்றை கிண்டல் செய்வதாகவே / அங்கதமாகவே எனக்குப் படுகிறது. நகைச்சுவை என்றே 'Tag' செய்துள்ளார்!

    பராகா ஒரு Sufi Word. Blessing, Breath என்று பல அர்த்தங்கள். நான் அந்த பெயரை ‘Baraka' என்ற படத்தை பார்த்த பின் வைத்துக்கொண்டேன். அது ஒரு non-verbal படம். சினிமா பாரடெஸோவில் கிடைக்கும். அவசியம் வாங்கிப் பாருங்கள்.

    ReplyDelete
  6. நான் சொல்லவருவது - இது வெறும் அரைவேக்காட்டுதனமான ஒரு ஆக்கம் என்று சொல்ல விழையும் விமர்சகர்கள் இதனுடைய larger canvas-ஐ பார்த்தார்களா என்று தெரியவில்லை.

    ஒரு மதத்தின் புராணமாக சொல்லப்படும் பத்து அவதாரங்களை பல்வேறு மதங்களின் பாத்திரங்களுடன் தொடர்பு படுத்துவது.

    சில இடங்களில் நேர் எதிரான ஒரு காட்சியமைப்பின் மூலம் ஒரு விசயத்தை சொல்லவருவது (கபிபுல்லா கான் மசூதிக்கு நிலம் தானம் தந்ததாக சொல்லும் காட்சி).

    இறுதியில் 'கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்' என்ற கேள்வியினால் நமக்குள் இன்னமும் சில கேள்விகளை தூண்டுவது.

    பல்வேறு மொழிகளையும், மதங்களையும் இணைத்து தெளிவாகவே கொண்டு சென்றிருப்பது (ஹே ராம் போன்ற படங்களின் பாடமாக இருக்கலாம்). இதில் சந்தைப் படுத்துதலுக்கான ஒரு கட்டாயமும் ஒளிந்திருந்தாலும் (தமிழில் வரும் பல்ராம் நாயுடு தெலுங்கு வெர்ஷனில் பல்ராம் நாடார்-ஆக வருவார்) இதை எல்லாம் சிறப்பாக செய்ய மிகுந்த சிரத்தைகள் மேற் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

    ஒரு சில தமிழ் வழக்கங்களையே ஸ்டிரியோடைப்பாக கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் கன்யாக்குமரி தமிழ் பேசுவது போல் முயற்சிகள் செய்வது.

    chaos theory வழியில் கதை சொல்வது. ஷியாமளனின் signs போல் வரவில்லை என்றாலும் ஓரளவிற்க்கு வெற்றி பெற்ற முயற்சி என்றுதான் கொள்ள வேண்டும். (இது சுனாமி பற்றிய அறிவியல் ஆவணப்படம் அல்ல என்பது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.)

    இப்படி இதனுள் நிறைய ரசிக்கத்தக்க விசயங்கள் ஒளிந்துதான் இருக்கின்றன. இவைகளை அடையாளம் கண்டுகொண்ட பின்னர் இது 'ஆபத்தான் நுண்ணரசியல் கொண்ட படம்' என்றோ 'குருவி பார்ட்-2' என்றோ சொன்னால் ஓரளவுக்கு நியாயமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  7. Sridhar:

    A movie can aspire to work on multiple levels, but fundamentally it must operate at one main level - as a movie. Which means it has to be an interesting story that is well-told. To me D10 fails at this basic level because of its fundamental lack of tonal consistency. The movie is so poorly written that it cannot make up its mind for the entire middle two hours as to whether it is a drama or a comedy. I cannot think that the horribly written Asin character, the untimely (supposed) comedic lines, the ridiculously distracting make-ups of Kamal etc. are merely minor execution flaws of a deeply conceptual movie. Nor are they mere commercial compromises. They are but efforts of a limited film-making mind that is principally on a round the world ego trip.

    Also, the more I think about it, the more it seems that the use of a massive real tragedy as a plot device for this excuse of a concept is a terribly vulgar exercise. And right in the shadow of the tragedy, Asin and Kamal start romancing, and 2 minutes later, the revelry song of Ulaganayagane starts playing. Horrible!

    ReplyDelete
  8. Srikanth,

    I am not supporting the movie or trying to establish that its one of the best. Its a out-and-out commercial venture with many compromises.

    Some of the reviews ridiculed the movie as a flawed storyline. All I wanted is to invite people to see deep into it before outright bashing. Surely the screenplay deserves much credit.

    I really can understand the later part of your views. The Tsunami thing should have been handled more sensibly.

    ReplyDelete
  9. பட்டாம்பூச்சி பறப்பதால் சூனாமி உருவாகிறது, பட்டாம்பூச்சி பறப்பதால் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் கூடுகிறது என்றெல்லாம் சொல்கிறார்களே, அந்தப் பாழாய்ப்போன பட்டாம்பூச்சி எங்கே தான் பறந்துத் தொலைக்கிறது?

    அதையெல்லாம் ஏன் கருவிலேயே அழித்து பட்டுநூலாக மாற்றி நாம் ஆடை நெய்து அணிந்து கொள்ளக்கூடாது?

    :D

    ReplyDelete
  10. After reading your review and several others, with great misgivings and very low expectation we as a family watched dasavataram.
    Essentially the movie worked. Among the 4 of us who went together, only i knew Tamil. Other 3 were brought up on a solid diet of bollywood with almost no idea of Tamil. All of us not only sat through the movie comfortably, couple of us actually managed to enjoy it.

    As i was thinking about your review, i realised where the gaps were
    Firtly, movies are meant to tell a story. Even if the story has several holes, as long as there is a flow, and people dervive entertainment (or any other value) out of it, it makes the cut.
    Secondly, I am sure you and me can debate Ramayanam and Mahabharatam and find lots of holes and conclude that it is a lousy plot in it. Can anyone believe that Yudhistra can gamble twice to the same group and lose everything. How can anybody believe such a yarn. Most still hail Mahabharatam as a great epic !!
    Lastly, i agree that this story could have been made a super-duper movie (likes of Nayakan etc.,). Issue was excesses of everything which needed moderation. Too much Kamal, Too much blood, Too much make-up, Too many car chases, Too many fights, Too many co-incidences etc.,

    We missed a firm hand like Sangeetham Srinvasa Rao (or Director Sridhar) to keep Kamal in check. The person who should take the rap is Ravikumar, the director.

    Anyways, i dont feel cheated of the ticket price.

    ReplyDelete