- பிரபாகரன்: ஒரு வாழ்க்கை
- பிரபாகரன்: வாழ்வும் மரணமும்
- தேவி மகாத்மியம்
- விடுதலைப் புலிகள்
- 1857 சிப்பாய் புரட்சி
- ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ்
- அள்ள அள்ளப் பணம் 2
- அள்ள அள்ளப் பணம் 4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்
- இனிய தாம்பத்தியம்
- அள்ள அள்ளப் பணம் 1
- அள்ள அள்ளப் பணம் 3: ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்
- ஒபாமா, பராக்!
- ஆபிரஹாம் லிங்கன்: அடிமைகளின் சூரியன்
- மாயவலை
- ஹிட்லர்
- இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
- குழந்தைகள் சைக்காலஜி
- கால இயந்திரம்
- நான்,வித்யா
- ராஜிவ் கொலை வழக்கு
Saturday, January 02, 2010
2009-ன் இணைய டாப் 20 விற்பனை
நியூ ஹொரைஸன் மீடியா இணையத்தள விற்பனை மூலமாக 2009-ம் ஆண்டில் அதிகம் விற்பனையான நூல்கள் கீழே. இதில் “தேவி மகாத்மியம்” ஒருவர் கொத்தாக வாங்கியதால் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது. “ராஜிவ் கொலை வழக்கு” புத்தகம் ஆண்டில் இறுதியில் வந்ததால் கடைசியில்தான் உள்ளது. “மாயவலை” இணையத்தில் முன்வெளியீட்டுத் திட்டம் கொண்டுவந்ததால் 2009 ஜனவரியில் அதிக விற்பனை ஆகியிருந்தது. கடந்த ஆண்டு பங்குச் சந்தை கொஞ்சமாக முன்னேற ஆரம்பித்துள்ளது. இல்லாவிட்டால் ஸ்டாக் மார்க்கெட் புத்தகங்கள் முன்னிலையில் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
I am surprised with number 6 actually :)- நீங்களே ஆர்டர் பண்ணிட்டீங்களா ? :)-
ReplyDeleteஎனக்குமே ஆச்சரியம்தான். ஆனால் இந்தப் பிரச்னைக்கு நான் காரணமல்ல!
ReplyDeleteஇந்தப்பட்டியலில் உள்ள பல புத்தகங்கள் கிழக்கு புக்கிளப் திட்டத்தில் உள்ளது.அதன்விளைவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ReplyDeleteகோபாலன்: இருக்கலாம். அதன் காரணமாகக்கூட ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம் சற்றே அதிகமாக விற்பனையாகி இருக்கலாம். ஆனால் அ.அ.பணம் போன்றவை பொதுவாக தனியாகவே வாங்கப்படுகின்றன. முதல் 20-ஐப் போன்றே அடுத்த 20-ம் சுவாரசியமானவை.
ReplyDeleteஆன்லைன் அல்லாது, ஆஃப்லைனில் டாப் 10 (ஒவ்வொரு இம்ப்ரிண்டிலும்) என்ன என்று எஸ்டிமேட் செய்து அடுத்த வாரம் சேர்க்கிறேன். அதுதான் உண்மையான லிஸ்ட். நான் வேறு ஓர் இடத்தில் சொன்னதுபோல இணையத்தில் நடக்கும் வியாபாரம் 2%-க்கு சற்று மேல். அவ்வளவே. எனவே அது எந்தவிதத்திலும் டிரெண்டைப் பிரதிபலிப்பது அல்ல.
Do you need a sherlock holmes to probe the mystrey behind the sales of book no. 6 :)
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஇந்திய அரசியல் சட்டம் சம்மந்தமாக புத்தகம் (தமிழில்) வெளியிடும் எண்ணம் ஏதேனும் உங்களுக்கு இருக்கிறதா?
எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவருடன் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது மக்களுக்கு (படித்தவர்கள் உட்பட) இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றிய ஞானம் போதிய அளவு இல்லாததால் அதனைப் பயன்படுத்தி வழக்கறிஞர்கள் எவ்வாறு சம்பாதிக்கின்றனர் என்று வருத்தப்பட்டார்.
சட்டத்துறை சம்மந்தப்பட்ட புத்தகங்கள் மாநில மொழிகளில் வெளிவந்தால்தான் பெரும்பான்மையான மக்களுக்கு சட்டத்துறை சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படும் என்பது எனது கருத்து.
நான் வேதியியலில் ஆராய்ச்சி (Ph.D.) செய்து வருகிறேன். என்னுடன் ஆய்வு செய்யும் பலருக்கு ஹிந்தி தேசிய மொழி என்றே நம்பிக்கொண்டிருக்கின்றனர். நானும் சில வருடங்களுக்கு முன்பு வரை அவ்வாறுதான் நம்பிக்கொண்டிருந்தேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த பொதுமக்களின் புரிதல் அவ்வாறுதானிருக்கிறது.
இன்று எனது நண்பன் ஒருவனுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து (regarding Hindi as official language & not national language of India) விவாதத்தில் ஈடுபட்டபோது சட்டத்துறை புத்தகங்களை மற்றும் பத்திரிக்கைகள் வெளியிட இந்திய அரசு நிதியுதவி செய்கிறது என்பது தெரிந்தது.
http://lawmin.nic.in/olwing/achieve.htm#grants
நிதியுதவி பெற்று வெளியிடப்படும் புத்தகங்களின் வியாபாரம் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. சம்மந்தப்பட்ட துறையில் விசாரித்தால் மேற்கொண்டு விளக்கம் கிடைக்கலாம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது!
இன்னொரு விசயமும் கேட்க வேண்டுமென்று நினைத்திருந்தேன்..
ReplyDeleteஅரசியல்/அரசியல் தலைவர்கள் சம்மந்தமான புத்தகங்கள் கிழக்கில் நிறைய வெளிவருகின்றன! அறிவியலறிஞர்களின் (குறிப்பாக Nobel laureates இந்திய அறிவியலறிஞர்கள்) வாழ்க்கை வரலாறு குறித்து ஏதேனும் புத்தகம் வெளியிடும் எண்ணம் உள்ளதா? குறைந்த பட்சம் Prodigy மூலமாகவாது வெளியிடலாமே! மாணவர்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெறும்..