Friday, January 01, 2010

என் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்

சென்ற ஆண்டு நான் அம்ருதா இதழில் எழுதிய அனைத்து அறிவியல் கட்டுரைகளையும் ஒன்றாகச் சேர்த்து, ஒரு பி.டி.எஃப் கோப்பாக ஆக்கியுள்ளேன். இதனை யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இதனால் உங்களுக்கு ஏதேனும் பயன் உண்டு என்றால் மகிழ்ச்சி அடைவேன். இவற்றில் சிலவாவது பின்னர் ப்ராடிஜி வழியாக முழுப் புத்தகங்களாக ஆகும்.

Download Link

.

11 comments:

  1. மிக்க நன்றி, பத்ரி! பதிவிறக்கம் செய்துவிட்டேன். நேரம் கிடைக்கும் போது பிழைகளைச் சரிசெய்யவும் பக்க எண்ணைச் சேர்க்கவும் கேட்டுக் கொள்கிறேன். (ஓப்பன் ஆபீஸ்-ஐப் பயன்படுத்தியும் பி.டி.எஃப் கோப்பாக மாற்றலாம்)

    ReplyDelete
  2. Downloaded it, looking forward in book form.

    ReplyDelete
  3. நன்றி. இந்த வருடத்தின் முதல் டவுன்லோட் உங்கள் புத்தகம்தான். உருப்படியான விஷயத்தை டவுன்லோட் செய்தது சந்தோஷம்.
    -விபின்

    ReplyDelete
  4. Downloaded it and thank you

    ReplyDelete
  5. வணக்கமும் நன்றியும்.

    கலைஞர் தொலைக்காட்சியில் கிரிக்கெட் குறித்து நீங்கள் பேசியதை, புதிய ஜனநாயகம் கட்டுரை இரண்டையும் கேட்டு படித்த போது வாழ்வில் இத்தனை நாளும் ஏன் இந்த கிரிக்கெட்டை வெறுத்தோம் புறக்கணித்தோம் என்று நிணைக்கத் தோன்றுகிறது.

    தெளிவான, அழகான, தீர்க்கமான, உண்மையான, பாசாங்கு இல்லாத, உயர்வு நவிற்சியின்று, செல்லுக்கும் செயலுக்கும் வித்யாசம் இல்லாத உங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சமீப காலமாகத் தான் பாரா போல் உங்களையும் தொடர்ந்து கொண்டுருக்கின்றேன்.

    அதில் இந்த கோப்பு தரவிறக்கம் மொத்தமாய் உங்கள் மதிப்பை அதிகமாக்கியது.

    நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  6. ஜோதிஜி: நன்றி. ‘புதிய தலைமுறை’ என்பதை ‘புதிய ஜனநாயகம்’ என்று சொல்லிவிட்டீர்கள். ‘புதிய ஜனநாயக’த்துக்கு கட்டுரை எழுதும் அளவுக்கு நான் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் அல்ல:-)

    மற்றபடி கிரிக்கெட் என்னும் ஆட்டத்தைப் பற்றி இந்த ஆண்டு (2010) ஒரு புத்தகம் எழுதப்போகிறேன். ஏற்கெனவே அதற்கான கரு தமிழோவியம் இதழில் சில கட்டுரைகளாக வெளிவந்தன (சில ஆண்டுகளுக்கு முன்). கிரிக்கெட் ஆட்டத்தை எப்படிப் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதுதான் புத்தகத்தின் நோக்கம். இசையை எப்படி ரசிக்கிறோமோ, அதேபோல கிரிக்கெட்டையும் ரசிக்க, கொண்டாட சில வழிமுறைகள் உண்டு. தன் அணிக்காரன் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் எழுந்து நின்று கூத்தாடுவது அல்ல அது.

    ReplyDelete
  7. அன்பின் பத்ரி

    இரா.முருகனின் நண்பன் - ரெட்டைத்தெரு குறும்பட வெளியீட்டு விழாவில் மதுரையில் சந்தித்தோம். அருமையான தொகுப்பான, அம்ருதா இதழில் வெளியான கட்டுரைகள் - தரவிரக்கம் செய்து நுனிப்புல் மேய்ந்தேன் - அருமை அருமை - சந்திராயன் - இசைக் கருவிகள் - டி என் ஏ - என் 75 பக்கங்கள் - பொறுமையாகப் படிக்கிறேன்

    நன்றி பத்ரி
    நல்வாழ்த்துகள் பத்ரி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  8. நன்றி.. சேவை தொடரட்டும் ..தீவிர கிழக்கு வாசகன். மேலும் என் மாணவ்ர்கள் துவக்க கல்வியில் உங்கள் பிராடிஜியை படிக்க வைத்துள்ளேன்... நல்ல பயன் பெறுகின்றனர். புதுமையான திட்டங்கள் குழந்தைகளின் வாசிப்புக்கு வகுக்கவும். புத்தக கிளப் செயல்பாடு நல்லது. ஒவ்வொரு வருடமும் என் பள்ளியில் புத்தக கண்காட்சி மூலம் மாணவர்கள் புத்தக உலகம் குறித்து விழிப்புணர்வு பெறுகின்றனர். வாழ்த்துக்கள்

    ReplyDelete