Sunday, January 03, 2010

பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்

இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல மறந்தே போய்விட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் பேரா. கனகசபாபதி (அப்போது பி.எஸ்.ஜி நிர்வாகவியல் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டிருந்தார்; இப்போது கோவையில் உள்ள தமிழக நகரவியல் கல்வியகத்தின் இயக்குனராக இருக்கிறார்) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் குருமூர்த்தி, பண்டைய பாரதப் பொருளாதாரம் என்பது கேபிடலிசமும் கிடையாது; கம்யூனிசமும் கிடையாது என்ற பொருளில் பேசினார். கனகசபாபதியுடன் பேசும்போது அவர் பண்டைய இந்தியப் பொருளாதார முறைமைகள் பற்றி எழுதிய ஒரு புத்தகம் நிர்வாகவியல் கல்லூரிகளில் பாடப்புத்தகமாக இருக்கிறது என்ற தகவலைச் சொன்னார்.

அகடெமிக் ஆக இல்லாமல் பொதுமக்கள் படிக்கக்கூடிய வகையில் இதனை எளிதாக எழுதித்தர முடியுமா என்று அவரைக் கேட்டிருந்தேன். அடுத்த பல மாதங்கள் கழித்து அவர் ஒரு மேனுஸ்கிரிப்டை தைத்த நோட்டுப்புத்தகங்களில் எழுதி அனுப்பிவைத்தார். அதில் பல மாறுதல்களைச் செய்து அவருக்கு பி.டி.எஃப் கோப்பாக அனுப்பிவைத்தேன். மீண்டும் சில மாறுதல்கள். இறுதியாக புத்தக வடிவம் பெற்ற அது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்தியர்கள் பொதுவாக வரலாற்று ஆவணங்களை எழுதிவைப்பதில்லை. முகலாயர்கள் காலத்துக்குப் பிறகுதான் அழுத்தமான ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இப்போதுதான் ஆங்கிலேயர் காலம் தொடர்பான ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் (The Men Who Ruled India, P. Mason). நன்கு எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், ஆங்கிலேயர்கள் ஏதோ பராபகாரிகள் என்றும், முகலாயர்கள் மற்றும் பிற முட்டாள் ராஜாக்களின் கையில் மாட்டித் தவிக்கும் இந்தியர்களைக் காக்க வந்த புண்ணியவான்கள் என்றுமே சித்திரிக்கப்படுகிறார்கள். அந்தச் சித்திரமும் அவசியம்தான். ஆனால் மறுபக்கம், இந்தியா என்ற ஒரு ‘நிலப்பரப்பு’ (ராஜ்ஜியம், தேசம் என்ற வரம்புகளுக்குள் அடைபடாத ஒரு பகுதி இது) உலகின் முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்தவந்த ஒரு பகுதி, திடீரென எப்படி பிச்சைக்கார நாடாக ஆனது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அந்தக் கேள்விக்கு ஒருவிதத்தில் பதில் சொல்கிறார் பேரா. கனகசபாபதி. அத்துடன் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் என்ன என்பதைப் பற்றியும் அலசுகிறார்.

இந்துத்துவம், காலனியம், பின்காலனியம், கம்யூனிசம் போன்ற பல இசங்களின் பின்னணியில் இந்த நூலாசிரியர் சொல்வதை பலரும் ஆழ்ந்து விமர்சிக்கலாம். இதுவரையில் வலுவான விமர்சனங்கள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. கனகசபாபதி தினமலர் பத்திரிகையில் இதே தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அதற்கும் அதிகமான எதிர்வினைகள் வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வேகமாகவே புத்தகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட புத்தகம் என்பதால் இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இது நிர்வாகவியல் மாணவர்களுக்காக மட்டுமல்ல, பொதுவான வாசகர்களுக்குமான புத்தகம். எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தகமும்கூட.

இதனைத் தொடர்ந்து, பேரா. கனகசபாபதி அடுத்து சில நூல்கள் எழுதுவதில் இறங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்கள் எழுதுவதைவிட பொதுமக்களைச் சென்றடையும் தமிழ் நூல்களளை எழுதுவது மிகவும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் இவர். இதேபோல பிற அகடெமிக் பேராசிரியர்களும் வெகுஜன நூல்களை தமிழில் எழுத ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

[பின்குறிப்பு: இன்று ஒரு நாள் (ஞாயிறு) மட்டுமே, சென்னை புத்தகக் காட்சியில் இந்தப் புத்தகம் 100 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. அது ஒன்றே போதும், இதன் விற்பனை வேகத்தைச் சொல்ல!]

புத்தகத்தை வாங்க
.

11 comments:

  1. Happy to note that this book sold more nos
    and feel it will take swadeshi thoughts to the readers

    Thanks to both Badri and Kanagasabapathy ji

    ReplyDelete
  2. I think, it will be much sought after book. We need to take pride in our own heritage rather than try to ape the west and such books shall go a long way to develop pride in our culture and heritage.

    ReplyDelete
  3. Kodos to Prof.Dr.Kanagasabapathy for binging out such a wonderful book.
    K.Subhash Chandiran, Coimbatore - 35.

    ReplyDelete
  4. பெரும்பாலும் நம் நாட்டைப்பற்றி பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் கூட சற்று "மட்டமாகத்' தான் எழுதப்படுகிறது. பேரா.கனகசபாபதி அவர்களின் புத்தகம் இதற்கெல்லாம் மாறாக, நாம் பிறந்த தேசத்தின் பெருமையை வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது. அந்த இசம், இந்த இசம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நம் முன்னோர்களின் பெருமைகளை அறிய படிக்க வேண்டிய நூல் இது.

    ReplyDelete
  5. I bought this book (a total of 10 books) from Vellore showroom and asked my friend to bring it during his recent trip. Due to airline weight restrictions he chose and brought 7 out of 10 and left out are all important "India" related books. Bharatha Porulaathaaram, Uthirathaal oru kodu and the Guha's book! Looks like, we don't have any preference but the person who carry do!

    ReplyDelete
  6. Sir,

    I read another book of your publications (1857 puratchi), and it was such a wonderful one, that i want to buy it and present as a gift to atleast 10 persons..

    I am not in metro.. how can i purchase this book ?

    ReplyDelete
  7. அற்புதமாக தகவல் புத்தகம்.

    இதே போல் ஒவ்வொரு இனத்தைப்பற்றியும், தலைவரைப்பற்றியும் எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது. இன்றும் பல வந்து கொண்டே இருக்கிறது.

    ஆனால் இந்த தமிழினம், தமிழர்கள் குறித்து மொத்தமாக 3000 வருடங்கள் தொடங்கியது முதல் தமிழ்நாடு உருவான 1956 வரைக்கும் ஒரே பார்வையில் ஏறக்குறைய டாலர் தேசம் போல யாராவது எழுதி இருக்கிறார்களா?

    தொல்காப்பியம் தொடங்கி, படையெடுப்பாளர்கள், சேர சோழ பாண்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரைக்கும் கடைசியாக தென்னிந்தியா வரைக்கும் எந்த புத்தகத்திலும் நீங்கள் சொன்னது போல மக்கள் அத்தனை பேரும் பாதுகாக்கும் அளவிற்கு படிக்கும் அளவிற்கு, படைக்கப்பட வேண்டும்.

    தமிழர் சேதம்.

    ReplyDelete
  8. Right Angle: Please send your phone number by email to me - badri@nhm.in. I will have someone contact you and make the books available to you.

    ReplyDelete
  9. Congratulations Badri. I have read Subhas and Indhyia Pirivinai by Maruthan. Both are informative and very useful and i have recommended them to my students. What I like the most in your publicatin books is lucidity and simplicity in presentation. best wishes to you and author Maruthan. Maruthan is writing so much on western communist movements. Why not one on Indian communist Movement?

    ReplyDelete
  10. 'மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கோட்பாடுகளும், வழிமுறைகளும் தோற்றுப் போய், உலக நாடுகளுக்கே இந்தியா முன் மாதிரியாக உள்ள காலம் இது'

    இப்படி ஒருவர் எழுதினால் அவரது அறிவை நான் சந்தேகிப்பேன், ஏனெனில் இந்தியா/இந்தியப் பொருளாதாரக் கோட்பாடு என்று எதுவும் இல்லை, நடைமுறையில் இல்லை.ரிசர்வ் வங்கியும், அரசும் கடைப்பிடிப்பது ஏற்கனவே அறியப்பட்டு,செயல்படுத்தப்பட்டிருந்த பொருளாதாரக்
    கோட்பாடு மற்றும் வழிமுறைகளையே. மிகைப்படுத்தப்பட்ட வாக்கியங்கள் புத்தகத்தின் மீது நம்பிக்கையை வரவழைக்காது.கனகசபாபதி என்னென்ன எழுதியுள்ளார் அவை எங்கெல்லாம் பாட நூற்களாக உள்ளன என்பதையும் கொடுத்திருக்கலாம்.ஏனெனில் இந்தியாவில் சில பல்கலைகழகங்களில் பாடவதி நூற்கள் கூட பாடநூற்களாக இருக்கும். பொருளாதாரச் சரிவால் மேற்கத்திய நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் ஆனால் அவை அதலபாதாளத்திற்கு போய் விடவில்லை. இன்றைக்கும் சராசரி இந்தியரை விட சராசரி அமெரிக்கர் அல்லது சராசரி ஐரோப்பியர் மோசமான நிலையில் இல்லை. 1930களில் பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள் - இவற்றை சந்தித்த நாடுகள் அவை.அவை மீண்டெழுந்தன. இந்தியாவை விட அதிக வளர்ச்சியை தொடர்ந்து கொண்டிருப்பது சீனா.
    அது குறித்து நூலாசிரியர் என்ன சொல்கிறார்.

    ReplyDelete
  11. நான் சில மாதங்களுக்கு முன் பேரா.கனகசபாபதி அவர்களின் பேச்சை ஒரு கல்லூரியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அடைமழை பொழிந்தது போல் இரண்டு மணி நேரப் பேச்சு. அருமையான ஆணித்தரமான கருத்துக்கள்.

    இந்த புத்தகம் மூலமாக நாம் அனைவரும் பயனடைவோம்....

    ReplyDelete