Sunday, August 08, 2010

ஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீடியோ)

நேற்று மாலை, தக்கர் பாபா வித்யாலயா, வினோபா ஹாலில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

சுமார் ஒன்றரை மணி நேரம், தங்கு தடையின்றி, எந்தக் குறிப்புகளையும் எழுதிவைத்துக்கொள்ளாமல், தேதி, நேரம் உட்பட துல்லியமாகப் பேசினார். அரு. கருப்பன் செட்டியார் (ஏ.கே. செட்டியார்) என்பவரைப் பற்றிய ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைத்தது. அடுத்த ஆண்டு, இன்னும் விஸ்தாரமாக, ஏ.கே.செட்டியாரின் நூறாவது ஆண்டு நிறைவின்போது, அவரது குமரிமலர் இதழ்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவரது காந்தி ஆவணப்படம் ஆகியவற்றைக் கொண்டு இதே இடத்தில் ஒரு கண்காட்சியோடு மீண்டும் பேசுவதாகவும் உறுதி அளித்தார்.

வீடியோ படம் கீழே:



தரவிறக்கிக்கொள்ள
.

3 comments:

  1. நன்றி.

    காந்தியுடனான தொடர்புகள் பற்றி நிறைய எதிர்பார்த்தேன். ஆனாலும் அழகின் சிரிப்பு, கவிதா மண்டலம் பற்றி பேச ஆரம்பித்தால் செட்டியாரை தவிர்க்க முடியாது என்கிற விஷயம் ஆச்சர்யமாக இருந்தது.

    நல்ல கதை, கல்கி ஜோக். கம்ப நாடாரெல்லாம் செட்டியாரின் நகைச்சுவை உணர்வுக்கு நல்ல உதாரணம். வாத்தியார் கிட்ட மட்டும் பேசறது கஷ்டம் என்ற கமெண்ட் ரசிச்சு சிரிக்க வைத்தது.

    அரசியல்வாதிகள் கூட இவ்வளவு நேரம் செலவழித்ததில்லை. பொதுப்பணியில் பல நேரங்களை செலவழித்த செட்டியாரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது? அதையெல்லாம் எங்கே தெரிந்து கொள்ளலாம்?

    ReplyDelete
  2. "கம்ப நாடார் நூல் என்றால் நாடார் சமுகப் பத்திரிக்கை என்று நினைத்தேன்” என்று அவர் நினைவுக்கூர்ந்தது வேடிக்கை. அருமையான ஒருவரான ஏ.கே. செட்டியார் அவர்களை தெரிந்துக் கொள்ள வாய்ப்புக்கிடைத்திற்கு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவருக்கு மிக்க நன்றி. நிரல்படத்திற்கு உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. நன்றாக இருந்தது. ஒலி வடிவில் கொடுத்திருந்தால் எம் பி 3 யில் , டௌன் லோட் எளிதாகி இருக்கும்

    ReplyDelete