Wednesday, August 18, 2010

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் சிந்து சமவெளி ஆராய்ச்சிகள் தொடர்பான ஒரு மையம் உள்ளது. ஐராவதம் மகாதேவன் அதன் தலைவராக உள்ளார். அவ்வப்போது சிந்து சமவெளி தொடர்பாக சில சொற்பொழிவுகளை நடத்துகிறார்கள். கீழே அதுபோன்ற இரு சொற்பொழிவுகளுக்கான ஒளிப்படங்களை இணைத்துள்ளேன். (இரண்டு பேச்சுகளுமே ஆங்கிலத்தில் உள்ளன.)

முதலாவது ஃபின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்ப்போலா கொடுத்த உரை. ஜூன் மாதம் முதலாவது செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது அதில் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர் அஸ்கோ பர்ப்போலா. சிந்து சமவெளியின் மொழி திராவிட மொழிக்குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்பது இவரது கருதுகோள். இது தொடர்பாகவே இவரது கீநோட் பேச்சு செம்மொழி மாநாட்டில் இருந்தது. ஆனால் அந்த மாநாட்டில் மேடையில் விருதுகள் வழங்குவதுதான் முக்கியத்துவம் கொண்டதாக இருந்ததால் இவர் பேச அதிக நேரம் தரப்படவில்லை. நல்ல வேளையாக அதே பேச்சை மேலும் விரிவாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வழங்கினார். இந்தப் பேச்சைப் பின்பற்றிப் புரிந்துகொள்வது எளிதல்ல. ஆனால் சென்னையில் உள்ள மத்திய செம்மொழி ஆராய்ச்சி மையம், அஸ்கோ பர்ப்போலாவின் கோவை உரையை அச்சடித்து சிறு புத்தகமாக ஆக்கியுள்ளார்கள். அதில் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது. அதற்குப்பின் மீண்டும் இந்த வீடியோவைப் பார்த்தபோது சற்று அதிகமாகப் புரிந்தது. அந்தக் கையேடு பொதுவில் அனைவருக்கும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அஸ்கோ பர்ப்போலாவின் இணையத்தளம் எதிலாவது அந்த ஆராய்ச்சிக் கட்டுரை பி.டி.எஃப் கோப்பாகக் கிடைக்கலாம்.

சிந்து சமவெளி ஓடுகளில் காணப்படும் மீன் எதைக் குறிக்கிறது? முருகு அல்லது முருகன் என்பதை சிந்து சமவெளிச் சின்னங்களில் படிக்கமுடியுமா? சிந்து சமவெளி மக்கள் பேசியது தமிழ் மொழியா அல்லது தமிழுக்கும் சற்றே மூத்த புரோட்டோ-திராவிடமா?



தரவிறக்கிக்கொள்ள

***

ஆர்.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் ஆணையராகப் பணிபுரிபவர். தற்போது குறுகிய காலத்துக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனி ஒன்றின் கண்காணிப்பாளராக உள்ளார். அவர் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்ததாகச் சொல்லப்படும் இடங்களில் இப்போது புழங்கும் ஊர்ப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றை, சங்க இலக்கியப் பெயர்களுடன் ஒப்பிடுகிறார். அதில் கிடைக்கும் ஒற்றுமை வியப்பைத் தருகிறது. இந்த அளவுக்கான ஒற்றுமை எப்போது சாத்தியமாகிறது?

பாலகிருஷ்ணனின் கூற்று இதுதான். சங்க இலக்கியம் என்பது தமிழகத்தில் நடந்த வாழ்க்கையின் நேர்முக வர்ணனை மட்டும் அல்ல. சிந்து சமவெளி மக்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்து தமிழகம் வந்து குடியமர்ந்தபின், சிந்து சமவெளித் தொன்மங்களையும் தமிழக வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து உருவான வாய்மொழி இலக்கியமே சங்க இலக்கியமாக இருக்கவேண்டும்.

கருத்து சொல்வதற்குமுன் வீடியோவை முழுமையாகப் பார்த்துவிடுங்கள்.



தரவிறக்கிக்கொள்ள

7 comments:

  1. பத்ரி - /சிந்து சமவெளித் தொன்மங்களையும் தமிழக வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து/

    அஸ்கோ பர்ப்போலோவின் கட்டுரையிலும் இதைப் பற்றி ஆதாரமான குறிப்புகள் உள்ளன.

    கட்டுரை இங்கு(http://www.thehindu.com/news/states/tamil-nadu/article485028.ece) கிடைக்கிறது. (A Dravidian solution to Indus script problem).

    பல கட்டுரைகளை இங்கிருந்தும் பெறலாம் - http://www.thehindu.com/system/topicRoot/World_Classical_Tamil_Conferenc/

    நன்றி.

    ReplyDelete
  2. ஒவ்வொரு முறையும் நீங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கூட்டங்களை ரெக்கார்ட் செய்ய ஒரு tripod stand ல் கேமராவை வைத்துவிடலாமே. 2000 ரூபாய்க்கெல்லாம் நிச்சயமா நல்ல tripod கிடைக்கும்.

    ReplyDelete
  3. Anon: இப்போது எப்படி படம் எடுக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்? டிரைபாட் வைத்துத்தான்.

    ReplyDelete
  4. Please see my articles in my site karurtoday.com
    connections between indus civilization and sangam tamil civiliztation

    ReplyDelete
  5. தார் பாலைவனம் பற்றியும், விந்திய சாத்புரா மலைகளைப்பற்றியும் சிந்து சமவெளித் தமிழர்களுக்கு ஏன் தெரியவில்லை ?

    தமிழ் பேசும் அல்லது தமிழுக்கு மூதாதய மொழி பேசும் மக்கள் கூட்டம் சிந்து நதிக்கரை ஊர்களை காலிசெய்துகொண்டு தெற்கே வந்தார்கள் என்றால் மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் பேசப்படும் தார் பாலைவனத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை. பாலை நிலத்தையே அவர்களுக்கு விளக்கவேண்டிய நிலை ஏன் வருகிறது ?

    ReplyDelete
  6. I got Asko Parpola's document in PDF from one of my friend.

    ReplyDelete
  7. The research information presented by Mr. Balakrishnan is simply amazing. So many astonishing name matches between TN (or South India) and Pakistan (also North India) are unbelievable. I hope he published(/s) them in some journal so that we can read few times and understand them better (I was not able to see what was written on the slides).

    Hats off to an IAS officer of India to work meticulously on such unpopular Tamil projects. Whatever may be the conclusion of the findings, his knowledge, interest and commitment need to be applauded. Thanks Badri for making them available.

    S. Sankarapandi

    ReplyDelete