Tuesday, August 10, 2010

சீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்

எழுத்துகள் பற்றியான தொடரில் இந்த மாதம், 11-ம் தேதி (புதன் கிழமை, நாளை), மாலை 6.30 மணிக்கு, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில் பேராசிரியர் சுவாமிநாதன் சீன எழுத்துமுறை பற்றிப் பேசுகிறார்.

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வியாழன் அன்று நடக்கும் கூட்டம் இம்முறை மட்டும் இரண்டாம் புதன் அன்று நடக்க உள்ளது.

முதல் மூன்று மாதங்கள் நடந்த பேச்சுகளின் ஒளிப்பதிவை இங்கே காணலாம்.

1 comment:

  1. இரண்டு வருடம் ஜப்பானிய மொழியின் ஆரம்ப எழுத்துருக்களைப் படித்திருக்கிறேன். சீன மொழியும், ஜப்பானிய மொழியும் கடினமானதாக இருந்தாலும் அதன் ஓவியத் தன்மை மனத்தைக் கொள்ளை கொள்ளும். ஜப்பானியர்கள் சீன எழுத்து வடிவங்களை பெரும்பாலும் உள் வாங்கி இருப்பார்கள். 'காலச்சுவடு பதிப்பகம்' கூட சீன எழுத்து வடிவங்களைப் பற்றிய சிறு குறிப்புப் புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு முன்பு 50 ரூபாய்க்கு வாங்கிய ஞாபகம்.

    நீங்கள் பகிர்ந்துள்ள ஒளி ஓடை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பேராசிரியர் சுவாமிநாதனின் பேச்சுக்கள் அடங்கிய உரையைக் கேட்கிறேன். பகிர்விற்கு நன்றி பத்ரி... (பாராவின் பதிவினைப் படித்திருப்பதால் 'நல்ல பதிவு' என்று சொல்ல மாட்டேன். நபநப வின் ஒருபாதிகட்.)

    :-))))

    ReplyDelete