Thursday, August 04, 2005

திருப்பூர் முரண்பாடுகள்

அனைவருக்கும் வேலை கிடைக்கும். ஆனால் தினத்துக்கு 12 மணிநேரம் குறையாது வேலை செய்யவேண்டும். அவ்வப்போது அதற்கு மேலும் ஆகலாம். தேவைப்பட்டால் ஞாயிறும் வேலை இருக்கும். ஓவர்டைம் என்று எதுவும் கிடைக்குமா என்று தெரியாது. எல்லாமே ஒப்பந்தக் காரர்கள்தான். பி.எஃப் வசதிகள் கிடையாது.

பிற மாவட்டங்களில் பசிக்குத் திண்டாடுவது போல இருக்காது. எப்படியும் நாளொன்றுக்கு ரூ. 70-80 கிடைத்துவிடும். ஆனால் 45 வயதுக்கு மேல் உடலில் வலு இருக்காது. பஞ்சைச் சுவாசிப்பதால் நுரையீரல் கோளாறுகள். சாயப்பட்டறைகளில் வேலை செய்வோருக்கு கை, கால், உடல் முழுதும் தோல் பிரச்னைகள். ஊரிலோ நொய்யலாறு என்னும் கெமிக்கல் சாக்கடை.

கொசு, மோசமான சாலைகள், பார்க்கச் சகிக்காத ஊர். ஆனால் தமிழகத்தில் மிக அதிகமான பெர் கேபிடா வருமானம் கிடைக்கும் ஊர். 7,000-8,000 கோடி ரூபாய்கள் ஏற்றுமதி வருமானம். எங்கே போகிறது இத்தனைப் பணமும்? திருப்பூர் தொழிற்சாலை முதலாளிகள் எத்தனை வரி கட்டுகிறார்கள். வரி கட்டுகிறார்களா இல்லையா? வரி கட்டுவதாக இருந்தால் ஏன் சாலைகளின் நிலையைப் பற்றியோ நகரின் மோசமான நிலையைப் பற்றியோ சண்டை போடுவதில்லை? இல்லை, இந்தச் சீர்கேட்டுக்குக் காரணம் தாங்கள்தான் என்பதால் சத்தம் போடாமல் இருக்கிறார்களா?

தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் இவ்வளவு என்று ஒப்பந்தமிட்ட பின்னரும் அதைப் பின்பற்றுவதில்லை என்று கேள்விப்படுகிறேன். ஆனால் இடதுசாரிகள் ஏன் குரல் கொடுப்பதில்லை? இடதுசாரி தொழிற்சங்கங்களில் முக்கியப் பதவி வகிப்பவர்களின் உறவினர்களே தொழிற்சாலை சொந்தக்காரராக இருப்பது காரணமா? லஞ்சம் காரணமா?

சிவகாசியில் மட்டுமல்ல, திருப்பூரிலும்தான் குழந்தைகள் வேலைக்குச் செல்லக் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்று கேள்வி. சில மக்கள் நல அமைப்புகள் மாலை நேர வகுப்புகளை நடத்துகிறார்கள். அதற்குமேல் போனால் பெருமுதலாளிகள் கையைக் காலை உடைத்துவிடுவார்கள் என்று கேள்வி. ஊர் முழுக்க தேவைக்கு அதிகமாகவே சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த ஊரில்தான் மக்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பதில் சினிமாப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

திருப்பூரில் மத்தியதரக் குடும்பங்களே வெகு குறைவு என்று தோன்றுகிறது. முதலாளிகள், அவர்களுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள், இவர்களுக்கெல்லாம் வரியை ஏய்க்க சேமிக்க உதவும் ஆடிட்டர்கள். இவர்கள் உயர்மட்டத்தினர். இவர்களைத்தாண்டி சிறு கடைகள், வங்கிகளில் வேலை செய்பவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மட்டும்தான் மத்தியதரம். பஞ்சாலைகளிலும் சாயப்பட்டறைகளிலும் துணி தைப்பதிலும் வேலை செய்பவர்கள் அடிமட்டத்தினர்.

பக்கத்து மாவட்டங்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து கூட்டமாக இளம்வயதுப் பெண்கள் கொண்டுவரப்பட்டு கொட்டடியில் அடைக்காத குறையாக வேலை செய்ய சக்கையாகப் பிழியப் படுகிறார்கள். இவர்களுக்கான சம்பளம் இவர்களிடம் கொடுக்கப்படுகிறதா, இல்லை இவர்களது பெற்றோர்களுக்கு நேரடியாகச் செல்கிறதா என்று தெரியவில்லை. பெற்றோராலேயே சுரண்டப்படுவதை கார்ல் மார்க்ஸ் எப்படி வகுத்திருப்பார்? இந்தப் பெண்களுக்கு கல்யாணம் ஆகும்போது ஒரு தொகை தருவதாகச் சொல்லி மாதாமாதம் ஒரு தொகை முதலாளிகளால் சேமிக்கப்படுகிறதாம். ஐந்து வருடம் கழித்து மொத்தமாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை. ஆனால் ஐந்து வருடத்துக்கு முன்னாலேயே இவர்களை வேலையிலிருந்து தூக்கி அடித்து விட்டு வேறு சில ஏமாளிப் பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

முதலாளிகளின் சுரண்டலுக்கு unlimited supply of labour உதவுகிறது.

திருப்பூர் பற்றிய முழுமையான socio-economic ஆராய்ச்சி தேவை. ஏற்கெனவே ஏதேனும் இருக்கிறதா?

8 comments:

  1. ஷரத் சாரி திருப்பூர் குறித்து தன் முனைவர் பட்டத்திற்காக கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஆய்வு செய்தார். ம.விஜயபாஸ்கர் திருப்பூரின் நகர வளர்ச்சி குறித்து முனைவர் பட்டத்திற்காக திருவனந்தபுரம் சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடிஸில் ஆய்வு செய்தார். எம்.ஐ.டி.எஸ் ஸில் யாராவது ஆய்வு செய்திருக்கக் கூடும்.சுப்ரபாரதி மணியன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். நிச்சயம் ஆய்வுகள் இருக்கும். ஆனால் அதையெல்லாம் படிக்க வேண்டும் என்ற அக்கறை யாருக்கு இருக்கிறது. ஏதோ போனோமோ, கிடைத்த விருதினை வாங்கிக் கொண்டு கொடுத்தவர்களைப் பாராட்டி நாலு வார்த்தை சொன்னோமா என்ற மனோபாவம்தான் இங்கு எழுத்தாளர்களிடம் இருக்கிறது. கோவை ஞானியை தொடர்பு கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்.

    ReplyDelete
  2. Dr. Sharad Chari
    Title
    Lecturer in Human Geography

    Department
    Department of Geography and Environment

    Biography
    Dr. Chari did his Masters and PhD from the Department of Geography at the University of California, Berkeley. His PhD theses, completed in 2000, was entitled The Agrarian Question Comes to Town: making knitwear work in Tiruppur, South India. Following this, between 2000 and 2003, he was a Postdoctoral Fellow at the Michigan Society of Fellows with an Assistant Professorship in the Anthropology and History Departments. During this period, he completed a book published in 2004 called Fraternal Capital: peasant-workers, self-made men, and globalization in provincial India, co-published by Stanford University Press, and Pemanent Black Press, India. Fraternal Capital traces the dynamics of work, gender and power in rural and urban South India, where agrarian histories have been used to fashion a dynamic industrial boom town making garments for the global economy. Through an ethnographic historical geography, the book looks at the interplay of rural and urban, past and present, labour and capital, in remaking gender and class relations in the labour process.

    For the past two years, Dr. Chari has also been conducting research on two working class communities in the shadows of petrochemical refineries in the city of Durban in South Africa. This research traces local histories of work, politics, race, livelihood and belonging in South Africa before, during and after Apartheid, through the lives of "Indians" and "Coloureds" in the mixed industrial-residential landscape of South Durban. He asks how the livelihood struggles that pepper the post-Apartheid landscape speak to broader political economic and cultural questions emerging from South Africa's uncertain transition from an explicitly racialised capitalism, and how the racialised inequalities of the present are challenged in new ways.

    Research interests and areas of supervision
    Contemporary human geography
    Political economy and historical geography of capitalism
    Ethnographies of development
    Country and city
    Agrarian transitions and industrialization
    Work, labour and politics
    Gender and power
    Comparative racisms
    South Asia
    South Africa
    Postcoloniality
    Selected recent publications
    2004, Fraternal Capital: Peasant-Workers, Self-Made Men, and Globalization in Provincial India, Stanford University Press, Palo Alto, and Permanent Black, Delhi. "Capital as Toil: Peasant-Workers and the Agrarian Past in a South Indian Industrial Town" under revision for Comparative Studies in Society and History.

    2003, "Marxism, Sarcasm, Ethnography: Geographical Fieldnotes from South India", Singapore Journal of Tropical Geography, 24/2.

    2003, "The Vicissitudes of Marxism in 'Postmodern' Times", organizer and introducer of Review Symposium on Michael Hardt and Antonio Negri (1999) Empire, Antipode 35/1, January, pp.178-183.

    Contact details

    E-mail: s.chari@lse.ac.uk

    Phone: [44] (0)20 7107 5019

    Fax: [44] (0)20 7955 7412
    Room: S418, St Clements Building, LSE

    ReplyDelete
  3. பத்ரி,

    இந்த கொடுமைகளைத்தான் இந்தியாவின் "Labour Advantage" என்று உலக அரங்கில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு தற்போது கிடைக்கும் கூலிக்கும் ஆபத்து வருவதைப் போல சில தகவல்கள் வெளியாகின்றன. அதைப் பற்றி பின்பு எழுதுகிறேன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  4. M Vijayabaskar
    Assistant Professor
    Madras Institute of Development Studies
    79, Second Main Road, Gandhinagar,
    Adyar, Chennai - 600 020
    Tamil Nadu, INDIA.

    E-mail: baskarv@mids.ac.in

    Tel: 0091–44–24412589 / 24419771 Extn: 308
    Fax: 0091 – 44 – 24910872





    Ph D in Economics, Jawaharlal Nehru University, New Delhi (Centre for Development Studies, Thiruvananthapuram).



    Areas of Research:

    While my research concerns fall broadly in the realm of political and social economy, specifically I work on industrialisation processes, with emphasis on organisational forms, new technologies, labour processes and markets, as they are mediated by other social institutions.

    Select Publications:

    Labour under Flexible Accumulation: Case of Tiruppur Knitwear Cluster, in Das. K (ed.) (2005), Industrial Clusters: Cases and Perspectives, (Aldershot:Ashgate), forthcoming.

    Understanding Growth Dynamism and its Constraints in High-Technology Clusters in Developing Countries: A Study of Bangalore, Southern India, co-authored, in Mani S and H Romijn (eds.), Innovation, Learning and Technological Dynamism of Developing Countries, Tokyo: United Nations University Press, 2004.

    Human Development in Tamil Nadu: Examining Linkages, co-authored, Economic and Political Weekly, (34/8: 797-802), February 21, 2004.

    The Indian Garment Industry, (2002), in Garment Industry in South Asia- Rags or Riches? Competitiveness, productivity and job Quality in the post-MFA Environment, (Ed) Gopal Joshi, International Labour Organization (ILO): New Delhi.

    Labour in the New Economy: The Case of the Indian Software Labour Market, (2001), co-authored, Monograph, International Labour Organization (ILO): New Delhi.


    Current Research Work
    I am co-editing two books on ICTs and Socio-Economic Transformation in India. The first volume titled ICTs and Indian Economic Development: Economy, Work, Regulation is to be published by Sage, New Delhi by middle of 2005. I am also working towards publishing my doctoral work on “Industrial Formation under Conditions of Flexible Accumulation: The Case of a Global Knitwear Node in Southern India”.

    Since Janaury 2005, I am working on a collaborative pilot project with University of Bristol on the design of new institutional forms that emerge as the World Bank and subnational governments cooperate to deliver development outcomes. This research will use a comparative perspective to study the cases of urban infrastructure development funds in Tamil Nadu and Karnataka to explain the preference for semi-public bodies as agents of development. This pilot study may lead to a larger enquiry on the efficacy of public-private partnerships as organizational forms of public service delivery in the Indian context.

    ReplyDelete
  5. அனானிமஸ்: தகவல்களுக்கு நன்றி! மேற்படிப் புத்தகங்களைத் தேடுகிறேன். Permanent Black, Delhi பதிப்பு என்றால் இங்கு தாராளமாகக் கிடைக்கும். சுப்ரபாரதி மணியன் நாவல் உள்ளது.

    ReplyDelete
  6. Badri,
    you do excellent job about tirupur town. You give most impression about tirupur roads and kit industrial fellows.Native of Tirupur now in Chennai.

    ReplyDelete
  7. Badri,

    I have clients in Tirpur, when I used to visit there, I used to ask this same questions in my mind, espcially about the Road-tax-Banian Company Muthalalees.
    This question should made louder, and louder and it should reach the manufacturers of Tirpur.

    ReplyDelete
  8. எனக்கு என்ன தோணுதுன்னா, பெரும்பாலான முதலாளிகள் அதிகம் படிக்காதவர்கள். அவர்களுடைய குறிக்கோள் செல்வம் ஈட்டுவதே. யாரும், எதிர்காலத்தைப் பற்றியோ, கட்டமைப்பைப் பற்றியோ, சுற்றுச்சூழலைப் பற்றியோ அதிகம் சிந்திப்பதில்லை/கவலைப்படுவதில்லை.

    இல்லாவிட்டால் நொய்யல் ஆற்றை இப்படி சாக்கடை ஆக்கியிருப்பார்களா? நீதிமன்றங்கள் இறுதி எச்சரிக்கை விடுத்தும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் காலம் கடத்திவிட்டு, இப்பொழுது குதிக்கிறார்கள்.

    90களில் ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்ற மாதிரி தெரியவில்லை. இப்பொழுது மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் நீங்கியபின், திருப்பூருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால், எந்த அளவுக்கு பயன்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறிதான்.

    ReplyDelete