இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் இரு நாள்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் தொலைதூரத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பலரும் இந்தக் கொலை, இலங்கையை அமைதியிலிருந்து போருக்குக் கொண்டுசெல்லும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையில் போருக்கு முதல் கட்டமாகவே விடுதலைப்புலிகள் இந்தக் கொலையைச் செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. அதாவது புலிகள் போர் மூளும் என்று முடிவுசெய்து, போர் நடக்கும்போது இலங்கை அரசுத் தரப்பில் யார் உயிருடன் இருப்பது தமது நலனுக்கு அதிகக் கேடு விளைவிக்கும் என்று ஆராய்ந்து, முக்கிய எதிரியாக கதிர்காமரைக் கண்டறிந்து, அதற்காகவே அவரைக் கொன்றுள்ளனர்.
-*-
ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உறவு மோசமாக இருந்தது. சுனாமியை அடுத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இருவருக்கும் இடையே நிறையப் பிரச்னைகள் இருந்தன. இருவரும் இணைந்து நிவாரணத்தை மேற்கொள்ள கூட்டுக்குழு (Post-Tsunami Operational Management Structure - PTOMS) ஒன்றை நிர்மாணிக்கத் திட்டமிட்டனர். இப்படியொரு கூட்டுக்குழுவை ஏற்படுத்தாவிட்டால் இலங்கைக்கு வெளிநாட்டு நிதியுதவி கிடைக்காது என்ற நிலை. சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளைச் சமாளிக்க வெளிநாட்டு உதவி கிடைக்காவிட்டால் முடியாது என்பதால் கடைசியாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொள்ளவரும்போது, கூட்டணி அரசின் பங்குதாரரான இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுன அரசிலிருந்து விலகியது.
இலங்கையின் வலதுசாரிகளான புத்த பிட்சுக்களும் அவர்களது ஆதரவாளர்களும் எப்பொழுதுமே விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இருந்திருக்கின்றனர். அவர்களும் PTOMSஐ எதிர்த்தனர்.
ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் PTOMSஐ எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றமும் PTOMS ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்களை தாற்காலிகமாக முடக்கி வைத்தது.
ஒருபக்கத்தில் இலங்கை அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்கவேண்டிய கட்டாயம். அதாவது நாடாளுமன்றச் சிக்கல்கள் (கூட்டணி), நீதிமன்றச் சிக்கல்கள் ஆகியவற்றுக்குள்ளாக வேலை செய்யவேண்டும். மறுபக்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு இதுபோன்ற சிக்கல்கள் கிடையாது. அமைதிப் பேச்சுவார்த்தை நேரத்தில் அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம் ஆகியவை மூலம் சிக்கல்கள் வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.
விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் இணைந்து செயலாற்றுவது என்பது நடக்காத காரியம் என்று முடிவு செய்திருக்கவேண்டும். நார்வே முயற்சியில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தாங்கள் கேட்கும் எதுவுமே நடக்கப்போவதில்லை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. இயற்கைப் பேரழிவு ஏற்படுத்திய அசாதாரணச் சூழலில் கூட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குக் கூட்டுச்சேர்ந்து வேலை செய்வதே நடக்காத நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எப்பொழுதும் அமைதி கிடைக்கும் விதமாக ஏதேனும் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை. அப்படி ஏதேனும் உடன்பாடு எட்டப்பட்டாலும் அதை இலங்கை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இடதுசாரிகளும் வலதுசாரிகளும் விடுதலைப்புலிகளுடன் ஏற்படும் எந்தவிதமான ஒப்பந்தத்தையும் எதிர்ப்பார்கள் என்னும் நிலை.
இதையெல்லாம் மனத்தில்கொண்டு விடுதலைப்புலிகள் மீண்டும் தமக்கு எதைச் செய்தால் அதிகபட்சம் ஆதாயம் என்பதை முடிவெடுத்து லக்ஷ்மண் கதிர்காமர் கொலையை நிறைவேற்றி இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளின் மறுப்பு மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. இன்றுவரை ராஜீவ் காந்தி கொலையை அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. அதிகபட்சமாக துன்பியல் சம்பவம் என்றாவது பிரபாகரன் சொல்லியிருக்கிறார். ஆனால் புலி ஆதரவாளர்கள் கூற்று, சார்புநிலை அறிக்கைகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது கதிர்காமர் கொலை துன்பியல் சம்பவம் என்ற ரீதியில் கூட வருவதற்குச் சாத்தியமில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இது கொண்டாடக்கூடிய சம்பவமாகத்தான் இருக்கிறது.
புலிகள் செய்தார்களா இல்லையா என்பது இப்பொழுதைய கேள்வி இல்லை. புலிகள்தான் செய்தனர் என்பதற்கு ஒரு வழக்குமன்றத்தில் எடுபடக்கூடிய அளவுக்கு ஆதாரங்களைத் திரட்ட முடியாது. என்னதான் இருந்தாலும் கடைசியில் புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர் பிரபாகரன்தான் இதற்கான ஆணையை இட்டார் என்று ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. ஆனால் புலிகள்தான் செய்திருக்கவேண்டும் என்பதில் புலி ஆதரவாளர்களுக்குக் கூட ஐயமிருக்காது. அதற்கான முகாந்திரங்கள் புலிகளுக்கு மட்டும்தான் உள்ளது.
இப்பொழுதைய கேள்வி - இந்தக் கொலை எந்த விதத்தில் இரண்டு விஷயங்களைப் பாதிக்கும் என்பது:
1) அமைதிப் பேச்சுவார்த்தை
2) இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு
1) பிரபாகரன் இப்பொழுது நிகழும் அமைதிப் பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் இல்லை என்பதாக முடிவுகட்டிவிட்டார். விடுதலைப்புலிகளாக அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டதாக அறிவிக்கப் போவதில்லை. ஆனால் இலங்கை அரசுக்கு வரும் சில நாள்களில் தீராத தலைவலி தரும் சம்பவங்கள் நிகழும். இன்னும் சில முக்கியமான அரசியல்வாதிகள், மந்திரிகள் மீது கொலை முயற்சி நிகழலாம். இலங்கை ராணுவம் மீது சிறு சிறு தாக்குதல்கள் நிகழலாம். இலங்கை ராணுவமும் பதிலுக்கு தனது தாக்குதலை நிகழ்த்தலாம்.
இதனால் விடுதலைப்புலிகள் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் என்பதில்லை. குறைந்தது அடுத்த மூன்று நான்கு வருடங்களுக்குப் போர்ச்சூழல்தான் என்பதாக புலிகள் முடிவு எடுத்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. நார்வே முதலில் நடையைக் கட்டும்.
ஏற்கெனவே இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் மீண்டும் பரிசீலிக்கப் போவதாகச் சொல்லிவிட்டது. இடது, வலது சாரிகள் அரசை நெருக்கடி கொடுத்து மீண்டும் போருக்குத் தூண்டுவார்கள் என்று நினைக்கிறேன். முதலில் low intensity conflicts - ஆங்காங்கே சிறு சிறு மோதல்களுடன் ஆரம்பித்து பின் குறிப்பிட்ட இடங்களுக்காகக் கடுமையான போர் மூளலாம்.
2) பிரச்னைக்கான தீர்வு குறைந்தது ஐந்து வருடங்களாவது தள்ளிப்போடப்படும். இந்த நேரத்தில் இந்தியா இலங்கை அரசுக்கு எந்த வகையில் ஆதரவு தரும் என்பது முக்கியமாகப்படும். இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பது ஆயுத உதவிகளை. அதற்காகத்தான் இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை இலங்கை எதிர்பார்த்தது. இந்த ஒப்பந்தத்துக்கு முக்கிய காரணகர்த்தா கதிர்காமர். அமைதிப் பேச்சுவார்த்தை என்று நாள்கடத்துவதால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முழுதாக ஏற்பட்டுவிடலாம். இப்பொழுது வைகோ போன்ற சிலரது எதிர்ப்புகளாவது இருக்கும்பட்சத்தில் உடனடியாக கதிர்காமரைக் கொல்வதன் மூலமும் போரில் ஈடுபடுவதன் மூலமும், புலிகளால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
போர் ஆரம்பித்துவிட்டால் தமிழகத்தில் இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலமும் விடுதலைப்புலிகள் இலங்கை அரசை நிர்பந்தத்துக்கு ஆளாக்க நினைக்கிறார்கள்.
அதே நேரம், நடந்த கொலையைக் காரணம் காட்டி, இந்தியாவில் உள்ள புலி எதிர்ப்புச் சக்திகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் துரிதப்படுத்த எண்ணலாம். வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரையில் எந்த அளவுக்கு தமிழகக் கட்சிகளால் இந்திய அரசைக் கட்டுப்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. வைகோ நிச்சயம் இந்திய-இலங்கை ராணுவ ஒப்பந்தத்துக்கு எதிராக இருக்கிறார். பாமகவின் நிலைப்பாடு முக்கியமானது. திமுக வழவழா நிலை. அஇஅதிமுக ஒப்பந்தத்துக்கு ஆதரவு நிலை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இலங்கையில் மீண்டும் போர் நடந்தால் எந்த வகையில் அது இந்தியாவை பாதிக்கும் என்று பிரதமரின் ஆலோசகர்கள் நினைக்கிறார்கள் என்பது முக்கியம். இந்தியாவின் தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணன், முந்தைய ஆலோசகர் J.N.தீக்ஷித் அளவுக்கு hawkish ஆக இருக்கமாட்டார்.
எனக்கென்னவோ இரு நாடுகளுக்கும் இடையில் முழு ராணுவ உதவிக்கான ஒப்பந்தம் நடைபெறாது என்று தோன்றுகிறது. அதிகபட்சமாக இலங்கை அரசுக்கு மறைமுகமாக சில உதவிகளை இந்தியா செய்ய ஒப்புக்கொள்ளும் என்று தோன்றுகிறது.
இந்தியா தவிர்த்த பிற நாடுகள் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யும் என்று தோன்றவில்லை. போர் மூண்டால், பிற நாடுகள் இலங்கை அரசுக்கு வேறு வளர்ச்சிப் பணிகளுக்குக்கூட நிதி உதவி செய்யும் என்றும் எதிர்பார்க்கமுடியாது. கதிர்காமர் போன்ற அனுபவம் வாய்ந்தவர் போர் நேரத்தில் இலங்கை அரசுக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பார். எங்கிருந்தாவது விடுதலைப்புலிகளுக்கு உதவி வர வாய்ப்பிருக்கிறது என்றால் அந்த வழியை அடைக்க அவர்தான் முதலில் தூது சென்றிருப்பார். அதனால்தான் அவர் முதல் பலி ஆகியிருக்கிறார்.
-*-
இனி மூளும் போரில் யார் அதிகம் வெல்கிறார்கள், யார் அதிகம் இழக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது யாருக்கு யார் எவ்வளவு விட்டுக்கொடுக்க விரும்புகிறார்கள் என்று புரியவரும்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
இப்பொழுதைய கேள்வி - இந்தக் கொலை எந்த விதத்தில் இரண்டு விஷயங்களைப் பாதிக்கும் என்பது:
ReplyDelete1) அமைதிப் பேச்சுவார்த்தை
2) இலங்கைப் பிரச்னைக்கான தீர்வு
Itharkku Pin Kooriya Karuthu Sinthkka vaikkirathu AAAnal
Ithrkku Mun Kooriya karuthukkal Muttilum Ungalin Puli Meethu veruppai kaattuvathu pol ullathu.
I ACCUSE -
ReplyDeletethey killed Lakshman Kadiragamar
I am not speaking about the LTTE assassin whose bullet ended the life of one of the most decent, erudite and cultured men I have ever met. Nor am I speaking about Prabhakaran who sent this moron to take away the life of one of the proudest sons of the soil, because we know that he is the scum of the earth. What more can you expect from a man who personally executed his own body guard and his pregnant girl friend in cold blood for the heinous crime of falling in love with each other? As the English Tabloids would say he is a “Barbaric bastard”.
I am speaking about the people who facilitated or permitted the LTTE to kill this great man in cold blood. I accuse them because they are accomplices to this dastardly murder.
Peaceniks
Firstly, there are the peaceniks like Jehan Perera and the so-called National Peace Council, who have sought to justify every abduction, killing and ceasefire violation of the LTTE. Funded by foreign countries and drawing fat salaries, they seek to justify the indefensible. They have used their ill-gotten funds to sow confusion and wear down our defences against terrorism. They scream about the need to repeal the Prevention of Terrorism Act while keeping mum about the 300 murders, thousands of cease fire violations and hundreds of child abductions the LTTE has committed since the so-called ceasefire came into effect in February 2002. They have sought to prettify the ugly face of Prabhakaran’s barbarity. Jehan is not the only Lord Haw haw[1]. There are many others like Jehan, and as long as the gravy train from Norway and elsewhere keep lining their pockets, they will blame everybody but the LTTE for all the human rights violations in our country. Their stance makes them accomplices of this heinous crime.
The Norwegians
Peaceniks are only the fifth column of the Norwegians. The Norwegians are the vanguard of the imperialist strategy to use the creation of a separate Tamil state in Sri Lanka as a bridgehead to balkanise India. Helgerson and Solheim must now be dancing in joy celebrating the removal of one of the key obstacle to the achievement of their separatist dream. No doubt that their monitoring mission will find that there is no actual evidence that the LTTE killed Kadiragamar and issue another inane statement calling both parties to observe fees and warn us all of the danger of war ! The European Commission will warmly shake the bloodstained hands of the Norwegians and echo their banal exhortations.
Political leaders
Certain politicians in our own coun try – in the main Ranil Wickremasinghe and Chandrika Kumaratunga and their cohorts, have been the main facilitators of the LTTE’s orgy of killing. They have created the conditions that has enabled the LTTE death squads to operate unhindered anywhere and at anytime. In my opinion they too have blood on their hands.
Ranil opened the door to the assassins. He created the conditions for establishing LTTE cells in Colombo and elsewhere in the country. A mole in his government gave the LTTE the names and addresses of key members of the intelligence community and facilitated their assassination. His government permitted the movement of arms into government controlled areas. He sacrificed the lives of Tamils and Muslims who opposed the LTTE.
That was why the people kicked him out of power at the April 2004 elections.
Chandrika criticised the ceasefire agreement and promised to stop Ranil’s policy of appeasement of the LTTE. In fact she grabbed the Ministry of Defence from the UNP in November 2003 precisely because she claimed that Ranil was endangering national security by appeasing the LTTE.
Post April 2004 volte face
However, no sooner had she won the elections in April 2004, she made a 180 degree turn. First there was the murky business of the Sri Lankan security forces being ordered to let armed LTTE cadres to come from the North to the East to attack Karuna. Contrary to the LTTE propaganda, Colonel Karuna did not ask or obtain any help from the Sri Lankan government or the army. But he told the government to stick to the Ceasefire Agreement and stop armed LTTE cadres crossing over to the East via the government controlled areas. Ignoring the advice of seasoned observers of the LTTE, she relied on her “new found friends” who deceived her into believing that the LTTE puppets of the TNA would not vote for the UNP nominee when the Parliament meets to elects its Speaker. Relying on such bogus ‘promises’, armed LTTE cadres were let in to the East and Karuna and his cadres were betrayed. Subsequently an attempt was made to belittle Karuna and his movement.
Sachi Master
Then came the sad business of Sachi Master. Arrested by the police because some arms were found in his vehicle, he was remanded in custody in Batticaloa. Sachi was a Karuna supporter and the government was warned that he could be assassinated. Initially false information was given about the possibility of getting him released on bail at the Magistrates Court hearing. In fact only the Court of Appeal could grant him bail. The Court of Appeal hearing was likely to take months. A top army official and the head of state were repeatedly warned about the possibility of Sachi Master being killed by the LTTE whilst in prison. They assure that he would be safe. The least the authorities could have done was to transfer him to safer area. But nothing was done and as predicted he was assassinated in jail
Discontinuing the TBC programme
In March 2004, the London based Thamil Broadcasting Coirporation(TBC) entered into an agreement with the Sri Lanka Broadcasting Corporation to relay one hour of their programmes to Sri Lanka. The TBC is the only radio station not controlled by the LTTE. On the other hand, the LTTE controls several radio and television stations, web sites, newspapers and magazines. The TBC programme was an instant hit among ordinary Tamils because unlike the same dull drivel churned out by the LTTE media, the TBC provided an informed and a balanced analysis and it was both interesting and entertaining. The LTTE demanded that the SLBC must cease relaying the TBC programme. No sooner has the LTTE made this ridiculous demand, Chandrika caved in. Many people in Sri Lanka, for years, had criticised the partial and one sided broadcasts relayed through the SLBC by the BBC Sinhala and Tamil services. But the government never stopped their programmes. The spineless response of Chandrika only made the LTTE even bolder.
The killing spree
Encouraged by this appeasement, the LTTE escalated their campaign of assassination of Tamil political activists who did not support them. Chandrika turned a blind eye and let the LTTE have a free rein. In fact when a suicide bomber who had come to blow up the only Northern Tamil in her cabinet, she got Susil Premjayanth to issue a ridiculous statement which said that the bomb was not designed to derail peace negotiations !
Kidnapping and murder of Intelligence Officers
Chandrika has swallowed, hook line and sinker, the bullshit that has been fed by “new found friends” who cautioned her against doing anything lest the LTTE would start a war. Everybody else, apart from these ‘advisers’ knew that the LTTE could not start a war. Emboldened by her inactivity and her open expression of hostility to members of the armed forces who tried to enforce law and order, the LTTE began to play for higher stakes. They kidnapped Jeyaratnam and assassinated Muttalif, two dedicated and competent officers. She demoted or sidelined anyone who wanted to stop the LTTE carnage. She wreaked havoc in the armed services and began to rely more and more on sycophants.
The death sentence.
Instead taking a strong stand against the LTTE’s killing, abductions and child conscription and instead of signing the defence pact with India without further dilly dallying , Chandrika’s next move was to alienate the only strong ally she had in the country – the JVP. The LTTE, Norwegians and the UNP have been trying hard to achieve this even before the April 2004 elections. Now she gave it to them on a plate. The stupidity and the arrogance with which she steamrolled the P-Toms made no sense when she knew that all the major donors – USA, Japan, Indians and the British would not pay a penny to the P-Toms fund. Even though this agreement may have been drafted by one of her peanut brained sycophants, she should have at least obtained a second opinion from someone who had an ounce of brains. In her inimitable conceited manner she did not.
The LTTE recognised that she was now like a heroin addict not just hooked but permanently floating on the appeasement hallucinogen. It was a sufficient coded signal to the LTTE. The message she gave to LTTE by following this policy of appeasement was clear - even you kill any of my ministers, not just any minister, even the only minister whose loss was greater than her own demise, I will keep signing the appeasement song.
I do not think Chandrika will lose any sleep over Kadi’s assassination. She cared little for his loyalty, his steadfastness and the enormous risks he was taking in order to support her. Then, Chandrika has no real need for friends. She uses everyone for her own aggrandisement. If they do not serve here purpose she gets rid of them like used pampers. She cares little for the feelings of others and worries little about wounding their self-respect. That is why I say it is not only the assassin and his master who has blood in their hands. The peaceniks, the Norwegians, Ranil and above all Chandrika are all guilty of killing Kadiragamar.
Lakshman Kadiragamar was an exceptional man. He was respected by all decent Sri Lankans and no doubt they will all mourn his brutal murder. I am sure Kadi would not want his death to be used to light candles and sing eulogies by hypocrites dressed in white who facilitated his death or to turn him into a harmless icon only to be robbed of the principles he stood for. If he could speak he would say to all Sri Lankans – “ Look here, there is no point lamenting about my death. I stood for democracy, pluralism and decency in politics. I opposed the fascism of the LTTE even though I knew that they would make every attempt to kill me. Get rid of the corrupt appeasers who have usurped political power. Build a mass movement to drive out of the political arena incompetent, mealy mouthed and spineless men and women like Ranil and Chandrika. Reclaim your birth right, defeat fascism and build a Sri Lanka free of discrimination, repression and corruption.”
So don’t mourn, organise !
Upali Cooray
--------------------------------------------------------------------------------
[1] Lord Haw haw was the British turncoat who organised English language radio broadcasts for the Nazis.
15 August 2005
ReplyDeleteFor Immediate Release:
The Sri Lanka Democracy Forum (SLDF) expresses its absolute condemnation
of the assassination of Foreign Minister Lakshman Kadirgamar by the LTTE.
The assassination of the Foreign Minister, during a ceasefire is
tantamount to a declaration of war and is clearly a deliberate attempt by
the LTTE to derail the peace process and precipitate a return to war.
The LTTE has characterized Kadirgamar as a controversial figure, a
‘traitor’ purely because he, a Tamil, held high office with the Sri Lankan
government, and was opposed to the LTTE’s claim of ‘sole representation’.
Kadirgamar’s significant political address six weeks ago gives us an
insight into why he was murdered.
Kadirgamar spoke of the responsibility of the President to open a new
chapter after the signing of the P-TOMS agreement to address the concerns
of the Tamil people. On that occasion, Kadirgamar said:
“That chapter involves addressing as vigorously as she has addressed the
cause of promoting engagement with the LTTE, the task of making it clear
to the LTTE, and to the Government of Norway, that the restoration of
democracy, including the creation of space for dissent and the promotion
of human rights in areas presently controlled by the LTTE, is a priority
of the highest order.”
And to the Government of Norway, he had the following to say:
“The movement for democracy in certain districts of the North and East
must begin to roll. If the Government of Norway is unable to plead this
cause with the conviction and determination that it deserves it should
stand aside and yield to other parties who could carry the flag of
democracy into areas where darkness presently prevails.”
The LTTE’s lack of commitment to the peace process and to a democratic
political solution to the ethnic conflict is exposed by this brutal
slaying of a senior cabinet official of the Sri Lankan Government which is
its negotiating partner. On the same day, we were chillingly reminded of
the terror that the Tamil community is mired in, by the tragic murder of
Relangi Selvarajah, the SLBC journalist and her husband. The long
suffering people of war ravaged Sri Lanka, and in particular the people
living in the North and East have watched helplessly as the peace process
gradually degenerated into an orgy of terror, of forced child
conscriptions, abductions and the brutal suppression of Tamil dissent
through a relentless campaign of political killings.
The assassination of Kadirgamar, the last victim of this long line of
brutal killings makes it clear, that the policy of appeasement of the
LTTE, is at best, self delusional on the part of the Government of Sri
Lanka (GOSL) and the Norwegian peace facilitators and at worst, a cynical
abandonment of the Tamil people’s political future to the vagaries of the
LTTE’s quest for power. The policy of placating the LTTE is being
followed at the expense of, and will delay a genuine and lasting peace
with democracy and justice on this island, for many years to come. The
last three decades of the LTTE’s dirty war against its opponents are
ominous signals of what the people of the North and East will encounter in
an administration with no democratic accountability by the LTTE. The
International Community has to recognize that the LTTE’s aspirations for
total power, for ‘sole representation’ can never be equated with the Tamil
people’s quest for democracy and justice. The LTTE’s proposed Interim
Self Governing Authority with total and untrammeled power will become the
burial ground of genuine Tamil aspirations.
The ceasefire as it stands is steadily becoming meaningless due to
systematic violations by the LTTE and the future of the Tamil people is at
stake. Hence,
1. We call upon the International Community to enforce immediate
sanctions on the LTTE including travel bans on its leaders until all
political killings and child recruitment end.
2. We call upon the British Government to investigate whether Anton
Balasingam, the spokesperson for the LTTE in the UK, had prior knowledge
of Kadirgamar’s assassination, in view of his threats about the resumption
of war a day prior to the murder.
3. We call upon GOSL and the International Community to demand that the
LTTE immediately agree to the revision of the Ceasefire Agreement (CFA)
and additional measures, in order to end the flagrant violations of human
rights and the constant threat of war. The provision for the LTTE to do
political work in government controlled territories in particular should
be renegotiated given the LTTE’s abuse of that provision to carry out
political killings.
4. In view of the destitution of our peoples due to the long running war
and the Tsunami, we call upon the International Community to address the
threat of war by pressuring the GOSL and the LTTE to agree to a moratorium
on the war for a length of four years and eschew the threat of war in
negotiations.
5. We call upon GOSL and Norway to take measures to augment the
monitoring of the CFA by international human rights monitors in order to
end the rampant human rights violations.
6. In view of the State of Emergency imposed by the GOSL, we call for the
civil liberties of all citizens to be protected, and particularly those of
the Tamil civilians who have faced the brunt of emergency violations in
the past.
7. We call on the Southern political formations and civil society to
actively work towards and campaign for a permanent political solution that
meets the aspirations of the minorities through the devolution of power,
instead of an interim arrangement that merely attempts to appease the LTTE
and consolidate its control over the Tamil people.
--
Sri Lanka Democracy Forum
www.lankademocracy.org
Sri Lanka Democracy Forum is a community that shares a commitment to a
democratic and pluralistic vision of Sri Lanka. We recognize that in
addition to the loss of lives, the costs of war also entailed the erosion
of democracy, the demobilization of pluralistic and independent social
movements, and the further victimization of marginalized communities. In
that context, we believe that movement towards a just and sustainable
peace must be accompanied by the reconstruction of a democratic community
that protects and promotes social justice, and the individual and
collective rights and freedoms of all communities in Sri Lanka. We are in
solidarity with, and have a commitment to support the efforts of
marginalized communities to address past injustices, whether such
injustice was based on the suppression of dissent, economic
disempowerment, and/or on ethnic, gender or caste discrimination at the
national or regional level. Among other efforts, we seek to proactively
support grass roots movements that seek to expand and revitalize
conditions for a vibrant, pluralistic and independent civil society that
nurtures freedom of conscience, diverse political affiliations and an
independent media. Thus, we believe that the terrain for engagement is
not merely macro-political policy, but also economic decision-making,
cultural production, and diverse local struggles furthering
democratization in all spheres of life.
The Sri Lanka Democracy Forum had its inaugural meeting in Toronto, Canada
in 2002.
Contact E-mail: contact@lankademocracy.org
--------------------------------------------------------------------------------
A DEMOCRATIC ALTERNATIVE
ReplyDeleteTisaranee Gunasekara
Monday 8th August 2005
“Anyone endowed with a normally functioning mind would perceive that no understanding or compromise is possible with Hitler and his ilk. You might as well suggest that a reasonable man ought to adapt himself to syphilis or that he should overcome his prejudice against poison. For Hitler is not a problem: he is a plague…. He can’t be appeased or refuted… There are phenomena you cannot cope with except by stamping them out or else by avoiding them until they are stamped out”.
Klaus Mann (The Turning Point)
The brutal murder of Charles Wijewardane, SSP, Jaffna, is yet another reminder that a lasting peace within a united Sri Lanka can be achieved not with the Tigers but despite the Tigers, and in opposition to the Tigers. The peace lobby in the South and the Norwegians are trafficking in illusions; wittingly or unwittingly they are trying to delude and persuade the Sri Lankan state to ignore or de-prioritise the killing of security forces personnel and anti-Tiger Tamils by the LTTE with the argument that a firm response on our part will damage the peace process and pave for the next conflict. If the government responded firmly to the murder of Major Mutaliff the life of SSP Wijewardene may have been spared; but when the Tigers know that they can kill with impunity why shouldn’t they continue to kill?
There is obviously a national consensus even though there is no national government; a consensus based on appeasement. That national consensus is strong enough to withstand almost any crime by the Tigers (the murder of SSP Wijewardene is only the latest in a long list). And the usual cacophony of voices which reaches a crescendo whenever there is any talk of power sharing with the Tamil people is not so loud when it comes to opposing Tiger atrocities. After all it is one thing to take on unarmed Tamils; it is quite another thing to anger the Tiger. Even in the ‘halcyon’ days of July 1983 the ‘patriots’ ran in the other direction when there was a rumour of a group of Tigers shooting from a building in Pettah.
A Sri Lankan peace, a Sri Lankan future cannot be achieved with the Tigers as strategic partner. The very nature of the LTTE, its unchanging commitment to its own state and its total intolerance, impedes any search for a democratic solution to the ethnic problem within an undivided Sri Lanka. The LTTE’s jettisoning of the Oslo Agreement clearly indicates that it cannot and will not condone any measure that will make the Eelam slogan superfluous; and the fact that the brutal slaying of SSP Wijewardana took place after the government provided VIP security to Mr. Eleelan demonstrates that no amount of appeasement will make the Tiger change its way. If peace via a political solution to the ethnic problem is the desired goal, we have to look beyond the LTTE and try to build new partnerships with non- LTTE Tamils.
A New Unity
The Tigers’ hold over the East is a rather tenuous one; in fact in many of the areas in the East the Tigers cannot even move about without the protection of the Sri Lankan Armed Forces. Unfortunately and ironically this new balance of power is not reflected in the way the government or the main opposition approaches the Tamil issue. Whether it is about the revival of the peace process or obtaining Tamil support at the Presidential election both the PA and the UNF act as if the LTTE is in reality the sole representative of the Tamil people.
Col. Karuna seems to have achieved considerable success in military terms in the East; unfortunately he has not been able to reproduce this success in the political sphere. It is necessary to challenge the Tigers militarily; but that is not enough; the battle has to be waged at the political level as well. And there, the Tigers are still ahead. And as long as the LTTE manages to maintain this political advantage, it will not be possible to prevent the two major Southern parties from adopting/continuing a policy of accommodation vis-à-vis the Tigers.
The inability of the anti-Tiger Tamils to form some sort of broad unity at the political level is one of the main reasons for their incapability to put themselves forward as a viable alternative to the LTTE. It is not that anti-Tiger Tamils are inactive at the political and propaganda level. The voices of Messers Anandasangaree and Devananda are often raised in protest against the Tigers and their doings. United, these voices could be loud enough to be heard nationally and internationally above the cacophony of Tiger and pro-Tiger voices. But as they remain isolated, they are drowned out by the voice of the Tiger. And as long as they are disunited, as long as they do not work together the anti-Tiger Tamils would not be able to successfully challenge the LTTE politically and propagandistically. I am not proposing the replacement of one sole representative with another authentic representative but a broad unity of the anti-Tiger parties and groups which enables them to maintain their separate identities while working together to take on the Tigers in the politico-propaganda and maybe electoral - sphere.
Such a unity could bring together old guard politicians like Mr. Anandasangaree, second generation militants such as Messers Devananda and Siddhartan and fighters of the younger generation such as Col. Karuna. The Anandasangaree proposals could serve as the political basis for this unity; the new unity should also affirm unconditional commitment to democracy and the basic rights of all the people of the North and the East. If such a united front is formed it has the potential to become the democratic alternative to the LTTE, and to be accepted as such nationally and internationally, eventually.
Such a broad front, if it comes into existence, would enable the anti-LTTE Tamils to deal with the Southern polity from a position of greater strength, be it at a presidential or a parliamentary election. This is the only way to prevent the two main Southern parties from acceding to even the most outrageous of the Tiger demands in the hope of winning the North-Eastern Tamil vote via the Tigers. As the election fever mounts the usual mad rush to somehow win over the majority of the North Eastern votes will commence; in the absence of any political alternative, the Tigers will reap the benefits of this situation. They will use to win concessions (both political and military) from both major contenders, and many of these concessions would further endanger Sri Lankan unity and Tamil democracy. Consequently there is an urgent need for the anti-Tiger Tamil parties to come to some kind of understanding among themselves, as a necessary prelude to presenting the desperate presidential candidates with an alternative and mutually advantageous - offer.
The anti-Tiger Tamils can enable the Presidential candidates to oppose the LTTE and stand for the unity of Sri Lanka without succumbing to majoritarian chauvinism. Such a deal would make it possible for a presidential candidate to keep his Southern base by taking a hard anti-LTTE line while gaining a segment of the Tamil vote by taking a clear stand for devolution. If such an understanding can be arrived at between the anti-Tiger Tamils and a representative of the Southern polity, it would be of great advantage to both the cause of untied Sri Lanka and Tamil democracy.
Democratising Devolution and Totalitarian Devolution
Two varieties of devolution one that promotes democracy and other that endangers democracy; devolution which is liberating and devolution which is subjugating; democratising devolution and totalitarian devolution. The devolution we promote has to be the kind that enables Tamil people to become citizens rather than forcing them to become subjects of this or that ‘sole’ or ‘authentic’ representative.
For the outcome to be pluralist and democratic, the search too will have to be pluralist and democratic. This means the search must be as broad based as possible and must involve most if not all - of the democratic Tamil and Muslim parties. A solution which ensures a substantial degree of autonomy for the minorities, takes into account the religious and cultural separateness of the Muslims from the Tamils, ensures the safety and security of the Eastern province Sinhalese and strengthens Tamil democracy rather than stifle it cannot be arrived at as a result of a bargain between the Sri Lankan state and the LTTE. Democratic devolution rather than anti-democratic devolution must be what we consciously strive for and promote in any solution to the country’s festering ethnic problem.
The defiance of the Bulgarian Communist Georgi Dimitrov (falsely charged with burning the Reichstag) in the face of his Nazi accusers gave rise to a popular saying in Berlin: “There is only one man left in Germany and he is a Bulgarian”. Similarly the events since the signing of the CFA makes one think that there are only a handful of anti-Tiger men left in Sri Lanka - and they are all Tamils, from the UTHR to the EPDP, from V Anandasangaree to Col. Karuna. And they have been carrying out their struggle against the LTTE without any appreciable help from either the Sri Lankan state, Southern polity or society. Forming a strategic partnership with these anti-Tiger elements is the only way we can work towards a democratic rather than anti-democratic devolution, a power sharing agreement which will save both the unity of Sri Lanka and Tamil democracy.
During this peace process we have bypassed many opportunities to weaken the Tigers politically and help the emergence of a more democratic alternative to the LTTE. And we look the other way when the Tigers commit all sorts of depredations, from child conscription to the murder of Sri Lankan security forces personnel and anti-LTTE Tamils (the President, the PM and the Leader of the Opposition stayed away from the funeral house of the murdered SSP while the Norwegians rushed to Killinichchi to shake hands with the beaming Mr. Tamilselvam). If human sacrifice is the way to satisfy the Sun God, then so be it - a regression into our distant past when we engaged in human sacrifices to pacify some vengeful god or monster or an elemental force. And because our fear has blunted our intelligence we do not realise that the only way we can escape the Tiger menace is by enabling the emergence of a democratic Tamil alternative to the LTTE and forming a strategic partnership with that alternative in pursuance of democratic devolution within a united Sri Lanka.
http://www.theacademic.org/feature/123480450001276/index.shtml
தம்பி பத்திரி,தங்கள் குறிப்புகள் மிகவும் ஆரோக்கியமான பார்வைகளைக் கொண்டிருக்கிறது.இதற்கு மேலும் தகவல்களைத் தரும் நோக்கில் மேலே சில தகவல்களைப் பதிந்துள்ளேன் படித்துப் பாருங்கள்.
ReplyDeleteஅன்புடன்
பரமுவேலன் கருணாநந்தன்
ஏங்க பரமுவேலன் கருணாநந்தன்
ReplyDeleteலின்க் க மட்டும் குடுத்தா பத்தாதா. ஏன் இவ்ளோ பெருச copy paste செஞ்சு படுத்துரிங்க. comment படிக்கிற மூடே போச்சு..
பத்ரி கணமான மற்றும் சர்சைக்குள்ளாகும் பதிவா போட்டுரிக்கீங்க. இன்னைக்கு முழுசும் உங்க பதிவ
திறந்தே வச்சுருக்க வேண்டியதுதான் :-)
பத்ரி,
ReplyDeleteஇதற்கு முந்தைய சில பதிவுகளில் புலிகளுக்கு ஆதரவான நில்யை எடுத்திருந்தீர்கள். இந்தப் பதிவை ஒரு பற்றற்ற பார்வையோடு எழுதியிருக்கிறீர்கள். தவறில்லை. வெறுமனே அவதானிக்கிறேன்.
இருப்பினும், தமிழகத்துத் தமிழர்களேனும், இந்த நிகழ்விற்கு ஒரு Moral outrage கூடிய எதிர்வினையை நிகழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது, நடுநிலைமையாளர்களிடமிருந்து, ஒரு கொலைக்கு எதிராக எழும் தார்மீக எதிர்ப்புகள் பதிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். இல்லையேல் ஒரு அமைதித் தீர்வு நோக்கிச் செல்வதற்கு இது போன்ற அரசியல் கொலைகளும் ஒரு யுக்தி என்று அங்கீகாரம் வழங்கியது போலாகும். இப்படிச் சொன்ன போது, 'இது போன்ற கருத்துக்கள் தற்போதைய இலங்கைச் சூழலில் idealistic notions' என்று சக வலைப்பதிவுலக நண்பரொருவர் நேற்று சொன்னார். இருக்கலாம்.
நிற்க.
இந்தக் கொலையைச் செய்வதற்கு மிகுந்த திட்டமிடல் தேவைப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் யூகம் போல புலிகள் இதைச் செய்திருந்தால், பல மாதங்களாகவே அவர்கள் போருக்கான ஆயத்தங்களில் இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது.
இந்தியா இந்த நிலையில் இலங்கைக்கு உதவாது என்று தான் நினைக்கிறேன். At this moment, the Sri Lankan crisis is an intractable problem. நமது எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, அதைத் தள்ளி நின்று பார்த்திருப்பதே நல்லது.
பத்ரி,
ReplyDeleteசிறப்பான முதல் கை தகவல்கள். நன்றி. நிற்க, புலிகளின் தலைவர் பிரபாகரன் தொலை பேசி எண்ணை தர இயலுமா? இயலாவிடில் ....... தலைவர் சுனா சாமியின் எண்ணையாவது அறியத்தரவும்.
நன்றி,
நந்தலாலா.
To பரமுவேலன் கருணாநந்தன், Srikanth & others who have commented above.
ReplyDeleteIf the LTTE has assasinated Mr.Kadirkamar. They have some thing commendable.
Hard Talk interview
http://www.bbc.co.uk/newsa/n5ctrl/progs/05/hardtalk/kadirgamar22mar.ram
- a Blogger
பத்ரி,
ReplyDeleteஎந்த மனித உயிரும் அகாலத்தில், அதுவும் இன்னொரு மனிதனின் வன்முறையால் பறிக்கப்படுவது கொடுமையானது. உடனடி எதிர்வினையான இந்த உணர்வுப்பூர்வமான நிலையை கடந்தபின் நிதானமாக இதற்கான காரணங்களையும், விளைவுகளையும் யோசித்தால் கொலையுண்டவரின், கொலைசெய்தவரின் நியாயங்களைக் கணக்கிலெடுக்கவேண்டியுள்ளது. இனரீதியாகப் பிரிந்துக் கிடக்கும் நாட்டில் கிறித்தவத் தமிழராகப் பிறந்த ஒருவரை தமிழ்த் தீவிரவாத இயக்கம் கொன்றிருக்கலாம் என்று கருத வைப்பதும், இறந்தவருக்காக சிங்களத் தீவிரவாத புத்தபிக்குகள் துக்கம் அனுஷ்டித்து, அவருடைய உடலை புத்தமதச் சடங்குகளோடு அடக்கம் செய்வதும் எத்தகைய முரண்?
இப்படுகொலையைத் தொடர்ந்து நீங்கள் எழுதியதுக்கு அப்பால் இன்னும் இரண்டு கேள்விகளும் எழுகின்றன:
1. கொலைசெய்தது விடுதலைப்புலிகள் தான் என்பதற்கான முகாந்திரம்--இலங்கை அரசும், இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு வெளியே--ஏதேனும் உள்ளதா? எடுத்த எடுப்பில் குற்றத்தைச் சுமத்திவிட்டு, அதே முன்முடிவுடன் பிறகு உண்மையைக் கண்டுபிடிக்க அரசாங்கமோ அல்லது ஊடகங்களோ முயற்சி செய்வதில்லை. நாமும் அதுபற்றி கவலைப்படுவதில்லை. இதனால் முதலில் சந்தேகமாக இருந்தது பிறகு முழு உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
முதல் சந்தேகம் புலிகளின் மீது இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், இரண்டாவதாக சந்தேகத்துக்குரியவர்கள் யார்?
2. போர்நிறுத்த காலத்தில் வடகிழக்கில் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டபோது ஏன் அமைதிப் பேச்சுவார்த்தையின் எதிர்காலம் குறித்து எந்த கேள்வியையும் எழவில்லை? அந்த நடவடிக்கைகள் புலிகளை கோபமூட்டவேண்டும் என்று செய்யப்பட்டதா அல்லது கோபமடைய மாட்டார்கள் என்று தைரியமா? சுனாமிப் புனரமைப்புப் பணியிலிருந்து புலிகள் விலக்கப்பட்டதும் கூட (என்னதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று சப்பைக்கட்டு கட்டினாலும்) பேரினவாத, அரசுத் தரப்பு கோபமூட்டல் தான் (இது இந்துவிற்கு பலத்த குஷியை ஏற்படுத்தியிருந்தது).
புலிகள் அரசு தரப்பினரைக் கொல்வதும், அரசு புலி தரப்பினரைக் கொல்வதும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும். இரண்டுமே ஒரு தரப்பு அடுத்த தரப்பை நிலைகுலையவோ அல்லது கோபமூட்டவோ செய்யப்படும் முயற்சிகள். இரண்டினாலும் அமைதிப்பேச்சு வார்த்தையின் எதிர்காலம் சிதைக்கப்படலாம்.
போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி புலிகள் ஆயுதம் குவிக்கிறார்கள், சண்டைக்குத் தயாராகிறார்கள் என்று வாராவாரம் புலம்பும் இந்துவுக்கு, இலங்கை அரசு இந்தியாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துகொள்வது உவகையளிக்கிறது. அதை ஊக்குவிக்கவும் செய்கிறது.
ஸ்ரீகாந்த்
/நமது எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, அதைத் தள்ளி நின்று பார்த்திருப்பதே நல்லது//
கிண்டலாக அல்ல, உண்மையிலேயே புரியாமல் கேட்கிறேன். நமது எல்லைகளுக்கு அச்சுறுத்தல் எங்கிருந்து வருவதாக நினைக்கிறீர்கள், எல்லைகளை யாரிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா?
சுந்தரமூர்த்தி: நான் என் பதிவைப் பொறுத்தவரையில் கொலையை நியாயப்படுத்தவுமில்லை, கண்டிக்கவுமில்லை. ஆனால் இந்தக் கொலையை வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்ற என் ஊகத்தைச் சொன்னேன். இரண்டாவது சந்தேகம்? அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ReplyDeleteஆனால் அமைதிப் பேச்சுவார்த்தை முறிவுக்கு விடுதலைப்புலிகளை மட்டும் பொத்தாம்பொதுவாக நான் குற்றம் சாட்டவில்லை. எப்படி பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்பதற்கான சில ஆதாரங்களையும் சொல்லியுள்ளேன்.
மற்றபடி, புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர்களின் கொலைகள் பற்றி மேலதிகத் தகவல்கள் இருந்தால் சுட்டிகளைக் கொடுக்கவும்.
கருணா விஷயம் தவிர அமைதிப் பேச்சுவார்த்தை நேரத்தில் பெரியதொரு நிகழ்வு எதுவும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கருணா விஷயத்தில் இந்தியாவும் இலங்கை ராணுவமும் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் யாருக்கு அதிகப்பங்கு என்று தெரியவில்லை.
சுனாமிப் பேரழிவின்போது இலங்கை அரசு நடந்துகொண்டது சிறிதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இதை நான் பதிவு செய்துள்ளேன். அதைத் தொடர்ந்து PTOMS அரங்கேறாமல் இருப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பிலும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயும் ஒருமித்த கருத்து இல்லாமையும், புலிகள் மீதான உள்ளார்ந்த வெறுப்புமே காரணமாகும்.
அதுவும் கூட புலிகளை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது என்று தீர்மானிக்க வகை செய்கிறது.
//நடுநிலைமையாளர்களிடமிருந்து, ஒரு கொலைக்கு எதிராக எழும் தார்மீக எதிர்ப்புகள் பதிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன். இல்லையேல் ஒரு அமைதித் தீர்வு நோக்கிச் செல்வதற்கு இது போன்ற அரசியல் கொலைகளும் ஒரு யுக்தி என்று அங்கீகாரம் வழங்கியது போலாகும். இப்படிச் சொன்ன போது, 'இது போன்ற கருத்துக்கள் தற்போதைய இலங்கைச் சூழலில் 'idealistic notions' என்று சக வலைப்பதிவுலக நண்பரொருவர் நேற்று சொன்னார். இருக்கலாம்.//
ReplyDeleteநண்பர் ஸ்ரீகாந்திடம் நேற்று பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் நான் தான்.
இலங்கைச் சூழலில், ஏன் இலங்கைப் பிரச்சினையோடு தன் தேச நலனைப் பிணைத்துப் பார்க்கிற இந்தியச் சூழலில் கூட நடுநிலைமை என்பது எல்லாம் வெறும் கண்கட்டி வித்தைதான். எல்லோருமே ஏதாவது ஒருபக்கத்தில்தான் இருக்கிறோம்.
ஒருவேளை சிலர் நடுனிலையோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று உள்ளபடியே நினைத்தாலும், அப்படிப் பட்டவர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதில்லை. எடுத்துக்காட்டாக பத்ரியையே சொல்லலாம் - நீங்கள் சொல்லுகிறீர்கள் - "இதுவரை புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தார் பத்ரி, இப்பொழுது கொஞ்சம் நடுனிலைக்கு வருகிறார் என்று". ஆனால் இதுவரை பத்ரி நடுனிலையாக எழுதியதாக நினைத்த பு. மு. சுரேஷ் சொல்கிறார் "புலிகள் மீது வெறுப்பை காட்டுவது போல் உள்ளது" என்று.
ஏன் உங்களையே எடுத்துக் கொள்வோம் - கதிர்காமரின் கொலைக்கு எதிர் வினையாகச் சொல்கிறீர்கள் - "தமிழகத்துத் தமிழர்களேனும், இந்த நிகழ்விற்கு ஒரு Moral outrage கூடிய எதிர்வினையை நிகழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது, நடுநிலைமையாளர்களிடமிருந்து, ஒரு கொலைக்கு எதிராக எழும் தார்மீக எதிர்ப்புகள் பதிக்கப் படவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று.
ஆனால் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இரண்டரை மாதங்களுக்கு முன் கொழும்பில் மக்கள் நடமாடும் வீதியில் எந்தவித பாதுகாப்போ, ஆயுதங்களோ இல்லாமல் சக (சிங்கள) பத்திரிகையாளர்களுடன் உணவகத்திலிருந்து வெளியே வந்த வெறும் பத்திரிகையாளரானான தராக்கி சிவராம் கடத்திப் படுகொலை செய்யப் பட்டார்.
இதே வலைப் பதிவு உலகத்தில் சில பதிவர்கள் அதைப் பற்றி எழுதியிருந்தார்கள். Moral outrage-க்கு அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. தனிப் பட்ட உங்களது கண்டணத்தைக் கூட நீங்கள் எங்கும் பதிவு செய்யவில்லை. பின் எப்படி உங்களை நடுனிலையாளர் என்று அழைத்துக் கொள்ளமுடியும். ஒருவேளை சிவராம் கொல்லப் பட வேண்டியவர் என்று கூட நினைக்க முடியாது - ஏனென்றால் போர் நிறுத்தத்துக்குப் பிறகு இலங்கை அரசு ஆடிவரும் நாடகங்களைக் கண்ட பின் தான் புலிகள்-விமர்சன நிலையிலிருந்து அவர் புலிகள் ஆதரவு என்ற நிலைக்கு வந்தார், அதுவும் கூட புலிகளிடம் முற்றிலும் சரண் அடையக் கூடியவரல்ல என்பது அனைவருக்கும் தெரியும் - புலிகளை எந்த (!!!) வழியிலாவது அழித்தொழிக்க விரும்பும் இந்து இராம் இலங்கை சென்று அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே நீங்கள் உங்களை நடுனிலையாளர் என்று அழைக்கக் கூடியத் தகுதியை இழந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். (எனக்கு அதில் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பிரச்சினையில்லை. அதே போல் நான் புலிகள் ஆதரவு நிலைப்பாடு கொண்டவன் என்பதும் உங்களுக்குப் பிரச்சினையில்லை என்பதையும் அறிவேன்.)
நான் நடுனிலையானவன் அல்ல. ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரை புலிகள் நிறையத் தவறுகள் செய்திருந்தாலும், அவர்களை நான் ஈழ மக்களின் பிரதினிதிகளாகப் பார்க்கிறேன். ஈழமக்களின் ஒடுக்கு முறைக்குக் காரணமாயிருந்த இலங்கை அரசும், அதற்கு எப்பொழுதும் (நேரடியாகவோ, மறைமுகமாகவோ) ஆதரவாக இருந்து வரும் இந்திய அரசும் செய்த மற்றும் செய்கிற தவறுகளை விட புலிகள் செய்து விட்ட தவறுகள் மோசமானவையல்ல. அதற்காக புலிகள் ஆயுதமேந்தாத சாதாரண மக்களையோ, அல்லது பத்திரிகையாளர்களையோ, தொண்டு செய்பவர்களையோ படுகொலை செய்தால் கண்டிப்பேன், இங்கு கூட இரஜினி திரணகம பற்றிய பதிவுகளில் கண்டித்திருக்கிறேன். அதற்கு நான் நடுனிலையாக இருக்கத் தேவையில்லை, மனிதாபிமானியாக இருந்தாலே போதும்.
ஆரம்பகாலத்தில் EROS, PLOTE, EPRLF போன்ற இயக்கங்களின் மேல்தான் எனக்கே நம்பிக்கை இருந்தது, ஏனெனில், அவை சித்தாந்த ரீதியில் மிகத் தெளிவானவர்கள், அவர்கள் பேசிய விடுதலை அப்பாவி சிங்கள மக்கள், முஸ்லீம்கள், மலையகத்தமிழர்கள் ஆகியோரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்று நான் கருதியதுதான் காரணம். இந்தியப் படை இறங்கிய பிறகுதான் அறிந்தேன், வெறும் சித்தாந்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு எளிதில் சோரம் போகி விட்டார்கள் என்று - முதல் இரண்டு இயக்கங்களின் தலைமைகள் தங்களுடைய இயக்கத்தினரையே நிர்க்கதியாக விட்டு, தங்களுடைய சுயனலங்களுக்குப் பேரம் பேசத் தொடங்கி விட்டனர். இயக்கங்கள் காணாமல் போகிவிட்டன. புலிகள் அழித்தார்கள் என்பதெல்லாம் பாதிதான் உண்மை. ஈறோஸில் பாதிப் பேர் கலைத்துவிட்டு புலிகளுடனே கலந்து விட்டனர்.
இதையெல்லாம் நான் சொல்ல வேண்டிய காரணம் - பொத்தாம் பொதுவாகத் தேவையில்லாத இடங்களில் கூட சூச்சு - பி. கே. சிவக்குமார் வகையறாக்கள், 'புலி ஆதரவாளர்' என்று மட்டையடி செய்வது வழக்கம். இங்கும் உடனே கிளம்பி வரக் காத்திருப்பார்கள் - அவர்களுக்குச் சொல்லிக் கொள்வது - ஈழப் பிரச்சினையில் இந்தியருக்கும், ஈழத்தவருக்கும் இரண்டு நிலைப்பாடுகள்தான் பெரும்பான்மையான யதார்த்த நிலை - புலிகளின் ஆதரவு அல்லது இலங்கை அரசு ஆதரவு - மற்ற நிலைப்பாடுகள் இவற்றின் உட்கணங்களே (subset). அந்த அடிப்படையில் - கடந்த ஐம்பது ஆண்டுகளாக தினசரிச் செய்தித்தாள்கள் போல நாளுக்கொரு ஒப்பந்தத்தையும், அரசியல் சட்டத்தையும், எழுதிக் கிழித்துப் போடும் இலங்கை அரசை நம்புவதற்கும், ஆதரிப்பதற்கும் எனக்கு எந்த முகாந்திரமும் தெரியவில்லை. எனவே புலிகள் ஆதரவு என்பது என்னைப் பொருத்தவரை தவிர்க்க முடியாதது.
எந்தத் தெற்காசிய நாட்டினரிடமிருந்தும், இலங்கையில் வர்த்தகம் மற்றும் இராணுவ நலன்களை கொண்ட எந்த நாட்டினரிடமிருந்தும் நடுனிலை என்பதை எதிர் பார்க்க முடியாது. இந்த நாட்டினர் மத்தியஸ்தம் செய்வது ஏதோ ஒருவகையில் இரண்டு நிலைப் பாட்டினரிடமிருந்து (புலி ஆதரவு அல்லது இலங்கை அரசு ஆதரவு) எதிர்க்கப்படும். அதுதான் இன்றைய யதார்த்தம்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
good analysis Sankarapandi.
ReplyDelete// இரண்டாவது சந்தேகம்? அப்படி யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. //
ReplyDeleteRead this press release from Vasudeva Nanayakkara:
*******
Democratic Left Front
Media Release
We condemn the assassination of Minister Kadirgamar. We await the results of the investigation eagerly.
One can infer on the face of it that the LTTE could be held
responsible for the assassination for the reason that Mr. Kadirgamar was being considered an enemy
by the LTTE for quite sometime. Nevertheless according to the
information available as of now there has been a serious lapse related to his security
arrangements. When the former defence minister Mr Ranjan Wijeratne was assassinated similarly the LTTE was alleged to be responsible. But
later on other forces were suspected to be behind it. Up to date the real fact of it is not known.
Therefore it is necessary to launch an immediate and incisive
investigation to probe into why and how the assassin was able to get at him in this manner
despite the heavy security. Who knew that Mr Kadirgamar was going to the place of incident on this day and at this time? Why did his security leave him uncovered and exposed in or near the swimming pool? How did the assassin manage
to escape so easily from the scene of the crime?
His death is a substantial loss to our society and we express our
condolences.
As an organization that deplores any political violence we condemn this political assassination vehemently. Similarly we also condemn efforts by
racist political forces to incite communal violence and drag the
country back to war capitalizing on this unfortunate event.
Vasudeva Nanayakkara Quintus Liyanage
Secretary National Organiser
49 1/1 Vinayalankara Mawatha
Colombo 10
13 - 08 - 2005
******
Srikanth, the only thing you and I can do is to campaign for instituting an investigation by an Independent World Body to go into the killing of both Tharaki Sivaram as well as Laxman Kadirkaamar. Can we start the campaign through the blog world or the online petition?
S. Sankarapandi
சங்கரபாண்டி : நீங்கள் புலிகள் ஆதரவாளராக இருப்பது பற்றி எனக்கு ஒன்றும் குறையில்லை. நீங்கள் சொல்கிற நடுவுநிலைமை பற்றி சில விஷயங்கள்.
ReplyDeleteலக்ஸ்மன் கதிர்காமர் கொலைக்கு புலிகள் தான் காரணம் என்று ஊடகங்களில் வந்த செய்திகள் அடிப்படையிலும், புலிகளுக்கு கதிர்காமரை கொல்ல முகாந்திரம் இருக்கிறது என்ற வலுவான ஊகத்தின் அடிப்படையிலும், பத்ரி ஒரு பதிவு எழுதிய உடன், அவர் உங்கள் கண்களுக்கு நடுவு நிலை தவறியவராகப் போய்விட்டார். நாளை, இந்தச் செய்தி ஊர்ஜிதமானால், புலிகளின் ஆதரவாளராக இருக்கிற நீங்கள், அந்தக் கொலையை நியாயப் படுத்தி 'த்தான்' பேசுவீர்கள். ஏனெனில், உங்கள் பார்வையில், புலிகளுடைய எந்தக் கொடுஞ்செயலும், மற்றவர்கள் செய்ததைவிடவும் தீமை குறைவானதே. அதே சமயம், பத்ரியின் ஊகம் தவறாக இருந்துவிட்டால், அவர் தன்னுடைய குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்வார். ஏனெனில், அவர் புலிகள் ஆதரவாளரும் இல்லை. இந்திய அரசாங்கத்தின் ஆதரவாளரும் இல்லை.
நடுவுநிலைமை என்பது சேணம் பூட்டிய குதிரை போல ஒரே திக்கில் செல்வதல்ல.
ஈழத்தமிழரின் ஒரே பிரதிநிதிகள் புலிகள் தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. புலிகள் தான் தனீயிழம் பெற்றுத் தரமுடியும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஈழத்தமிழருக்கும் சிங்கள அரசுக்கும் இடையில் நிலவுகிற பிரச்சனையின் அடியாழம் தெரியாத, அதே சமயம், ஈழத்தமிழர் நலன் பால், மனசளவிலாவது ஈடுகொண்டிருக்கிற ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுத் தமிழர்களையும், பயமுறுத்தி ஓடச் செய்வது, உங்களைப் போன்றவர்கள் தான். இதைச் சொல்வதற்காக மன்னிக்கவும்.
மொட்டைக் கடிதங்களுக்குப் பதில் சொல்வது தவறானது, அக்கடிதங்களை அங்கிகரிப்பதாகும் என்று நினைக்கிறேன். மேலே உள்ள "dontyouknowme?" மொட்டைக் கடிதத்தில் உள்ள ஒரு திரிப்பை அடையாளங்காட்ட அந்தத் தவறை இந்த முறை செய்கிறேன்.
ReplyDeleteஅனாமத்து சொல்கிறது
// பத்ரி ஒரு பதிவு எழுதிய உடன், அவர் உங்கள் கண்களுக்கு நடுவு நிலை தவறியவராகப் போய்விட்டார்//
நான் அதற்கு மாறாகத் தெளிவாகவே என்னுடைய பின்னூட்டத்தில் பின்வருமாறு எழுதியுள்ளேன்.
//ஒருவேளை சிலர் நடுனிலையோடு இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டும் என்று உள்ளபடியே நினைத்தாலும், அப்படிப் பட்டவர்களாக ஏற்றுக் கொள்ளப் படப் போவதில்லை. எடுத்துக்காட்டாக பத்ரியையே சொல்லலாம்//
நடுனிலைமை என்பது ஒருவருடைய மனசாட்சிக்குத்தான் தெரியும். மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. காரணம் எல்லோரும் எதோ ஒரு நிலைப்பாட்டைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் இதை எழுதினேன்.
இதை வேண்டுமென்றே திரித்து எழுவதிலிருந்தே அறியலாம் இந்த நபர் ஏன் முகமூடி அணிந்து வருகிறார் என்று. இவர் சொல்லும் மற்றவற்றைப் பற்றிப் பேசுவது வீண்தானே.
நன்றி - சொ. சங்கரபாண்டி
கொலைகள் கண்டிக்கத்தக்கவை.
ReplyDeleteஅது எந்த ரூபத்தில் நிகழினும்!
தமிழ்;,சிங்களம் பேசும் மக்களைக் காலகாலமாகக் கருவறுக்கும் சிங்களத்-தமிழ் மற்றும் உலக ஆளும் வர்க்கங்கள் இதுவரைச் சாதரணமக்களின் கொலைகள் குறித்து எதுவித புலம்பலையுஞ் செய்வதில்லை.
மாறாகத் தமது வர்க்க மனிதர் ஒருவர் கொலையுண்டாலோ குய்யோ முறையோவென கண்ணீருடன் நியாயமுரைக்க வருகிறார்கள்!
இது கதிர்கமர் என்ற அரச பயங்கரவாதியின் கொலையில் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையிலும் இதே கதைதாம் எனச் சொல்கிறேன். ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இங்கு ஒரே தர்மம் பேணப்படுவதில்லை.
கதிர்காமர் என்ற அரசபயங்கரவாதியின் கொலை நடந்த அதே நேரத்தில் இன்னும் இரு உயிர்கள்-ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.இதுகுறித்து எவரும் வாய்திறப்பதைக் காணோம்.
அனைத்தும் ஊடகங்களால் தீர்மானிக்கும் காரணிகளாக மாறிவிட்டது.
அப்பாவி மக்கள் இலங்கை-இந்திய,உலக நலன்களால் நாளாந்தம் யுத்த நெருக்கடிக்கும்,இராணுவ அட்டகாசத்துக்கும் பலியாகும்போது அது குறித்தொரு கட்டுரை எழுத முடியாதவர்கள் இந்தப் பயங்கரவாதி கதிர்காமனுக்கு வலிந்துருகுவது ஆளும் வர்க்க அரசியலை மையப்படுத்தியபோக்காகும்.
தமிழ்பேசும் மக்களைச் சதா சிதைத்து வந்தவொரு பீடை தொலைந்தது.
எனினும் பாசிஸ்டுகளின் மரணத்துக்கு ஒரு சொட்டுக் கண்ணீரையும் அப்பாவி மக்கள் சிந்தமுடியாது.இங்கு மனிதாபிமானுமுங்கூட வர்க்கம் சார்ந்ததாகும்.
இதைவிட்டு மற்றெல்லாம் பம்மாத்து-சுத்துமாத்து.
பத்திரியின் கருத்துக்கள் மிகவும் விஞ்ஞானபூர்வமற்றது.வெறும் கற்பனைகள் தரவுகளாக மாறமுடியாது.இதற்கப்பால் ஆழ்ந்த ஆய்வுகள்மூலம் தரவுகள் மொழிவதே சிறப்பானதாகும்.
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
///நமது எல்லைகளைப் பாதுகாத்துக் கொண்டு, அதைத் தள்ளி நின்று பார்த்திருப்பதே நல்லது//
ReplyDeleteகிண்டலாக அல்ல, உண்மையிலேயே புரியாமல் கேட்கிறேன். நமது எல்லைகளுக்கு அச்சுறுத்தல் எங்கிருந்து வருவதாக நினைக்கிறீர்கள், எல்லைகளை யாரிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா?//
சுந்தரமூர்த்தி,
ஜெயின் கமிஷன் அறிக்கையில் சிதம்பரம் சொல்லியிருப்பதாக:
"... I have just returned from a four-day tour of my constituency, which included a visit to key coastal villages in Ramanathapuram district, Tamil Nadu. These villages are Mullimunai, Karangadu, Soliakkudi, M.R. Pattinam and Pudupattinam. Activity of Tamil militants, presumably LTTE, has been reported from these villages during the last six months ... I gathered valuable information from my talks with local political leaders as well as the villagers ..."
"It is a fact that LTTE smuggles gold and electronic items for sale into Tamil Nadu and takes back essential items like fuel, medicines, grains, pulses etc. It is also known that LTTE operates along the coastal belt falling in Thanjavur, Pudukottai and Ramanathapuram districts. These LTTE operations conducted through clandestine sailings have also been bringing in injured cadres for medical treatment at various private clinics in Tamil Nadu."
கருணாநிதி சொன்னதாக:
"Karunanidhi in his reply said, "There were few incidents, such as the shooting down of the EPRLF leader K.Pathmanbha, which actually happened because of the Center's fault. We had told Delhi that, in view of the rival LTTE presence here, the EPRLF men could be kept at some distance place - even Andaman - so that both sides remained unharmed. This did not take place and when the EPRLF leader came to Madras without telling us, he was gunned down by the Tigers."
இவற்றையெல்லாம் நம்புதற்கில்லை என்று நீங்கள் சொல்லலாம். இவற்றை நம்புவதற்கும், அதன் அடிப்படையில் கவலையுறுவதற்கும் எனக்கு உரிமை உண்டு.
சங்கரபாண்டி, உமக்கு பதில் சொல்ல சிறிது அவகாசம் வேண்டும். நன்றி.
Srikanth, what a perfect Indian you are? appreciate it.
ReplyDeleteOn the serious allegations raised by Shri P. Chidambaram in his letter to the Prime Minister, the Intelligence Bureau submitted its own detailed information and comments to the Ministry of Home Affairs on 20th January, 1991.
Do you honestly think this is still valid?
May Gods protect the lines of India. ;-)
சங்கரபாண்டி,
ReplyDeleteசுருக்கமாக வைத்துக் கொள்ள முயல்கிறேன். சனிக்கிழமை வீட்டுக்கு வரும் போது கொஞ்சம் சீக்கிரம் வாருங்கள் - மீதியை வைத்துக் கொள்வோம் :-)
நீங்கள் சொல்வது உண்மைதான். நான் நடுனிலைமையாளன் இல்லை தான். இரண்டு புள்ளிகளுக்க் நடுவில் எப்போதுமே நிற்பவருக்கு மட்டுமே அந்தப் பட்டம் உரியது என்ற அளவில். நான் இரண்டு புள்ளிகளுக்கும் சம்பந்தமில்லாத ஓரிடத்தில் இருக்கும் ஒரு புள்ளி. ஒரு சம்பவத்தில், விஷயத்தில் யார் பக்கம் அதிக நியாயம் என எனக்குத் தோன்றுகிறதோ அந்தப் பக்கம் கொஞ்ச காலம் சஞ்சாரிக்கும் புள்ளி.
//புலிகளின் ஆதரவு அல்லது இலங்கை அரசு ஆதரவு - மற்ற நிலைப்பாடுகள் இவற்றின் உட்கணங்களே (subset).//
இது கொஞ்சம் 'with us or against us' தொனியில் இருக்கிறது. நான் இலங்கை அரசு, புலிகள் இருவரையும் எதிர்க்கிறேன். புஷ்ஷையும் பின் லேடனையும் எதிர்க்கும் நம்மில் பலருக்கு இது புரியக் கூடிய ஒரு நிலைப்பாடு தான்.
பத்திரிக்கையாளர் சிவராமின் படுகொலைக்கு என்னிடம் கோபம் இல்லை என்றோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றோ நினைக்கிறீர்களா? இப்பொழுதும் கூட பத்ரி இப்பதிவை எழுதியிராவிட்டால், கதிர்காமர் கொலை பற்றி நான் இக்கருத்தை பதித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.
உங்கள் புலிகள் ஆதரவு நிலை குறித்து எனக்குப் பிரச்னையில்லை என்பது தெளிவு. ஏனெனில், அவர்கள் செய்த தவறுகளை தவறுகளாக நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். ஒரு கட்சிக்காரன் மனோபாவத்துடன் நீங்கள் பேசுவதில்லை. அதே போல், நான் அவற்றைச் சுட்டிக் காட்டும் போதும், ஒரு சிங்கள அரசின் கைக்கூலியாக நீங்கள் என்னைக் காண்பதில்லை என்றும் நம்புகிறேன்.
கதிர்காமர் மறைவு குறித்து எனக்குப் படிக்கக் கிடைத்த அலசல்களில் பத்ரியின் பதிவு தெளிவாக உணர்ச்சிவசப்படாமல் எழுதப்பட்ட ஒரு பதிவு.
ReplyDeleteஆனால் இந்தப் பிரசினையின் இன்னொரு கோணத்தையும் அவர் ஆராய்ந்திருக்கலாம். அது இதனால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள்.
ராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ இந்தப் படுகொலை புலிகளுக்கு உதவலாம். ஆனால் diplomacy கோணத்தில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.ராஜீவ்காந்தி படுகொலை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியதைப் போல.
அரசியல் அரங்கில் கதிர்காமர் ராஜீவ் அளவிற்குப் 'பெரிய' தலை அல்லதான். ஆனால் அவருக்கு diplomatic circleல் தனிப்பட்ட அளவில் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இதை மறக்கவோ மன்னிக்கவோ நெடுங்காலம் பிடிக்கும்.
இதன் ஓர் உடனடி விளைவாக உலக அரங்கில் விடுதலைப்புலிகள் தனித்துப் போக (isolate) ஆக நேரிடும். அது அவர்கள் தங்களது இலக்கை எட்டுவதைத் தாமதப்படுத்தும்.
கதிர்காமரின் இறுதிச்சடங்கில் பேசிய இலங்கைப் பிரதமர் இதைக் குறித்து கோடி காட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம், 9/11, லண்டன் குண்டுவெடிப்பு, ராஜீவ் கொலை இவற்றுக்கு நிகரானது, உல்கநாடுகள் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்த வேண்டும் என அவர் பேச்சு அமைந்திருந்தது. கதிர்காமர் படுகொலை பயங்கரவாதமாக உலக அரங்கின் முன் வைக்கப்படும் போது அதற்கான எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமல்ல.
எதை மனதில் கொண்டு செய்திருந்தாலும் இது விடுதலைப்புலிகளின் புத்திசாலித்தனத்தையோ, தொலைநோக்குப் பார்வையையோ புலப்படுத்தவில்லை.
கதிர்காமர் கொலை பற்றி செய்தி வெளியிட்ட எல்லா ஊடகங்களுமே விடுதலைப்புலிகளை சந்தேகித்துத்தான் செய்தி வெளியிட்டன். தேவைப்ப்ட்டால் சுட்டிகள் தருகிறேன். அந்த சந்தேகத்திற்கு ஆதாரமாக அவை காவல்துறை உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியிருந்தன. அப்படி இருக்க இந்து நாளிதழை மட்டும் ஏன் சுந்தரமூர்த்தி 'இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு' என்று காய வேண்டும்.
வருகிற செய்திகளை புலனாய்வு செய்து எழுத வேண்டும் எனற நிலை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இலங்கையிலிருந்து வெளிவருகிற தமிழ் தினசரிகள் எல்லாம் புலிகளின் அறிக்கைகளை, செய்திகளை புலனாய்ந்துதான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனவா? அவர்களைப் பற்றி எப்போதேனும் சுந்தரவடிவேல் எழுதியதுண்டா?
அன்புடன்
மாலன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமாலனின் புலிகளுக்கு ஏற்படும் "அரசியல்தள பின்னடைவு" குறித்த கருத்து மிக முக்கியமானது. அவரது யோசனையை வரவேற்கிறேன்.
ReplyDeleteஆனால் மாலனின் இந்த உளறலைதான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மாலன் போன்ற ஒருவர் இப்படி கேள்வி கேட்கும்போது தமிழகத்தில் மற்றவர்களின் நிலை குறித்துதான் யோசிக்க வேண்டியுள்ளது. இந்து பத்திரிக்கையை மட்டும் ஏன் காயவேண்டும்?
தமிழர்களின் கண்களை தமிழ் நாட்டில் கட்டி வைப்பதை "தி இந்து" பத்திரிகையைத் தவிர வேறெந்த நாளேடும் இவ்வளவு திறம்படசெய்வதாக சொல்லமுடியாது. இது சென்றடையும் மிகவும் (பல பிற விசயங்களில்) புத்திஜீவிகள் ஈழப்பிரச்சினையில் இந்துவை நம்புபவர்களாக உள்ளனர். (உதராணமாக பதிர்யின் பழைய பார்வைகள்,இந்துவுக்கு ஆதரவாக கேள்விகளையும், மாலனின் இந்தக் கேளிவிஅயையும் எடுத்துக்கொள்ளலாம். பலருக்கு இது போல் கேள்வி இருக்கும்) இந்து சென்றடையும் தமிழ் மகா ஜனங்கள் எண்ணிக்கை அளவில் அதிகம். என்வே பிற நாளேடுகளை புலனாய்வு செய்யாதபோதும் "தி இந்துவை" இப்படி புலனாய்ந்து செய்து எழுதுவது முக்கியமானதாகிறது.
//அப்படி இருக்க இந்து நாளிதழை மட்டும் ஏன் சுந்தரமூர்த்தி 'இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு' என்று காய வேண்டும்.
ReplyDeleteவருகிற செய்திகளை புலனாய்வு செய்து எழுத வேண்டும் எனற நிலை வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இலங்கையிலிருந்து வெளிவருகிற தமிழ் தினசரிகள் எல்லாம் புலிகளின் அறிக்கைகளை, செய்திகளை புலனாய்ந்துதான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனவா? அவர்களைப் பற்றி எப்போதேனும் சுந்தரவடிவேல் எழுதியதுண்டா?//
கார்த்திக் சரியாகச் சொன்னீர்கள்.
கூடவே, மாலன் ஏன் இங்கே பின்னூட்டம்கூட இடாத சுந்தரவடிவேலை இழுக்க வேண்டும்?
இந்தமாதிரியான அரைவேக்காட்டுப் பத்திரிகையாளர்கள் இந்துவிலும் இருப்பதால்தான் ஆராய்ந்து அறிய வேண்டிய நிலை. இந்த அரைவேக்காட்டுப் பத்திரிகையாளர்களின் அஜெண்டாவை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
þí¸Éõ,
பெயர் போட இயலாப்பதிவர்
off-topic
ReplyDelete//ஆரம்பகாலத்தில் EROS, PLOTE, EPRLF போன்ற இயக்கங்களின் மேல்தான் எனக்கே நம்பிக்கை இருந்தது, ஏனெனில், அவை சித்தாந்த ரீதியில் மிகத் தெளிவானவர்கள், அவர்கள் பேசிய விடுதலை அப்பாவி சிங்கள மக்கள், முஸ்லீம்கள், மலையகத்தமிழர்கள் ஆகியோரின் விடுதலையையும் உள்ளடக்கியது என்று நான் கருதியதுதான் காரணம். இந்தியப் படை இறங்கிய பிறகுதான் அறிந்தேன், வெறும் சித்தாந்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு எளிதில் சோரம் போகி விட்டார்கள் என்று - முதல் இரண்டு இயக்கங்களின் தலைமைகள் தங்களுடைய இயக்கத்தினரையே நிர்க்கதியாக விட்டு, தங்களுடைய சுயனலங்களுக்குப் பேரம் பேசத் தொடங்கி விட்டனர். இயக்கங்கள் காணாமல் போகிவிட்டன. புலிகள் அழித்தார்கள் என்பதெல்லாம் பாதிதான் உண்மை. ஈறோஸில் பாதிப் பேர் கலைத்துவிட்டு புலிகளுடனே கலந்து விட்டனர்.//
ஆட்டத்தில் 'வென்றிருப்பதால்' தலைமைக்கு சுயநலம் இலலையென்றும் அல்லாதவர்கள் 'சுயநலவான்கள்' என்றும் முடிவு கூறுவதும் இயல்புதான்.
//புலிகள் அழித்தார்கள் என்பதெல்லாம் பாதிதான் உண்மை. ஈறோஸில் பாதிப் பேர் கலைத்துவிட்டு புலிகளுடனே கலந்து விட்டனர்.//
உண்மைகளிற்கு ஆதாரம் தேவை. EROS ஐக் 'கலைத்தது' அதன் தலைமைதான்; அப்ப, புலிகளுடன் 'கலந்தது'தான் அத் தலைமையினது சுயநலம்?
EPRLF இன் நாபா -தமிழ்நாட்டைச் சேர்ந்த- அவரது மனைவி இன்று யாருமற்ற குழந்தையொன்றை வளர்த்துக்கொண்டிருக்கிறார். போராட்டகாலத்தில்தான் அவரும் ஒருத்தியை 'கடிமணம்' புரியாமல் அவளுக்குரிய மரியாதையுடன் மணந்துகொண்டார். பிறகு 'தனது' சுயநலத்திற்காக வாரிசு,சொத்து என -அவர் வாழ்ந்ததாய் நாங்கள் அறியவில்லை.
பத்மநாபாவின் சுயநலம் என்ன?
'பாதி' உண்மைகள் நேர்மையில்லாதவை.
கதிர்காமர் கொலை: விடுதலைப்புலிகள்தான் செய்தனர் என்பதைவிட, யுத்தத்தை விரும்புகிற யாரோ செய்திருக்கிறார்கள் என்றால் சரியாகிவிடுகிறது. அதற்காக வென்றவர் வரலாறுகளிலிருந்து சிலரது பிரேதங்களை பரிசோதனை செய்யவேண்டியதில்லை.
//ஆனால் diplomacy கோணத்தில் இது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.//
ReplyDeleteஆனால் புலிகளுக்கு இந்தப் பின்னடைவை ஏற்படுத்த விரும்பும் சக்திகள் இக்கொலையைச் செய்திருக்கலாமென்பதில் இந்த 'ஆய்வாளர்களுக்கு' சிறிதளவுகூட சந்தேகம் வராதது (அல்லது நம்பாவிட்டாலும் அப்படியொரு கோணத்தைச் சொல்ல முற்படாதது) ஆச்சரியமானது.
தன் கட்சிக்குள்ளேயே தன்னைக் கொல்ல முற்படுகிறார்களென்று (ஓரளவுக்கு யாரென்பதையும் சூசகமாகச் சொன்னபின்பு) சந்திரிக்காவே சிலமுறை பகிரங்கமாகச் சொல்லியுள்ள நிலையில், இன்று சந்திரிக்காவுக்கு ஒன்று நடந்தாலும் முழுக்கைகளும் புலிகளைநோக்கியே நீளுமென்பதில் ஐயமில்லை.
எண்பதுகளின் தொடக்கத்தில ஒரு நிலைமை இருந்தது பாருங்கோ. ஏதாவது தாக்குதல்கள் (குறிப்பாக கண்ணிவெடித்தாக்குதல்கள்) வெற்றிகரமாக நடந்தால் அது புலிகள் செய்தவையென்றும் (உரிமைகோரல்கள்கூட வலுவற்றவையாகவே அந்நேரத்திலிருந்தன) தாக்குதல்களில் பிசகுகள் இருந்தால் அது இ.பி.ஆர்.எல்.எவ் செய்ததென்றும் தமிழ்மக்களிடையே அனுமானமிருந்தது. ஈரோஸ் செய்த பலதாக்குதல்கள் புலிகள் உரிமைகோராத போதும் புலிகளாற் செய்யப்பட்டதாகவே அறியப்பட்டன.
எனக்கேனோ பழைய ஞாபகங்கள் வந்துது, ஒரு பேச்சுக்காகச் சொன்னன். பதிவுக்கு இது சம்பந்தமில்லாமலிருக்கலாம்.
A quick response to Maalan. I'll add more tonight.
ReplyDelete//சந்தேகத்திற்கு ஆதாரமாக அவை காவல்துறை உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியிருந்தன. அப்படி இருக்க இந்து நாளிதழை மட்டும் ஏன் சுந்தரமூர்த்தி 'இந்து நாளேடும் உடனடியாகத் தீர்மானித்ததற்கு' என்று காய வேண்டும்.
//
These are the first two sentences of 'The Hindu' editorial on Aug 15:
"The assassination of Foreign Minister Lakshman Kadirgamar is a monstrous act of terrorist aggression against the Sri Lankan state and against the ceasefire supposedly in place. There is not the slightest doubt that the Liberation Tigers of Tamil Eelam planned and executed this fiendish crime."
The News Analysis on the same day by Nirupama Subramaniam begins with the same premise. Neither of them quote SL authorities or refer them as the source, whereas in other places where I read or heard this news and opinion (including BBC Radio) SL authorities are referred as their source and they also add Tigers' denial in the same breath.
'The Hindu' doesn't follow this standard practice. It rather passes quick judgement as always.
//'The Hindu' doesn't follow this standard practice. It rather passes quick judgement as always.//
ReplyDeleteசுந்தரமூர்த்தி இந்த விஷயத்தில் சொன்னது சரி என்று தான் எனக்குப் படுகிறது. இதழியல் நெறிமுறைகளை மீறிய விதத்திலேயே அந்தத் தலையங்கத்தின் மொழி அமைந்திருந்தது.
1) இறந்தவருடனான குடும்ப/தனிப்பட்ட உறவின் அடிப்படையில் அல்லது சமூகத்தில் பாத்திரத்தைப் பொறுத்து இறந்தவர் குறித்த கவலை ஏற்படுகிறது.
ReplyDeleteகதிர்காமர் யாருடைய நலன்களைப் பிரதிநிதிப்படுதினாரோ அவர்களுக்கே அவர் இழப்பு கவலை தருகிறது.
2) சமூகம்/அரசியலில் தனிநபருக்கும் குறித்த முக்கியத்துவம் உண்டு. அதற்காக அந்த நபரை அழித்துவிடுவதால், அந்த நபர் பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் அழிந்துவிடுவதில்லை. அது வரலாற்றின் தொடர்ச்சியாக அடுத்த நபரைப் பிரதிநிதியாக்குகிறது. இதை மறுத்து தனிநபர் கொலைகளை அரசியல் வெற்றிகளாகப் பிரகடனம் செய்வதும்/இதனைத் தொடர்வதுமாக இருக்கையில் இக் கொலைகள் கண்டிக்கப்படுவதுடன், இவற்றின் பின்னாலுள்ள அரசியல் இனம் காணப்படல் வேண்டும்.
3) கொலையை அவர்/இவர் செய்தார் என்ற புலனாய்வுகள் நடக்கின்றன. அவரவர் தமது சார்புக்கேற்ப முடிவுகளை எழுதுகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் தலைவிதியை நாட்டிலுள்ள சக்திகளில் இலங்கை அரசு, புலிகள் என்ற இரண்டு சக்திகள்தான் தீர்மானிக்கின்றன. இலங்கை அரசின் அரசியல் விளைபொருட்களாக பொலிஸ், இராணுவம், குண்டர்படைகள் இயங்குகின்றன. புலிகளின் அரசியல் விளைபொருளாக துரோகக் குழுக்கள் இயங்குகின்றன. இலங்கை மக்களின் பிரநிதி தானே என்று மார்தட்டும் இலங்கை அரசும், தமிழ்ம்க்களின் பிரதிநிதி தாம் மட்டுமே என அடித்துக் கூறும் புலிகளுமே நடக்கின்ற அத்தனைக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கொடியேற்றுவதற்கும், வெளிநாடுகள் தரும் பணத்தைப் பிரித்தெடுப்பதற்கும் மட்டுமே பிரநிதித்துவம் இல்லைத்தானே.
4) இந்த ஒரு கொலையால் மட்டும் பாரிய மாற்றங்கள்/போர் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இவற்றிற்குரிய காலம் விரைவுபடுத்தப்படலாம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமையவே காய்கள் நகர்த்தப்படுகின்றன.
போராட்டம்/நடப்பு அரசியல் பற்றி மக்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. அனைத்தும் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது. வெற்றிகள் யாவும் இலங்கை அரசு/புலிகளுக்குரியதாகவும் தோல்விகள்/இழப்புகள் மக்களுக்குரியதாகவும் ஆகிவிட்டது.
5) இலங்கை அரசியல் ஆடுகளத்தில் இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளும் தயாராக இருக்கின்றன. இந்த நாடுகளின் எந்த சம்பந்தமுமின்றி நோர்வே மத்தியஸ்தம் வகிப்பதென்பது சாத்தியமற்றது.
6) நடுநிலமை பற்றியும் இங்கு பேசப்படுகிறது. அவரவர் சொந்தக் கருத்துகள் நடுநிலமையாயிருப்பது சாத்தியமற்றது. கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்பது கூட பக்கம் சார்ந்ததே. ஆனால் ஊடகங்கள் என்பன செய்திகளை அதற்குரிய தளத்தில் செய்திகளாகவே தரலாம். ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் இதுகூட இல்லை. யாழ்ப்பாண தமிழ் ஊடகங்களும் அரசை விமர்சிக்கின்றன. கொழும்பு தமிழ் ஊடகங்களும் அரசை விமர்சிக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமல்ல, கொழும்பிலிருந்தும் புலிகளை விமர்சிக்க முடியாது என்பதே நடைமுறையிலுள்ள துயரம்.
இந்த நிலமையில் வலைப்பதிவாளர்கள் ஆளாளுக்கு புலி/துரோகி என்று மாறி மாறி முத்திரை குத்தி சுய திருப்தி அடையாமல் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்யக்கோருகிறேன். சமூகப் பொறுப்பு எல்லோருக்குமுரியதுதானே.
பொறுக்கி
பொறுக்கி, அற்புதமான வேண்டுகோள்!மிகத் துல்லியமான கருத்துக்கள்.இதனடிப்படையில் சிந்திப்பதுதாம் இப்போதையத் தேவையுங்கூட.மிகுந்த பொறுப்புணர்வோடு நீங்கள் விஷயங்களை அலசுகிறீர்கள்.தங்களின் ஆழ்ந்த பார்வைகளுக்கு நன்றி பொறுக்கி.
ReplyDeleteநட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
எல்டிடிஈயும் சிங்கள ராணுவமும் நல்லா ஊரை ஏமாத்திகிட்டிருக்காங்க. இவனும் அவனும் ஒன்னுக்குள்ள ஒன்னு. ஐபிகேஎஃபை அடிக்க பிரேமதாஸா எல்டிடிஈக்கு காசு கொடுத்ததிலேர்ந்து ரெண்டு பேரும் நல்லா சேக்காளியாயிட்டானுங்க. அவன் சிங்களனை ஏமாத்தி காசு பிடுங்கவும், இவன் தமிழனை ஏமாத்தி காசு பிடுங்கவும் நல்லா பிஸினஸ் நடக்குது. அடுத்தாப்பில இப்ப அமைதி பேச்சுவார்த்தையால காசு பண்ணமுடியலைன்னு இப்ப போர் ஆரமிக்கிறான். அவந்தான் ஆரமிச்சதுன்னு இவனும், இவந்தான் ஆரமிச்சதுன்னு அவனும் ஊரை ஏமாத்தி காசு பண்ணப்பாக்கிறானுங்க.
ReplyDeleteஇந்த கதிர்காமர் கொலையக்கூட ரெண்டு பேரும் சொல்லிவச்சிக்கிட்டே செஞ்சிருந்தாலும் ஆச்சரியப்படவேதுமில்ல.
இவனுங்க ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியாயிட்டாங்கன்னு தெரிஞ்சதும் இந்தியா இந்த பக்கமே தலைவச்சி படுக்கிறதில்லை. ஆனா, இந்த ரெண்டு பேருக்கும் ஊரை ஏமாத்த கெடச்ச இன்னொரு வில்லன் இந்தியா. ஐபிகேஎஃப் ஐபிகேஎஃப்னு பஜனை பண்ணா, சிங்களவனுக்கும் தமிழனுக்கும் கொஞ்சம் வெறி ஏறி சாமியாடுவானுங்க. அத வச்சி காசு பண்ணிக்கலாம். இன்னும் கொஞ்சம் பேரை அங்கயும் இங்கயும் கொன்னு சிங்களவனுக்கு தமிழன் மேலயும் தமிழனுக்கு சிங்களவன் மேலயும் வெறியேத்தலாம்.
போங்கடா நீங்களும் உங்க ... இதுவும்... இங்க ரெண்டுவகை. ஒன்னு ஊரை ஏமாத்துற கூட்டம். அடுத்தது ஏமாந்து போற ஏமாளிக்கூட்டம்.
முன்னாள் ஏமாளி
//ஸ்ரீகாந்த் சொன்னது: பத்திரிக்கையாளர் சிவராமின் படுகொலைக்கு என்னிடம் கோபம் இல்லை என்றோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றோ நினைக்கிறீர்களா? இப்பொழுதும் கூட பத்ரி இப்பதிவை எழுதியிராவிட்டால், கதிர்காமர் கொலை பற்றி நான் இக்கருத்தை பதித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.//
ReplyDeleteநான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் தராக்கி கொலை செய்யப்பட்ட பொழுதும், பல ஈழத்தமிழர் வலைப்பதிவுகளில் தனிப்பதிவாகப் போட்டார்கள், அவற்றில் ஒன்றில் கூட இது பற்றிய கருத்தை தெரிவிக்காமல் நீங்கள் இங்கு பெரும் எதிர்ப்பைத் தெரிவிக்க அனைவரையும் வேண்டியதால் சொன்னேன் உங்களுடைய புலிகள் எதிர்ப்பு இலங்கை அரசை எதிர்ப்பதை விட அதிகம் என்று (இரண்டையும் ஆதரவு என்று மாற்றிப் படித்தாலும் சரி). அதையும் ஒரு குற்றச்சாட்டாக முன் வைக்கவில்லை. அவரவர் நிலைப்பாட்டின் படி அவரவர் கருத்துக்களின் தீவிரம் இருக்கும் என்கிறேன்.
//உங்கள் புலிகள் ஆதரவு நிலை குறித்து எனக்குப் பிரச்னையில்லை என்பது தெளிவு. ஏனெனில், அவர்கள் செய்த தவறுகளை தவறுகளாக நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். ஒரு கட்சிக்காரன் மனோபாவத்துடன் நீங்கள் பேசுவதில்லை. அதே போல், நான் அவற்றைச் சுட்டிக் காட்டும் போதும், ஒரு சிங்கள அரசின் கைக்கூலியாக நீங்கள் என்னைக் காண்பதில்லை என்றும் நம்புகிறேன்.//
வெறும் கருத்துத் தளத்தில் நடக்கும் விவாதத்தை வைத்து மாற்றுக் கருத்து உள்ளவரை கைக்கூலி, தேசவிரோதி, தமிழ்த் துரோகி என்றெல்லாம் அழைப்பதை பாசிஸம் என்று கருதுகிறேன், வெறுக்கிறேன், எதிர்க்கிறேன். அப்படியெல்லாம் விவாதம் நடக்காததன் விளைவுதான் இலங்கையிலும் காஷ்மீரிலும் இயற்கை அன்னை தந்த அழகான பூமியை இரத்தம் படிய வைத்துள்ளோம். அந்த அடிப்படையில்தான் போட்டா சட்டத்தையும், அதன் கீழ் புலிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாலே சிறையில் அடைத்து சித்தரவதை செய்த பாரதிய ஜனதா - அதிமுக அரசுகளையும் எதிர்க்கிறேன். துரோகிகள் என்று பட்டம் கட்டி ஆயுதமேந்தா பலரை புலிகள் தீர்த்துக் கட்டியதையும் எதிர்க்கிறேன். பேச்சுரிமையைப் பாதுகாத்து வந்த அமெரிக்க நாட்டில் கூட பாசிஸ எண்ணம் ஆட்சியாளரைப் படர்ந்து வருகின்றதோ என்று பயமாக இருக்கிறது.
//பொடிச்சி சொன்னது: EROS- ஐக் 'கலைத்தது' அதன் தலைமைதான்; அப்ப, புலிகளுடன் 'கலந்தது'தான் அத் தலைமையினது சுயநலம்?
EPRLF இன் நாபா -தமிழ்நாட்டைச் சேர்ந்த- அவரது மனைவி இன்று யாருமற்ற குழந்தையொன்றை வளர்த்துக்கொண்டிருக்கிறார். போராட்டகாலத்தில்தான் அவரும் ஒருத்தியை 'கடிமணம்' புரியாமல் அவளுக்குரிய மரியாதையுடன் மணந்துகொண்டார். பிறகு 'தனது' சுயநலத்திற்காக வாரிசு,சொத்து என -அவர் வாழ்ந்ததாய் நாங்கள் அறியவில்லை.
பத்மநாபாவின் சுயநலம் என்ன? //
நீங்கள் சொல்வது உண்மைதான் - பாலக்குமார் ஈரோஸைக் கலைத்தது சுயனலம்தான். என்றாலும், அவர் இந்தியாவிடம் சரணடைவதா அல்லது புலிகளிடம் சரணடைவதா என்று யோசித்து, வரதராஜ பெருமாள் போல வசதியாக இந்தியாவில் வாழ்வதை விடுத்து ஈழத்தில் மக்கள் மத்தியிலே வாழ முடிவு செய்தது மேல் என்று நினைக்கிறேன். அதில் சுயனலம் என்பதை விட இருதலைக் கொள்ளிகளில் எந்தக் கொள்ளிப் பக்கம் போவது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுது ஓரளவுக்காவது தன்னுடைய இலட்சியம் நிறைவேறுமே என்ற ஏக்கம்.
பத்மனாபா பற்றிய உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். நான் இன்றும் வன்மையாகக் கண்டித்து வரும் புலிகளின் தவறுகளில் ஸ்ரீசபாரத்தினம், பத்மனாபா படுகொலைகள் உண்டு. நான் சுயனலமிகள் என்று குறிப்பிட்டது உமா மகேஸ்வரன், வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை.
மற்றபடி பொறுக்கி, ப.வி.ஸ்ரீரங்கன், "முன்னாள் ஏமாளி" போன்றவர்களின் கருத்துக்களில் எனக்குப் பிரச்சினையில்லை. ஈழப் பிரச்னை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு மற்றும் புலிகள் மூவரும் காரணம். மூவரின் குற்றங்களையும் விமர்சிப்பவர்களை மதிக்கவே செய்கிறேன். ஆனால் மொத்தப் பழியையும் புலிகள் மேல் போட்டு தாக்கி இலங்கை அரசுக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கும் இந்து போன்ற விஷப் பத்திரிகைகளை அடையாளம் காட்டுவதே என் நோக்கம். அந்த அடிப்படையில் நான் புலிகளை ஆதரிக்க வேண்டிய கட்டாயம், சொல்லப் போனால் ஒரு neutralization முயற்சி எனலாம்.
அது போக தார்மீக அடிப்படையில் பார்க்கப் போனாலும், பாதிக்கப் பட்ட ஈழத்தமிழர்கள் அவர்களைத் தான் அதிகம் ஆதரவாகப் பார்க்கிறார்கள், இலங்கை அரசை எந்தக் காலத்திலும் நம்பவே போவது இல்லை, அது 1976 தேர்தலோடு போய் விட்டது. இந்தியாவின் மேல் வைத்திருந்த அபரிமித நம்பிக்கையை இந்தியாவே கெடுத்துக் கொண்டது. அந்த நம்பிக்கையை மீட்க இந்தியா இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக இந்திய உளவு நிறுவனங்கள் அதை மேலும் கெடுக்கும் முயற்சியில்தான் எப்பவும் உள்ளன.
நன்றி - சொ. சங்கரபாண்டி
சொ.சங்கரபாண்டி அவர்கள் கடைசியாகச் சொன்ன கருத்துடன் மேலே பொறுக்கி என்ற பெயரில் எழுதிய நண்பரும் ப.வி.சிறீரங்கனும் கூறிய கருத்துகளை நான் வழிமொழிகிறேன்.
ReplyDeleteஇன்றைய ஈழத்தமிழர்களின் பிரச்சனை என்னும் நச்சு வட்டம் திரும்பத் திரும்ப இந்தியா,இலங்கை,விடுதலைப்புலிகள் என்னும் மூன்று புள்ளிகளை இணைத்தவாறே சுழன்று கொண்டிருக்கிறது.இலங்கை அரசுக்கு ஆதரவான பிற நாடுகளும் சரி தமிழ்க்குழுக்களும் சரி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களும் சரி இந்த நச்சு வட்டத்துக்குள்ளே தாங்கள் தாங்கள் சார்ந்தவரை மையப்படுத்தியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் நடக்கும் ஒரு கொலைக்கு ஒரு தரப்பை மட்டும் சுட்டிக் காட்டுவதென்பது.வழமையாகவே நாங்கள் செய்யும் தவறுகளில் ஒன்று.
மலான் அவர்கள் குறுப்பிட்டபடி கதிர்காமரின் இழப்பானது புலிகளுக்கு அரசியற் தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துமென்பது மிகவும் உண்மை.ஆனால் அவர் அதை புலிகள் தான் செய்தார்கள் என்று உறுதியாக நம்பி புலிகளின் தூரநோக்கற்ற சிந்தனைக்கு உதாரணமாக இதனைச் சுட்டுகிறார்.
அரசியற் தளத்தில் இப்படியான ஒரு பாதிப்பைப் புலிகளுக்கு ஏற்படுத்த விரும்பி எதிர்ச் சக்திகள் இப்படுகொலைகளைப் புரிந்திருக்கலாம் என்றவொரு பக்கத்தையும் இங்கே விவாதத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்
பத்ரி,
ReplyDeleteஎன் பின்னூட்டம் உங்கள் பதிவைப் படித்தபிறகு தோன்றிய கருத்துக்கள். கேள்விகள் உங்களை நோக்கி எழுப்பப்பட்டதல்ல. பொதுவானவை. புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக சில சுட்டிகளை ஒரு (வலைப்பதிவில் பெயரைக் குறிப்பிட விரும்பாத) நண்பர் தனி அஞ்சலில் அனுப்பியிருந்தார். அவை
Some of the links that have direct or indirect connection with armed forces / paramilitary
Col. Shankar
http://www.tamilnation.org/ltte/01shankar.htm
http://www.eelam.com/freedom_struggle/ltte_press_releases/2001/PR20010926.html
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=20040827001505500.htm&date=fl2117/&prd=fline&
dikkan
http://www.ltteps.org/?view=801&folder=2
Bawa
http://64.233.161.104/search?q=cache:KX_ItDEKEgIJ:www.hindustantimes.com/2004/Aug/21/5922_960666,0015002200000158.htm+bawa+ltte&hl=en
Kousalyan
http://www.uthayam.net/feb2005/feb2005pa3.pdf
இவற்றில் சில சுட்டிகள் புலிகள் ஆதரவு தளங்களில் உள்ளவை. அதனால் பாரபட்சம் இருக்கலாம். ஆனாம் இப்போது விவாதிக்கப்படும் கதிர்காமர் கொலையும் கூட இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களை வைத்து தான் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஸ்ரீகாந்த்,
விளக்கத்துக்கு நன்றி. ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளும் உங்கள் உரிமையை நான் கேள்விக்குள்ளாக்கவில்லையே!
'நமது எல்லைகளை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும்' என்றால் 'இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்க அல்லது துண்டாட முயலும் சக்தியிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவா, யார் அத்தகைய நோக்கங்களைக் கொண்டுள்ளனர்' என்ற அடிப்படையிலேயே நான் கேட்டது. மற்றபடி நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளது போன்ற விவரங்கள் பழசாக இருந்தாலும் அடிக்கடி பலமுறை கேள்விபட்டவையே. அதை நம்பக்கூடாது என்பதற்கு எனக்கு எந்த காரணமும் இல்லை.
போராளிகள் இந்தியப் பகுதிக்கு வந்துபோவதும், (சிதம்பரமும், மற்றவர்களும் கூறியுள்ளது போன்ற) பிற நடவடிக்கைகளும் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்துக்கு முன்னாலும் தொடர்ந்து நடந்து வந்தவை தான். அப்போதெல்லாம் நமது நாட்டு எல்லைக்கு ஏற்படாத அச்சுறுத்தல் இப்போது மட்டும் ஏற்படும் என்பது சற்று மிகையான கற்பனையே என்பது என் கருத்து.
போராளிகள் இந்திய எல்லைக்குள் வந்து தங்கம், மின்னணுச் சாதனங்கள் விற்பது, இங்கிருந்து எண்ணெய், மருந்து, அரிசி, பருப்பு வாங்கிப்போவது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்றால், இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துச் செல்வதும், சுடுவதும் எந்த வகையில் சேர்த்தி?
எல்லைதாண்டி வந்து சட்டத்திற்குப் புறம்பாக பொருட்கள் வாங்குவது, விற்பது இங்கும் தொடர்ந்து நடப்பவை. கனேடியர்கள் அமெரிக்க எல்லைக்குள் வந்து எண்ணெய் வாங்கிப்போவதும், அமெரிக்கர்கள் கனடா, மெக்சிகோ போய் மலிவு விலை மருந்துப்பொருட்கள், க்யூபா சுருட்டுகள் வாங்கிவருவதும், மெக்சிகோவிலிருந்து ஆண்கள் வேலைவாய்ப்புத் தேடியும், பெண்கள் குழந்தை பெற்றுக்கொல்ள திருட்டுத் தனமாக அமெரிக்க எல்லையைக் கடப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கிடையே சில வன்முறை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இருபக்க சமூக, பொருளாதாரக் காரணங்களினால் இவை தடுக்கவியலாததாகவே இருக்கின்றன. அதற்காக இவையெல்லாம் சரி என்று சொல்லவில்லை. ஆனால் இவற்றையெல்லாம் ஒரு நாட்டின் இறையாண்மைக்கும், எல்லைக்கும் அச்சுறுத்தல் என்று கொள்ளமுடியுமா என்பதே என் கேள்வி.
ஆங்கிலேயர் விட்டுச் சென்றபிறகு, பல இனக்குழுக்கள்--பஞ்சாபியர்கள், வங்காளிகள், காஷ்மீரிகள், தமிழர்கள்--'சர்வதேச எல்லைகளால்' பிளவு பட்டுக்கிடக்கின்றன. அதற்கும் முன் சுதந்திரமான போக்குவரத்தும், கொடுக்கல் வாங்கலும் இருந்திருக்கிறது. சுதந்திரம் பெற்றபின் இக்குழுக்கள் சுதந்திரம் இழந்ததை எப்படி எதிர்கொள்வது? அதை 47க்குபின் பெற்ற வெறும் தேசாபிமானத்தை வைத்து மட்டும் அணுகுவது எனக்கு உடன்பாடானதல்ல.
மாலன்,
நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த இந்துவின் தலையங்கம், செய்தி அலசல்களின்படி(இன்று கூட அமித் பருவா இன்னொரு முறை சொல்லியிருக்கிறார்) கொலையை செய்தது புலிகளே என்று ஒரே நாளில் தீர்க்கமாக தீர்மானித்துவிட்டது தெளிவாகவே தெரிகிறது. 'Pol Potist' குழுவை கடுமையாக தாக்கவும், இலங்கை அரசை தாங்கிப் பிடிக்கவும் கிடைக்கும் எந்த சிறுவாய்ப்பையும் தவறவிடாத இந்துவில் இப்படி எழுதப்படுவது ஆச்சர்யமளிக்கவில்லை. அதை நீங்கள் மறுப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
நேற்று இந்தோனேசிய அரசும்-அச்சே விடுதலை இயக்கமும் செய்துக்கொண்ட ஒப்பந்தம் இந்துவின் கண்ணில் படவில்லை போலிருக்கிறது. அதை வைத்து 'Pol Potist' குழுவுக்கு இன்னொருமுறை உபதேசம் செய்து, இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்கி இன்னும் தலையங்கம் வரவில்லையே! ஒருவேளை இந்த வாரத் தவணைக்கு கதிர்காமர் கொலை வாய்ப்பளித்துவிட்டதால், இதை அடுத்த வாரத் தவணைக்காக வைத்திருப்பார்களோ என்னவோ!
மற்றபடி, பத்ரியும், நீங்களும் நினைப்பது போலவே எனக்கும் கதிர்காமர் கொலையின்--அதை யார் செய்திருந்தாலும்--விளைவுகள் அச்சமேற்பட வைப்பதாகவே உள்ளது.
மாலன், உங்களுக்கு இன்னும் சுந்தரமூர்த்தி/சுந்தரவடிவேல் குழப்பம் தீரவில்லை என்று நினைக்கிறேன் :-)
சுந்தரமூர்த்தி: நேற்றே ரமணியின் பதிவில் ஷங்கர், திக்கன், பாவா, கவுசல்யன் பற்றிய தகவல்களைப் பார்த்துவிட்டேன். ஷங்கர் கொலை அமைதி ஒப்பந்தத்துக்கு முன்னால் நடந்தது (என்று நினைக்கிறேன்). கவுசல்யன் கொலை கருணா விவகாரத்தின்போது நடந்தது.
ReplyDeleteகருணா விவகாரம்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது அமைதியைக் குலைக்கும் விதமாக இலங்கை அரசினால் செய்யப்பட்டது என்பதை நான் முன்னமேயே சொல்லிவிட்டேன்.
ஆனாலும் இந்த நான்கு பேர்களுக்கு சமமாக புலிகளும் கொழும்பில் சில கொலைகளை (முக்கியமாக கருணா கூட்டணியினரை, ஈரோஸ் மோகனை) செய்துள்ளனர்.
இவையனைத்தும் என் கணிப்பில் கதிர்காமர் கொலைக்கு சமமானவை அல்ல. கதிர்காமருக்கு சமமான தலைவர்கள் என்று பார்த்தால் அண்டன் பாலசிங்கம் என்று சொல்வேன். அதனால் அண்டன் பாலசிங்கம் மீது இலங்கை அரசு கொலை முயற்சி செய்யவேண்டும் என்று நான் சொல்வதாக யாரும் நினைக்கவேண்டாம்!
கதிர்காமர் கொலையை தராக்கி சிவராம் கொலையுடன் ஒப்பிடுவதும் சரியானதல்ல. (அதனால் சிவராம் கொலை ஏற்றுக்கொள்ளக்க்கூடியது என்றும் நான் சொல்லவில்லை.)
மொத்தத்தில் இதுவரையில் நிகழ்ந்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தை மீறல்களில் இப்பொழுது நடந்துள்ளதுதான் மிக அதிகமான மீறல். இப்படி நான் மட்டும் நினைக்கவில்லை. இலங்கை அரசும் நினைக்கிறது. அதனால்தான் நெருக்கடி நிலை. மீண்டும் போர் வரும் அபாயம் etc.
நேற்றும் கூட ஐ.நா பாதுகாப்புச் சபை அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் அதை இரு தரப்பினரும் கேட்கப்போவதில்லை என்பதுதான் எனது கருத்து. அவ்வளவே.
பத்ரி நீங்கள் சொல்வது சரியே ஆனால் இதுவரை காலமும் புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டியும் அறிவுரை கூறியும் வந்த ஐ.நா சபை மனித உரிமை அமைப்புகள் போன்றோர் இம்முறை சரி சமமாக புலிகளையும் அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டியிருப்பதையும்.போர் நிறுத்த உடன்படிக்கையை மதித்து நடக்கவேண்டுமென்று இருபகுதியினரையும் வேண்டியிருப்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteஇந்தக் கொலையை புலிகள் செய்திருப்பார்கள் என்று இவ்வாறான அமைப்புகள் நம்பினாலும் அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான எதிர்வினையாகப் பார்க்கிறார்களே ஒழிய ஒருதலைப் பட்சமாக புலிகள் உடன்படிக்கையை மீறிவிட்டதாகக் கருதவில்லை என்பதே இதிலிருந்து தெரியும் உண்மை.
நீங்கள் சொல்வதுபோல அத்தனை விரைவில் போர் ஒன்று வருவதற்கான சாத்தியப்பாடை இக்கொலை தரவில்லை என்பதே உண்மை.அமைதி நடவடிக்கைகளை ஓரளவு இடையூறு படுத்தியிருக்கலாம் ஆனால் முற்றாக நிறுத்தவில்லை.
இக்கொலை அரசாங்கத்தினது உள்வீட்டுச் சதியாகவோ அல்லது அரசுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் இராணுவத்தினரின் செயற்பாடாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று தமிழ்ச்செல்வன் நேற்று தமிழ்த் தேசியத் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இது பற்றிய எனது விரிவான பதிவை இன்று எழுதுகிறேன்
அன்புள்ள சுந்தரமூர்த்தி,
ReplyDeleteஎன்னுடைய ஆட்சேபங்கள் இதுதான்.
இந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற பத்திரிகை அல்ல. அதற்காக இந்து 'உடனடியாக' முடிவுக்கு வந்ததாக சொல்வது சரியல்ல.
ஆகஸ்ட் 12ம் தேதி இரவு கதிர்காமர் கொல்லப்பட்டார். 13ம் தேதி காலை இந்து வெளியிட்ட செய்தி இது:
COLOMBO: Sri Lankan Foreign Affairs Minister Lakshman Kadirgamar (73) was shot dead by "an unidentified gunman'' in Colombo on Friday night.
No arrests have been made. Though authorities were reluctant to name any suspects, the hand of the Liberation Tigers of Tamil Eelam is suspected. Mr. Kadirgamar was a known target of the Tigers.
அது an unidentified gunman என்றுதான் குறிப்பிடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக ச்ந்தேகிக்கப்படுகிறது என்றுதான் குறிப்பிடுகிறது.
சந்தேகிக்கப்படுவதாகக் கூட சொல்லியிருக்கக் கூடாது என்று நீங்கள் வாதிடலாம். மற்ற இதழ்கள் என்ன சொல்லின என்பதைப் பார்த்துவிட்டு இதைக் குறித்துப் பேச்லாம்.
இது இந்துஸ்தான் டைம்ஸ் (13.8.05)
The assassination of the Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar by a suspected LTTE sniper late on Friday night, has dealt a grievous blow to the peace process in the troubled island country.
இது டைம்ஸ் ஆப் இந்தியா (13.8.05)
Kadirgamar was shot around midnight Friday by suspected Tamil rebels, inflicting a major blow to President Chandrika Kumaratunga's government, which strongly depended on him to bargain peace with Tamil rebels.
இந்து மட்டுமல்ல மற்ற நாளிதழ்களும் இந்தக் கொலைக்குப் பின் புலிகள் இருப்பதாகத்தான் சந்தேகித்திருக்கின்றன. இவற்றில் இந்து மட்டும்தான் அடையாளம் தெரியாத ஒருவரால் சுடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் அதைத்தான் நீங்கள் 'உடனடி முடிவுக்கு' வந்து விட்டதாக சொல்கிறீர்கள்.
சரி பிபிசி என்ன சொன்னது? இதோ:
Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar has been assassinated in a gun attack in the capital, Colombo.
The murder was blamed by a senior police officer on the separatist Tamil Tigers, who have been observing a ceasefire since 2002
இந்து 13ம் தேதி வெளியிட்ட செய்தியின் கடைசிப் பகுதி இது:
Agency reports said government officials declined to comment on who was to blame for the shooting, but Inspector-General of Police Chandra Fernando blamed it on the LTTE.
``It's the Tigers,'' he told reporters.
பிபிசி செய்தியில் காணப்படுவது இது:
A senior police officer quoted by Reuters blamed the rebels, who want an independent state in the north, for carrying out the attack.
"It's the Tigers," Inspector General of Police Chandra Fernando told reporters, the agency said
என்வே
அ)கொலையாளிகள் புலிகளாக இருக்கலாம் என்பது இந்துவின் கண்டுபிடிப்பல்ல.
ஆ)அது "உடனடியாக" முடிவுக்கு வந்துவிடவில்லை.
ஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது.கதிர்காமர் படுகொலையை ஒட்டி இந்துவில் வந்த கட்டுரைகளுக்கு இந்துவை பொறுப்பாக்க வேண்டாம். அவை அதன் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அதை எழுதியவரது பெயரும் பிரசுரிக்கப்படுகின்றன. அவர்கள் இந்துவில் பணியாற்றும் செய்தியாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கென்று தனியாகக் கருத்துக்கள் இருக்கக் கூடாதா?
நீங்கள் குறிப்பிடும் தலையங்கம் வெளியானது ஆகஸ்ட்15ம் தேதி திங்களன்று.
அதற்கு முன் தினம் ஒரு செய்தி வெளியானது.Evidence points to LTTE, says Colombo என்ற அந்த செய்தி சொல்வதென்னவென்றால்:
"Inspector-General of Police Chandra Fernando told journalists that evidence available and the weapons brought by the assassins pointed to the involvement of the Liberation Tigers of Tamil Eelam. "Looking at the weapons used and the style, it is definitely the work of the LTTE. There is no other group with weapons like this," he said."
ஆயுதம், கொலை செய்யப்பட்ட விதம், கொலைக்கான மோட்டிவ் இவற்றைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் மீதான சந்தேகம் வலுவடைகிறது. அந்த அடிப்படையில் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கலாம்.
இந்து Nationalim மீது நம்பிக்கை உள்ள ஓர் நாளிதழ். அது கதிர்காமரின் கொலையை ஒரு Nationalistன் மரண்மாகப் பார்ப்பதால் அது கடுமையாக எழுதியிருக்கலாம்.
இறையாண்மையின் அடிப்படையில்
அமைந்த தேசியம், மொழியின் அடிப்படையில் அமைந்த தேசியம், இனத்தின் அடிப்படையில் அமைந்த தேசியம் எனப் பல கருத்தாக்கங்கள் இருக்கின்றன. உலகப் போர் முடிவடடைந்த நிலையில் உதயமான் குடியரசுகள் பெரும்பாலும் நிலவியல்/இறையாண்மை அடிப்படையில் அமைந்த குடியரசுகள். அவற்றில் பல, பல இன, மொழி, மத, கலாசாரங்களை உள்ளடக்கிய ஒரு நாடாக உருவானவை. இந்தியா அப்படி உருவான குடியரசு. இந்தக் கருத்தியலை இந்து ஆதரிக்கிறது.
விடுதலைப் புலிகள் மொழி/ இனத்தை முதன்மைப்படுத்திய தேசியத்தை இலட்சியமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. 'தோன்றுகிறது' எனச் சொல்லக் காரணம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களை அவர்கள் யாழிலிருந்து குடி பெயரச் செய்தது.
இந்தக் கருத்தாக்கங்கள் இரண்டும் இயல்பிலேயே ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை. அந்த முரண்பாடுதான் இந்துவிலும் பிரதிபலிக்கிறது.
இந்துவில் மட்டுமல்ல, இன்று உலகில் உள்ள பல ஊடகங்களில், பணியாற்றும் ப்ல செய்தியாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இல்லை. ஈழத்தை ஆதரிக்கிறவர்களிலும் கூட புலிகளை ஆதரிக்காதவர்கள் இருக்கிறார்கள். செய்தியாளர்களில் மட்டுமல்ல, நிர்வாகிகள், டிப்ளமேட்கள், நாடாளுமன்றவாதிகள் இவர்களிடையே புலிகளுக்கு உள்ள ஆதரவு மிகக் குறைவு.
இந்த நிலை ஏன் ஏற்பட்டது? இது அந்த இயக்கத்தின் தலைமைத்துவத்தின் திறன் எத்த்கையது என்ற கேள்வியை எழுப்பவில்லையா? கடந்த 22 ஆண்டுகளாக புலிகள் செய்யும் தவறுகள் எப்படி அவர்களை அவர்கள் இலட்சியமான ஈழத்தை அடைவதிலிருந்து தூர எடுத்துச் சென்றிருக்கிறது, அந்த இலட்சியத்தை அடைவதை கடினமாக்கியிருக்கிறது என்பதை சிந்திக்கவும் விவாதிக்கவும், அதை ஈழ மக்களிடம் எடுத்துரைக்கவும் ஈழத்தின் மீது நிஜமான அக்கறை கொண்டவர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
பி.கு:
1அசே பற்றி இந்து நேற்று விரிவாக செய்தி வெளியிட்டிருக்கிறது. காண்க: http://www.hindu.com/2005/08/16/stories/2005081601401300.htm
2. பெயர் குழப்பத்திற்கு வருந்துகிறேன்.
அன்புடன்
மாலன்
கௌசல்யன் மற்றும் அரியநேந்திரன் கொலை கருணாவிவகாரத்தின்போது (அதாவது கருணாவின் பிளவின் காலகட்டம்) நடக்கவில்லை. மாறாக பல மாதங்கள் பின்தள்ளியே நடந்தவை. அதாவது ஏப்ரல் 2004 இல் கருணா பிளவு. பெப்ரவரி 2005 இல் கௌசல்யன் கொலை.
ReplyDeleteஇன்னுமொரு விசயம். அது 'ஈரோஸ்' மோகனன்று. 'புளொட்' மோகன். மேலும் முத்தலிப்பையும் அரசதரப்பிற் கொல்லப்பட்ட பெறுமதியான உயிர்கள் வரிசையிற் சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்கண்டவை ஒரு தகவலுக்காகவே. விவரப்பிழைகளைச் சுட்டிக்காட்டினேன். இவை ஒருபோதும் முதன்மை வாதத்துக்கு உதவமாட்டா.
கௌசல்யன் என்று வந்திருக்க வேண்டும்.
ReplyDeleteஉங்கள் பதிவில் கவுசல்யனின் பெயரைச் சரியாகப் பதிக்க விடமாட்டேனென்கிறது.
ReplyDelete//எல்லைதாண்டி வந்து சட்டத்திற்குப் புறம்பாக பொருட்கள் வாங்குவது, விற்பது இங்கும் தொடர்ந்து நடப்பவை. கனேடியர்கள் அமெரிக்க எல்லைக்குள் வந்து எண்ணெய் வாங்கிப்போவதும், அமெரிக்கர்கள் கனடா, மெக்சிகோ போய் மலிவு விலை மருந்துப்பொருட்கள், க்யூபா சுருட்டுகள் வாங்கிவருவதும், மெக்சிகோவிலிருந்து ஆண்கள் வேலைவாய்ப்புத் தேடியும், பெண்கள் குழந்தை பெற்றுக்கொல்ள திருட்டுத் தனமாக அமெரிக்க எல்லையைக் கடப்பதும் தொடர்ந்து நடக்கின்றன. இதற்கிடையே சில வன்முறை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இருபக்க சமூக, பொருளாதாரக் காரணங்களினால் இவை தடுக்கவியலாததாகவே இருக்கின்றன. //
ReplyDeleteசுந்தரமூர்த்தி,
கனேடியர்கள் வால்மார்ட் வருவதையும், ஆயுதமேந்திய போராளிகள் கடலோர கிராமங்களிலும், சென்னையிலும் வலம் வருவதையும் ஒப்பிடுவது சரியா? அமைதி உடன்படிக்கையோ, போர் வெற்றியோ ஏதோ ஒன்று வந்து சகஜ நிலை திரும்பிய பிறகு ஒரு நெகிழ்வான பொருள் போக்குவரத்திற்கும், பரிவான குடியேற்றச் சட்டத்திற்கும் நான் ஆதரவாக இருப்பேன். இன்றைய சூழ்நிலையில் மாட்டேன்.
எனது நிலையின் சாராம்சம் இதுதான்: எழுபதுகளிலும், எண்பது தொடக்கங்களிலும், இலங்கையில் தெளிவாக நல்லவர்கள் என அடையாளம் காணப்படக் கூடியவர்கள் இருந்தார்கள். இன்று இல்லை. இன்றைய நிலையில் நமக்குக் கைவந்த அணி சாரா நிலையே சிறந்தது. இதற்கு இரு பாதிகள் உண்டு - ஒன்று இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதிருத்தல், இரண்டு, போராளிகளுக்கு தமிழகத்தில் மளிகைக் கடையும் மருந்துக் கடையும் வைக்காதிருத்தல்.
மற்றபடி, இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்தும் சிங்கள இராணுவத்தினர் மீது இந்திய இராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எனக்குக் கேள்வியேயில்லை.
சங்கரபாண்டி,
சிவராம் கொலைக்கு வலைப்பதிவுலகத்தில் நான் பின்னூட்டமிடவில்லை என்பதினாலேயே நான் சிங்கள அரசின் ஆதரவாளன் என்பது மிகவும் பலவீனமான வாதம். You are trying to point to a lack of evidence to make a case. எந்தக் கோர்ட்டிலும் செல்லுபடியாகாத வாத முறை இது.
விவாதத்திற்கு நன்றி. வாழ்க்கை முன்னகர்ந்தபடி உள்ளது. இன்னொரு பதிவின் பின்னூட்டச் சுழலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
/கனேடியர்கள் வால்மார்ட் வருவதையும், ஆயுதமேந்திய போராளிகள் கடலோர கிராமங்களிலும், சென்னையிலும் வலம் வருவதையும் ஒப்பிடுவது சரியா/
ReplyDeleteஸ்ரீகாந்த் இன்னமும் இதை வாதாடுவது எரிச்சலைத்தான் தருகிறது. இங்கே மாநில அரசு , மேடையில் பேசியதற்காக 1- 1/2 ஆண்டுகள் ஒரு முக்கிய கட்சியின் தலைவரை பொடாவில் கைது செய்து உள்ளே வைக்கலாம் என்பதுதான் நிதர்சனமான் உண்மை. மத்திய அரசில் ராஜீவின் காங்கிரஸ் அரசின் எஞ்ஜின். இன்னும் எங்கேதான் ஆயுதம் தாங்கியவர்கள் உலாவுகிறார்கள் என்று ஏதாவ்து சமீபத்திய ஜெயின் அறிக்கை இல்லையாயினும் ஏதோ ஒரு அறிக்கையை காட்டினால் மேற்கொண்டு பதில் சொல்ல முடியும்.
முதலில் பத்ரி மன்னிக்க.
ReplyDeleteஇது தலைப்புக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதே பின்னூட்டம்/கேள்வி.
>>>
மாலன் சொன்னது:
ஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது.கதிர்காமர் படுகொலையை ஒட்டி இந்துவில் வந்த கட்டுரைகளுக்கு இந்துவை பொறுப்பாக்க வேண்டாம். அவை அதன் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அதை எழுதியவரது பெயரும் பிரசுரிக்கப்படுகின்றன. அவர்கள் இந்துவில் பணியாற்றும் செய்தியாளர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கென்று தனியாகக் கருத்துக்கள் இருக்கக் கூடாதா?
>>>
எனக்குத் தெரிந்த குறைந்தபட்ச இதழியல்/பத்திரிகை அறிவில் இந்தக் கருத்து நெருடுகிறது.
ஒரு பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் கருத்து பத்திரிகையின் கருத்தாக இருக்க அவசியமில்லை, அதை எழுதியவரின் கருத்தாகவும் இருக்கலாம் என்று இதழியலில் பரிச்சயம் கொண்ட மாலன் சொல்வது எனக்குப் புதிதாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
பத்திரிகையில் வரும் செய்தி/தலையங்கம் அனைத்துக்கும் பத்திரிகையே பொறுப்பு என்பதுதான் எனது புரிதல். செய்தி தவறாக இருக்கும் பட்சத்தில், அடுத்த நாட்களில் corrections/திருத்தம் என்று வெளியிடுவது இதழியல் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இல்லையா? அப்படியான திருத்தங்கள் வெளியிடும்போது "தவறுக்கு வருந்துகிறோம், இனி அப்படி நேராமல் பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருப்போம்" என்றும் கண்டிப்பாக குறிப்புகள் இருக்கும்.
உதாரணம்: நியூ யார்க் டைம்ஸ்
தலையங்கத்தைப் பொறுத்தவரை, அது இன்னும் மிகுந்த ஆசிரியர் பரிசீலினை/ஆய்வு(sigh! editorial review is what I mean)க்குப் பிறகே பிரசுரிக்கப்படும் என்பதுவும் எனது புரிதல்.
Editorial board என்பது ஒரு பத்திரிகையில் exclusive club. ஒரு பத்திரிகையின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது இந்தக் குழுவின் தலையாயக் கடமை இல்லையோ? இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் என்னவென்றாலும் எழுதிப் பிரசுரிக்க இது என்ன கூட்டு வலைப்பதிவு போன்றதா?
நான் சிறியவன் எனக்குத் தெரிந்த சமீபத்திய உதாரணங்களைத் தருகிறேன்.
1. நியூயார்க் டைம்ஸில் Jason Blair saga வுக்காக ஆசிரியர் குழு பகிரங்கமாக பொது மன்னிப்புக் கேட்டு, பத்திரிகையின் மரியாதையைக் காப்பாற்ற அரும்பாடு பட்டது
2. Newsweekன் குரான் செய்திக்காக(அரசியல் தலையீடு என்பது வேறு விஷயம்) பொது மன்னிப்புக் கேட்டது.
தலையங்கத்தை எழுதுபவரும் ஒரு தனிமனிதராக இருக்கலாம்தான், அவருக்கும் தனிக்கருத்து இருக்கும்தான், ஆனால் அது பத்திரிகையின் ஒட்டுமொத்தக் கருத்தைச் சார்ந்தே இருக்கும், இருக்கவேண்டும்.
மீண்டும் சொல்கிறேன், இந்தத் தலைப்புக்கும் விவாதத்துக்கும் இந்தப் பின்னூட்டம் சற்றும் சம்பந்தமில்லாதது.
இதழியலில் அனுபவம் பெற்ற மாலன் இப்படி ஒரு கருத்தை முன்வைத்தது என் புருவத்தை நெரிய வைத்தது, கேட்டுவிட்டேன். அவர் பதில் சொல்வாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததைப் பதியவே இந்தப் பின்னூட்டம்.(அப்பாடா, disclaimer முடிந்தது!)
கார்த்திக்,
ReplyDeleteஎனது வார்த்தைகளின் தெளிவின்மை உங்களுக்கு ஏற்படுத்திய எரிச்சலுக்காக மன்னிக்கவும்.
இன்றைய சூழலில் போராளிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள் என்பது போல் எழுதுவது எனது நோக்கமல்ல. இலங்கையில் மீண்டும் போர் மூளுமானால், தமிழகத்தில் அத்தகைய நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதோடு இந்திய அரசு தனது ஈடுபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நான் சொல்ல வந்தது.
இதை எழுத வேண்டாம் என்று நினைத்தேன், பிறகு ஒரு அவசியம் இருப்பதாக நினைப்பதால் எழுதுகிறேன். புலிகளை எதிர்த்துக்கொண்டே ஈழத்துக்கு சார்பாக பேசுகிறேன் என்பது ஒரு பேஷனோ என்னமோ தெரியவில்லை. மாலன் ஈழத்துக்கு இடைஞ்சலான கருத்து என்று தமிழர்கள் முஸ்லிமை வெறுப்பதும்தான் என்று பொருள்படும்படி எழுதியுள்ளார். முஸ்லிமகளை நிராதரவாக வெளியேற்றியதும் நடந்ததுவே. பின்னர் பிரபாகரனுடம் முஸ்லிம் தலைவர்கள் செய்த சந்திப்பின் போது பிரபாகரன் முஸ்லீம் தலைவர்கள் (ஹக்கீம் போன்றவர்கள்) மீண்டும் அதுபோல் நடவாது என்று உறுதியளித்ததும், மன்னிப்பு கோரி அறிக்கை எழுதியது நடந்ததே. இது மாலனுக்கு தெரியாதா? அல்லது தெரிந்து கொண்டே தன் வாதங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக , மறைத்துவிட்டு முஸ்லீகளை ஈவிரக்கமில்லாமல் கொன்றதை சுட்டுகிறாரா? அல்லது "தி இந்துவின்" கருத்து இப்படி இருக்கிறதா?
ReplyDeleteசெய்தியாளர்கள்தான் அவ்வக்கருத்துக்கு பொறுப்பு என்பது போன்ற கயமைத்தனமான வாதத்தை மாலனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இதற்குப் பதிலாக நான் "இந்துவின் ஏஜென்ட்" என்று சொல்லியிருந்தார் எனில் அவரது நேர்மையை மதித்திருக்கலாம்.
இனி இங்கே அவசியமில்லாமல் எழுதமாட்டேன்.
பத்ரிக்கும் மாலனுக்கும் சுட்ட ஒரு சுட்டி :
"India has murdered over 250,000 Sikhs since 1984, according to figures compiled by the Punjab State Magistracy and human-rights groups and reported in the book 'The Politics of Genocide' by Inderjeet Singh Jaijee. It has also killed over 89,000 Kashmiri Muslims since 1988, more than 300,000 Christians in Nagaland since 1947, and thousands of Christians and Muslims elsewhere in the country, as well as tens of thousands of Assamese, Bodos, Dalits , Manipuris, Tamils, and other minorities," the press release stated.
According to a report by the Movement Against State Repression (MASR), 52,268 Sikhs are being held as political prisoners in India without charge or trial. Some have been in illegal custody since 1984! Amnesty International reported that tens of thousands of other minorities are also being held as political prisoners.
:-((
We reproduce an article below by veteran Tamil journalist D.B.S Jeyaraj on
ReplyDeletethe international community's reaction to the assasination of Foreign
Minister Lakshman Kadirgamar.
Editor - SLDF Newswire
-----
http://www.tamilweek.com/Assassination_Appeasement_0028.html
Condemning Assassination and Continuing Appeasement
By D.B.S. Jeyaraj
The assassination of Lakshman Kadirgamar has brought in its wake a series of
statements by world leaders. They denounce it very correctly as a terrible
act of
terrorism. They also want the perpetrators to be caught and brought to
justice.
The average Sri Lankan who reads all these statements will no doubt feel
that the end of
the road is in sight for what is termed a peace process between the
Government of Sri
Lanka and the Liberation Tigers of Tamil Eelam.
There is no doubt in the minds of most Sri Lankans about who the
perpetrators of this
heinous act of terrorism were. Simple logic indicates that the peace
process cannot
continue if true justice is meted out to the perpetrators.
But what puzzles them is the doublespeak of the so called international
community. They
all insist that the peace process should continue. In hackneyed phrases
repeated ad
nauseam they say indirectly that the greatest tribute to Lakshman
Kadirgamars memory
is to continue talking to his killers.
Let us look at some of these pronouncements-
"Together, we must honour his memory by re-directing ourselves to peace
and ensuring
that the ceasefire remains in force," - US Secretary of State,
Condoleezza Rice.
UN Secretary General Kofi Annan - " this tragedy will not weaken the
commitment of the
people of Sri Lanka to achieve a durable peace in the country."
"The killing puts the peace process in Sri Lanka to a serious test. It is
now of great
importance that both parties to the conflict do their utmost to fully
fulfil their obligations
according to the ceasefire agreement," - Norwegian Foreign Minister Jan
Peterssen
The Indian government statement "We have every confidence that the
government and
friendly people of Sri Lanka will rise to the challenge and defeat the
forces which seek to
undermine Sri Lanka's unity and political stability."
"Japan has been actively supporting the peace process in Sri Lanka and has
respected
Foreign Minister Kadirgamar as one of the key persons promoting the
process. I strongly
hope for a calm response by all parties at this moment so that the move
towards the
peace process is not hindered," - Japanese Foreign Minister Nobutaka
Machimura said.
Australian Foreign Minister Alexander Downer said - "This heinous act of
terrorism must
not be allowed to derail efforts to bring peace to Sri Lanka."
European Union Commissioner Ms. Benita Ferrero-Waldner - "We must all
honour the
passing of Foreign Minister Kadirgamar by continuing his work for peace
and maintaining
the CFA."
French Foreign Minister Philippe Douste-Blazy - "France believes that
more than ever
the respect of the CFA and the continuation of the peace process are
necessary."
Canadian Foreign Minister Pierre Pettigrew insisted that Kadirgamar
assassination
should not be allowed to derail the peace process. Pettigrew declared that
perpetrators
should be brought to justice.
There is nothing wrong with these sentiments at face value. After all a
joint peace
process should not be jettisoned or allowed to be jeopardised by the
killing of the foreign
minister of one party. Usually such killings are the handiwork of a third
party aiming to
disrupt the process. So the parties involved in the process should not
allow a killing to
affect it. The only effective answer to the killers is to continue with
the process and make
it a success.
But in the case of the Kadirgamar assassination there is a crucial
difference. The killing
was not the work of a third party or outside force. It was perpetrated
by one of the
parties involved. It was not done during a time of war but during the
course of a peace
process. This is an assassination committed by one of the negotiating
partners engaged
in a peace process after having signed a ceasefire agreement that
expressly forbids
such acts. In short it is a blatant violation of the ceasefire and a
terrible betrayal.
If such an experience had been encountered by any of these countries now
profferring
advice their response would have been different. Had Condoleezza Rice,
Jack Straw,
Pierre Pettigrew, Natwar Singh, Jan Peterssen, Nobutaka Machimura,
Alexander Downer
or Philippe Douste- Blazy been killed in a hypothetical situation under
similiar
circumstances there would have been hell to pay. But since this is Colombo
the "advice"
is different.
Insisting that the peace process should continue after the killing would
have been correct
if the act had been committed by an outside force or third party. It is
entirely
inappropriate when one of the parties involved has acted in bad faith.
Asking the affected
party to continue the process after an assassination is nothing but
appeasement.
The doublespeak is indeed laughable when "continuing the peace process "
is coupled
with "bringing perpetrators of the terrorist crime to justice". If the
perpetrators of this
crime are really brought to justice then there can be no genuine peace
process.
Bringing the perpetrators to justice does not mean that only the assassin
or assassins
and the support network in Colombo should be apprehended and punished
while the
real masterminds who planned and ordered the assassination go unpunished.
There is a saying in Tamil " Eithavan irukka ambai Novanen?" (Why blame
the arrow
instead of the archer).
When Rajiv Gandhi was killed in Sriperumbhudoor on May 21st 1991 there was
a huge
outcry. Investigations revealed that the LTTE was responsible. When charge
sheets were
compiled and indictments filed there were three categories of accused
persons.
At the primary level were those actively involved in the act and directly
involved in the
execution like Dhanu and one - eyed Sivarasan. Most of them were dead
before the
case came to trial.
At the secondary level were those who had helped the killers and complicit
in the
assassination indirectly. 26 such persons were charged and sentenced to
death initially.
The appeal reduced sentences for most except four . One woman Nalini's
sentence was
commuted to life on humanitarian grounds.
At the tertiary level were the conspirators who had planned and ordered
the killing. They
were the LTTE leader Pirapakaran, Intelligence chief Pottu Amman and
womans brigade
commander Ahila. They were in Sri Lanka beyond the reach of Indian
justice. India
however did not let them off. Their names were separated from the original
indictment
and declared as proclaimed offenders. They are now wanted by Interpol as
proclaimed
offenders absconding justice. New Delhi routinely raises the matter with
Colombo.
It is clear therefore that in operations like this the conspiring
"brains" rather than the
committing "brawns" bear more responsibility. India has clearly
demonstrated this.
In the case of the Kadirgamar assassination too the real conspirators
should be brought
to justice. If he had been killed by a suicide bomber then how would
justice have been
done? The Indian example should be followed. The footsoldiers are not the
only guilty
party. Those really culpable are the "generals". The command and control
structure of
the organization that ordered the killing should be brought to justice.
But what is
happening here is that Colombo is being asked to talk to the perpetrators
as well as
arrest them.
If these "advising" countries are indeed serious then they should realise
that what they
are saying is contradictory. When one party to the process has committed
the crime only
one of two results is possible. If the real perpetrators are to be
punished the process
cannot continue. If the process is to continue then the real perpetrators
cannot be
punished. Insisting that both should happen simultaneously is asking for
the impossible.
This is international doublespeak at its worst.
Spare us then Ladies and Gentlemen of the international community of this
pontificating
hypocrisy at this time of grief!
This grief however cannot give way to blind rage. What would the LTTE
like to happen?
What effective response is possible?This is what the Liberal Party has to
say -
"Given the magnitude of the tragedy that has befallen the Sri Lankan
state, it is vital that
our leaders react with wisdom and justice, but also with a firmness that
makes clear that
there are limits to indulgence. Clearly the Ceasefire Agreement is no
longer seen as
binding by the LTTE, and equally clearly the Norwegian monitors are
incapable of
understanding or standing by their obligations. However, abrogating it is
perhaps what
the LTTE wants the government to do.
"Rather, the government should proceed within a legalistic framework,
perhaps in the
manner in which the United States proceeded in 2001, after the tragedy
that befell them.
Firstly they ensured, not only that the world at large understood the
enormity of what had
been done, but that it was prepared to act on this understanding.
Secondly, they issued
an ultimatum that was universally recognized as just, that the
administration responsible
for the terrorist outrage should surrender those who had planned it."
What the Country needs now is not a jettisoning but an urgent review of
the ceasefire..
The LTTE and security forces must be made to honour it fully. It must also
be accepted
that the greater part of the blame lies with the LTTE. The international
community instead
of parroting the "peace process" squawk must find ways and means of
disciplining the
LTTE.
After all the sound and fury surrounding Kadirgamars murder subsides Sri
Lankans will
find two questions facing them.
Is the peace process to continue at the expense of true justice being
meted out? is one.
Is Justice to be done (if possible) at the expense of the peace process ?
is the other.
Sri Lanka cannot have it both ways.
A very difficult choice indeed!
Meanwhile let us hope that the collective wisdom of the international
community would
show us a way through which the peace process would progress
constructively while true
justice is meted out to "all" those involved in the Kadirgamar assassination.
லண்டனில் தமிழ்மக்களின் பணததில் புலிகள் தனியார் பெயர்களில் முதலீடு
ReplyDelete800 கோடி ரூபாய் செலவில் புலிப் பினாமியான சர்ச்சைக்குரிய நாகேந்திரம் சீவரட்ணம் கலாச்சார மண்டபம் ஒன்றை லண்டன் அல்பேட்டன் பகுதியில் அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
லண்டனில் அமைந்திருந்த புலிகளின் தலமைக்காரியாலயமான ஈழம் கவுஸ் (நுநடயஅ ர்ழவரளந) என்ற கட்டிடத்தை 1997ம் ஆண்டு இரண்டு லச்சத்து ஜம்பது ஆயிரம் பவுன்ஸக்கு முருகேசு சிவராஜா என்பவரால் வாங்கப்பட்டு அதைக் கடந்த ஆண்டு ஏழு லட்;சத்து ஜம்பது ஆயிரம் பவுன்ஸக்கு விற்கப்பட்டதாகவும் அதில் ஒரு தொகை பணத்தை இக்கட்டிடம் வாங்குவதற்காக சீவரட்ணம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இவர் தற்போது நடத்திவரும் சிவயோக அறக்கட்டளை நிறுவனம் அரசின் அறக்கட்டளை நிறுவனத்தினால் ( ஊhயசசவல ஊழஅஅளைளழைn) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் முருகேசு சிவராஜாவினால் ஒருதொகை பணம் கொடுக்கப்பட்டு;ள்ளது.
நிதிமோசடிப் பேர்வழியான சீவரட்ணத்தின் மகளான அம்பிகாவின் எதிர் கால கணவரான கஸ்ரோ என்று அழைக்கப்படும் வன்னிப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளரான மணிவண்னால் வழங்கப்பட்ட விசேட உத்தரவினையடுத்து மேற்படி கட்டிடம் வாங்கும் நடவடிக்கையில் சீவரட்ணம் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் இலங்கையிலும் இந்தியாவிலும் தனது குடும்பப் பெயரில் பெருந்தொகையான பணத்தை முதலீடு செய்துள்ளார். இவரின் புதிய முயற்சிக்கு நிலம் மட்டும் 200கோடியும் கட்டிடடத்தை பூர்த்தி செய்வதற்கு 600கோடி ரூபாயும் தேவைப்படுவதாக தெரியவருகிறது. இதில் 70வீதம் பிரித்தானியாவிலுள்ள டீயசஉடயலள வங்கியும் 200கோடி சிவயோக அறக்கட்டளை நிறுவனத்தில் இருந்தும் மிகுதிப் பணத்தை சிவராஜாவும் வழங்கியுள்ளார்.
பொது மக்களிடம் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பலவந்தமாக நிதியினைப் பெற்று வரும் புலிகள் தனியார் பெயர்களில் முதலீடு செய்வது தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள உளவுத் துறையினரின் கவனத்துக்கு சமூக நலம் விரும்பிகளால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஈழபதீஸ்வரர் ஆலய அறங்காவல் குழுத் தலைவர் ஜெயதேவன் செயலாளர் விவகானந்தன் ஆகியோரை 62 நாள்கள் சிறையிலடைத்தும் அவர்களின் ஆலயத்தை பறிமுதல் செய்ததும் அது தொடர்பாக பிரித்தானியா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சீவரட்ணம் படு தோல்வி அடைந்ததும் இவ்வழக்கு செலவுத் தொகையாக 35000பவுன்ஸ் சீவரத்தினத்தால் செலுத்தப்பட்டதும் தெரிந்ததே.
இக்கட்டிடம் வாங்குவதற்காக வெளியிடப்பட்ட முதல் துண்டுப் பிரசுரத்தில் சிவ ஆலயம் தொடங்குவதற்காக என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு அறக்கட்டளை நிறுவனம் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதும் உடனடியாக இக்கட்டிடம் ஆசிய இந்து கலாச்சார மண்டபம் என அறிவிக்கப்பட்டது.தற்போது காணி வாங்கியதுடன் பிரித்தானியாவிலுள்ள தமிழ் குண்டர்களை திருத்துவதற்காக என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அரசினால் கூட இப்படியான நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெருந்தொகையான நிதி ஒதுக்கியது கிடையாது. இதனால் பிரித்தானியா உளவுப்பிரிவினர் சீவரத்தினத்தின் நடவடிக்கையையும் அவரின் இந்த முயற்சியையும் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் புலிகளின் பல நடவடிக்கைகளை முடக்கிவரும் பிரித்தானியா அரசு இவரின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என பொது மக்களின் கேள்வியாக உள்ளது.எனவும் தெரியவருகிறது
அன்புள்ள பரி,
ReplyDeleteஉங்கள் கேள்வி வியப்பளிக்கிறது.
>>ஒரு பத்திரிகையை அது வெளியிடும் செய்திகளையும், அதன் தலையங்கத்தையும் வைத்து மதிப்பிடுவதுதான் நியாயமானது<< என்று நான் தெளிவாகவே என் பதிவில் எழுதியிருக்கிறேன்.
நீங்களும் >>
பத்திரிகையில் வரும் செய்தி/தலையங்கம் அனைத்துக்கும் பத்திரிகையே பொறுப்பு என்பதுதான் எனது புரிதல்<< என்று சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் பத்திரிகைகளில் தலையங்கம் தவிர கட்டுரைகளும் வெளியிடப்படுகிறது அல்லவா? அந்தக் கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகையின் கருத்துக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் சொல்கிறேன். இது இதழியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நெறிதான். இன்னும் சொல்லப்போனால் தனது நிலைக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரையையும் ஒர் நல்ல நாளிதழ் வெளியிடவேண்டும். அது விவாதங்களை ஊக்குவிக்கும் என்பதால்.
எந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அதன் குரல். அதில் வெளியாகும் பத்திகள் அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடல்ல.
நியூயார்க் டைம்ஸிலும் அதன் தலையஙகத்திற்கு அதன் ஆசிரியர் குழுதான் பொறுப்பு. ஆனால் அதில் வெளியாகும் பத்திகளில் (column) காணப்படும் கருத்துக்கள் அதை எழுதியவருடையவை. அது பத்திரிகையின் நிலைபாட்டை பிரதிபலிக்கலாம். அல்லது மாற்றுக் கருத்தை வைக்கலாம்.
இதை நீங்கள் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போது தெளிவாகப் பார்க்கலாம். கடந்த தேர்தலில் வாஷிங்டன் போஸ்ட் புஷ்ஷை எதிர்த்துத் தலையங்கள் தீட்டியது. ஆனால் ஆதரித்தும் கட்டுரைகள் வெளியிட்டது.
அண்மையில் தினமணி நான் அணுமின் உற்பத்தி பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது. மறுநாளே அதற்கு எதிர்நிலையில் நின்று வாதிடும் வேறொருவரது கட்டுரையை வெளியிட்டது.
இன்னும் எளிதாக ஒர் ஊதாரணம்: சுஜாதா ஒரு கட்டுரை எழுதுகிறார். அதை ஆனந்த விகடனுக்கு அனுப்புகிறார். அதை அது வெளியிடுகிறது. அப்படி அவர் ஆனந்த விகடனுக்கு அனுப்பாம்ல் குமுதத்திற்கு அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குமுதம் அதை வெளியிடும். ஏனெனில் அந்தக் கட்டுரை பத்திரிகையின் குரல் அல்ல. அது பத்திரிகையின் நிலைபாட்டைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை
>>யார் வேண்டுமானாலும் என்னவென்றாலும் எழுதிப் பிரசுரிக்க இது என்ன கூட்டு வலைப்பதிவு போன்றதா?<<
இல்லை. ஆசிரியர் குழுவின் பரிசீலனை (editorial scrutiny) என்று ஒன்று உண்டு. எழுதப்பட்டிருக்கும் நடை, பொருளாக்கான முக்கியத்துவம், பொருளின் பொருத்தம், அளவு, தெளிவு, தொடர்ச்சி, அவதூறு(libel) போன்ற விஷ்யங்களைப் பரிசீலிப்பதுதான் அந்தப் பணி. அது தணிக்கை அல்ல. வலைப்பதிவுகளில் அதெல்லாம் இல்லை. Editorial intervention இல்லாத மாற்று ஊடகங்கள் என்று அதைக் கொண்டாடுகிறார்களே?
நாளிதழ்களில் தினமும் காலையில் ஆசிரியர் குழுவினரின் கூட்டம் நடக்கும். அதில்தான் அநேகமாக இன்று என்ன தலையங்கம் எழுதுவது, அதில் என்னென்ன கருத்துக்களை முன் வைப்பது என்ற விவாதங்கள் நடக்கும். இன்று யார் தலையங்கம் எழுதுவது என்பதும் முடிவு செய்யப்படும். அவர் மாலை 4 அல்லது 5 மணி வாக்கில் எழுதி, எழுதியதை ஆசிரியருக்கு அனுப்புவார். அவசியமானால் ஆசிரியர் சில திருத்தங்கள் செய்வார். அல்லது எழுதியவருடன் விவதிப்பார்.
ஆனால் பத்திரிகையில் எழுதப்படு பத்திகள் இது போன்ற கூட்டு விவாதத்திற்குப் பின் எழுதப்படுவதில்லை.
>>Editorial board என்பது ஒரு பத்திரிகையில் exclusive club. ஒரு பத்திரிகையின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது இந்தக் குழுவின் தலையாயக் கடமை இல்லையோ?<<
பாரம்பரியத்தைக் காப்பது கடமைதான். ஆனால் அது எடிட்டோரியல் போர்ட். சென்சார் போர்ட் அல்ல.
செய்தி வெளியிடுவதில் தவறு நேர்ந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இங்கும் உண்டு. ஆனால் கதிர்காமர் செய்தியில் இந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது? எனக்குப் புரியவில்லை. சற்று விளக்குவீர்களா?
அன்புடன்
மாலன்
அன்புள்ள கார்திக்ரமாஸ்.
ReplyDeleteகட்டுரைகளில் காணப்படும் கருத்துக்களுக்கு அதை எழுதியவர்கள்தான் பொறுப்பு.தலையங்கங்களுக்குப் பத்திரிகைகள் பொறுப்பு என்ற என் வாதத்தில் என்ன் கயமையப் பார்க்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கினால் உதவியாக இருக்கும்.
இன்னொன்றையும் தெளிவுபடுத்தினால் தேவலை.
நீங்கள் கொடுத்துள்ள மேற்கோள் மூலம் என்ன சொல்ல முற்படுகிறீர்கள்?
'இந்தியா மத்ச சிறுபான்மையரைக் கொன்றது. அதனால் அது மோசமான குடியரசு' என்றா?
'இந்தியாவில் மதச்சிறுபான்மையினர் நடத்தப்ட்டதைப் போலதான் ஈழத்திலும் நடத்தப்படுகிறார்கள்' என்றா?
இந்த இரண்டின் அடிப்படையில் ஈழத்தில் இருப்பதும், இந்தியாவில் இருப்பதைப் போல ஒர் மோசமான அரசதிகாரம் (State) என்றா?
அல்லது இந்தியாவில் அரசதிகாரத்தினால் சிறுபான்மையினர் நடத்தப்பட்டது போலத்தான் ஈழத்திலும் நடத்தப்பட்டார்கள் அதனால் அது தவறில்லை என்றா?
என்ன சொல்லவருகிறீர்கள்?
இந்தியாவின் தவறுகள் ஈழத்தின் தவறுகளை எப்படி நியாயப்படுத்தும் நண்பரே?
அன்புடன்
மாலன்
========
ReplyDeleteஎந்தப் பத்திரிகையிலும் தலையங்கங்கள்தான் அதன் குரல். அதில் வெளியாகும் பத்திகள் அதன் அதிகாரபூர்வ நிலைப்பாடல்ல.
=======
There is difference between a column by an outsider and a report from a staff journalist. As you may have seen, many a times, when a controversy arises w.r.t to the facts stated in a newsreport, the editorial makes it a point either to clarify & stand by its report or apologise. This is not rqd if the newspaper thinks that the onus is on the writer.
திரு. மாலன், உங்களிடம் இதுவரை நான் கருத்துக்கள் பரிமாற்றம் செய்து கொள்ளவில்லையே தவிர உங்கள் கருத்துக்களை எல்லா இடங்களிலும் படித்து வருகிறேன். உங்களுடைய எழுத்துக்களை அச்சு இதழ்களிலும் பல வருடங்களாகப் படித்து வருகிறேன். இலக்கியம் தொடர்பாக சிலவற்றில் கருத்து இணக்கமும் சிலவற்றில் கருத்து மாறுபாடும் உண்டு. அவற்றைப் பற்றி உங்களிடம் விவாதிக்க சில நேரங்களில் எண்ணினாலும், தனிப்பட்ட முறையில் இலக்கியத்துக்கு நான் கொடுத்த முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனாலும் பல இடங்களில் நான் சொல்ல நினைத்த கருத்து ஒன்று - நீங்கள் வலைப் பதிவுகளில் எல்லா விசயங்களையும், எல்லோரிடமும் பந்தா இன்றி விவாதிப்பது மிகவும் பிடித்தது - இங்கும் கூட. அதற்கு என் நன்றி.
ReplyDeleteநிற்க, நீங்கள் இந்துப் பத்திரிகைக்கு இவ்வளவு தூரம் வக்காலத்து வாங்குவது எனக்கு உண்மையிலேயே மிக வியப்பையளிக்கிறது. ஒருவேளை சன் தொலைக்காட்சி பற்றியது என்றால் ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் புரிந்து கொள்வேன், நீங்கள் பணிபுரியும் நிறுவனம் என்ற அடிப்படையில்.
நான் டெல்லியில் ஒன்றரை வருடம் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்த பொழுது, பல்வேறு பத்திரிகைகளில் மாறிமாறிப் பணி புரிந்து வந்த பல நிரூபர்களைச் சந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் காலையில் இந்துப் பத்திரிகைப் படிக்கவில்லையானால் ஏதோ முக்கியமான பணியைச் செய்ய மறந்தது போல இருக்கும். டெல்லிப் பத்திரிகைகளான பயனீர், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகள் திருப்தியளிப்பதில்லை. அப்பொழுது அலுவலகத்தில் இதைச் சொன்ன பொழுது சிரித்தார்கள், என்னைப் போன்ற மதராசிக்கு உண்மையைப் படிப்பதை விட ஆங்கிலமும் அச்சு நேர்த்தியும்தான் தான் முக்கியம் போல என்று. செய்திகளைக் கூட தன் அரசியல் கருத்துக்குத் தகுந்தவாறு தணிக்கை செய்யும் பத்திரிகை இந்து என்று சொன்னார்கள், இதை அவர்களுடைய அனுபவத்தில் சொன்னது. மாறாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் பகுதியில் அப்பட்டமான அரசியல் சார்பு இருந்தாலும், செய்திகளை அப்படியே வெளியிடுவதும், வாசகர் கடிதங்களில் எல்லாத் தரப்பு கருத்துக்களுக்கும் இடம் அளிப்பதும் உண்டு என்றனர். அப்பொழுது ஓரளவு உண்மைதான் என்று தோன்றினாலும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்னை மயக்கி வைத்திருந்தார்.
இப்பொழுதும் கூட இந்துவின் வண்டவாளங்களை நன்கு அறிந்தபின்னும் நேரமில்லாவிடினும் கூட அவசியம் படிக்கும் ஒரே பத்திரிகை இந்துதான். அதிக நேரமிருந்தால் தான் மற்ற பத்திரிகைகள் எல்லாம். அந்த அளவுக்கு தமிழனின் உலகத்தைப் பார்க்கும் ஜன்னலாக இருக்கிறது. ஆனால் ஈழப் பிரச்சினையில் இந்துவும் (ராமும்) பண்ணி வரும் அயோக்கியத்தனம் சொல்லக் கூசுகிறது. ஒருவேளை ராம் ராவுக்குப்பணி புரிகிறாரோ என்று கூட நிஜமாக ஐயம் கொள்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். இங்குள்ள மற்ற வாசகர்களுக்காகச் சொல்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்துவின் எல்லா ஈழச்செய்திகளையும், கட்டுரைகளையும், ஆசிரியர் பகுதிகளையும், வாசகர் கடிதங்களையும் படித்து வருகிறேன். உங்களுக்கு ஒரு சவாலாகக் கேட்கிறேன். புலிகளைப் பற்றித் தாராளமாக இந்து உண்மைகளையும், சந்தேகங்களையும், ஊகங்களையும் எழுதட்டும். ஆனால் புலிகளின் பக்கத்தை வாதத்துக்காகச் சொல்லும் ஒரு வாசகர் கடிதமோ, ஒரு கட்டுரையோ பிரசுரமானதில்லை. புலிகள் தடை செய்யப் பட்ட இயக்கம் என்பதால் அவ்வியக்கத்தை சேர்ந்தவர் எழுத வேண்டியதில்லை (பத்திரிகைக்கு இந்த மாதிரி கட்டுப்படெல்லாம் இல்லை என நினைக்கிறேன்), குறைந்த பட்சம், ஒரு வைக்கோ, நெடுமாறன் கூட ஒரு கட்டுரை அனுப்பியதில்லையா?
சரி விடுங்கள் புலிகள் பக்க வாதத்தை விடுங்கள், இலங்கை அரசு போர் நிறுத்தக் காலத்தில் நேரத்தை வீணடித்துக் கொண்டு, இன்று வரை எந்த உருப்படியான திட்டத்தையும் முன் வைக்க வில்லை என்பதை இலங்கை அரசின் மீதான விமர்சனமாகக் கூட யாருமே எழுதவில்லையா? எத்தனையோ முறை நான் நல்ல படியாக எழுதிய வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கவில்லை. கொஞ்சம் கடுமையாகத் திட்டினாலாவது, அவர்களை விமர்சிக்கும் வாசகர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று காண்பிப்பதற்காக (சோ இராமசாமி கையாளும் தந்திரம்) வெளியிடுவார்கள் என்று முயன்றும் பயனில்லை. அது போல வேறு நண்பர்கள் எழுதிய கடிதங்களையும் போடவில்லை.
ஈழப் பிரச்சினை மட்டுமல்லாமல் எல்லாப் பிரச்சினைகளிலும் இந்து இப்படித்தான் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் சங்க பரிவார் அரசியலை இந்து கடுமையாக விமர்சித்து வந்தாலும், அவர்களுக்கு அப்பட்டமாக கூஜாத் தூக்கும் கட்டுரைகளையும், கடிதங்களையும் வெளியிடுவதுண்டு. பால் தாக்கரேக்கும், நரேந்திர மோடிக்கும் ஆதரவாக எத்தனையோ கடிதங்களையும் பார்க்திருக்கிறேன். ஏன் 1987ல், இந்தியப் படைக்கும், புலிகளுக்கும் சண்டை ஆரம்பித்து இரண்டு நாட்களில், புலிகள் இயக்கத் துணைத் தளபதி மாத்தையாவின் முழுநடுப்பக்க நேர்காணல் "A Tiger's Point Of View" என்ற தலைப்பிட்டு வெளியானது. சந்திரிகா அரசு வந்தபின் தான் இந்துவிடம் இப்படியொரு இருட்டடிப்பு மற்றும் அயோக்கியத்தனத்தைப் பார்த்து வருகிறேன்.
கடந்த ஆண்டு முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் இருமுறை தொலை பேசியில் பேசினேன். அப்பொழுது சந்திரிகா எவ்வளவு தூரம் தந்திரமாக நடந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் சமாதானக் காலத்தில் இதுவரை எதுவுமே செய்யாமலே காலத்தைக் கடத்தி வருகின்றது என்பதையும், இந்திய அரசாங்கம் இதையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பதையும் மனம் நொந்து கூறினார். ஏன் அவர் இதைப் பற்றியெல்லாம் இந்து பக்திரிகைக்கு எழுதக் கூடாது என்று கேட்ட பொழுது அதெல்லாம் வராது என்றார் (வட இந்தியப் பத்திரிகைகளில் ஓரிரு முறை சிறு பத்திகளைப் பார்த்திருக்கிறேன்). மேலும் தற்பொழுதுள்ள சூழலில் எழுதினாலே ஏதோ தனக்கும், புலிகளுக்கும் தொடர்புள்ளதாகக் கட்டுக்கதை விடுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். வீணான பிரச்சினைகளில்தான் போய் முடியும் என்றார்.
நான் கூறியதற்கு மாறாக கட்டுரைகளையோ, குறைந்த பட்சம் வாசகர் கடிதங்களையோ மாலன் இந்துவிடம் கேட்டு வெளியிடுவார் என எதிர் பார்க்கிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
Reading all the fanatical posts makes me scary for Tamil Nadu. I hope these fanatics who support LTTE don't live in Tamil Nadu. LTTE, which employs child soldiers, is one of the most cruel terrorists organizations in the world. I hope people don't vote for vaiko and other ltte sympathizers. Otherwise, Tamil nadu will turn into lebanon (in the 1980s).
ReplyDeleteThe diehard supporters of LTTE like Sankarapandi should introspect "why LTTE has lost it's support among majority of tamils in the world?" Even if they win Ealam or any solution, their fate is going to be like Churchill after second world war. All of us used to diehard supporters of Ealam cause earlier and nobody has done more damage to Ealam cause than LTTE; If you continue to support LTTE just because there is no other alternative, imagine the plight of Ealam Tamils when Kadirkamar's fate falls on LTE leadership? One reaps what one has sowed. The immediate requirement of all tamil brethren is to de-risk Ealam Tamils from LTTE.
ReplyDeleteமாலன்,
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி.
ஆகஸ்ட் 15 இந்து தலையங்கம்: http://www.hindu.com/2005/08/15/stories/2005081501741000.htm
>>>
செய்தி வெளியிடுவதில் தவறு நேர்ந்துவிட்டால் மன்னிப்புக் கேட்கும் வழக்கம் இங்கும் உண்டு. ஆனால் கதிர்காமர் செய்தியில் இந்து மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது? எனக்குப் புரியவில்லை. சற்று விளக்குவீர்களா?
>>>
மன்னிக்கவும்; இந்தக் கேள்வி எனக்காதல்ல. என் கேள்வி பொதுவானது இதழியல் சம்பந்தப்பட்டது. விளக்கம் அளித்ததற்கு நன்றி.
அன்புள்ள மாலன்,
ReplyDeleteபத்த்ரிகையில் வரும் கருத்துக்களுக்கு அதன் செய்தியாளர்கள் கட்டுரையாளர்கள் பொறுப்பு , சரி.
அது பொது ஜனங்களிடையே எற்படுத்தும் விளைவுக்கு? திரிஷா படத்தை அரைநிர்வாணமகா ஒரு பத்திரிகையின் செய்தியாளர் வெளியிட்டால் திரிஷா வழக்கௌ தொடுக்கமுடியும். ஆனால் ஈழத்துவிஷயத்தில் யார் வந்து வழக்கு போட முடியும் ? புலிகளா? இந்துவுக்கு ஈழநிலைப்பாடு குறித்து சார்பே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? தலையங்களில் இந்துவின் நிலைப்பாடு தென்பட்டதே இல்லையா? உண்மையிலேயே
தெரியாது; முடிந்தால் சொல்லுங்கள்.
இந்தியா மோசமான குடியரசு இல்லை யென்றுதான் நினைக்க ஆசைப்படுகிறேன் முடியவில்லையே?
சுட்டியை கொடுத்தது அதற்காக இல்லை. இன அழித்தொழிப்பு ஒரு சுதந்திர நாட்டிலே இவ்வளவி நடந்திருக்கும்போது ஒரு தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொல்லாமையைக் கோரி நியாயம் பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. மேலும் , இதில் தமிழ் விரோத உணர்ச்சி கலந்துள்ளது என்று நிச்சயமாக நம்புகிறேன். நமக்கு கூட புலிகள் (என்னையும் சேர்த்து)ஏதாவது செய்தால் மட்டும் ஒரு மேலதிக கவனம் வருகிறதே அதைச் சுட்டத்தான்.
சுட்டியை வைத்து நீங்கள் போடும் சமன்பாடுங்கள் தான் கதி கலங்க வைக்கிறது என்னை. நன்றி.
மாலன் இவ்வளவு தூரம் இந்துவுக்கு பரிந்து பேசுவதால், பரி கொடுத்த ஆகஸ்ட் 15 தேதி தலையங்கத்துக்கு என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
ReplyDeleteபுலிகளின் முஸ்லிம் கொலையை நான் எங்குமே குறைத்துப்பேசவில்லை என்பதை சுட்ட விரும்புகிறேன். "ஈவிரக்கமில்லாத கொலை" என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இதையும் மாலன் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ReplyDeleteநண்பர்களுக்கு,
ReplyDeleteஈழப் பிரசினையில் இந்து நடுநிலைமையாக நடந்து கொள்கிறது என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. அது நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என் அபிப்பிராயமும். இந்த விவாதத்தில் என்னுடைய இரடண்டாவது பின்னூட்டத்தின் முதல் பின்னூட்டத்தின் முதல் வரியே, " இந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற பத்திரிகை அல்ல" என்பதுதான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டிருந்த போதிலும் இந்த விஷயத்தில் அது செய்திகளைத் திரிக்கவில்லை எனபதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.
இது தொடர்பான என்னுடைய கேள்வி, இந்து நடுநிலை தவ்றிவிட்டதாகக் குற்றம் சாட்டும் நண்பர்கள், இலங்கையில் உள்ள இதழ்கள், குறிப்பாக தமிழ் இதழ்கள், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் தமிழ் இதழ்கள், நடுநிலையோடு நடந்து கொள்வதாக நம்புகிறார்களா? அப்படி அவை நடந்து கொள்ள்வில்லை என்றால் அதைக் குறித்து விமர்சிக்கிறார்களா? என்பதுதான்.
அப்படி விமர்சிக்காமல் மெளனம் காப்பது, அவர்களது அக்கறை பத்திரிகை நெறிகளைப் பற்றியது அல்ல, விடுதலைப் புலிகளைப் பற்றியது என்பதைத்தான் காட்டுகிறது என்பது என் கவலை.
இந்துவின் நிலைப்பாடு, இந்திய அரசின், இந்திய அறிவுஜீவிகளின் (குறிப்பாக தமிழரல்லாத அறிவுஜீவிகளின்) நிலைப்பாட்டிற்கு நெருக்கமானது. அது இலங்கையில் உள்ள Natonalistகளின் சிந்தனைக்கும் நெருக்கமானது. (இந்திய, இலங்கை அறிவுஜீவிகளிடையே இந்த விஷயத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. சிற்சில முரண்பாடுகளைத் தவிர.) இந்துவின் நிலை எனக்கு மகிழ்ச்சி தரவில்லை என்றாலும் அதன் சார்பைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்துவை விடுங்கள். இந்தியாவில் வெகுஜன ஆதரவு பெற்ற எந்த ஊடகம், எந்த அரசியல் கட்சி, விடுத்லைப் புலிகளை ஆதரிக்கின்றது? ஏன் இந்த நிலை ஏற்பட்டது?
இந்தியாவை விடுங்கள். உலகில் எந்தப் பெரிய நாடு, அல்லது மன்றம், அல்லது ஊடகம் விடுதலைப்புலிகளின் நிலைபாட்டை ஆதரிக்கிறது? ஏன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது?
இதுதான் யோசிக்க வேண்டிய விஷ்யம்.
இலங்கைப் பிரசினையில் எல்லாத் தரப்புகளுமே தவ்று செய்திருக்கின்றன என்பது என் கருத்து. ஆனால் அதனால் பெரும் இழப்புக்களுக்கு உள்ளானது முதன்மையாக இலங்கைத் தமிழ் மக்கள், அடுத்ததாக விடுதலைப்புலிகள். இந்தியாவிற்கு நல்லெண்ணம் பாழ்பட்டது என்பதைத் தவிர வேறு பெரிய இழப்புக்கள் இல்லை. இலங்கை அரசுக்குப் பொருளாதாரம், வர்த்தகம், இராணுவம், உள்கட்டமைப்பு, நல்லெண்ணம், அரசியல் ஆகிய துறைகளில் இழப்பு/நெருக்கடி.
இலங்கை அரசைப் பற்றிய கவலை நமக்கு முதன்மையானது அல்ல. அதில் நாம் செய்வதற்கு ஏதும் இல்லை. ஆனால் தமிழர்கள் விஷயம் அப்படி அல்ல.
ஈழம் என்ற இலட்சியம் கை கூடவேண்டுமானால் அதற்கு விடுதலைப்புலிகள் தங்கள் அணுகுமுறையை, சிந்தனைப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்களது தவறுகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டும்.
ஆனால் அப்படி விவாதிப்பதை விடுதலைப் புலிகளோ, அவர்களது அபிமானிகளோ விரும்புவதில்லை. அது அவர்களுக்கான மக்கள் ஆதரவைப் பலவீனப்படுத்திவிடும் என்று கருதுகிறார்களோ என்னவோ?
உத்தி ரீதியாக ஒரு பெரும் தவ்ற்றை செய்திருக்கும் இந்த நேரத்தில் கூட அவர்களது செயல்பாடுகள், அணுகுமுறைகளைப் பற்றி விவாதிக்க
முற்படுவதில்லை.
ஈழத்தின் மீது செய்யப்பட வேண்டியது அதுதான். அதை விட்டுவிட்டு இந்துவை விமர்சிப்பதால் என்ன பயன்?
இந்து பிடிக்கவில்லை என்றால் அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு 'நல்ல' நாளிதழைப் படியுங்கள்.
பி.கு:
சங்கரபாண்டி: உங்களது எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன். உங்கள் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. சில கருத்துகளில், -திராவிட அரசியல், இலக்கியம்- நாம் ஒத்த அலைவரிசைகளில் இருக்கிறோம் என நினைத்ததுண்டு.
இந்து நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்கு உரியதுதான்.ஆனால் அதைத் திருத்த வேண்டும் என்பதை விட விடுதலைப்புலிகள் ஜனநாயகப்பட வேண்டும் என்பது முக்கியம் என நான் கருதுகிறேன்.
கார்த்திக்: இந்து தலையங்கம் குறித்து ஏற்கனவே நான் எழுதிவிட்டேன். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவ்து பின்னூட்டத்தில் பாருங்கள்.
அன்புடன்
மாலன்
//வலைப்பதிவொன்றில் படித்தது.//
ReplyDeleteஎமக்குக் கேள்வி கேட்கமட்டுமே தெரியும்
எம்மிடம் நெடும்பட்டியலாய்க் கேள்விகள் மட்டுமே உண்டு.
குழப்படிகாரனின் கூழனுக்குப் பத்துக்கேள்விகள்
1. உத்தி ரீதியான மாபெரும் எந்தத்தவறினை எவர் செய்தார்? திரதராஷ்டிரனுக்கு நிறத்தைச் சஞ்சயன் புரியவைக்கலாம்; கண்ணைக் கட்டிக்கொண்டு அவிழ்க்கமாட்டேனென்று நிற்கும் காந்தாரி குறித்து கூழன் என்பவரின் கருத்து என்ன?
2. விடுதலைப்புலிகள் ஜனநாயகவழிப்பாதையிலே திரும்புவதென்பது எப்படி? ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்துவிட்டு, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்கிளப்பு போன்ற பிரதேசங்களிலே புத்தர்விகாரைகளைக் கட்டிவிட்டு, ஆயுதக்குழுக்களைப் பாதுகாப்புக்கு விட்டுவிடலாமா? இலங்கை அரசு தமிழ்மக்களுக்கெதிராகப் பயன்படுத்தக்கூடிய இந்திய ஆயுத உதவிகளை, பொருளாதார உதவிகளை கூழன் நிறுத்தவேண்டுமென ஒரு வரி எங்காவது எழுதுவாரா? எழுதியிருக்கின்றாரா? அரசியற்தற்கொலை என்பது குறித்து கூழனின் அபிப்பிராயமென்ன? ஜனநாயகவழியிலே செல்வநாயகம், அமிர்தலிங்கம்வரை எடுத்துச் சென்றதிலே என்ன சாதிக்கப்பட்டிருக்கின்றதென கூழன் கருதுகின்றார்? இன்றைய பேச்சுவார்த்தை வேண்டாம், அன்றைய இந்தியா தலையிட்ட திம்புப்பேச்சுவார்த்தை வரை மயிலே மயிலேயெனப் போடப்பட்ட இறகுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சயனமஞ்சமா?
3. சூடான் கிறிஸ்தவர்கள், ஸிம்பாவே வெள்ளையர், பிரேஸில் பூர்வீககுடிகள் இனச்சிக்கல்கள் குறித்து இந்தியா, சீனா, சிங்கப்பூர், மெக்ஸிக்கோ போன்ற உலகநாடுகள் ஏன் கருத்துச் சொல்லவில்லை அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை?
4. விடுதலைப்புலிகளின் குற்றங்களை அவர்களின் ஆதரவாளர்கள் விமர்சிக்காமலிருந்த காலகட்டத்திலே திருவல்லிக்கேணி பதிப்பகத்தாரின் ஈழத்தார் குறித்த காலவழுக்களை கூழன் என்பவர் விமர்சித்திருக்கின்றாரா? பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலிகள் குறித்து கவலைப்படும் கூழன் என்பவர் அமைதிப்படையாகச் சென்ற இந்திய இராணுவத்தின் இலங்கையிலான நடவடிக்கைகள் குறித்து ஏதும் கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா? குறைந்தபட்சம், அவரது அரசியலின் தற்போதைய மஞ்சட்துண்டுத்தலைவர்போலவேனும்
5. இந்துவிலோ ப்ரொண்ட் லைனிலோ இலங்கைச்சிக்கல் குறித்து எழுதுகின்றவர்களின் பெயர்ப்பட்டியல்களைப் பார்த்திருக்கின்றாரா - முக்கியமாக, இலங்கைத்தமிழர்கள் என்ற பெயரிலே எழுதுகின்றவர்கள் குறித்து? ராம் மாணிக்கலிங்கம் என்ற சந்திரிகா அம்மையாரின் ஆலோசகர். டி. பி. எஸ். ஜெயராஜ் என்ற விடுதலைப்புலிகளோடு தனிப்பட்ட தகராற்றினைக் கொண்டவர். இவர்களின் இடத்திலே ஏ. பி. வெங்கடேஸ்வரனோ, கிருஷ்ணையரோ ஏன் எழுத முடியவில்லை?
6. இந்துவிலே இலங்கைச்சிக்கல் குறித்து, இந்துவின் ஆசிரியர் கருத்து, பத்திரிகையின் செய்தியாளர்கள், பத்திரிகைசாராத செய்தியாளர்கள் வெளியிட்ட கருத்துகளிலே ஒன்றேனும் இலங்கை அரசு சாராமல், இந்திய நலனை முன்னிலைப்படுத்துகின்றோமென்ற மாயையை உருவாக்காமால், விடுதலைப்புலிகளின் குரலை வெளியிட்டு வந்திருக்கக்கண்டிருக்கின்றாரா? வெளிவந்த கருத்துகளுக்குப் பின்னான வாசகர் கடிதங்களிலே ஏதாவது மூலக்கருத்துக்கு ஆதரவில்லாமல் வர கூழன் கண்டிருக்கின்றாரா? சன் தொலைக்காட்சியிலே அப்படியான நிலை இருக்கின்றதா?
7. இன்றைய காலகட்டத்திலே, ஈழப்பிரச்சனைக்குத் தீர்வு காண ஈழத்தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கின்றார்?
8. விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் கொல்லப்பட்டபோது, அதற்கான குற்றம் சாட்டப்பட்ட அரசுசார் துணைஆயுதக்குழுக்களைத் தாம் கட்டுப்படுத்தமுடியாதென சென்ற வாரத்தின் ஆரம்பத்திலேதான் இலங்கை அரசின் செயலாளர் சொன்னது குறித்து கூழன் கண்டனத்தினை பதிந்திருக்கின்றாரா, அல்லது இந்துதான் பதிந்திருக்கின்றதா?
9. தமிழ்ப்பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி ஆரம்பத்திலே இந்தியா அளித்தது குறித்து கூழன் அக்காலத்திலோ இக்காலத்திலோ எங்காவது எதிராக ஜனநாயகக்கருத்தினைத் தெரிவித்திருக்கின்றாரா? அமுதத்திலே, பேராசிரியரும் மகளும் "பயங்கரவாதிகளை"க் காப்பாற்ற தாம் சிக்கிக்கொள்வது குறித்து விதந்தோதிக்கதை எழுதாதது தவிர்த்து.
10. இக்கேள்விகள் போதாதெனில், இன்னும் கேள்விகள் வேண்டுமா?
கடைசியாக, "நாம் ஒத்த அலைவரிசைகளிலே இருக்கின்றோம்" என்பதே விபரீதமில்லாத வரிகளாகுமென்பது எம் தாழ்மையான கருத்து :-)
ஒவ்வோர் உள்ளிடுகைக்கும் ஆள் பெயர் வேண்டுமென்பதால்,
அடியேன் அண்ணன் பயங்கராச்சாரியார்
Hello anonymous,
ReplyDeleteif you read and understand what Sankarapandi has written in this blog with even a pinch of honesty, you will not call Sankarapandi as a 'diehard supporter' of LTTE. He rightfully admits that all the three parties, i.e., the SL govt, the Indian govt and the Tigers are equally responsible for the current sad state of affairs.
All that Sankarapandi argues against is the portrayal of the Tigers as the only evil who is responsible for the current situation, especially when this view is consistently and falsely propagated by the 125 year old newspaper The Hindu.
*******
ReplyDeleteஅண்ணன் பயங்கராச்சாரியார்
******
நாகர்கோயில் கிருஷ்ணன் பாட்டு சூப்பர்....
வணக்கம் நண்பர்களே!
ReplyDelete//I think Sri Lankan tamils are better off under sinhalese than the fascist monster like prabhakaran//
இதை எழுதிய குடிமகனார் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார்? மகாத்மா காந்தி ஓரிடத்தில் சொன்னார்" எப்போது ஒரு நாட்டில் நள்ளிரவில் ஒரு பெண் தனியாக நடந்து வரமுடிகிறதோ அப்போது தான் அந்த நாட்டிற்கு முழுவிடுதலை கிடைத்ததாகச் சொல்லமுடியும்"என்று. ஊடக சுதந்திரம் அதிகமாக உள்ள அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த மேற்குலக நாடுகளிலோ தனியே வெளியே செல்லும் பெண் போனபடியே திரும்பி வருவாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் தமிழீழத்தில் இருக்கிறதய்யா. 1995 ஐப்பசிக்கு முன்னர் யாழ் நகரிலோ கிராமப்பகுதியிலோ தனியாக ஒரு பெண் சென்று வருவதற்கு அச்சம் இருக்கவில்லை. சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பான முறையில் இருந்தது. தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் உரிய தண்டனை உடனேயே வழங்கப் பட்டது( உரிய விசாரனைகள் மேற்கொள்ளப் பட்டபின்னர் தான்).
ஆனால் இதே நிலை தமிழகத்தில் உள்ளதா? ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சொல்லப்பட்ட ஒருத்தி மேல் நீதிமன்றில் நிரபராதியோ? புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு கிருசாந்தி குமாரசுவாமியாவது உருவாகியிருக்கிறாளா? ஈழத்தமிழர்கள் இந்திய அரக்க இராணுவத்தின் பிடியில் துன்பப் பட்டதை விடக் குறைவாகவே இலங்கை இராணுவத்தினரால் துன்பப்பட்டார்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்வேன்.
எங்கோ ஒரு மேற்குலக நாட்டில் இருந்து கொண்டு புலிகளை விமர்சிப்பது நகைப்புக்கிடமானது. உண்மையான தகவல் அறிய வேண்டுமானால் ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.
அன்புடன் தமிழ்மகள்.
அவர்கள் அம்புகளை எய்து கொண்டிருக்கிறார்கள். எங்களிடமும் அவை உள்ளன. ஆனால் தற்போது கேடயங்களை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம்.
மாலன் அவர்களுக்கு
ReplyDeleteஉலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தமிழகத்தில் எந்தப் பத்திரிகை சார்பில்லாமற் செயற்படுகின்றது என்று சொல்ல முடியுமா.இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ஏதாவதொரு சார்பில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.அப்படியிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது பொருத்தமாக இல்லை.
உத்தி ரீதியான ஒரு தவற்றைச் செய்துள்ள நேரத்தில் என்று நீங்கள் குறிப்பிடுவது கதிர்காமரை புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நம்பி மற்றவரையும் நம்ப வைப்பதாக இருக்கிறது இன்ன்மௌம் நிரூபிக்கப்படாத ஒன்றை விடுதலைப்புலிகளால் மறுக்கப்பட்ட கொலையை திரும்பத் திரும்ப அவர்கள் தான் செய்தார்கள் என்று கூறுவதன் மூலம் நீங்கள் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறீர்கள் என்றுதான் கூற முடியும்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடு மட்டுமல்ல இலங்கை,இந்திய இராணுவங்களினதும் செயற்பாடுகள் பற்றியும் பகிரங்கமாக விவாதிக்கத்தான் வேண்டும் யார் தயார்?
//ஒரு தடவை வன்னிக்குப் போய் பாருமைய்யா.//
ReplyDeletethen why you are staying in canada ?
Some idiot has given this comment
ReplyDelete"I think Sri Lankan tamils are better off under sinhalese than the fascist monster like prabhakaran."
let that seedless refer this link:
http://www.tamilnation.org/indictment/genocide83/gen01.htm
இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில்
ReplyDeleteகதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது.
பி.இரயாகரன்
19.08.2005
கதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் மேல் அதிகமாக்கியுள்ளது. மறுபக்கத்தில் புலிகள் ஷஷநாங்கள் இந்த நடவடிக்கையை (கொலையை) கடுமையாக கண்டனம் செய்கின்றோம்... இந்த கொலையுடன் விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்துவது மிகவும் தவறானது மற்றும் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்... விடுதலைப் புலிகளுக்கு அவரைக் கொல்லவேண்டிய தேவை இல்லை|| என்ற கூறியுள்ளனர். புலிகளோ வழமைபோல் இந்தக் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். உத்தியோகபூர்வமற்ற நிலையில் புலிகளின் அணிகள் இந்த கொலைக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதைக் காட்டி பல மிரட்டல்களை தொடர்ந்து விடுகின்றனர்.
இதற்கு அப்பால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக ஒரு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பேரினவாதத்துக்கு இதுவே ஒரு அரசியல் வெற்றியாகியுள்ளது. பேரினவாதிகளோ இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். தமிழ் குறுந்தேசியவாதிகளின் கற்பனையான வக்கிரமான மனப்பிரமைகளை கடந்து, தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் அனைத்தும் இது போன்ற கொலைகள் மூலம் சிதைக்கப்படுகின்றது.
பேரினவாத சக்திகள் சமாதானத்துக்கு எதிரான புலிகளின் வழமையான தொடர்ச்சியான நடவடிக்கை என்று காட்டுகின்றனர். இதை சர்வதேச பயங்கரவாதமாக சித்தரித்து, ஏகாதிபத்திய தலையீட்டை புலிக்கு எதிராக ஊக்குவிக்கின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் உரையில் ஷஷஇலங்கையின் ஜனநாயக வாழ்வை அழித்து சிதைக்க முற்படும் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேசம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.|| என்றார். ஒரு தவறான அரசியல் கொலை, எப்படி சர்வதேச ரீதியாக பேரினவாதத்துக்கு சார்பாக மாற்றப்படுகின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.
அடுத்த ஜனதிபதியாக முயலும் மகிந்த ராஜபக்ச மேலும் தனது உரையில் ஷஷசெப்ரெம்பர் 11ல் நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல், லண்டன் குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க போன்றவர்களின் படுகொலைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் வரிசையில் இன்று லக்ஸ்மன் கதிர்காமரும் பலியாகியுள்ளார். உலகிற்கு பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாகியுள்ளது. அதற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையுடன் கைகோர்க்குமாறு சர்வதேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.... மக்களின் ஜனநாயக வாழ்வைச் சிதைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும். கிழக்கோ மேற்கோ இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.|| என்றார். உண்மையில் இந்த உரையை சாரமாக கொண்டே எல்லாப் பேரினவாதிகளும், எல்லா இராஜதந்திர முயற்சிகளும் மிக நுட்பமாக நகர்த்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவல்ல இந்த முயற்சி, இலங்கை பேரினவாத வரலாற்றில் மிகபெரிய சாதனையை, ஒரு தவறான ஒரு அரசியல் கொலையூடு உருவாக்கியுள்ளது. பேரினவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு இது ஒரு சர்வதேச அங்கீகாரத்தை, புலிக்கு எதிராக உருவாக்கியுள்ளது.
ஏகாதிபத்தியமோ இதை ஒரு சர்வதேச பயங்கரவாதமாகவும், புலிகளின் கீழ்த்தரமான தொடர் நடவடிக்கையாகவும் காட்டுகின்றனர். தமது அஞ்சலிகள் ஊடாகவும், மறைமுகமான நடவடிக்கைகள் மூலமும் இலங்கை விவகாரங்களில் அதிகளவில் தலையீட்டை நடத்துகின்றனர். புலிகளை நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு மீளவும் கொண்டு வந்துள்ள நிகழ்வு இதன் ஒரு பகுதியே. ஐ.நா புலிகளுக்கு எதிராக தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கமிடுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது. அந்தளவுக்கு சர்வதேச ரீதியான தலையீட்டுக்கு இது வழிகாட்டியுள்ளது.
ஐ.நா உலகெங்கும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளை, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தியது. அதை அனுமதிக்க மறுத்த புலிகள், ஐ.நா கொடியை பலாத்காரமாக அகற்றினர். இந்த சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டித்துள்ளது. உண்மையில் ஒரு தவறு அடுத்த தவறை உருவாக்கியது. ஐ.நா தனது அறிக்கையில் ஷஷஇச்சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் எனவும், இதில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மீது புலிகள் அமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐ.நா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு அமைப்புக்கள் மீது இவ்வாறான நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.|| இதன் மூலம் உலகெங்கும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போக்கு வலுப்பெற்று வருகின்றது. ஏகாதிபத்தியத்தின் எந்;த நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில், இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வழிகாட்டுகின்றன.
இந்தக் கொலையை கண்டித்து ஐ.நா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் ஷஷகொபி அனான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார். இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இக்கொலையை புரிந்தோர் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அனான் நம்புகிறார்|| என்ற அறிக்கையில் மேலும் அவர் ஷஷலக்ஷ்மன் கதிர்காமர் மிகவும் மதிக்கப்பட்ட இராஜதந்திரி எனவும் தேசிய ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர் எனத் தெரிவித்துள்ள கொபி அனான் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டைத் தொடருமாறும் கோரியுள்ளார்.|| என்ற ஐ.நா அறிக்கைக்கு ஏற்ப இலங்கை பேரினவாத அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவே புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்தியுள்ளது.
மீண்டும் யுத்தம் என்ற கோசங்களையும், படுகொலைகளையும், அரசியல் நேர்மையற்ற செயல்தளத்தில் இயங்கும் புலிகளின் செயல்தளத்தை தனிமைப்படுத்தம் வகையில், பேரினவாதிகள் தமது சொந்த பேரினவாத நோக்கம் வெளிவராத வகையில் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துகின்றனர்.
இதன் தொடாச்சியாக இந்த நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க ராஜாங்க அமைச்சர் தனது அனுதாப அறிக்கையில் ஷஷஇலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை எனக்கு அளவற்ற சோகத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இவ்வாறான இரக்கமற்ற கொலை ஒரு பயங்கரவாத செயல். இதனை அமெரிக்க அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய கொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் தீர்ப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்|| என்றார். அவர் மேலும் ஷஷஅவர் ஒரு கட்டுப்பாடு கண்ணியங்கள் மிக்க கனவானாக இலங்கையின் சமாதானத்திற்காக அதிகம் தன்னை அர்ப்பணித்தவர். அவரைக் கௌரவப்படுத்துவது என்பது சமாதானத்தையும் யுத்த நிறுத்தத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதாலேயே சாத்தியமாகும் எனவும் அவர் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.|| யுத்த நிறுத்தத ;தையும், சமாதானத்தையும் கதிர்காமர் நேசித்தார் என்றும், அதை அரசு கடைபிடிக்க முயல்வதன் மூலம் புலிகளின் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தி உலகளவில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு கம்பளம் விரித்துள்ளார்.
இந்த நிலையில் சமாதானம் மற்றும் யுத்த நிறுத்தத்தில் நம்பிக்கை உள்ளதாக புலிகள் திடீரென மீண்டும் அறிவித்தனர். மீண்டும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையை நோக்கி திடீரேன ஓடுகின்றனர். புலிகளின் தவறான கண்மூடித்தனமான படுகொலை அரசியல் நடவடிக்கைகள், முட்டுச் சந்தியில் தமிழ் மக்களை பலியிடவே தொடர்ச்சியாக வழிகாட்டுகின்றது. ஏகாதிபத்தியங்களும், மற்றைய பிராந்திய வல்லரசுகளும் தமது இரங்கல் உரை மூலம் சொல்லும் செய்திகள், புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது.
கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பியரி பெட்டிகிரே தனது இரங்கல் செய்தியில் ஷஷகனடா மக்கள் சார்பாக கதிர்காமர் குடும்பத்தினருக்கும் இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் அமைதி நடவடிக்கைக்கு கதிர்காமர் ஓய்வின்றி உழைத்தார். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்|| என்றார். ஜப்பானியப் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி ஷஷஇந்தப் பலாத்கார நடவடிக்கையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஜப்பானிய அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக அவரது குடும்பத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.|| என்றார். இந்தியா இதை ஷஷகொடூரமான பயங்கரவாதச் செயல்; அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்|| என்றது. மேலும் தமது இரங்கல் உரையில் ஷஷமறைந்த அமைச்சர் இந்தியாவின் நீண்ட கால நண்பரும் சிறந்த பண்புகளும் ஆற்றலும் கொண்ட வெளிநாட்டமைச்சருமாவார். இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகள் நீதியின் பால் கொண்டுவரப்பட வேண்டும்.|| என்றனர். மேலும் ஷஷஇந்தியா இலங்கை இடையிலான உறவை மேம்படுத்த பெரிதும் பாடுபட்டவர் கதிர்காமர். அவருடைய மறைவால், இந்தியா மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் அவர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தளராமல் உழைத்தவர்|| என்ற இரங்கல் உரை தொடருகின்றது. மரணச் சடங்கில் மரபுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரையே இந்தியா அனுப்பி வைத்ததன் மூலம், புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குரிய ஒரு அரசியல் சமிக்கையைக் கூட விடுத்துள்ளனர்.
மறுபக்கம் இலங்கை விவாகாரங்களில் இந்தியத ; தலையீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. புரட்சி பேசும் மார்க்சிஸ்ட் கட்சி தனது புரட்சிகர வேஷத்தை கலைந்த நிலையில் தனது அனுதாபத்தை வெளியிட்டனர்.
தம்மைத் தாம் மார்க்சியவாதியாக காட்டும் Nஐ.வி.பியோ தமது போலியான சிவப்பு வேஷங்களைக் களைந்து நிர்வாணமாக வெளிப்பட்டனர். அவர்கள் தமது சிவப்பு கோசத்தால் ஷஷநீங்கள் எமது நண்பர், தேச பக்தன், நீங்கள் மரணமடைந்த பின்னரும் வாழ்வீர்;கள்|| என்றனர். ஒரு பேரினவாதத்தின் கண்ணீராக, துன்பவியலாக இப்படித்தான் வெளிப்படமுடியும். Nஐ.வி.பி தமது பேரினவாத இழப்பை தொடர்ந்து ஷஷஎமது தேசத்தின் உண்மையான மைந்தன் வீழ்ந்து விட்டான். எமது மதிப்புக்குரிய லக்ஸ்மன் கதிர்காமர் மீது வைக்கப்பட்ட இலக்கு இனவாத எதிர்ப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மனித உரிமை என்பவற்றின் மீது நம்பிக்கை கொண்டோர்; மீது வைக்கப்பட்ட இலக்காகும்.|| என்கின்றனர். தொடர்ந்தும் அவர்கள் ஷஷஇலங்கையிலுள்ள அரசியல்வாதிகளிலே மிகவும் நேர்மையானவராகவும், இரட்டைக் கருத்தில் பேசாதவராகவும், சூழ்ச்சி அரசியல் போக்கு அற்றவராகவும் இருந்தார். ஜே.வி.பி இனரும், கதிர்காமர் அவர்களும் வௌ;வேறு அரசியல் பின்னணியைக்; கொண்டவர்கள். இருந்தபோதிலும் நாம் அவருடன் மிகவும் வெளிப்படையான வகையிலும், நேர்மையுடனும், நாட்டின் உண்மையான நேசிப்புடனும் மிக இறுக்கமான உறவை வளர்த்திருந்தோம். தமிழராகப் பிறந்த போதிலும் இன வெறுப்பற்றவராகவும் முழு நாட்டையும் நேசிப்பவராக இருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் தோற்றுவித்தபோது அவரை நாம் நாட்டின் அதி உயர் பதவியை வகிக்க வேண்டுமென கோரியது ஒன்றும் இரகசியமானது அல்ல. நாம் அவருடன் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஓவ்வொரு தருணத்திலும் அவரது நேர்மை வளர்ந்து சென்றதை நாம் வெகுவாக அவதானித்துள்ளோம். ஜே.வி.பி இனராகிய நாம் நல்ல நண்பர் ஒருவரை இழந்துள்ளோம். நாடு ஓர் உண்மையான தேச பக்தனை இழந்துள்ளது.|| என்;றனர் மேலும் அவர்கள் ஷஷநண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.|| என்றனர். Nஐ.வி.பிக்கும், கதிர்காமருக்கும் இருந்த இலட்சிய ஒருமைப்பாடு பேரினவாதமாகவும், உலகமயமாதலாகலுமாகவே இருந்தது ஆச்சரியமானதல்ல.
இந்தவகையில் தான் Nஐ.வி.பியின ; கண்ணீர் துளிகள் இப்படி சொல்லவைக்கின்றது. முழுநாட்டையும் நேசித்தார் என்றால், அதன் அரசியல் அர்த்தம் தான் என்ன. மக்களை தமிழர் சிங்களவர் வேறுபாடு இன்றி சூறையாட ஏகாதிபத்திய கால்களை நக்கி தவமிருந்தார் என்பது தான்;. உண்மையான தேசபக்தனை இழந்துள்ளதாக கூறும் Nஐ.வி.பி, அந்த தேசபக்திதான் என்ன? நாட்டை ஏகாதிபத்தியத ;திற்கு கூவி விற்பதே அந்த தேசபக்தி. இதைத் தாண்டி எதையும், நாட்டுக்காக கதிர்காமர் செய்யவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று சொல்லும் Nஐ.வி.பி, அந்த ஜனநாயகம் என்பது மக்களை சுரண்டிச் சூறையாடுவதையே தேசத்தின் உண்மையான மைந்தனின்; இழப்பாக காட்டுகின்றனர். Nஐ.வி.பிக்கும் கதிர்காமருக்கும் என்னே அரசியல் ஒற்றுமை. பேரினவாதி; கடிவாளங்களை கொண்டு இயக்குவதில் கொண்டுள்ள ஐக்கியத்தில் இருந்தே, தேச இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள் என்று Nஐ.வி;.பியினர் புலம்புகின்றனர்.
இப்படி எல்லாம் வெளுத்துப் போன பேரினவாத அஞ்சலிகள், அறிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் கொலையைச் செய்தவர்களின் குறுந்தேசிய அரசியலுக்கு ஏற்ப அரசியல் அற்ற வெற்று தூற்றுதல்கள் மறுபுறம். இந்த கொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? கொலைக்கும், இலங்கையில் வாழும் மக்களின் நலனுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள கொள்ளமுடியும்.
கதிர்காமர் ஒரு மக்கள் நலன் சார்ந்த தலைவரா என்ற ஒரு கேள்வியைக் கேட்பின் நிச்சயமாக இல்லை. மக்கள் நலன் என்பது உலகை ஆளும் வர்க்கங்களின் நோக்கத்துக்கு வெளியிலேயே எப்போதும் காணப்படுகின்றது.
கதிர்காமர் தமிழரா சிங்களவரா என்ற அடிப்படையான இனவாதக் கேள்வியை விடுத்து, அவரின் அரசியல் என்ன என்ற கேள்வியே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உலகமயமாதல் அமைப்பில் கதிர்காமர் செய்ததெல்லாம் மக்கள் விரோத அரசியலையே. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை இலங்கையில் பேணிப் பாதுகாக்கும் ஒரு மக்கள் விரோத அரசியலையே அவர் விசுவாசமாகச் செய்தவர். இதில் அவர் சிங்களவர் தமிழர் என்ற எந்த பாகுபாட்டையும் காட்டியவர் அல்ல. ஆனால் பேரினவாத அரசில் அங்கம் வகித்தன் மூலமாக தனது பொதுச் செயல்பாட்டால், தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்கு முறைக்கு தன்னால் இயன்றவரை துணைபோனவர். ஒரு இனவாதியாக இருந்தவர். இதற்கு வெளியில் அவர் எதையும் மக்களுக்காக செய்யவில்லை.
உலகளாவிய ஏகாதிபத்திய நலன்கள் எதுவோ, அதற்காகவே அவர் விமானம் ஏறி உலகம் பூராவும் சுற்றியவர். இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடையத்திலும் அவர், ஏகாதிபத்திய போக்குடன் தன்னை இணைத்துச் செயல்பட்டார். இங்கு அவர் சிங்களவருக்காக இயங்கவில்லை. மாறாக உலகமயமாதலில் அங்கமாக இருந்த பேரினவாத அரசில் ஒரு அங்கமாக செயல்பட்டவர். ஏகாதிபத்திய சந்தை பொருளாதாரத்தின் உலகளாவிய நலன்களுக்கு ஏற்ப, இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை பயங்கரவாதமாக காட்டியவர். இதற்கு புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைளே பக்கத ;துணையாக அமைந்தன.
அண்மைய காலத்தில் உள்நாட்டில் யுத்த நிலைமைகளின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல் சர்வதேச நிகழ்ச ;சிகளில் இயல்பான தன்மைக்கு ஏற்ப்பத்தான் அவர் செயல்பட்டார். இந்த உலகமயமாதல் அமைப்பில் எந்த வெளிநாட்டு அமைச்சரும் இதற்கு வெளியில் செயற ;படமுடியாது. உண்மையில் கதிர்காமரின் நடத்தைக்கு ஏற்ப, புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைகள் அரங்கேறிவந்தன. இதை கதிர்காமர் நேர்த்தியாக பயன்படுத்தி ஒரு இராஜதந்திரியாக மாறினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தைகள் இல்லை என்றால், கதிர்காமர் இல்லை. Nஐ.வி.பி கூறுவது போல் ஷஷநண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.|| என்ற புலம்;பலும் உருவாகியிருக்க முடியாது. இதனடிப்படையில் Nஐ.வி.பி இன்று முன்வைக்கும் அரசியலும் கிடையாது. இதைக் கொண்டு தான் Nஐ.வி.பி இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம் என்ற தமது பேரினவாத அரசியலையும் கூட பிரகடனம் செய்ய முடியாது. இவர்களின் அரசியல் கூட, புலிகளின் மக்கள் விரோத அரசியலில் இருந்தே புளுத்துக் கிளம்புகின்றது.
மறுபக்கம் புலிகள் கூறுவது போல், அவர் புலிகளின் சர்வதேச தடைக்கு காரணமானவர் என்று வலிந்து காட்டும் கட்டமைப்புக்கு அவர் விசேடமானவர் அல்ல. புலிகளின் சொந்த நடவடிக்கைகள் தான், புலிகளின் தடைக்கு காரணமாக அமைகின்றன. இது கதிர்காமரின் புகழுக்குரிய ஒரு அரசியல் இராஜதந்திரமல்ல. சர்வதேச நிகழ்ச்சி போக்குகளும், புலிகளின் மக்கள் விரோத போக்குமே தடையை ஏற்படுத்தியது.
கதிர்காமர் அரசியல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக ;கும் எதிராக இருந்தது. உலகமயமாதல் நிகழ்ச்சிப ;போக்கில் நாட்டை விற்பதில் அவர் சளையாத ஒரு கல்விமானாக இருந்தவர். உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில், அவரின் மொத்தச் செயல்பாடு அமைந்து இருந்தது. மிகப் பிரதான முரண்பாடாக இருந்த இனப்பிரச்சனையில், உலகமயமாதலை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாடு என்ன செய்யுமோ அதையே கதிர்காமர் செய்தார்.
இந்தக் கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு அணியினர் மிகப் பெரிய கல்வியாளரை புலிகள் கொன்று விட்டனர் என்று புலம்பமுனைகின்றனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தையும், தொடர் படுகொலைகளையும் உள்ளடங்கிய இந்த தொடர் கொலையில், கல்வியாளான் என்பதாலும் இதை கண்டிப்பதாக புலியெதிர்ப்பு அணியினர் ஒரு விதத்தில் காட்ட முனைகின்றனர். உண்மையில் சமூகத்தைப் பிளக்கும் சமூக விரோதக் கல்வி, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது சிறப்பாகவே கதிர்காமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அறிவின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர் மறுத்து நின்றார். தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுத்து நின்ற அவர், சமூகங்களிள் சமூகப் பிளவுகளை பாதுகாப்பதிலேயே தனது கல்வியை பயன்படுத்தியவர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சாராக இருந்த இவர், புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை எதிர்த்து செயல்படுவதிலே ஒரு பேரினவாதியாக செயல்பட்டவர். புலிகளின் மக்கள் விரோத அரசியலையும், தமிழ்மக்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையையும் ஒன்றாக காட்டி அதை அழித்தொழிப்பதில் தனது அறிவைப் பயன்படுத்தியவர். இதைத்தான் ஜே.வி.பியும் செய்தது, செய்கின்றது. இதற்கு வெளியில் கதிர்காமர் சுயாதீனமாக செயல்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்காத ஒரு பேரினவாதக் கட்சியின் முதுகெலும்பாக இருந்தவர். அதேநேரம் சிங்கள தமிழ் வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களின் நலன்களையும், உலகமயமாதல் அமைப்பில் ஏகாதிபத்தியத்துக்கு கூவி விற்பதில் தனது விற்பனைத் திறனைக் காட்டியவர்.
இந்த வகையில் அவர் இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் விரோதியாவார். மக்களின் முதுகெலும்பை முறித்தவர். புலிகளின் பாசிச நடவடிக்ககைகளின் பெயரில், ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்து கிடந்து நக்கியவர். உலகளவில் அனைத்து மக்கள் விரோத அரசுகளுடனும் சேர்ந்து கூத்தாடியவர்.
ஒரு மக்கள் விரோதியை மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான போராட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டியவர்களின் கதிர்காமரும் ஒருவர். மக்கள் நீதிமன்றங்கள் மக்கள் விரோத சமூக விரோதிகளை தண்டிக்கும் அதிகாரத்தைக் கொண்ட போராட்டங்கள், அல்லாத ஒரு நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை மக்கள் விரோத நோக்கில் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களில் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது.
1.இந்தக் கொலை மூலம் ஏகாதிபத்திய தலையீட்டை இலங்கையில் அதிகரிக்க வைத்துள்ளது. இலங்கையில் உள் விவகாரங்கள் மேலும் சர்வதேசமயமாகி விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியைக் கொண்டு அனைத்து மக்களின் வாழ்வியலையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் தொடங்கிவிட்டன. கதிர்காமர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆட்சிக்காலத்தில் உயிருடன் இருந்த காலத்தில் செய்த பணியைவிட, அவரின் மரணம் ஏற்படுத்திய விளைவே மிகப்பாரதூரமானது. அவரின் மரணம் பேரினவாதத்தின் அளவற்ற நெகிழ்ச்சியற்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக ஒரு பாரிய பிரச்சாரத்தை புலிக்கு எதராக இது ஏற்படுத்திய அதே கணத்தில், தமிழ் மக்களின் போராட்டத்தை இது மழுங்கடித்துள்ளது.
2.இந்தக் கொலை புலிகள் (அவர்கள் இதை உத்தியோக பூர்வமாக மறுத்த போதும்) செய்ததன் மூலம், தமது தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியலை மெருகூட்டியுள்ளனர். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி, இது போன்ற தனிப்பட்ட வக்கிரமான பழிவாங்கல்களை செய்வதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆழமாக சிதைத்துள்ளனர். குறுந்தேசிய வெறிக்கு ஏற்ப, இது போன்ற கொலைகள் மூலம் சாதிப்பது அனைத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.
இதை செய்துவிட்டு மறுப்பதன் மூலம், செய்யக் கூடாததை செய்ததை ஒப்புக் கொள்வதாகும். அதை தொடர்ந ;தும் செய்ய துணைபோவதாகும். நேர்மையற்ற வகையிலான செயல்பாடுகள் எப்போதும் மக்களுக்கு எதிரானதாகவே மாறுகின்றது. இது போன்ற ஷஷதுரோகிகளை|| ஒழித ;துவிட்டால் தமிழீழம் கிடைக்கும் என்ற வாதப்பிரதிவாதங்கள் அர்த்தமற்றவை. இந்த வாதங்கள் சரியென்றால் அல்பிறட் துரையப்பாவை கொன்ற போதே தமிழீழம் கிடைத்து இருக்க வேண்டும். மாறாக புலிகளின் ஷஷதுரோகிப்|| பட்டியல் ஆலமரம் போல் விருட்சம் விட்டு பெருகித் தான் செல்லுகின்றது. புலிகள் கூறும் ஷஷதுரோகிகளை|| உருவாக்குவதே புலிகளின் அன்றாட நடவடிக்கை தான். முடிவாக பல ஆயிரம் பேர் இப்படி கொல்லப ;பட்டதிலும், கொல்லப்படுவதிலும் முடிகின்றது.
இங்கு தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் ஒரு புறம், மறுபக்கம் புலிகளின் குறுந்தேசிய போராட்டம் மறுபுறம். ஒரு யுத்த நிறுத்தம், சமாதானம், அமைதி பற்றிய ஒரு அரசியல் உடன்பாடு உள்ள ஒரு நிலையில், அதை கையெழுத்திட்டவர்கள் அதை நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும்;. இல்லாத ஒரு நிலையில் நடக்கும் இதுபோன்ற கொலைகள் மிகவும் கோழைத்தனமானது, நேர்மையற்றதுமாகும். முதுகில் குத்துவதைத் தாண்டி எதையும் இந்த அரசியல் கொண்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இது அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. இன்று இலங்கையில் தொடரும் கொலைகள், கடத்தல்கள் முதல், அனைத்து மக்கள் விரோத நடவடிக்கையும் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே அர்த்தமற்ற ஒன்றாக மாற்றிவிடுகின்றது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் புலிகள், இதுபோன்ற தொடர் நடவடிக்கை மூலம் தமது குறுகிய இராணுவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துவதற்கு அப்பால், மக்களுக்கென எதையும் பெற்றுத் தரப்போவதில்லை என்ற உண்மையை யாரும் வரலாற்றில் நிராகரிக்க முடியாது. கொல்லப்பட்டவன் எவ்வளவு மிகப் பெரிய மக்கள் எதிரியாக இருந்தாலும், மக்களின் வாழ்வியலும் சம்பந்தப்படாத வகையிலான உதிரி நடவடிக்கைகள் உண்மையில் மக்களையே அடிமைப்படுத்துகின்றது. இதைத் தான் இந்தக் கொலை சாதித்துள்ளது.
கனடாவில் இருக்கிறேனா கசுமீரத்தில் இருக்கிறேனா என்பது இங்குள்ள விவாதம் அல்ல. கடல்கோள் ஏற்பட்ட போது வன்னியில் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் சுத்திகரிப்பு வேலைகளை புலிகள் எந்த அரச உதவியும் இன்று ஓரிரவுக்குள் செய்து முடித்தார்கள்.மக்களுக்கான அரசு வன்னியில் தான் உள்ளது என்பது என் விவாதம். வன்னி மண் வாசமே தெரியாதவள் பேசுகிறாள் என்பது போன்ற ஒரு எண்ணம் உமக்குத் தேவையில்லை. வன்னியில் பொருளாதாரத்தடை இருக்கிறது. ஆனால் தமிழக கோவில்களுக்கு முன்னால் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களை போல் எந்த ஒரு பிச்சைக்காரனையும் காணமுடியாது.ஊழல் செய்து மக்களை ஏய்க்கும் கோமாளித்தனம் அங்கில்லை. திரைப்படம் என்ற பெயரில் ஆபாசங்களை வெளியிடும் குப்பைத் திரையரங்குகள் அங்கில்லை.போதைப் பொருள் வியாபாரமோ பாவனையோ பெண்களை விற்கும் கேவலமான தொழிலோ வன்னியில் இல்லை. சாதி என்ற பெயரில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளும் வன்முறை அங்கில்லை. இவையெல்லாம் புலிகளின் நிர்வாகத்திறனுக்கு சில எடுத்துக் காட்டுகள்.
ReplyDeleteஇவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்தும் அதை கருத்திற்கொள்ளாமல் புலிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவது 2005இன் சிறந்த நகைச்சுவை.
அன்புடன் தமிழ்மகள்
அன்புள்ள ஈழநாதன்,
ReplyDelete>>இந்து மட்டுமல்ல சகல ஊடகங்களும் ஏதாவதொரு சார்பில் தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன<<
ஈழப்பிரசினை தொடர்பாக இந்துவை விமர்சிக்கும் போது இதை நினைவில் கொள்வது நல்லது. இந்துவை மட்டும் தனிமைப்படுத்தாமல் எல்லா ஊடகங்களையும் விமர்சிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை.
அதே நேரம் பல்வேறு பிரசினைகளில் முரண்பட்ட நிலைகளைக் கொண்ட இந்திய/தமிழ் ஊடகங்கள் இந்த விஷயத்தில் ஏன் ஏறத்தாழ ஒரே நிலையைக் கொண்டிருக்கின்றன என்பதை விடுதலைப்புலிகளின் அபிமானிகள் யோசிக்க வேண்டும்.
மற்ற உங்கள் கேள்விகளுக்கு இராயாகரனின் கட்டுரையில் பதில் இருக்கிறது.
>>விடுதலைப்புலிகளின் செயற்பாடு மட்டுமல்ல இலங்கை,இந்திய இராணுவங்களினதும் செயற்பாடுகள் பற்றியும் பகிரங்கமாக விவாதிக்கத்தான் வேண்டும் யார் தயார்? <<
நீங்களே உங்கள் வலைப்பதிவில் செய்யலாமே?
அன்புடன்
மாலன்
பி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை.
//பி.கு: தமிழ்மணத்தில் உள்ள சுட்டிகளின் மூலம் உங்கள் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை//
ReplyDeletemaalan,
Blogs hosted in yarl.net server cannot be accessed from india. for some reason - i dont know what - few isps have blocked yarl.net. Use https://www.megaproxy.com/freesurf/