இப்பல்லாம் சண்டேனா ரெண்டு டைப் விளம்பரங்கள் ஜாஸ்தியாயிடுச்சு. இதுநாள் வரை ஜோதிகா தன் 50,000 கலர் RMKV புடவையை விளம்பரித்த மியூசிக் அகாடெமி வாயில் பக்கம் உள்ள பெருந்தட்டியில் ஒரு இளம்பெண் சொல்கிறார்:
"I did it only once a week. Now I do it almost every day"
எழும்பூர் போகும் வழியில் மற்றுமொரு தட்டி. அதில் ஆண், பெண் இருவரும் கை கோத்து நிற்கின்றனர், அங்கு:
"We can't wait to do it"
(ஞாபகத்தில் இருந்து எழுதுவது, சிறு மாற்றங்கள் இருக்கலாம்.)
இன்னமும் பல இடங்களில் விளம்பரத் தட்டிகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்ன பிராண்ட், என்ன பொருள் என்று எந்தத் தகவலும் இல்லை.
====
என்னோட கெஸ் என்ன தெரியுமா?
இது ஒரு தொலைதொடர்பு நிறுவனம். போன் பண்றதைப் பத்தி சொல்லப்போறாங்க...
மோஸ்ட்லி ஏர்டெல்.
வெண்முரசு 75, புதுவையில் நான்
6 hours ago
ஏர்டெல் இருக்காது என்று நினைக்கிறேன். ஏன் என்றால், கடந்த ஒரிரு வருடங்களில் செல்பேசிகளில் தொடர்பு கொள்வது சர்வசாதாரணமாகி விட்டது. செல்பேசி வைத்திருப்பவர், ஒரு நாளைக்கு ஒரு கால்தான் செய்கிறேன் என்றால் லாஜிக் இடிக்கும்.
ReplyDeleteஈகா வாசலில் இருக்கும் தட்டியில் இருக்கும் வாசகம், " my husband coaxed me to do it.."
தினமலர் மாதிரி ரொம்ப அல்பத்தனமான மேட்டர் என்று தான் நினைக்கிறேன்.
பிரகாஷ்: தமிழ்நாட்டுக்குள்ள STD கால் பேசறதைப் பத்தி இருக்கலாம்.
ReplyDelete//I did it only once a week. Now I do it almost every day//
ReplyDeleteintestinal transit medecine னா இருக்குமா?
:))
Laundry :-)
ReplyDeleteoru velai "shaving" a irukumo???
ReplyDeleteV M
condom?
ReplyDelete//I am doing it everyday
ReplyDeleteThank God!.. At last she brushes her teeth everyday now......
//We cant wait to do it......
Its number1 ;-)))
//karthikramas said...
ReplyDeleteLaundry :-) //
லாண்டிரிக்கு hoarding வெக்கற அளவுக்கு இன்னும் சென்னை முன்னேறலை கார்த்தி :-)
I think Shampoo / cosmetics.
ReplyDelete9 comments - including this! this as is already a success!
அய்யோ பிரகாஷ்,
ReplyDeleteவாஷிங் மெஷின் மாதிரி கம்பெனியா இருக்குமோ என்று எழுதினால் இப்படி கலாசுறீங்களே :-)
It is Jayalalitha Govt adv. about changing ministers.
ReplyDeleteவாகன ஓட்டிகளே ஜாக்கிரதை..
ReplyDeleteவிளம்பரங்களையே பார்க்காதீர்கள்..
வாரம் ஒரு முறை நடந்த விபத்து தினமும் நடந்துவிடக் கூடும்..
நீ போகும் வரை நான் காத்திருக்க முடியாது என்று பின்னால் வந்து இன்னொரு கார் இடிக்கக் கூடும்.
ஈகா வாசலில் கார் ஓட்டும் மனைவியை முன்போகும் காரை ஓவர்டெக் செய்யச் சொல்லி கணவன் வற்புறுத்தியிருப்பான்..
யாராவது வாரம் ஒருமுறை வலைப்பதிவு போட்டவர் இப்போது தினமும் பதிவு போட்டு ஸ்டாராகிறாரோ என்னவோ? ஒரு வாரம் வரை காத்திருக்க முடியாது.. வலைப் பதிவைப் போடும்படி கணவர் நிர்ப்பந்தித்தார்..
புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வந்ததா இல்லையா தெரியாது. விளம்பர உலகத்திற்கு எயிட்ஸ் வந்துவிட்டது..