Tuesday, August 09, 2005

தமிழகத்தில் படிப்பறிவு (Literacy)

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள படிப்பறிவு விழுக்காட்டினை கீழே உள்ள படத்தில் காணலாம். தமிழகம் முழுவதுமாக 73.47%.


படிப்பறிவு அதிகம் உள்ள மாவட்டங்கள்:

1. கன்யாகுமரி 87.6%
2. சென்னை 85.3%
3. தூத்துக்குடி 81.5%
4. நீலகிரி 80.0%

படிப்பறிவு மிகவும் குறைவான மாவட்டங்கள்:

1. சேலம் 65.1%
2. அரியலூர் 64.1%
3. விழுப்புரம் 63.8%
4. தர்மபுரி 61.4%

கேரளா போன்று தமிழகமும் 90%+ படிப்பறிவை எட்ட வெகு காலம் பிடிக்கும். ஒன்பது மாவட்டங்களில் 70%க்கும் கீழாகவே படிப்பறிவு உள்ளது.

சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி-பெரியகுளம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் படிப்பறிவு அதிகமான விழுக்காடுகள் இருந்தாலும், இந்த மாவட்டங்களை விட ஈரோடு, சேலம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் புத்தக விற்பனை அதிகமாக இருக்கிறது.

5 comments:

  1. தகவலுக்கு நன்றி பத்ரி! தேசிய சராசரி என்ன?

    ReplyDelete
  2. தேசிய சராசரி 65 (கிட்டத்தட்ட). தமிழகம் மூன்றாவது இடத்தில். கேரளா, மஹாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக.

    ReplyDelete
  3. படிப்பு சதவிகிதம் குறைந்து இருந்த பொழுது காமராஜ் போன்றோரை தெர்ந்தெடுத்த நாம் , சதவிகிதம் கூட கூட , நாம் தேர்ந்து எடுக்கும் முதல்வர்களின் தரம் … கருணாநிதி , எம்.ஜி.ஆர் , ஜே.ஜே என குறைவது ஏன் ? மீதி இங்கே.

    ReplyDelete
  4. //1. கன்யாகுமரி 87.6%//

    கேரளாவுக்கு மிக அருகில் இருப்பதால் அதிகமோ, கேரளாவில் தான் இந்தியாவில் படிப்பறிவு அதிகம் என்று புள்ளிவிவரங்கள் சொல்வதால் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

    :)

    ReplyDelete