Tuesday, November 01, 2005

இலக்கியவாதிகளின் மறைவு

சமீபத்தில் இறந்த இரண்டு முக்கியமான இந்திய இலக்கியவாதிகள்:
  • அம்ரிதா பிரீதம் (ஆகஸ்ட் 31, 1919 - அக்டோபர் 31, 2005), பஞ்சாபி எழுத்தாளர், ஞானபீடம் 1981, சாஹித்ய அகாதெமி 1956. இதைத் தவிர மைய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றிருக்கிறார். ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
  • நிர்மல் வர்மா (ஏப்ரல் 3, 1929 - அக்டோபர் 25, 2005), ஹிந்தி எழுத்தாளர், ஞானபீடம் 1999, சாஹித்ய அகாதெமி 1985. மைய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
எழுத்தைப் பொருத்தமட்டில், மறைந்த சுந்தர ராமசாமி (மே 30, 1931 - அக்டோபர் 15, 2005) மேற்குறிப்பிட்டவர்களுக்குக் கொஞ்சமும் குறைந்தவரில்லை. ஆனால் அவரது துரதிர்ஷ்டம், தமிழ் தன் எழுத்தாளர்களை அந்த அளவுக்குப் பாராட்டுவதில்லை.

3 comments:

  1. பத்ரி

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்
    அம்ரிதா ப்ரீதம்.

    அய்யோ நிர்மலுமா?

    என்ன செய்வது மறைவை ஏற்கும் மனப்பக்குவமும் வளர்த்துக்கொள்ளணும் போலிருக்கிறது

    எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது மகளின் பெயர் அம்ருதா ப்ரீதம் தெரியும் தானே

    ReplyDelete
  2. ILAKKIYAVAATHIKAL MARAINTHAALUM(Avarkalin Kudumbangalukku Anuthaabangal) AVARKALIN ILAKKIYANGAL NILAITTHU NINTRU PERUMAI SARKKUM.....

    ReplyDelete
  3. அம்ருதா ப்ரீதம் மறைந்ததை இப்போதுதான் இங்கிருந்து அறிந்து கொண்டேன். எனக்கு அவரது எழுத்துக்களை பிடிக்கும்.

    ReplyDelete