கடந்த சில வருடங்களாக சென்னை மியூசிக் அகாடெமி அறக்கட்டளைக்குத் தேர்தல் நடக்காமல் நீதிமன்றத்தில் பிரச்னை இருந்து வந்தது. கடைசியாக மியூசிக் அகாடெமி தலைவராக இருந்த T.T.வாசு சில மாதங்களுக்கு முன்னர் காலமானார்.
மியூசிக் அகாடெமிக்கு என்ன பிரச்னை என்பது பற்றிய முழு விவரம் இதுவரையில் எனக்கு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பிரச்னையின் உச்சகட்டம் சென்ற வருடம் ஏற்பட்டது. 2004 மியூசிக் சீசனில் மியூசிக் அகாடெமியில் கச்சேரிகள் ஏதும் நடைபெறாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின் தாற்காலிகமாக அந்த உத்தரவை மாற்றி கடைசி நேரத்தில் கச்சேரிகள் நடக்கலாம் என்று அறிவித்தது. அதற்குப் பின்னர் அடுத்த வருடம் (அதாவது 2005 டிசம்பருக்குள்) தேர்தல்கள் நடத்தவேண்டும் என்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் தேர்தல் நடக்கும் என்றும் அறிவித்தது.
தேர்தல் பற்றிய எந்தத் தகவலையும் நான் எங்கும் பார்க்கமுடியவில்லை.
திடீரென்று இரண்டு நாள்களுக்கு முன்னர் மியூசிக் அகாடெமியைச் சுற்றியுள்ள தெருக்களில் (அதாவது நான் வசிக்கும் பகுதியில்) சில சுவரொட்டிகள் தென்பட்டன. "அரிமா வைரசேகர்" (என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார். அந்தச் சுவரொட்டியில் நல்லி குப்புசாமி செட்டியாருக்கு தலைவர் பதவிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் வேறு எந்தச் சுவரொட்டிகளும் காணப்படவில்லை. நல்லி செட்டியார் யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார் என்ற தகவல் என் கண்ணுக்குப் படவில்லை. நேற்று காலை (தேர்தல் நாள்) தினமணி நாளிதழில் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரம் - நல்லி குப்புசாமி செட்டியாரிடமிருந்து. ஆனால் 'தி ஹிந்து'வில் விளம்பரம் எதுவும் இல்லை. சரி, எதிராக நிற்பவர் ஏதோ ஊர் பேர் தெரியாதவர், எனவே நல்லி நிச்சயம் ஜெயித்துவிடுவார் என்று நினைத்தேன்.
இன்று காலை செய்தித்தாளைப் பார்த்தால்... நல்லி தோற்றிருந்தார். ஜெயித்தது தி ஹிந்து இணை நிர்வாக இயக்குனர் N.முரளி.
வெண்முரசு 75, புதுவையில் நான்
7 hours ago
பத்ரி,
ReplyDeleteதமிழ் முரசு அக்டோபர் 28லிருந்து தினமும் ஒரு/அரை பக்கம் இதுக்கென்று ஒதுக்கியிருந்ததே. கவனிக்கவில்லையா ?
http://www.tamilmurasu.in/2005/oct/28/4.pdf
Check datewise remaining reports.
- அலெக்ஸ்
ம்ஹூம். பார்க்கவில்லை. தமிழ் முரசு படிக்கவேண்டும் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அதில் கொஞ்சமாவது விஷயம் இருந்தால் படிக்க ஆர்வமிருக்கும்.
ReplyDeleteஆனால் இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி மைய ஓட்டப் பத்திரிகைகள் எதுவும் குறிப்பிடாத நிலையில் தமிழ் முரசின் செய்திகள் (கிசுகிசு பாணியில் இருந்தாலும்) ஓரளவுக்கு நிலைமையை விளக்குகின்றன. மீதியையும் படிக்கிறேன்.
ஆக நான் நினைத்தது போலவே 'பார்ப்பன-அல்லாத' பிரச்னைதான் போலும்...
Dear Badri
ReplyDeleteDoes this election result bode well for the Music Academy? What do you think?
இந்தத்தேர்தல் எனக்கு எந்தவிதப்பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும்,
ReplyDeleteதிரு. T.T.வாசு அவர்கள் காலமான சேதி இன்றுதான் தெரியும். வருந்துகிறேன், செய்திக்கு நன்றி.
தமிழ் முரசு படிக்கவேண்டும் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அதில் கொஞ்சமாவது விஷயம் இருந்தால் படிக்க ஆர்வமிருக்கும்.
ReplyDeleteபடிக்கணும்னு தோணவே இல்லை -ஆனால் அதில்ல விஷயமில்லேன்றீங்க, பத்ரி. எப்படியோ, நீங்க தேடுற மேட்டர் - அதில்லதான் விலாவாரியா வந்திருக்குது பார்த்தீங்களா...
அதனால ஈவ்னிங் மறக்காம வாங்கிடுங்க:)
தமிழ் முரசில் அதிக விஷயமில்லை என்பது உண்மைதான். விகடன் மாதிரி சினிமா நடிகைகள் படம் போட்டு கட்டம் ரொப்புகிறார்கள். ஆனாலும் சென்னை பற்றிய சில முக்கியமான செய்திகளைத் தெரிந்துகொள்ள தமிழ்முரசு உதவுகிறது.
ReplyDeleteஅண்ணாச்சி (மாறன்) இலவச எழுத்துரு எல்லாம் சிடில கொடுத்தாலும் தம்பி(மாறன்)யின் பத்திரிக்கை PDFலதான் இணையதளத்தை வச்சுப்பேன்னு பிடிவாதமா இருக்காங்க என்ன பண்றது.
எது படிச்சாலும், படிக்காட்டிலும் 20ஆம் பக்க ப்ளோ-அப் படம் மட்டும் தெனமும் ஒருவாட்டி பாத்துடுவோம்ல :-)
- அலெக்ஸ்
அகாடமியில் இனிமேலாவது புதிய இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் அதிக வாய்ப்பு கொடுத்து, அறுசுவையின் தவலைவடை சூப்பரா, லால்குடியின் லெக்.டெம் சூப்பரா போன்ற பேச்சுகளுக்கும் இடமளித்து பாரம்பரியத்தையும் காப்பாற்றுவார்கள் என நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து அகாடமியின் அரங்கம் ஒலி அமைப்பில் ஒரு சிறந்த அரங்கம். அதனை இன்னும் மெருகூட்டி, வருடத்தில் பல நாட்கள் (டிசம்பர் மட்டுமில்லாமல்) இசைக்கும், கலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தவும், சில பல வகுப்பறைகள் ஏற்படுத்தி, விரும்பும் சங்கீத கலாநிதிகள் மாணவ/மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்க ஏற்பாடும் செய்தால் நல்லது (குன்னக்குடி செய்வது போல)
ReplyDelete- அலெக்ஸ்
//ஆக நான் நினைத்தது போலவே 'பார்ப்பன-அல்லாத' பிரச்னைதான் போலும்...//
ReplyDeleteஇந்தப் பிரச்சினை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்வது, அதுவும் சென்னையைப் போன்ற ஒரு மாநகரத்தில் இந்த நிலை, என்பது ஒரு வெட்கக் கேடான செய்தி.
பத்ரி,
ReplyDeleteகல்கியில் போன வருடம் அகாடெமி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதற்கு அகாடெமியிலிருந்து மறுப்பும் வந்ததாக நினைவு. அதே போல் போன மாசமுன் ஒரு கட்டுரை வந்திருந்தது.
தேசிகன்
An old article from outlookindia.com
ReplyDeletehttp://www.outlookindia.com/full.asp?fodname=20041220&fname=Music+%28F%29&sid=1
The Death Raga
S. ANAND
Chennai will spend its first winter in 77 years minus the big show. Blame the Music Academy's ruling cabal.
The Death Raga படித்தேன். மியூசிக் அகாடெமியைப் பொருத்தவரை பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.
ReplyDeleteஊழல் தாண்டவமாடுகிறது என்றும் புரிகிறது. தமிழக அரசு என் இந்த அறக்கட்டளையைத் தன்னகப்படுத்தி மேல்விசாரணைக்கு வழி செய்யவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமே.