Thursday, November 24, 2005

குறும்படங்கள் திரையிடல் - சனிக்கிழமை

குறும்பட, 'நல்ல சினிமா' ரசிகர்களுக்கு...

நீங்கள் சென்னையில் இருந்தால் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் திரையரங்கில் (ஜெமினி மேம்பாலத்துக்கு அருகில், ராணி சீதை ஹாலுக்கு அருகில்) வரும் சனிக்கிழமை, 26 நவம்பர் 2005 அன்று ஆறு குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

மாலை 3.30 மணிக்கு ஒரு காட்சி. மாலை 6.30 மணிக்கு இரண்டாவது காட்சி.

காட்சி நேரத்துக்கு 20 நிமிடங்களுக்கு முன்பாகவாவது செல்வது நல்ல இடத்தைத் தேடிப்பிடித்து நண்பர்களுடன் கூடி உட்கார்ந்து கொள்ள உதவும்.

திரையிடப்பட இருக்கும் படங்கள்:

படம் 1: கிர்னி, மராத்தி, 22 நிமிடங்கள், இயக்குனர்: உமேஷ் குல்கர்னி (FTII பூனா)
படம் 2: பர்த்டே, தமிழ், 22.40 நிமிடங்கள், இயக்குனர்: கே.முத்துக்குமார் (VIS.COM ஐஐடி மும்பை)
படம் 3: The Solitary Sandpiper, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: அஜிதா சுசித்ரா வீரா (FTII பூனா)
படம் 4: Distance, தமிழ்/ஆங்கிலம், 27 நிமிடங்கள், இயக்குனர்: மாமல்லன்
படம் 5: Pre Mortem, ஆங்கிலம், 22 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)
படம் 6: 00:00, ஆங்கிலம், 11 நிமிடங்கள், இயக்குனர்: ரிக் பாசு (FTII பூனா)

மாலை 6.30 காட்சிக்கு வந்தால் சிறப்பு விருந்தினர் P.C.ஸ்ரீராமையும் பார்க்கலாம்.

அனுமதி இலவசம் என்கிறார்கள் அமைப்பாளர்கள். அத்தனை படங்களும் அற்புதமானவை என்றும் கேள்விப்படுகிறேன். இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். (நான் 6.30 காட்சிக்குச் செல்லவிருக்கிறேன்.)

8 comments:

  1. ஒங்க ஏரியாவுக்குப் பக்கத்துலதானே? சீக்கிரமா போனா, ஒரு துண்டு போட்டு வைங்க...

    ReplyDelete
  2. உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு xxxx இருக்குது!

    ReplyDelete
  3. ராம்கி:

    பாவமா இருக்கா? [ரஜினி படத்தையெல்லாம் விட்டுட்டு ஏதோ டுபாக்கூர் படத்தைப் பாக்கப் போறீங்களேன்னு...]

    பொறாமையா இருக்கா? [அய்யோ, அப்ப நான் பொட்டி தட்டிகிட்டு இருக்கணுமேன்னு...]

    எது சரி?

    ReplyDelete
  4. உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு xxxx இருக்குது!
    xxxx- பயமாக :)

    ReplyDelete
  5. பத்ரி,

    ராம்கிக்கு எப்படிருக்கோ எனக்கு பொறாமையா இருக்கு.

    சரிசரி..

    சனிக்கிழமை இரவு ஒரு விரிவான பதிவு போட்டிருங்க. புகைப்படங்களோட..

    சரியா?

    -மதி

    ReplyDelete
  6. முயற்சிக்கிறேன். பிரகாஷ் சொன்னது போல இரண்டு துண்டா போடுங்க ;)

    ReplyDelete
  7. don't expect too much

    ReplyDelete
  8. நன்றி பத்ரி,

    6.30 காட்சிக்கு நான் சென்றிருந்தேன். இனிய அனுபவம்.

    கிர்னி(மராத்தி), Pre Mortem இரண்டும் மிக அருமையாய் இருந்தது.

    நெடு நாட்களுக்குப் பிறகு சில நண்பர்களை சந்திக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    தகவல் அளித்தமைக்கு மறுபடியும் ஒரு நன்றி.

    நட்புடன்,
    அருள்.

    ReplyDelete