உலகில் மிக அதிக ரன்கள் பெற்ற லாராவுக்கு வாழ்த்துகள். ஆலன் பார்டரின் மொத்த எண்ணிக்கையை லாரா தாண்டியுள்ளார். ஆனாலும் நடக்கும் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடலாம்.
டெண்டுல்கர்தான் முதலில் இந்தச் சாதனையைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த சில டெஸ்ட்களில் டெண்டுல்கர் ரன்கள் குறைவாகப் பெறுவதும் லாரா மிக அதிகமாகப் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது.
லாராவுக்கும் டெண்டுல்கருக்கும் இனி எவ்வளவு டெஸ்ட்கள் பாக்கி இருக்கும் என்று தெரியவில்லை. டெண்டுல்கரால் இனி டெஸ்ட் மேட்ச்களில் எவ்வளவு ரன்கள் பெற முடியும் என்றும் தெரியவில்லை.
மற்றொரு புறம் இன்ஸமாம்-உல்-ஹக், ரிக்கி பாண்டிங், மாத்தியூ ஹெய்டன் ஆகியோர் சதங்களின் எண்ணிக்கையிலும் மொத்த ரன்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பாண்டிங் தன் இளம் வயது காரணமாக லாரா, டெண்டுல்கர் சாதனைகளை முறியடிக்கக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
2 hours ago
முதலில் லாராவுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய கிரிக்கெட் உலகில் மகத்தான வீரராக லாரா திகழ்கிறார். அவரது சாதனைகள் அவரது பெயரை என்றென்றும் சொல்லும்.
ரன்கள் மற்றும் சதங்களின் சாதனையை முறியடிக்க ரிக்கி பாண்டிங்கால் மட்டுமே முடியும். ஆனாலும் ஆஸ்திரேலியா வீரர் என்பதால் கொஞ்சம் சந்தேகம் உண்டு, சரியாக விளையாடவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவாங்களே!
இன்சமாம், ஹைடன், சச்சின் போன்றோருக்கு வயதாகி வருகிறது.
பத்ரி,
ReplyDeleteலாரா கிரிக்கெட் சரித்திரத்தில் மிக அதிக ரண் எடுத்தவர் என்பது பாராட்டுக்குரியதுதான். சந்தேகமேயில்லை. ஆனால் அவர் இதுவரை அடித்த ஒற்றை/இரட்டை சதங்களில் ஒன்றிரண்டை தவிர மற்றவை அவருடைய அணியை வெற்றிபெற உதவியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் கூறவேண்டும். அப்படி பார்க்கபோனால் நம் டெண்டுல்கருடையதும் அப்படித்தான். லாரா, டெண்டுல்கர், இன்சமாம் இவர்கள் மூவரும் ஒரு காலத்தில் எதிர்காலத்தில் நட்சத்திரமாக பிரகாசிப்பர் என்ற ஒரு கணிப்பு இருந்தது. அது இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இவர்களுடைய வரிசையில் போர்டரையும் சரி, போண்டிங் மற்றும் ஹெய்டனையெல்லாம் சேர்ப்பது சரியில்லை என்று நினைக்கிறேன். They just play a power game shorn of all the niceties of a great batsman, be it in Test or ODI.
டி.பி.ஆர். ஜோசஃப்,
ReplyDeleteNever compare anyone. Not in Cricket nor in anything, They(Alan Border, Ricky Ponting, Mathew Hayden)made their own way of cricket and they are the champions in that.
And they proved that, that way is good. So dont compare.
லாராவுக்கு வாழ்த்துக்கள். அதுவும் இத்தொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை சந்தேகத்துக்கிடமான முறையில் ஆட்டமிழக்க வைக்கப்பட்ட நிலையில் இச்சாதனையைச் செய்துள்ளார்.
ReplyDeleteஇந்த சாதனையை முறியடிப்பவர்கள் வரிசையில் ஹெய்டன் இல்லை. காரணம் அவரது வயதும் அவர் இதுவரை பெற்றுள்ள ஓட்ட எண்ணிக்கையும். அதேபோல் இன்சமாம் இப்போதுதான் எட்டாயிரத்தை எட்டுகிறார். அதேநேரம் ஓய்வு பெறும் வயதையும் நெருங்கிவிட்டார். அவரும் முறியடிக்கப்போவதில்லை.
சச்சினுக்கு காலமிருக்கிறது. தொடர்ச்சியாக இன்னும் நாலோ ஐந்தோ வருடங்கள் விளையாடினால் பெரும் வித்தியாசத்தில் ஓட்ட எண்ணிக்கையை அவரால் நிறுவ முடியும்.
ட்ராவிட்டும் நிச்சயம் பதினோராயிரம் எண்ணிக்கையைக் கடப்பார். ஆனால் ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கைச் சாதனையை நிறுவுவாரா என்பது ஐயமே.
சச்சினுக்கு அடுத்த படியாக பொண்டிங்தான். இருவருக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். ஆனால் பொண்டிங்கின் திறன் தற்போது மிகவும் நல்ல நிலையிலுள்ளது. ஆனாலும் சச்சினைவிட ஏறத்தாள 2500 ஓட்டங்கள் பின்னால் உள்ளார். சொன்னாற்போல் சரியாக விளையாடாத பட்சத்தில் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதிலும் ஐயமில்லை.
இதைவிட ஒருவர் இருக்கிறார். தென்னாபிரிக்காவின் காலிஸ். வயதும் குறைவு. ஓட்ட எண்ணிக்கை, சராசரியில் இவர் சளைத்தவரல்ல.
எதிர்காலத்தில் டெஸ்டில் அதிக ஓட்ட சாதனையை நிறுவுவதற்கு சாத்தியமுள்ளோர் முறையே சச்சின், காலிஸ், பொண்டிங்.
ஒருநாள் போட்டியில் சச்சினை இலகுவில் யாரும் முந்திவிட முடியாதபடிதான் நிலைமை உள்ளது.
Ponting has a very poor consistency, and will find it hard to be the highest run getter. However he has an chance to score maximum number of centuries (if tendulkar retires tomorrow)....
ReplyDelete(I am having Windows ME and not able to blog in tamil)
May be Mahela Jayawardana has a chance to break this record !!!!
ReplyDelete