சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் கென்யா நாட்டு மாணவர்கள் சிலர் வசிக்கும் வீட்டில் ஓரளவுக்குச் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் மனித உயிருக்கு நாசமில்லை; ஆனால் அந்த வீட்டின் முக்கால்வாசிப் பகுதி உடைந்து தூளாகியுள்ளது.
கடந்த மாதத்தில் தமிழகத்தில் இரண்டு வீடுகள் வெடிவிபத்தினால் நாசமடைந்துள்ளன. ஒன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து. மற்றொன்று மாம்பலத்தில் தீபாவளி வெடிகளைச் சட்டவிரோதமாகச் சேர்த்து வைத்திருந்த கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏற்பட்டது. இரண்டுமே கவனக்குறைவினால் ஏற்பட்டது, சதிவேலை இல்லை.
ஆனால் சேலம் விவகாரம் நிச்சயமாக நாசவேலையாகத்தான் தோன்றுகிறது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கியுள்ள இடம் என்பதால் ஒருவேளை அந்த நாட்டில் நிகழும் அரசியல்/பிற விவகாரங்களின் தொடர்ச்சியாகவும் இது இருக்கலாம். அல்லது வேறு என்ன விவகாரமாக இருக்குமோ, தெரியவில்லை.
(செய்தியை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்தேன்.)
பெங்களூர் இலக்கியத் திருவிழா
3 hours ago
நாளை தெரிந்துவிடும் நாச வேலையா நாட்டுவேலையா என. நல்லவேலையாக எதுவும் இருக்கக்கூடாது
ReplyDeleteநானும் பார்த்தேன்..
ReplyDeleteநாச வேலையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நானும் நினைக்கிறேன்.
அப்படி பார்த்தால் சென்னையில் கென்யா நாட்டைச்சார்ந்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே.
சரிதான்! நாசவேலை இல்லை. இங்கும் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால்தான் விபத்து என்று மறுநாள் செய்திகள் தெரிவித்தன. ஆனால் நான் ஊர்சுற்றிவிட்டு வந்து இன்றுதான் பழைய செய்திகளைப் பார்க்கிறேன்.
ReplyDeleteExplosion brings down house in Salem. Leaking LPG cylinder is the cause: Police