Friday, January 09, 2009

புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது...

(இந்தியாவில்) தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பற்றிய புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளில் விற்பனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று காவல்துறையிடமிருந்து புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு (பபாஸி) வந்துள்ளது.

பபாஸி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை புத்தகக் கண்காட்சியில், கிழக்கு பதிப்பகம் அரங்கில் கீழ்க்கண்ட புத்தகங்கள் இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைக்கா:

1. அல் காயிதா
2. தாலிபன்
3. விடுதலைப் புலிகள்
4. உல்ஃபா
5. பிரபாகரன்
6. லஷ்கர்-ஈ-தோய்பா
7. எல்.டி.டி.ஈ (மினிமேக்ஸ்)

இந்தப் புத்தகங்கள் எல்டாம்ஸ் ரோடில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் காட்சியகத்திலும் இணையம் வழியாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தின் அனைத்துக் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் கேட்கும் நிலையில் இருக்கிறோம். எனவே மேற்கொண்டு தகவல் தெரிந்ததும் எழுதுகிறேன்.

.

7 comments:

  1. I think the politicians in India are going crazy....blocking books?!

    ReplyDelete
  2. இது சட்டபடி செல்லுமா .........?

    ReplyDelete
  3. Many books in Englih refer to these orgnizations or have chapters on them.Is the ban applicable to such books also.

    ReplyDelete
  4. கேட்கவே விந்தையாக இருக்கு.

    ReplyDelete
  5. பத்ரி .... வாய்மொழி உத்திரவை பின் பற்றவேண்டும் என எந்தக்கட்டாயமும் இல்லை. பதிப்பகத்தாரே வாய்மொழி மிரட்டலுக்கு பயந்துவிட்டால், புத்தகம் படிக்கும் வாசகர் மத்தியில் புத்தகம் எந்தவிதமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என எண்ணிப்பார்த்தால் விந்தையாக உள்ளது.

    சரி ஒரு கேள்வி....

    கலைஞர் எழுதிய தமிழ்ச்செல்வன் குரித்தான கவிதை உள்ளடங்கிய புத்தகம் வெளியிடப்படுமேயானால் அது தடை செய்யப்படுமா?

    அவ்வாறு தடை செய்யப்பட்டால் முதலமைச்சர் எழுதிய புத்தகம் தடைசெய்யப்பட்டதாக ஏன் நாம் கருதக்கூடாது?


    - சென்னைத்தமிழன்

    ReplyDelete
  6. சென்னைத்தமிழன்: புத்தகக் காட்சி அரங்கு என்பது பபாஸியுடையது. அதில் ஒவ்வொரு பதிப்பாளருக்கும் அவர்கள் இடம் வாடகைக்குத் தருகிறார்கள். அவர்களது கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டுதான் அங்கே இருக்கமுடியும். அவர்கள் விதிக்கும் கெடுபிடிகளை ஏற்க நாங்கள் மறுக்கமுடியாது. ஆனால் எங்களது சொந்தக் கடையில் புத்தகங்களை வைத்துள்ளோம். இணையம் வழியாக விற்கிறோம். தமிழகத்தின் பல கடைகளிலும் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

    காவல்துறையிடம் பேசிவருகிறோம். பார்ப்போம்.

    ஆனால் ஒன்று. கடந்த ஒரு மாதத்துக்குள் கிட்டத்தட்ட 4,000 பிரதிகளுக்கு மேல் பிரபாகரன் புத்தகம் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளுக்குச் சென்று, அங்கிருந்து மக்களுக்குச் சென்றுள்ளது.

    ReplyDelete
  7. பத்ரி, இது தொடர்பான எனது பதிவு http://karaiyoram.blogspot.com/2009/01/blog-post_11.html

    ReplyDelete