இந்தியாவைப் பற்றி அல் பெருனி என்ற பாரசீகர் 11-ம் நூற்றாண்டில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அது முதலில் பாரசீக மொழியில் (பெர்சியன்) எழுதப்பட்டு, பின் அரபி மொழிக்குப் போய், அங்கிருந்து ஆங்கில மொழிக்கு எட்வர்ட் சச்சா (Edward Sachau) என்ற ஜெர்மானியரால் மொழிபெயர்க்கப்பட்டு இன்று அச்சில் கிடைக்கிறது.
கஜினி முகமது தன் சேனையுடன் இந்தியாவைத் தாக்கி பொருள்களைக் கொள்ளையடித்துக்கொண்டுபோக வந்தபோது, கூட அழைத்து வரப்பட்டவர்தான் அல் பெருனி. கஜினி ஒருபக்கம் சண்டைபோட, கொள்ளையடிக்க, அல் பெருனி, தன்னால் முடிந்தவரை சமஸ்கிருதம் கற்றார். அறிஞர்களுடன் பேசினார். தான் தெரிந்துகொண்டதை வைத்து, இண்டிகா என்ற புத்தகத்தை எழுதினார்.
இவரது முழுப்பெயர் அபு-அல்ரெய்ஹான் முகமது இப்ன் அஹ்மத் அல் பெருனி.
புத்தகம்: “Alberuni's India, Vol. 1 & 2, Edited with Notes and Indices, Edward C. Sachau, Low Price Publications, ISBN 978-81-7536-433-2”
***
சில மாதங்களாக இந்தப் புத்தகத்தை முழுதாகப் படித்துவிடவேண்டும் என்று திண்டாடிக்கொண்டிருக்கிறேன். அதற்குத் தேவையான மனக்குவிப்பு கிடைப்பதில்லை. சில பக்கங்கள் போகும். பிறகு நிறுத்திவிட்டு வேறு புத்தகங்களுக்குத் தாவி விடுகிறேன். மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தால் பழைய பக்கங்களை மறுபடியும் படிக்க வேண்டியுள்ளது.
இதேபோன்று என்னை டார்ச்சர் செய்யும் இரண்டு புத்தகங்கள், டார்வினின் ‘The Origin of Species’, சார்த்தரின் ‘Nausea’. பத்து பக்கம் போகும், அதற்குமேல் தாங்காது.
என்றாவது ஒரு நாள்!
நேற்று, ஏ.எல்.பாஷம், ‘The Wonder that was India’ வாங்கியுள்ளேன். அதைப் படிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
கரிசல் இலக்கியத் திருவிழா
54 minutes ago
தமிழில் இந்த மாதிரி மாட்டிக் கொண்டு முழிக்கும் ஏதாவது?
ReplyDeleteஏ.எல்.பாஷம், ‘The Wonder that was India’
ReplyDeleteit is not a difficult book to read.It is little outdated now.still you will like it.
சார்த்தரின் ‘Nausea’
If you want to break friendship with someone give it to him/her to read.Better still is
giving it Pa.Raghavan now as he will simply
get up and run if he starts reading it :).
தமிழ் புத்தகங்களில் உள்ளே நுழையத் திண்டாடியவையும் உண்டு. சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ மிகவும் தொல்லை செய்தன. ஒரேயடியாக ‘ஒரு புளியமரத்தின் கதை’, ‘ஜே.ஜே’ மற்றும் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ (அதுதானே தலைப்பு?) மூன்றையும் வாங்கிக்கொண்டு வந்தேன். புளியமரம் படித்த வேகத்தில் ஜே.ஜே படிக்கமுடியவில்லை. ஆனால் பெரியவர்கள் எல்லாம் அப்படி சிலாகித்துச் சொன்னபிறகு என்ன செய்வது என்று கஷ்டப்பட்டு படித்து முடித்தேன். சில இடங்களில் வேகம், பல இடங்களில் தடங்கல். கு.பெ.ஆ கையில் எடுத்து நான்கு முறை வைத்துவிட்டேன். என்றாவது ஒரு நாள்...
ReplyDeleteஅம்பேத்கரின் ஒரு புத்தகம் (வெகு நாள் தலைமாட்டில் வைத்திருந்து பின் பீரோவில் இழுத்துப் பூட்டியது) - பெயர் இப்போது ஞாபகம் இல்லை, ஆனால் ‘சூத்திரர்கள் யார்?’ அல்லது ‘பார்ப்பனர்கள் யார்?’ என்ற தலைப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன். படுமோசமான மொழிபெயர்ப்பில், அதைப் படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. மற்றொரு நாள் அதைத் தேடி எடுத்துப் படிக்கவேண்டும்.
India by Al-Biruni. (Edited by Qeyamuddin Ahmad. National Book Trust, India) என்ற புத்தகத்தை நான் படித்துக்கொண்டிருக்கிறேன். sourcebook போன்ற புத்தகம். கதை மாதிரி படிக்கமுடியவில்லை.
ReplyDeleteமற்றபடி உங்களிடம் ஒரு குறை சொல்லவேண்டும். சென்னை புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் வெகு சில புத்தகங்களே வைத்திருக்கிறீர்களே? ஏமாற்றமடைந்தேன்.
பாலாஜி: இந்த ஆண்டு, 6 வெவ்வேறு அரங்குகளில் இருக்கிறோம். கிழக்கு பதிப்பகம் அரங்கு எண் P33-ல் குறைந்தபட்சம் 200 புத்தகங்களாகவது இருந்திருக்கும். மொத்தமாக இதுவரையில் நாங்கள் சுமார் 1,000 புத்தகங்கள் அச்சிட்டுள்ளோம். அவற்றில் சுமார் 150 நீங்கலாக, மீதம் 850-ம் இந்தக் காட்சியில் கிடைத்தன.
ReplyDeleteஒருவேளை முதல் நாள், புத்தகங்கள் அடுக்கப்படும் நேரத்தில் நீங்கள் அங்கே போயிருக்கலாம் என்றே நினைக்கிறேன்.
ஓ! நான் ஒரு அரங்கிற்கு மட்டுமே சென்றேன் :) எண் ஞாபகமில்லை.
ReplyDeleteஇண்டிகா எழுதியது மெகஸ்தெனிஸ் என்று ஞாபகம். இவரும் அதே பெயர் தான் வைத்தாரா
ReplyDeleteடாக்டர்.அம்பேதகரின் எழுத்துக்களை
ReplyDeleteதமிழ் மொழிபெயர்ப்பில் இயன்றவரை வாசிக்காதீர்கள்.ஆங்கிலத்தில் வாசிப்பது சிரம்மல்ல.தமிழில் மொழிபெயர்ப்பு என்ற
பெயரில் நடந்திருக்கும் கொடுமைகள் பல.
ஆங்கிலத்தில் தொகுதிகளாக கிடைக்கின்றன.
இண்டிகா என்று பலர் எழுதலாமே? இன்று எத்தனை புத்தகங்களுக்கு “சே குவேரா” என்று பெயர் உள்ளது. அது போலத்தான்! உண்மையில் அல் பெருனி எழுதிய புத்தகத்துக்கு அரபியாக இருந்தால் ‘something something அல்-ஹிந்த்’ என்று பெயர் இருக்கும். அது லத்தீன் வழி ஆங்கிலத்தில் வரும்போது இண்டிகா என்று ஆகி, பிறகு இந்தியா என்று ஆகும். அவ்வளவே.
ReplyDeleteஅல் பெருனி எழுதியது பாரசீக மொழியில் - தாரிக் அல் ஹிந்த். அமர்த்தியா சென் தனது "The Argumentative Indian" ல் அடிக்கடி இவரை மேற்கோள் காட்டுவார். என்றாவது ஒரு நாள் படிக்க வேண்டும்
ReplyDeleteAl Basham refers to ram as village chieftan in his book ! (probably based on whatever historical proofs he needed to have). I don't have an issue with it as it is supposed to discuss history in an objective manner. But in another place, when he had to talk about the corruptive spying practises of old kings, he would refer to ram again ! (spied on people's feeling about seetha when she is back from lanka). When i read it first time, i did not really notice it. But on the subsequent readings, i felt that it was needless for one such book
ReplyDelete