இல்லீங்க. நம்மூரு மேட்டர் இல்ல.
திங்கள் அன்று (இரண்டு நாள்களுக்கு முன்), ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான ABC-யில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் தொகுத்து வழங்கியது. (டாக்கின்ஸ் எழுதிய சுயநல மரபணு பற்றிய என் பதிவு.)
இந்தப் படம் பிரிட்டனின் சானல் 4-க்காக எடுக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன்னரே காட்டப்பட்ட ஒன்று.
டாக்கின்ஸ், நவீன அறிவியலைப் போற்றுபவர். மதங்களுக்கு எதிரான கடுமையான நாத்திகவாதி. இந்த ஆவணப்படத்தில், எப்படி அரைகுறை மருத்துவங்கள் பலவும் மேற்கத்திய உலகில் நுழைந்து, எந்தவித சோதனைகளுக்கும் உட்படாமல், கோடிக்கணக்கான பணத்தை அள்ளுகிறது என்பது பற்றி டாக்கின்ஸ் பேசுகிறார். மேலும் இந்த ‘அரைகுறை வைத்தியங்கள்’, நவீன அறிவியலின் வார்த்தைகளை ஹைஜாக் செய்து (குவாண்டம் கான்சியஸ்னெஸ், டிஸ்கண்டினியுட்டி போன்ற வார்த்தைகள்) அவற்றைப் பயன்படுத்தி மக்களை பிரமிக்கவைத்து அதன்மூலம் வியாபாரத்தைப் பெருக்குகின்றன என்பதைக் காண்பிக்கிறார்.
டாக்கின்ஸ் எடுத்துக்கொள்வது அனைத்துமே அறிவியல் பரிசோதனை முறைகளால் அன்றி, நம்பிக்கைமூலம் ‘குணப்படுத்தும்’ முறைகள். அதிலி ஹோமியோபதி உண்டு. பல்வேறு ரெய்கி, சக்கர மசாஜ், படிக குணப்படுத்தல்கள் ஆகியவையும் உண்டு. அகில உலகப் புகழ்பெற்ற மருத்துவர் தீபக் சோப்ரா முதல் அதிகம் பெயர் தெரியாத சில பிரிட்டிஷ் நம்பிக்கை ‘டாக்டர்கள்’ சிலரை டாக்கின்ஸ் கண்டு பேசுகிறார்.
இதில் ஒரு அம்மா, சர்வசாதாரணமாக, பெரும்பாலும் பலர் உடலில் டபுள் ஹீலிக்ஸ் டி.என்.ஏ உண்டு, ஆனால் சிலருக்கு மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சரங்கள் கொண்ட டி.என்.ஏ உண்டு என்று சொல்லி அசத்துகிறார். இந்த ‘நம்பிக்கை வைத்தியங்கள்’ செய்யும் பலரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்ற சரியான புரிதல் இல்லாமலேயே செய்கிறார்கள். ஹோமியோபதி மருத்துவம் செய்யும் - அதற்குமுன் அலோபதி மருத்துவம் செய்துவந்த டாக்டரும்கூட - ஹோமியோபதி எப்படி வேலை செய்கிறது என்று தானே ஆச்சரியப்படுவதாகச் சொல்கிறார்.
ஒரு பக்கம், அலோபதி மருந்துகள்மீது, மருந்து தயாரிக்கும் கம்பெனிகள்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் ஊடகங்களும் பொதுமக்களும், அதே அளவு காட்டத்துடன் ‘மாற்று மருந்துகளை’ கவனிப்பதில்லை; லைஃப்ஸ்டைல் விஷயம் என்று சொல்லி, அவற்றை ஊக்குவிக்கவே செய்கிறார்கள், என்கிறார் டாக்கின்ஸ்.
ரெய்கி, படிகங்கள் போன்ற பலவும் பயங்கர ஃப்ராட் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் டாக்கின்ஸ் இந்த ஆவணப்படத்தில் ஒரு முழுமையைக் கொண்டுவரவில்லை. ஆனால் அவரது பிரிட்டிஷ் பிராடெஸ்டண்ட் (அங்கிருந்து நாத்திகவாதியாக அவர் ஆனாலும்) பின்னணி அதற்கு இடம் கொடுத்திருக்காது என்பதும் உண்மையே. முதலில் ‘மாற்று மருத்துவம்’ என்பதை அவர் முழுமையாக அலசிப் பார்க்கவேண்டும்.
யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய முறைகள் பலவும் அறிவியல்பூர்வமான பின்னணியில் பலருக்கும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி மருந்துக்குக்கூட இந்த ஆவணப்படத்தில் ஒரு வார்த்தை இல்லை. மிக வசதியாக, மிக எளிய இலக்குகளாகத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தாக்குகிறார். இதன்மூலம் அலோபதி தவிர ‘மாற்று மருத்துவம்’ என்ற வார்த்தையில் சொல்லப்படும் அனைத்துமே மோசம் என்ற தோற்றத்தைத் தருகிறார்.
ஹார்ட்-டாக் நிகழ்ச்சியில் கொஞ்சம் கோமாளியான எதிராளிகளைத் தாக்கும் ஸ்டீவன் சாக்குர், கரன் தாப்பர், வலுவான எதிராளியிடம் வழிந்து நிற்பதுபோலத்தான் டாக்கின்ஸ் இங்கே தென்படுகிறார். மோசமான ஜோக்கர்கள் சிலரைப் பிடித்து, அவர்கள் சொல்லும் அரைகுறை விஷயங்களைக் கொண்டு மாற்று மருந்துகள் அனைத்துமே குப்பை என்று சொல்வது டாக்கின்ஸ் தூக்கிப் பிடிக்கும் அறிவியல் சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரானது. ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் பகைவர்கள் கூட்டத்தில் சேர முற்படுகிறார்.
பரிணாம உயிரியல் துறையின் மிக முக்கியமான சிந்தனையாளராக இருக்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸ், இதைப்போன்ற பல ஆவணப்படங்களைக் கொண்டுவந்துள்ளார். அந்த விதத்தில் அவரைப் பாராட்டியே தீரவேண்டும். அதற்கான களத்தை பிரிட்டிஷ் தொலைக்காட்சிகள் தருவது மிக அற்புதமானது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்தியாவில் (இப்போதைக்கு) சாத்தியமே இல்லை!
இணையத்தில் தேடிப்பார்த்ததில், இந்த ஆவணப்படம், முழுமையாக கூகிள் வீடியோவில் இருந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன். நேரம் இருப்பவர்கள் பாருங்கள். சுமார் 45 நிமிடம்.
The Enemies of Reason
வீடியோ தெரியவில்லை என்றால் இங்கே செல்லவும்.
இலையப்பம்
7 hours ago
நல்ல பதிவு ,அப்படியே நம்மூரில் ராத்திரியான தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளும்,Gemmology,numerology,nameology,
ReplyDeleteenergy treatment,போலி சித்தா,யுனாணி,ஆயுர்வேத லேகிய வியாபரிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் இவர்களில் சிலர் B.E,B.Tech.படித்தவர்கள்.
//ஒருவிதத்தில் இதன்மூலம் டாக்கின்ஸே பகுத்தறிவின் பகைவர்கள் கூட்டத்தில் சேர முற்படுகிறார்.//
ReplyDeleteபாவம் டாக்கின்ஸ் பிழைத்துப்போகட்டும். நம்முடைய கதை எப்படிப்போகிறது என்று பார்ப்போம்.
http://www.nhm.in/blog/news/2008/11/2008.html
//வரம். இது முற்றிலும் இந்துமதம், ஆன்மீகம் தொடர்பானது. பக்தி இலக்கியங்கள், உபநிடதம், தத்துவம் போன்றவற்றில் இது கவனம் செலுத்துகிறது. அதே சமயம் ->சந்தேகத்திற்குரிய விஷயங்களான<- ஜாதகம், ஜோதிடம், ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றில் நாங்கள் புத்தகங்கள் வெளியிடுவதில்லை.//
http://nhm.in/shop/product.php?productid=211&cat=3&page=1
//அஷ்டோத்திர நாமாவளி என்பது, வெறும் வார்த்தைகளின் அடுக்கு அல்ல. நாதமும் வேதமுமான சப்தங்களின் ரீங்காரம்! அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது?....//
http://nhm.in/shop/product.php?productid=327&cat=3&page=4
//நவக்கிரக பரிகாரத்தலங்களுக்குப் போகப்போகிறீர்களா? உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது! சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களுக்கு வழிகாட்டி விளக்குகிறது இந்நூல்.//
இவையெல்லாம் ஃபெங்ஷுயி, வாஸ்து, ராசிக்கல் போன்றவற்றிற்கு சிறிதும் சளைத்தவையல்ல. சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களாக நிரூபிக்கப்பட்டவைகளுமல்ல.
கதையின் நீதி: லாபம் கிட்டுமானால் demand உள்ள எதற்கும் supply செய்யலாம். எல்லோருக்கும் ஒரே நீதி.
//யோகா, ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற இந்திய முறைகள் பலவும் அறிவியல்பூர்வமான பின்னணியில் பலருக்கும் நல்ல பலனைத் தந்திருக்கின்றன. //
ReplyDeleteஅயூர்வேதம் இன்று
பக்க விளைவுகள்
Dear Badri,
ReplyDeleteI fully agree with your vies on quack medicines. One of my friend who is a Ph.D. scientist is propagating "Pranic Healing' as a cure for all diseases.
P.Kandaswamy