கல்விக்குக் கட்டணம் கிடையாது. சீருடை, காலணி, புத்தகங்கள், நோட்டுகள் இலவசம். தமிழ் மீடியம், ஆங்கில மீடியம் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். கம்ப்யூட்டர், யோகா, ஆங்கிலத்தில் பேசுதல் ஆகியவை இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை. பெண்களுக்கு மட்டும்.
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இது. ஒரு காலத்தில் மிகவும் பெயர்பெற்றிருந்த பள்ளி. நாளடவில் தனியார் கல்விக்கூடங்கள் மீதான மோகம் அதிகமாக, அதிகமாக, இந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பின்னணியில் பெருத்த மாற்றம். விளைவாக இன்று இந்தப் பள்ளியை யாரும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான், இலவசம், இலவசம் என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள்.
அதே நேரம், பல ஏழைகளும்கூட, இந்தப் பள்ளியைவிடத் தரம் குறைந்த பல தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் ஆண்டுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பணம் செலவழித்து, தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார்கள்.
கணபதி ஐயர் உயர்நிலைப் பள்ளி போன்ற பல அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு இமேஜ் மேக்-ஓவர் தேவை. இந்தப் பள்ளிகளும் தரமான கல்வியை வழங்குபவை, சொல்லப்போனால், பல தனியார் பள்ளிகளைவிடச் சிறந்தவை என்ற உண்மை பொதுமக்களுக்கு உரைக்குமாறு செய்திடல் வேண்டும். அதற்கு ‘இலவசம்’ என்ற போஸ்டர் தேவை இல்லை. அதற்குத் தேவை வேறு சில விஷயங்கள்.
அதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
Sunday, May 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//அதற்குத் தேவை வேறு சில விஷயங்கள்.//
ReplyDeleteஎன்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. கோபாலபுரம் பகுதியில் பார்ப்பான் பெயரில் ஒரு பள்ளியா? விட்டுவிடுவோமா? ’அய்யர்’ என்ற ஜாதிப் பட்டத்தையும், ‘கணபதி’ என்ற இந்துக் கடவுளின் பெயரையும் நீக்கிவிட்டு, ஏதாவது முதலியார் அல்லது கிறிஸ்தவப் பெயரைச் சூட்டினாலேயே இது சிறந்த பள்ளி என்பது பொதுமக்களுக்கு உரைத்துவிடும்.
அடுத்த பதிவை ஆவலாக எதிர்நோக்குகிறேன்!
ReplyDeleteஅப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க
ReplyDeleteகட்டபொம்மன் kattapomman@gmail.com
Oru oorla ganapathy iyer ganapathy iyer-nu oruthar irundhaar
ReplyDelete(சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியின் ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கினேன்)
ReplyDeleteஇது அரசுப்பள்ளியில்லை. கோபாலபுரம் கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு அரசாங்க உதவியோடு நடத்தும் பள்ளி. ஒரு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியையும் இப்பள்ளியையும் நடத்துகிறார்கள்.
இப்போது இருப்பதை விட இன்னமும் 20-30% அதிகம் மாணவிகளை ஏற்றுக் கொள்ளப் பள்ளியில் இடவசதி உள்ளது. இலவசம் என்பதாலேயே சிலர் வருவதற்குத் தயங்குகிறார்கள் என்று தலைமையாசிரியை சொல்கிறார். அவர் நல்ல தன்முனைப்பு கொண்டவர். உங்களுக்கு நேரம்/விருப்பம் இருந்தால் அவரிடம் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒரே பிரச்னை, அடுத்த வருடம் ஆண்டு விழாவில் பேச வேண்டி வரும் (போளி நன்றாக இருந்தது, வடையைத் தவிர்க்கவும்) ;-)
தங்களின் பதிவை பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு பெண்ணின் பெற்றோரிடம் சொன்னேன், இதுபோன்ற நல்ல தகவல்களை கொடுத்தற்கு நன்றி.
ReplyDeleteஅசோக் நகர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளிக்கும் நல்ல பெயருள்ளது. அங்கு தங்கள் பெண்களை சேர்க்க பல பெற்றோரும் விரும்புவதாக கேள்வி
பா. ரெங்கதுரை சொன்னது…
ReplyDelete//என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. கோபாலபுரம் பகுதியில் பார்ப்பான் பெயரில் ஒரு பள்ளியா? விட்டுவிடுவோமா?//
அதானே. அதனால் உடனே மயிலாப்பூருக்கு மாற்றிவிடுவதே நல்லது. எவ்வளவோ தகுதி, திறமையுள்ள ஏழை பிராமண மாணவிகள் படிக்க வாய்ப்பில்லாமல் தவிக்கும்போது பணக்கார முட்டாள்களுக்கு இடமும் கொடுத்து இலவசமாக ஏன் புத்தகங்களும் கொடுக்க வேண்டும்? ரெங்காச்சாரியார் இதை உடனே மயிலாப்பூர் எம்.எல்.ஏ. காதில் போடவேண்டும்.