Thursday, May 21, 2009

ராஜீவ் காந்தி நினைவு நாள்

இன்று செய்தித்தாள்களில் வந்திருந்த விளம்பரங்களைப் பார்த்ததும்தான் ராஜீவ் காந்தி நினைவு நாள் ஞாபகம் வந்தது. இப்போதாவது ராஜீவ் காந்தியின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என்று காந்தி குடும்பம் நினைக்குமா? ஈழத் தமிழர்களை எதிரிகளாகக் கருதாமல், அவர்கள் வாழ்வு வளம்பெற காந்தி குடும்பமும் காங்கிரஸும் வேலை செய்யுமா?

7 comments:

  1. ஈழத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு காந்தி குடும்பமும் காங்கிரஸும் காரணம் என்றும் அதற்கு அடிப்படை ராஜீவ் படுகொலைக்கான பழிதீர்க்கும் கோபம் என்றும் பொருள் பட எழுதியிருக்கிறீர்கள். இது யாரை சரிக்கட்ட பத்ரி? உங்கள் உண்மையான கருத்தின் முழுவடிவமும் இதுதான் என்று என்னால் நம்ப முடியவில்லை.

    பிற தமிழ்குழுக்களை பிரபாகரன் அழித்ததும், ப்ரேமதாஸாவைக் கொன்றதும், சமாதனப் பேச்சுக்காக போர் நிறுத்தும் நேரத்தையெல்லாம் தந்திரமாக ஆயுதம் சேர்க்க மட்டுமே உபயோகித்ததும், அசட்டுத்தனமாக ராஜபக்சே ஜனாதிபதியானதற்கு மறைமுகக் காரணமாக இருந்ததும் புலிகள் செய்த எண்ணற்ற குற்றங்களில் சில. இவற்றில் மிகப் பெரியது ராஜீவைக் கொன்று தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை இழந்ததுதான். தமிழ்நாட்டில் அவர்களுக்கு சாதாரண மக்களிடம் செல்வாக்கு சுத்தமாக இல்லாமல் போனதற்கு இது மிகப் பெரிய காரணம்.

    இலங்கை ராணுவம் புலிகளைத் தீர்த்துக் கட்டியதுதான் ஈழத்ததமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். இதற்கு காங்கிரஸ் பழிதீர்க்கும் எண்ணத்தோடு உதவி இருந்தாலும் உதவாமல் இருந்திருந்தாலும் மொத்த உலகமே இலங்கைத்தமிழருக்கு ஆதரவாக இருப்பதை இனிமேல் யாராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  2. //இலங்கை ராணுவம் புலிகளைத் தீர்த்துக் கட்டியதுதான்...//

    ஆனாலும் அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறதே. எந்த காலத்திலும் இது residue ஆக மிஞ்சும் (Trotsky, Jews, காசா முகாமில் குண்டுகளால் அடிபடும் மக்கள்). இப்போதும் அதேதான் நடந்துள்ளது. இதனால் யாருக்காவது நன்மையுள்ளதா? பலநாடுகளிலும் இருக்கிற புலம் பெயர்ந்தவர்கள் நம்பிக்கையில் விழுந்த கல்லைத் தவிர எதுவும் நடக்கப் போவதில்லை.

    இருட்டடைப்பு எந்த புரட்சியிலும் நடக்கும்.இதில் சிக்கியவர்கள் சாமனியர்களே ஆவர்.ரஷ்ய புரட்சியில் நடந்தவற்றை மிகத் தெளிவாக The Whisperers புத்தகத்தில் உள்ளது. அதேபோல் இலங்கைக்கும் வரும். அதுவும் உண்மைக்கும், பொய்க்கும் இடைப்பட்டதாகவே இருக்கும்.

    ReplyDelete
  3. I am personally very surprised(and disappointed at the same time) to see a post like this coming from someone like you(for whom I have very high regards for). My personal disagreement to this post is the following:
    In this post you sound like attempting at intruding into a families way of dealing with the personal loss(for a child who lost her/his father and wife who lost her husband and the post reads something like, now that your fathers killer is killed, are you happy?). Anyways, its your personal opinion. I certainly felt the need to register my views and hence am doing this.

    ReplyDelete
  4. An excellent piece here -
    http://transcurrents.com/tc/2009/05/death_of_prabhakaran_and_other.html

    ReplyDelete
  5. //ஈழத் தமிழர்களை எதிரிகளாகக் கருதாமல், அவர்கள் வாழ்வு வளம்பெற காந்தி குடும்பமும் காங்கிரஸும் வேலை செய்யுமா?//

    அப்படியா கருதுகிறீர்கள்?

    ReplyDelete
  6. //
    அவர்கள் வாழ்வு வளம்பெற காந்தி குடும்பமும் காங்கிரஸும் வேலை செய்யுமா?
    //

    காந்தி குடும்பமும் காங்கிரஸும் என்று இரண்டையும் பிரித்து நீங்கள் எழுதியதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

    கருனாநிதி குடும்பமும், தி.மு.கவும் என்று இரண்டு வெவ்வேறு கட்சிகள் தமிழகத்தில் உள்ளனவா ? அது எப்படி காங்கிரசை உங்களால் காந்தி குடும்பத்திலிருந்து பிரிக்க முடிகிறது ?

    ReplyDelete
  7. என்ன கொடுமை பத்ரி இது? காந்தி குடும்பம் ஈழத் தமிழர்களை எப்போ எதிரியாய் நினைத்தது?

    நல்லாவே பேலன்ஸ் பண்றிங்க? :))

    ReplyDelete