தலைவர்: சிவராஜ் தொட்டண்ணன்
பாஸ்கரன் (AU-KBC): Intelligent Tamil texting for Mobile environment
* செல்பேசிக் கைக்கருவிகளில் உள்ள 1-9 எண்களின் பட்டன்களை வைத்து தமிழ் எழுத்துகளைக் கொண்டுவர வேண்டும். *, # போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. 'ஸ்ரீ', ஃ ஆகியவையும் வரும்.
* தமிழில் எதேனும் ஒரு எழுத்தைக் கொண்டுவர அதிகபட்சம் 4 'தட்டல்'கள் மட்டும்தான் தேவை. சில ஹிந்தி மாடல்களில் கிட்டத்தட்ட 9 தட்டல்கள் தேவை. (ஆங்கிலத்தில் 3 போதும் என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்)
* அகராதி உண்டு. அதன்மூலம் அதிகமாகப் பயன்படும் சொற்களை உள்ளிடலாம். This uses a predictive algorithm, and hence cuts down the number of strokes (from multi-key approach) by as much as 50%.
* இப்பொழுதைக்கு லினக்ஸ், பெர்ல் மூலம் கணினியில் செய்யப்பட்டுள்ளது. செல்பேசிகளுக்குள்ளாகக் கொண்டுவர வேண்டும்.
===
AG ராமகிருஷ்ணன் (IISc, Bangalore): Word Prediction for Tamil SMS
பாஸ்கரன் ஏற்கனவே செல்பேசி பட்டன்களை வைத்து வார்த்தைகளை உள்ளிடுவதன் கஷ்டங்களைப் பற்றிப் பேசினார். ராமகிருஷ்ணன் ஓரிரண்டு பட்டன்களை அழுத்துவதன் மூலம் சொற்களை ஓர் அகராதியிலிருந்து தேடி வேகமாக எடுப்பது பற்றிய தம் அல்கொரிதத்தைப் பற்றிப் பேசினார்.
===
நிரஞ்சயன் (National University of Singapore): Assignment of Tamil characters to the Telephone Keypad
இந்தப் பேச்சு செல்பேசி பட்டன்கள் தரப்படுத்துதல் பற்றியது. இது எந்த எழுத்துகள் அதிகமாக (high frequency) தேவைப்படுகின்றன என்பதை முன்வைத்து எந்த எண் பட்டன்களில் எந்தத் தமிழ் எழுத்துகள் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது.
மிக்க நன்றி பத்ரி. தங்கள் வலைப்பதிவின் மூலம் தமிழ் இணையம் 2004 நிகழ்வுகளை உடனடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ReplyDeleteBy: ஜெ. உமா மகேஸ்வரன்
இவற்றைப் பற்றிய மேலதிக விவரங்கள் () இணையத்தில் எங்காவது உள்ளதா? மாநாடு வலைப்பக்கத்தில் அப்படி எதையும் இன்னும் காணவில்லை.
ReplyDeleteBy: அசோகன
Sorry, in the previous comment, I meant to write "copies of papers, slides etc. " in roman text within the parentheses. But it didn't show up.
ReplyDeleteBy: அசோகன