1,500க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் இறந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
தொலைபேசியில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தமிழ்நாட்டிலே மொத்த இழப்பு - 90% மீனவர்கள் - மிகப்பெரிய எண்ணிக்கையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கடலுக்குள் சென்ற படகுகள் - வெறும் படகுகளாக மட்டுமே திரும்பி வருகின்றனவாம்.
அதேபோல பொருள் சேதமும் மிகப்பயங்கரம்: பல மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்கள், மீன்வலைகள் ஆகியவை முழுதும் நாசமாகி, அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்பதோடு கூட இழப்பு பல நாடுகளை மொத்தமாகத் தழுவியுள்ளது என்பதும் மிகவும் வருந்தத்தக்கது.
மாம்பலம் மேன்ஷன்
5 hours ago
http://hosted.ap.org/dynamic/files/photos/M/MAS10112260915.html?SITE=FLTAM&SECTION=HOME&TEMPLATE=DEFAULT
ReplyDeleteஇலங்கையில் நண்பர் ஒருவருடன் பேச முடிந்தது. தொலைதொடர்பு மோசமான நிலையில் உள்ளது. காவல்துறைக்கோ, அரசுக்கோ என்ன நடக்கிறதென்றே தெரியவில்லையாம். இலங்கையில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு மேல் இந்தக் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பிபிசி தெரிவிக்கிறது.
ReplyDelete