இன்று காலை நெல்லை அருகே தமிழக முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணாவும், அவரது நண்பரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆலடி அருணா திமுகவில், பின் எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக, பின் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் திமுக என்று இருந்தவர். கடைசியாக திமுக ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர். பாராளுமன்றத்தில் உறுப்பினராக பல வருடங்கள் இருந்தவர். போபோர்ஸ் நேரத்தில் அந்த பிரச்னையை விசாரித்த பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராகவோ, உபதலைவராகவோ (சரியாக ஞாபகம் இல்லை) இருந்தவர். போபோர்ஸ் ஊழல் பற்றி தமிழில் திமுக வெளியிட்ட சிறு பிரசுரம் ஒன்றை எழுதியவர்.
கடைசியாக திமுகவில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர். திமுக தலைமை, பாராளுமன்றத் தேர்தலின்போது அதிக அளவில் பணம் கேட்டார்கள் என்று புகார் செய்தவர்.
மேற்கொண்டு தகவல் வரும் நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்பொழுதைய சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
15 hours ago
//சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம்.//
ReplyDeleteஒன்னும் பெரிய பிரச்சனையில்லை.
எதை ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லைன்னு சொல்றீங்க ரோசாவசந்த்?
ReplyDeleteதா. கிருஷ்ணன்போல இதையும் கருணாநிதியும் அவரோட மகன்களுமே ஆள் வைத்துச் செய்துவிட்டார்கள், அதை ஸன் டிவி மறைத்துவிட்டது என்று வலைப்பதிவுகளிலே நாலுபேர் எழுதத்தான் போறாங்க என்கிறதை ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லைன்னு சொல்றாரோ?
ReplyDeleteBy: haley
சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம், அதனால் பெரிய பிரச்சனை இல்லை.
ReplyDeleteஆலடி அருணாவின் அரசியல் எப்படி இருந்தாலும், சட்டம் மற்றும் திராவிட இயக்க வரலாறு ஆகியவற்றில் ஒரு நிபுணராகவும் எழுத்துத் திறன் மிகுந்த ஒரு (ஏறத்தாழ) நடுநிலையாளராகவும் அறியப் பட்டவர். அவரது படுகொலை மிகுந்த கோபத்தை உண்டு பண்ணுகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
ReplyDeleteI second Srikanth's opinion. May the departed souls rest in peace. May the real guilty of this crime brought to justice asap. Regards, PK Sivakumar
ReplyDeleteBy: PK Sivakumar
ஆலடி அருணாவின் படுகொலை கொடூரமானது. கண்டிக்கப்படவேண்டியது. தமிழக அரசியலுக்கும் ஒரு இழப்புதான். இதற்குமேல் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே இச்சம்பவம் எழுப்பியிருக்கக்கூடிய குறுகியகால அரசியல் பரபரப்புகள் சுனாமிப் பேரழிவுப் பிரச்சினையில் அடிபட்டுப்போவதில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படப்போவதில்லை. அதற்காக காவல்துறையும் கொலையாளிகளை சும்மா விட்டுவிடுவார்கள் என்றும் பயப்படவேண்டியதில்லை.
ReplyDeleteசுந்தரமூர்த்தி
By: M. Sundaramoorthy
நமது தமிழக/இந்திய அரசியலின் முடைநாற்றத்தின் முகம் இதுதான். இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கும், அறிவுஜீவிகள் இதுபோன்ற வக்கிரங்களுக்கு என்ன சொல்வார்கள்? மிருகங்கள் உலவும் அல்லது மிருகங்களை பயன் படுத்திக்கொள்ளும் அரசியல் இப்படித்தான் இருக்க முடியும்! கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு தனிமனிதன் மேல் நடத்தப்பட்ட பயங்கரவாதம் இது. கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. போட்டுத்தள்ளுவது இருக்கும் வரை ரவுடிகள்தான் அரசியலுக்கு வரமுடியும்.
ReplyDeleteBy: வீச்சறுவாள்