Tuesday, December 21, 2004

அவ்னீஷ் பஜாஜ் பெயில்

இன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் அவ்னீஷ் பஜாஜுக்கு பெயில் கிடைத்துள்ளது.[ செய்தி ]

4 comments:

  1. //... and he did not make any effort to remove it until prodded.//

    பத்ரி,
    இதைப பத்தி உங்களுக்குத் தெரிஞ்சது என்ன?

    ReplyDelete
  2. காசி: அது காவல்துறையின் குற்றச்சாட்டு. உண்மை என்ன என்பது இனிதான் வெளிவர வேண்டும்.

    மேலும் காவல்துறை யாரை முதலில் தொடர்புகொண்டனர் (பஜாஜை அவர்களால் முதலில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது) என்பதும் தெரிய வேண்டும். இங்கு பல ஊழியர்களின் வழியாக இந்தச் செய்தி பஜாஜைச் சேர்ந்திருக்கும். எந்தப் பெரிய நிறுவனத்திலும் இதுபோன்ற தாமதங்கள் நிகழத்தான் செய்யும்.

    இங்கு பெரிய பிரச்னை பாஸீ மேல் என்ன தவறு? அந்தத் தவறுக்கு நிவாரணம் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை ஜெயிலில் அடைப்பதா என்பதே.

    ReplyDelete
  3. சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென்பதற்காகவே, நுட்பியலைப் பற்றி அதிகம் அறியாதவர்கள் ஆராயாமல் செய்யும் தவறுகள். இச்சட்டங்களை நமது மாண்புமிகு நா.உ.க்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆமோதித்து ஏற்றுக்கொள்கின்றனர். உருப்படியான விவாதங்களோ, பேச்சுகளோ நாடாளுமன்றத்தில் இல்லாவிடில் வரும் நஷ்டங்களில் இதுவும் ஒன்று.
    பத்ரி, இச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பொதுவில் யாரேனும் விவரமாக விவாதிக்கிறார்களா?

    ReplyDelete
  4. இணைய நிர்வாகி என்ற வகையில் விற்க அல்லது வாங்க வரும் அனைத்தையும் சோதித்தபின்பே ஏலக்கடையில் அறிவிப்பு செய்ய வேண்டும். எத்தனையோ கோடிகள் புரளும் நிறுவனத்தில் வேலையாட்களுக்கா பஞ்சம்? குழந்தைக்(?) காமப்படமாக விற்றதால்தானே பிரச்னை? விளம்பரம் செய்ய வருபவரின் பணம் மட்டும் வேண்டும்..அவரின் விற்பனைப் பொருள் என்ன எனத் தெரியாது எனச் சொல்வது சரியல்ல.

    By: மூர்த்தி

    ReplyDelete