சற்றுமுன் பேசியதில் கிடைத்த தகவல்.
2,000க்கும் மேற்பட்டவர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் சொல்கின்றனவாம். ஆனால் இன்னமும் பலர் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை. அதனால் இறப்பு இதைவிட அதிகமாகத்தான் இருக்கும்.
நகரில் பாதிபேர் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர்களுக்கு - கடலை விட்டு வெகு தொலைவு - சென்றுவிட்டனர். (இது சற்றே தேவையில்லாத பயம்.)
வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கோவில்கள், கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அரசுத் தரப்பிலிருந்து உணவு ஆகியவற்றுக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. பொதுமக்களே இதைக் கவனித்துள்ளனர். இன்று காலை கடும் மழை பிடித்துக்கொண்டுள்ளது. இதனால் உடல்களைத் தேடுவது சிறிது தடைப்பட்டுள்ளது. மேலும் உடல்களை முழுவதுமாக அப்புறப்படுத்தாதனால், மழையும் சேர்ந்து கொண்டுள்ளதால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
அரசு ஒருங்கிணைப்புக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.
இப்பொழுதைய உடனடி தேவை:
* உடல்களை அப்புறப்படுத்துவது, கணக்கெடுப்பது, உறவினர்கள் மூலம் முடிந்தவரை அடையாளம் காணவைப்பது, உடல்களை எரிப்பது/புதைப்பது.
* மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவி. நாகை அரசு மருத்துவமனையால் இறந்தவர்களை, உயிருக்குப் போராடுபவர்களை கவனிக்க முடியாத நிலைமை.
* வீடில்லாதவர்களுக்கு தேவையான தாற்காலிக உணவு, கழிவறை வசதி. கிட்டத்தட்ட 10,000 பேர்களுக்கு மேல் வீடிழந்துள்ளனர் என அறிகிறேன். இதற்கான முயற்சிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். பணவசதி உள்ளவர்கள் பண உதவி செய்யலாம்.
* பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது. தமிழக அரசு, இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முழுமையாக - நடுவில் பிறர் திருடாமல் - நடக்குமா என்பது தெரியவில்லை. வேறு இடங்களில் வீடுகள் அமைப்பது, வேலைகள் தேடித்தருவது... வாழ்க்கை அமைத்துத் தருவது...
இப்பொழுதைக்கு மைய, மாநில அரசுகளின் முழு கவனமும் நாகையை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் நாகையில்தான் அதிக நாசம் என்று தெரிந்தும் அங்கு அரசுகளின் ஈடுபாடு குறைவாக இருப்பது போலவே தோன்றுகிறது. நாகையை ஒப்பிடுகையில் கடலூர், சென்னை, பாண்டி, கன்யாகுமரி ஆகிய இடங்களில் சேதம் வெகு குறைவே.
அறிவியக்கமே நவீனநாட்டின் மையம்
9 hours ago
/இதற்கான முயற்சிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். பணவசதி உள்ளவர்கள் பண உதவி செய்யலாம்./
ReplyDeleteவொயர் ட்ரான்ஸ்ஃபர் செய்ய ஏதாவது கணக்கு பற்றிய தகவல் உண்டா? (preferably non-govt). There may be lot of people, like me, not using credit cards.
நாகையில் உதவியில் ஈடுபட்டிருக்கும் சில NGO முகவரிகளைக் கொடுக்க இயலுமா?
ReplyDeleteஎனக்கென்னவோ, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது ஒரு நல்ல வழியாகத் தோன்றுகிறது. இதில் எல்லாம் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஎன்றென்றும் அன்புடன்
பாலா
By: BALA
/முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது ஒரு நல்ல வழியாகத் தோன்றுகிறது. இதில் எல்லாம் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று தோன்றுகிறது./
ReplyDeleteஎனக்கு அப்படி தோன்றவில்லை. நண்பர்கள் மூலம் தெரியவரௌம் சில நம்பகமான NGOக்கள் இருக்க கூடும். பத்ரி போன்றவர்கள் பரிந்துரைத்தால் நல்லது.
கலைஞர் கருணாநிதி காலமடைந்து விட்டாரா என்ன? மலேசியாவிலுள்ள ஹனிபா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அவர் இறந்துவிட்டதாக தனக்குச் செய்தி வந்ததாகக் கூறினார். ஏதும் தகவல்?
ReplyDeleteஅது தவிர்த்து, இங்கும் அந்த கொடுர நிலநடுக்கம் பற்றித்தான் பேச்சு. ஆனால், இங்கு இறந்தவர் எண்ணிக்கை சற்று 'குறைவு': 60-க்கு உற்பட்டுதான். நிலநடுக்கத்தை பல மாநிலங்களில் உணரமுடிந்தாலும், அது கட்டடங்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு பின் வந்த கடல் அலைகள்தான் சாவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
கலைஞர் மிகுந்த நலமாக இருக்கிறார்..(இந்திய நேரப்படி மாலை5 மணி செய்தி!)...அவரது உடல் நலம் குறித்த தவறான செய்திகளை உளவுத்துறை போலீஸார் தான் பரப்பி வருகிறார்கள் என்று தி.மு.க.வும், சன்(பேரன்?!) டி.வி.யும் தொடர்ந்து கூறி வருகின்றன. இருக்கலாம்... உளவுத்துறை போலீஸாரை எவ்வப்போது எப்படி எல்லாம் பயன் படுத்த வேண்டும் என்று தி.மு.க.காரர்களுக்கு தெரியாதாதா என்ன?!
ReplyDeleteநான் சென்னையில் கருணாலயா எனும் NGO வழியாகத்தான் உதவி செய்கிறேன்.
ReplyDeleteஅவர்களுடைய வங்கிக் கணக்கு எண் கேட்டிருக்கிறேன். வந்ததும் தகவல் தருகிறேன்.
சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 7,500 குடிசைகள் நாசமானதில் அங்கு வசிப்பவர்கள் அனைவரும் இப்பொழுது தெருவில். அவர்களில் கிட்டத்தட்ட 2250 பேர்களுக்கு கருணாலயா உணவு வசதிகளைச் செய்து தருகிறது. மேலும் அவர்களிடம் உடுத்த வேறு எந்த துணியுமில்லை. வசிக்க சரியான ஷெல்டர் கிடையாது. மார்கழிக் குளிரில் இரவு திண்டாடப் போகிறார்கள்.
இந்த 2250 பேர்களுக்கு மட்டும் ஒருநாள் உணவுக்கு ரூ. 5,000 தேவைப்படுகிறது. மேற்கொண்டு தகவல்கள் நாளை கொடுக்கிறேன்.
உங்கள் உறவினர்கள் யாரேனும் சென்னையில் இருந்தால், அவர்கள் பழைய துணிகள் - புடைவை, சட்டை எதுவானாலும் அதுதான் இப்பொழுது அவசிய தேவை. என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். மேலும் வீட்டில் உபயோகிக்காத போர்வைகள் எது இருந்தாலும் கொடுக்கலாம். நான் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி எடுத்துக்கொள்ளச் சொல்கிறேன்.
என்னை மின்னஞ்சலில், அல்லது 98840-66566 தொடர்பு கொள்ளலாம். அல்லது கருணாலயா தொண்டர் ஜெயராமன் என்பவரை 94442-29580 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Kalanigar is alive and has given an interview in Sun News. Had back pain and he is recovered. The chief doctor of Apollo also confirms it. Update from Sun News.
ReplyDeleteBy: narain
Folks in USA can donate thru AID India org. They are working with Tamil Nadu Science Foundation and their own volunteers. Please visit this page:
ReplyDeletehttp://www.aidindia.org/CMS/
thanks, Srikanth
பத்ரி,
ReplyDeleteஉடனடியாக தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் போன்ற விவரங்களை சேகரிக்க இயலாவிட்டால் நீங்களே ஒரு தற்காலிக வங்கிக் கணக்கை ஆரம்பித்து தெரிவித்தால் தொலைதூர நாடுகளில் உங்களை அறிந்தவர்கள் பணம் அனுப்ப ஏதுவாய் இருக்கும். பணம் திரட்டி போய்ச் சேரவேண்டிய தொண்டு நிறுவனங்களுக்கு நீங்களே பின்னர் கொடுத்துவிடலாம்.
மு. சுந்தரமூர்த்தி
By: M. Sundaramoorthy
பத்ரி,
ReplyDeleteஉடனடியாக தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் போன்ற விவரங்களை சேகரிக்க இயலாவிட்டால் நீங்களே ஒரு தற்காலிக வங்கிக் கணக்கை ஆரம்பித்து தெரிவித்தால் தொலைதூர நாடுகளில் உங்களை அறிந்தவர்கள் பணம் அனுப்ப ஏதுவாய் இருக்கும். பணம் திரட்டி போய்ச் சேரவேண்டிய தொண்டு நிறுவனங்களுக்கு நீங்களே பின்னர் கொடுத்துவிடலாம்.
மு. சுந்தரமூர்த்தி
By: M. SundaramoorthyBy: M. Sundaramoorthy
சுந்தரமூர்த்தி மற்றும் இதர நண்பர்களுக்கு: நாளைக்குள் எனக்கு வங்கிக் கணக்கு எணகள்் கிடைத்துவிடும். சென்னையில் ஒரு நிறுவனத்துக்கும், நாகையில் ஒரு நிறுவனத்துக்குமாக...
ReplyDeleteமேற்கொண்டு தகவல்கள் கிடைக்கக் கிடைக்க, இங்கு கொடுக்கிறேன்.
நன்றி. ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ள Tamil Nadu Science Foundation நமபகமானது. மேல் விவரங்கள் (வேறு யாரும் தராத படசத்தில் ) நான் அளிக்கிறேன்.
ReplyDeleteanbu nanbargalae,
ReplyDeleteNaanum AID matrum TNSF mula makave panathai anupi ullaen. US il ulla pala thondu niruvanagalum AID mulumae anuppi kirargal.
AID & TNSF mika nambaga mana NGO.
http://www.aidindia.org/CMS/
Intha thagavalai ungal nanbargal anaivarkum mail anupumar kettu kolkiren.
Nandri,
Somu
By: Somu
The people from Nagapattinam - Velankanni coastal area & Chidamabaram - Cuddalore coastal area are worst affected. This is for those who are willing to help affected people. I tried to contact Nagapattinam people, all are in vain. Simply they just wanted to quit from Nagapattinam. If any, i would inform to our bloggers.
ReplyDeleteJ. Rajni Ramki
Another useful website:
ReplyDeletehttp://tsunamihelp.blogspot.com/
Srikanth
ஸ்றீகாந்த் & சோமு:
ReplyDeleteAID & TNSF குறித்த தகவலுக்கு நன்றி.
சுந்தரமூர்த்தி
By: M. Sundaramoorthy
பத்ரி,
ReplyDeleteகருணாலயாவுக்கு பணம் அனுப்ப, க்ரெடிட் கார்டு மூலமோ / பே பால் மூலமோ அனுப்புவது மாதிரி ஏற்பாடு செய்யுங்கள். வங்கிக் கனக்கு எண்கள் என் போன்றோருக்கு வேலைக்கு ஆகாது.
முக்கியமாக, அரசுத்தரப்பில் இருந்து அத்தனை முக்கியத்துவம் தரப்படாத நாகை வாழ் ஜீவன்களுக்கு என்னாலானதை உதவ விரும்புகிறேன்
பத்ரி,
ReplyDeleteகருணாலயாவுக்கு பணம் அனுப்ப, க்ரெடிட் கார்டு மூலமோ / பே பால் மூலமோ அனுப்புவது மாதிரி ஏற்பாடு செய்யுங்கள். வங்கிக் கனக்கு எண்கள் என் போன்றோருக்கு வேலைக்கு ஆகாது.
முக்கியமாக, அரசுத்தரப்பில் இருந்து அத்தனை முக்கியத்துவம் தரப்படாத நாகை வாழ் ஜீவன்களுக்கு என்னாலானதை உதவ விரும்புகிறேன்