எவ்வளவோ வருடங்கள் முன்னதாகவே தலித்கள் கோயிலுக்குள் நுழைய போராட்டங்கள் நடந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டத்தில் வகை செய்யப்பட்ட பின்னரும்கூட இப்பொழுது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் - அதுவும் வெறும் 1,400 குடும்பங்கள் மட்டுமே உள்ள ஒரு கிராமத்தில் - பெரும் பிரச்னை எழுந்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள ஜகன்னாதர் கோயிலைத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து ஹிந்து கோயில்களிலும் தலித்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. நிச்சயம் பல கிராமங்களில் சட்டத்துக்குப் புறம்பான இதுபோன்ற செயல்பாடுகள் நடைமுறையில் இருக்கலாம். ஆனால் இப்பொழுது தலித்கள் வலுவான குழுவாகத் தங்களைக் கூட்டி, போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கோயிலில் சில தலித் பெண்களை நுழைய அனுமதிக்கவில்லை. இதையடுத்து தலித்கள் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் போராடி கோயிலுக்குள் நுழைய அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் இது நீதிமன்றம் அளவுக்கே போயிருக்கக் கூடாது. தலித்கள் காவல்துறையில் புகார் செய்த உடனே காவல்துறையும் மாவட்ட நிர்வாகமுமே தலித்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
இப்பொழுது உயர் நீதிமன்ற ஆணைக்குப் பிறகு கோயிலுக்குள் தலித்கள் நுழைந்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்றும் பரிகாரம் செய்யவேண்டும் என்றும் உயர்சாதிக்காரர்கள் அடம் பிடிக்கிறார்கள்.
அப்படி ஏதாவது நடந்தாலும் நடக்காவிட்டாலும் தலித்கள் தினம் தினம் கோயிலுக்கு - பக்திக்காக இல்லாவிட்டாலும்கூட - போகவேண்டும். விருப்பமிருந்தால் பிறர் கோயிலுக்கு வரட்டும், இல்லாவிட்டால் ஒழியட்டும்.
தலித்கள் உள்ளே நுழைந்ததற்காக பரிகாரம் செய்ய கோயில் பூசாரிகள் முற்பட்டால் தலித்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி (SC/ST (Prevention of Atrocities) Act, 1989) பூசாரிகளையும் கோயில் நிர்வாகத்தினரையும் தண்டிக்க முகாந்திரம் உண்டு.
இந்தச் சட்டத்தின் இரண்டு ஷரத்துகள் கவனிக்கப்படவேண்டியவை. யார் இந்த சட்டப்படி குற்றம் செய்கிறார் என்று சட்டம் இவ்வாறு சொல்கிறது:
3.1 (xiv) denies a member of a Scheduled Caste or a Scheduled Tribe any customary right of passage to a place of public resort or obstructs such member so as to prevent him from using or having access to a place of public resort to which other members of public or any section thereof have a right to use or access to
3.1 (x) intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view
கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது முதல் ஷரத்தின்படி குற்றம். உயர் நீதிமன்ற ஆணைக்குப்பின் அனுமதிக்கப்பட்டாலும் மேற்கொண்டு பரிகாரம் அது, இது என்று செய்தால் அது தலித்களை அவமதிப்பது என்ற வகையில் மேற்கோள் காட்டிய இரண்டாம் ஷரத்தின்படி குற்றம்.
ஒரிஸ்ஸா முதல்வர் நேரடியாகத் தலையிட்டு எந்தவிதமான எதிர்ப்பையும் அவரது நிர்வாகம் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
விண்திகழ்க!
4 hours ago
நல்ல பதிவு.
ReplyDeleteவரவேற்கிறேன்.
நன்றி.
Can a common man garland the deity directly in big temples?
ReplyDelete