(உரிமை = Rights; உரிமம் = license என்ற பொருளில் பயன்படுத்துகிறேன்.)
நேற்று கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த தாயகம் கடந்த தமிழ் என்ற மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதில் தொழில்நுட்பம் குறித்தான ஓர் அமர்வில் கவிஞர், முனைவர் சேரன் தலைமை தாங்க, எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் பேரா. பொன்னவைக்கோ, முத்து நெடுமாறன், நான், திருமூர்த்தி ரங்கநாதன் ஆகியோர் பேசினோம்.
திருமூர்த்தியும் நானும் மின் புத்தகங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இளைய அப்துல்லா அதுகுறித்துப் பல கேள்விகள் கேட்டார். அவை குறித்து அமர்வின் இறுதியில் பதில் அளிக்க நேரம் இருக்கவில்லை. இவற்றைப் பல பதிவுகளாக என் வலைப்பதிவில் எழுதுவதாகச் சொன்னேன்.
விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பும் உரிமை, அவற்றின் வணிக சாத்தியங்கள் ஆகியவை குறித்து எனக்கு நிறைய அனுபவம் உண்டு. வணிக சாத்தியங்கள் அதிகமாக, அதிகமாக, புதுப்புது உரிமைகளை ஏற்படுத்தி அவற்றைச் சொத்தாக ஆக்குவது நிகழ்கிறது. அப்போது ஏற்கெனவே ஏகபோக உரிமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பலரும் பலமான எதிர்ப்புச் சக்திகளாக உருவாகி, புதுமைகளைத் தடுக்க முனைவதுண்டு. இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியாக உரிமைகள் கூர்மையான வடிவத்தை அடையும்.
ஒரு கட்டத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பொருத்தமட்டில், கேபிள் & சாடிலைட் உரிமைதான் மிக அதிகப் பணத்தைத் தந்தது. வானொலி ஒலிபரப்பிலிருந்து குறைவான பணம். வேறு பண வாய்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. கேபிள் & சாடிலைட் உரிமை, நாடு அல்லது பிராந்திய அளவில் பிரிக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் தரைவழி (terrestrial) தொலைக்காட்சி உரிமை தனியாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது (அல்லது இந்தியாவில் சட்டம் இயற்றுவதன்மூலம் தூரதர்ஷனால் அபகரிக்கப்பட்டது). இன்றும் கேபிள் & சாடிலைட் உரிமைதான் அதிகமான பணத்தைத் தருகிறது. ஆனால் விளம்பரம் இல்லாத டிடிஎச் ஹை-டெஃப் ஒளிபரப்பு, இணைய பே-பெர்-வியூ ஒளிபரப்பு, விளம்பரங்கள் அடங்கிய இணைய இலவச ஒளிபரப்பு என்றெல்லாம் புதிய வழிகளில் வருமானம் வரத் தொடங்கியுள்ளது.
திரைப்பட உரிமைகள் குறித்து பல சினிமாத்துறை நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். தியேட்டர் விநியோகம்தான் இன்றும் மிகப் பெரிய வருமானம் தரும் துறை. அடுத்ததாக, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை. விஷ்வரூபம் படம்தான் தமிழில் டிடிஎச் பற்றிப் பேசி புரிதலைச் சற்றே மாற்றியுள்ளது. இணையம் அல்லது டிடிஎச் வழியாகப் புதுப் படத்தை வீட்டுக்கே கொண்டுவருவது விரைவில் நடக்கும். அதிக வருமானம் கொடுத்தாலும் தியேட்டர் விநியோகஸ்தர்கள் பிரிந்து கிடப்பதால், அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் பணத்தைச் சம்பாதித்து முடிக்கும்வரை, வேறு வழிகளில் படத்தைக் காண்பித்துவிடாதீர்கள் என்பது மட்டும்தான். ஆனால் தொலைக்காட்சி உரிமையை வாங்குபவர்கள் கைக்குக் கிடைத்ததையெல்லாம் எழுதி வாங்கிக்கொண்டுவிடுகிறார்கள். வெகுசில சினிமா தயாரிப்பாளர்கள் மட்டுமே உரிமைகளைச் சரியாகப் பிரித்து எதைத் தாம் கையில் வைத்திருப்பது, எதை விற்பது என்று தீர்மானித்து அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்கிறார்கள்.
எழுத்தாளர்கள் (அதுவும், தமிழ் எழுத்தாளர்கள்) இவைகுறித்தெல்லாம் அதிகம் கவலைப்பட்டதில்லை. இதுவரை. ராயல்டி பெறுவதற்கே கஷ்டப்படும்போது...
ஆனால் இங்கும் இப்போது வாய்ப்புகள் நிறைய வரப்போகின்றன.
எழுத்தாளர் எழுதும் எதற்குமான காப்புரிமை (Copyright) அவரிடமே இருக்கிறது. இது ஒரு பதிப்பாளரிடம் போய் சில எடிட்டோரியலாகச் சில மாற்றங்களை அடைந்தாலும்கூட இறுதி வடிவத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் (Moral rights) எழுத்தாளரைச் சார்ந்தது. காப்புரிமை என்பதைப் பிறருக்கு விற்கலாம். பிறர் பெயரில் எழுதிவைக்கலாம். ஆனால் அற உரிமை பணம் சார்ந்தது அல்ல. அது எழுத்தாளரிடம் எப்போதும் இருக்கும். அற உரிமை என்பது இந்த எழுத்து இவருடையது என்று குறிக்கப்பெறுவது. அந்த எழுத்தை எழுத்தாளரின் அனுமதி இன்றி மாற்ற முடியாது. அந்த எழுத்தை முற்றிலும் சிதைத்து அல்லது ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை மாற்றி அதே எழுத்தாளரின் பெயரில், அவரது அனுமதி இன்றி வெளியிட முடியாது. காப்புரிமையை ஓர் எழுத்தாளர் இன்னொருவருக்கு விற்றபின்னாலும், தன் எழுத்து எந்தவிதத்திலும் மாற்றப்படாமல் இருக்க அற உரிமையைப் பயன்படுத்தி வழக்கு தொடுக்கலாம்.
காப்புரிமையை விற்கலாம். அதற்கான பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டு. அல்லது பணமே வேண்டாம் என்று ஒருவர் உரிமையைத் துறக்கலாம். அனைத்துக்கு சட்டபூர்வமான இடமுண்டு.
பொதுவாக ஒரு மாத, வார இதழில் அல்லது தினசரியில் உங்களிடமிருந்து ஒரு கட்டுரை, கதை, கவிதை கேட்கிறார்கள் என்றால் அதனை எடிட் செய்து பதிப்பிக்கும் உரிமையை அவர்கள் கோருகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அதுதான் அடிநாதம். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த இதழ்கள் படைப்புகளைக் கோரும்போது முன்னதாக உங்களிடம் எழுத்துமுறையில் ஒப்பந்தம் கோருவதில்லை. பெரும்பாலும் வாய் வார்த்தை அல்லது இப்போதெல்லாம் மின்னஞ்சலும்கூட இருக்கலாம். இந்தப் பேச்சுவார்த்தை நடக்கும்போது ஒரு சிலர்தான் சன்மானம் எவ்வளவு என்பதைச் சொல்வார்கள். அல்லது பழக்கம் காரணமாக (சென்ற கட்டுரைக்கு ரூ. 500 கொடுத்தால், இந்தக் கட்டுரைக்கும் கிட்டத்தட்ட அதே வரலாம் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்) நமக்கு எவ்வளவு கிடைக்கலாம் என்பதை நீங்கள் அனுமானித்துக்கொள்ளலாம். நீங்கள் முன்னதாகப் பேசிக்கொள்ளவில்லை என்றால் பணம் தரப்படவில்லை என்றால் நீங்கள் புகார் சொல்ல முடியாது. கூடாது.
ஆனாலும் நீங்கள் எழுதிய படைப்புக்கு (அதன் எடிட் செய்யப்பட்ட வடிவம், எடிட் செய்யப்படாத முதல் வரைவு என இரண்டையும் சேர்த்து) நீங்கள்தான் காப்புரிமைதாரர். தெளிவான கடிதத்தில் படைப்பின் காப்புரிமை தங்கள் இதழுக்கு எழுதி வாங்கிக்கொள்ளப்படுகிறது என்று அந்த இதழ் சொல்லி, அதை நீங்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்து இட்டிருந்தால் ஒழிய, அந்த இதழ் உங்கள் எழுத்துக்கு உரிமை கோரமுடியாது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் இதில் தெளிவாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட இதழில் ஏழாம் பக்கத்தில் சின்னதாக ஏதோ எழுதியிருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தரவில்லை என்றால் காப்புரிமை உங்களிடம்தான். இவை அனைத்தும் இணைய இதழுக்கு எழுதித்தருவதற்கும் பொருந்தும்.
மேலும் நீங்கள் புனைப்பெயரில் எழுதியது, பெயரிலியாக (அனானிமஸாக) எழுதியது என அனைத்துக்கும் அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். வேறு யாராவது உங்கள் உரிமையை தங்களுடையது என்று சாதித்தால், புனைப்பெயரிலோ பெயரிலியாகவோ எழுதியது நீங்கள்தான் என்பதை நிரூபிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு.
அடுத்து, ஓர் இதழுக்கு நீங்கள் எழுதிக் கொடுத்தது, காலாகாலம் திரும்பத் திரும்பப் பதிப்பதற்கான உரிமை அல்ல. ஒருமுறை பதிப்பதற்கு மட்டுமே. மீண்டும் மீண்டும் பதிப்பிக்கவேண்டும் என்று ஓர் இதழ் நினைத்தால் அவர்கள் அதற்குரிய ஒப்பந்தத்தை எழுத்தாளரான உங்களிடம் பெற்றுக்கொள்ளவேண்டும். அதேபோல தங்களுடைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக, குறுவட்டாக, அல்லது வேறு எந்த வடிவிலுமாக வெளியிடவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடம் முன் அனுமதி பெறவேண்டும். பல பத்திரிகைகள் இதனைச் செய்வதில்லை. உங்கள் காப்புரிமை இவ்வாறாக பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சம்பந்தப்பட்ட பத்திரிகையிடம் புகார் செய்து இழப்பீடு கேட்கலாம்.
புத்தக எழுத்தாளராக, நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் முறையாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது நல்லது. இதைச் செய்யாமல் பின்னால் பணம் கிடைக்கவில்லை என்றெல்லாம் சொல்லிப் புலம்பினால் முழுத்தவறும் எழுத்தாளரான உங்கள்மீதுதான். ஆனாலும் ஒப்பந்தம் ஏதும் இல்லாவிட்டாலும், அற உரிமையும் காப்புரிமையும் உங்களிடம்தான். இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின்படி படைப்பாளியான நீங்கள் உங்கள் காப்புரிமையை எங்கும் நிறுவவேண்டியது இல்லை. நீங்கள் எழுதி முடித்ததுமே காப்புரிமை அந்தக் கணத்திலேயே உங்கள் கைக்கு வந்துவிடுகிறது.
நீங்கள் ஒரு பதிப்பாளருக்கு குறுகிய கால வணிக உரிமையை மட்டும்தான் பொதுவாக அளிக்கிறீர்கள். அது குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட காலத்துக்குப் பதிப்பிக்கும் ஏகபோக உரிமை. பதிப்பாளர்கள் ஒப்புக்கொண்டால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்துக்கு ஒரே புத்தகத்தைப் பதிப்பிக்கும் உரிமையைக் கொடுக்கலாம். சுஜாதாவின் ஒரே புத்தகங்களை கிழக்கு பதிப்பகமும் திருமகள் நிலையமும் வெளியிடுகின்றன. அவற்றின் சில தொகுப்பு வடிவங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது. திருமகள் நிலையத்தின் ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் கிழக்கு பதிப்பகத்துக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் மனைவிக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் எங்களுக்குத் தரப்பட்ட புத்தகங்களை எங்களைத் தவிர திருமகள் நிலையம் (மட்டும்) பதிப்பிக்கும் என்று மிகத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டுள்ளோம்.
பொதுவாக எங்கள் ஒப்பந்தம் அனைத்திலும் ஒப்பந்தக் காலம், ஆரம்பிக்கும் தேதி இரண்டும் தெளிவாக இருக்கும். ராயல்டி என்பது எப்படி வழங்கப்படும் (எத்தனை சதவிகிதம், கணக்கிடுதல் எப்படி நடக்கும், ஆடிட்டிங் உரிமை) என்பதும் தெளிவாக இருக்கும்.
காப்புரிமை உங்களிடம் இருக்கும்பட்சத்தில், எழுத்துபூர்வமாக காலம் முழுதும் (perpetual) என்று நீங்கள் எழுதிக்கொடுக்காதவரை, பதிப்புரிமையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், காலம் வரையறை செய்யப்பட்ட ஒப்பந்தம் இருந்தால், அது முடிவதற்குள் பதிப்பாளர் உங்களுக்குப் பதிப்புரிமையைத் திரும்ப வழங்கத் தேவையில்லை. கூடவே, எங்கள் ஒப்பந்தங்களில், பதிப்புக் காலம் முடிந்தபின்னும் அதுவரையில் அச்சடித்துக் கிடங்கில் இருக்கும் புத்தகங்கள் தீரும்வரை அவற்றை விற்போம் என்றும் எழுதி வாங்கிக்கொள்கிறோம். மீண்டும் அச்சடிக்க மாட்டோமே தவிர, கையில் இருக்கும் பிரதிகளை விற்கும் உரிமை எங்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்கிறோம்.
அடுத்ததாக மொழிமாற்றல் உரிமை. பொதுவாக எங்கள் ஒப்பந்தங்கள் அனைத்திலும், பிற மொழிகளுக்கு மாற்றும் உரிமையையும் சேர்த்தே வாங்குகிறோம். அது பிடிக்காதவர்கள் அதனை மட்டும் நீக்குமாறு கோரலாம். அதனை நாங்கள் ஏற்க மறுக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம். இதுவரை எங்களின் சில புத்தகங்களை பிற இந்திய மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றும் உரிமையை விற்று கிடைக்கும் பணத்தை நாங்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். (அதிகமான மொழிமாற்றல்கள் சொக்கனின் புத்தகங்களில்தான் நிகழ்ந்துள்ளது.) இங்கும் எந்த விகிதத்தில் வருமானம் பகிரப்படும் என்பதைத் தெளிவாக ஒப்பந்தத்தில் எழுதிவிடுகிறோம்.
அதே நேரம், ஓர் எழுத்தாளர் தானாகவே தனிப்பட்ட முறையில் மொழிமாற்றிப் பதிப்பிக்க விரும்புகிறார் என்றால், நாங்கள் உடனடியாக அவருடைய ஒப்பந்தக் கட்டுகளிலிருந்து அவரை விடுவித்து சம்பந்தப்பட்ட உரிமையை அவருக்கே தந்துவிடுகிறோம். பொதுவாக இவையெல்லாம் குறைந்த வருவாய் தரக்கூடியவையாக இருப்பதால் யாரும் அதிகமாகச் சண்டை பிடிப்பதில்லை.
ஒலிப்புத்தக உரிமை அடுத்து. இதனைத் தனியாகவே எழுதி வாங்குகிறோம். அச்சுப் புத்தக உரிமை ஒருவருக்குத் தரப்படுகிறது என்றாலே பிற உரிமைகளும் அவருக்கே தரப்படவேண்டும் என்பதில்லை.
இப்போதைக்கு இறுதியாக மின்புத்தகப் பதிப்புரிமை. இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. மேலே சொன்ன மொழிமாற்றல் உரிமை அல்லது ஒலிப்புத்தக உரிமை ஆகியவற்றில் மிக அதிகமான வருமானம் வரும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மின்புத்தகப் பதிப்புரிமையை நல்ல பணமாக மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். ஏற்கெனவே எங்களிடம் புத்தகங்களின் அச்சுப் பதிப்புரிமையைத் தந்திருப்போர் அனைவரிடமும் மின்புத்தகப் பதிப்புரிமையையும் எழுத்துப்பூர்வமாகப் பெற்றிருக்கிறோம். அவர்கள் யாரேனும் மின்புத்தகப் பதிப்புரிமையைத் திரும்பக் கேட்டால், அச்சுப் பதிப்புரிமையையும் திரும்பக் கொடுத்துவிடுவோம். ஏனெனில் மின்பதிப்பில்தான் லாப சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அச்சுரிமை கழுத்தில் கட்டிய கல்போலத்தான். மேலும் சொல்லப்போனால், 2014-ல் நான் பதிப்பிக்க நினைக்கும் பெரும்பாலான புத்தகங்களுக்கான மின்பதிப்பு உரிமையை மட்டும்தான் பெற்றுக்கொள்ளப்போகிறேன். அச்சுப் பதிப்பு உரிமையை அந்த ஆசிரியரிடமே பெரும்பாலும் கொடுத்துவிடுவதாக முடிவுசெய்துள்ளேன்.
அப்படியானால் ஓர் எழுத்தாளர் என்ன செய்யவேண்டும்? அவர் தன்னுடைய பதிப்பாளரிடம் அச்சுப் பதிப்புரிமை குறித்துப் பேசும்போது, மின்பதிப்பு குறித்த அவருடைய திறன் என்ன, குறிப்பிட்ட காலத்துக்குள் மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இருக்கிறதா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு மின்பதிப்பைக் கொண்டுவரக்கூடிய திறன் அவரிடம் இல்லை என்றால், அந்தப் புத்தகத்தின் மின் பதிப்புரிமையை எழுத்தாளர் தானே தக்கவைத்துக்கொள்வதுதான் சிறந்த வழி.
அடுத்ததாக, அச்சுப் பதிப்புபோல் இல்லாமல், ஆரம்பக்கட்டத்தில் மின்பதிப்புரிமையைப் பற்றி யோசிக்கும்போது அதனை ஏகபோகமாக இல்லாமல் non-exclusive முறையில் பதிப்பாளருக்குத் தருவது குறித்தும் யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆரம்பகட்டத்தில் யாருடைய தொழில்நுட்பம் சரியாக இயங்கப்போகிறது, யாரால் அதிகபட்ச வருமானத்தைக் கொண்டுவந்து தரமுடியும் என்ற தெளிவு இல்லை என்றால், உரிமைகளைத் தானே கையில் வைத்துக்கொண்டு, ஒருசிலருக்கு non-exclusive உரிமங்களை அளித்துச் சோதித்துப் பார்க்கலாம். பல நேரங்களில் மின்பதிப்பு platforms எல்லாம் வெறும் விநியோக அமைப்புகளே.
இங்கே இரண்டு சற்றே முரண்படக்கூடிய கருத்துகளை நான் முன்வைப்பதாகச் சிலர் கருதலாம். முடிந்தவரை விளக்கப் பார்க்கிறேன்.
(அ) ஓர் எழுத்தாளர், முற்றிலும் தயாரான முழு இறுதி வடிவப் புத்தகத்தைத் தயாரிப்பவர் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய படைப்பைப் பொருத்தமட்டில் ஒரு பதிப்பாளர் அந்தப் புத்தகத்துக்கு உள்ளடக்கம் என்ற அளவில் வேறு எந்தப் பங்கையும் செய்யப்போவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அந்த எழுத்தாளர் முடிந்தவரை தன் உரிமைகளைத் தானே தக்கவைத்துக்கொண்டு, எவ்வகை உரிமைகளையெல்லாம் வணிகமாக ஆக்க முடியுமோ அவற்றைச் சரியாகச் செய்யக்கூடிய நிறுவனங்களுடன் சரியான ஒப்பந்தங்களை எழுதிக்கொள்ளவேண்டும்.
(ஆ) ஓர் எழுத்தாளருக்கு எடிடிங்ரீதியிலும் புத்தக வடிவமைப்புரீதியிலும் நிறையப் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது பதிப்பாளர் தன் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு அவற்றை வழங்குகிறார். அப்போது அந்தப் பதிப்பாளர் எந்தெந்த உரிமைகளையெல்லாம் தான் கோரப்போகிறேன் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும்; ஓப்பந்த வரைவையும் கொடுத்துவிடவேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால்தான் மேற்கொண்டு அந்தப் பிரதியில் பதிப்பாளர் கைவைக்கப்போகிறார்.
மிக நீண்டுவிட்ட பதிவு இது. சுருக்கமாக இங்கே:

- எழுத்தாளராக நீங்கள் உங்கள் பதிப்பாளரிடம் ஒரு காகிதத்தில் அனைத்து ஷரத்துகளையும் எழுதிக் கையெழுத்து இட்டுவிடுங்கள். பின்னர் பிரச்னைகள் வருவதை இது பெரும்பாலும் தவிர்க்கும்.
- உங்கள் எழுத்துக்கான காப்புரிமையும் அற உரிமையும் உங்களுடையதே. நீங்கள் பயந்து நடுங்கவேண்டாம்.
- பதிப்புரிமையை நன்றாகப் பிரித்து அச்சுப் பதிப்புரிமை, மின் பதிப்புரிமை, மொழிமாற்றல் உரிமை, ஒலிப்புத்தக உரிமை, கதையாக இருந்தால் சினிமா ஆக்கும் உரிமை, புதினமல்லா எழுத்தாக இருந்தால் ஆவணப்படம் எடுக்கும் உரிமை என்று தனித்தனியாக ஷரத்துகளை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் எவற்றையெல்லாம் உங்களுடைய பதிப்பாளரால் இன்றைக்கு வணிகமாக்க முடியாதோ அவற்றை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எவற்றைப் பணமாக இன்றைக்கு ஆக்க முடியுமோ அவற்றை மட்டும் பதிப்பாளருக்குத் தாருங்கள். ஒரு பதிப்பாளரால் முடியாதவற்றை இன்னொருவரிடம் தரப்போவதாக முடிவுசெய்து அதனை முன்னதாகவே உங்கள் முதன்மைப் பதிப்பாளரிடம் பேசிவிடுங்கள்.
- ஒவ்வொரு உரிமையையும் விற்கும்போது ஒப்பந்த காலம், ராயல்டி போன்ற அனைத்தையும் மிகத் தெளிவாக எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் பதிப்பாளரின் கணக்கை ஆடிட் செய்யும் உரிமையைக் கோரிப் பெறுங்கள். 1,000 அல்லது 5,000 பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது என்று அவர் சொல்வதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. இதனால் நீங்கள் அவரை நம்புவதில்லை என்று இல்லை. நம்பிக்கையை உறுதி செய்வதற்காகவே இது. இந்த உரிமை இருக்கிறது என்பதாலேயே நீங்கள் தினம் தினம் உங்கள் புத்தகம் சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. (எங்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும் இந்த உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம்.)