இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி இணைந்து நடத்தும் இலக்குகள் 2021 நிகழ்வில் நேற்று Zoom வழியாக நான் நிகழ்த்திய உரை.
இப்போது படிக்கக் கையில் எடுத்திருப்பது ஷீ ஜின்பிங் பற்றிய ஒரு புத்தகம்: Inside the Mind of Xi Jinping. கிண்டில் அன்லிமிடெட் இருந்தால் இலவசமாகவே படிக்கலாம். இன்றைய தேதியில் சீனாவைப் புரிந்துகொள்ள இந்த மனிதரைப் பற்றிப் புரிந்துகொண்டே ஆகவேண்டும். இதுதான் சிறந்த புத்தகமாக என்று படித்து முடித்துவிட்டுச் சொல்கிறேன்.
அநிருத் கனிசெட்டி என்னும் இளைஞர், ஓரிரு ஆண்டுகளுக்குமுன் உருவாக்கிய Echos of India என்னும் ஒலிப்பதிவுகளை முழுமையாகக் கேட்டேன். நன்றாகச் செய்திருக்கிறார். இந்தோ-கிரேக்கர்கள் தொடங்கி, இந்தோ-ஸ்கைத்தியர்கள் (சகர்கள்), மௌரியர்கள், குஷானர்கள், சாதவாகனர்கள் என்று சிறுசிறு துண்டுகளாக வரலாற்றைச் சுவைபடக் கொண்டுவந்திருக்கிறார். ஏனோ அடுத்தடுத்த சீசன்களுக்குச் செல்லாமல், இரண்டு சீசன்களோடு நிற்கிறது இந்த ஒலிப்பதிவு.
நீங்களும் கேட்கலாம். உங்கள் குழந்தைகளையும் கேட்கச் சொல்லலாம். உங்கள் குழந்தைகள் இந்திய வரலாற்றின்மீது காதல்கொள்ள இந்த ஒலிப்பதிவுகள் உதவும்.