கடந்த சில வருடங்களில் கிரிக்கெட் ஆட்டம் முழுவதையும் பார்ப்பது குறைந்துபோயிருந்தது. வெகு நாள்களுக்குப் பிறகு ஒரு பந்து விடாமல், இந்திய-பாகிஸ்தான் அரையிறுதி, இந்திய-இலங்கை இறுதி ஆட்டத்தைப் பார்த்தேன். இந்திய-ஆஸ்திரேலிய கால் இறுதி ஆட்டத்தின் இரண்டாம் பாதியைத்தான் முழுதாகப் பார்த்தேன்.
இந்த ஆண்டு ஏதேனும் உலகக்கோப்பை போட்டியை நேரில் பார்க்கச் செல்லலாமா என்று யோசித்தேன். ஆனால் நேரமின்மை காரணமாகச் செல்லவில்லை. 2015-ல் கட்டாயம் ஆஸ்திரேலியா சென்று பார்த்தே தீரவேண்டும்! Defending champions அல்லவா?
2003 தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டங்கள் இரண்டை நேரில் பார்த்த அனுபவம் பிரமாதம். டர்பனில் நடந்த இந்திய-இங்கிலாந்து ஆட்டம், செஞ்சுரியனில் நடந்த இந்திய-பாகிஸ்தான் ஆட்டம். அந்த ஆட்டங்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது இந்த உலகக்கோப்பையில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் இருந்தது. முக்கியமாக கால், அரை, முழு இறுதி ஆட்டங்களின்போது.
குறிப்பிட்டுச் சொல்ல என்று ஏதும் இல்லை. ஜகீர் கானின் பந்துவீச்சு. யுவராஜ் சிங்கின் கான்ஃபிடன்ஸ். கௌதம் கம்பீர், விராட் கோலி ஆகியோரின் மன உறுதி. தோனியின் அபார ஆட்டம். ரெய்னா, யுவராஜ், கோலி ஆகியோரின் சிங்கம் போன்ற ஃபீல்டிங்.
எதிரணிகளில் குறிப்பிட்டுச் சொல்ல பல விஷயங்கள். லசித் மலிங்காவின் மிக அற்புதமான பந்துவீச்சு. முரளிதரன் மட்டும் முழுத் திறனுடன் இருந்து, பந்து வீசி, ஓரிரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தால் இந்த இறுதி ஆட்டத்தில் சுக்காகியிருப்போம். பாகிஸ்தான் என்னை அதிகம் பயமுறுத்தவில்லை. அவர்களது பேட்டிங் உடைந்து நொறுங்கக்கூடியது. ஜயவர்தனா, சங்கக்காரா, தில்ஷன் ஆகியோரின் பேட்டிங் பிரமாதம். அவற்றையும்மீறி இந்தியா ஜெயித்தது நிஜமாகவே அபாரம்.
கால் இறுதியில் பிரெட் லீ என்னமாகப் பந்துவீசினார்! நிச்சயமாக மலிங்காவும் லீயும் டேல் ஸ்டெய்னும்தான் இப்போதைய வேகப் பந்து வீச்சாளர்களில் முன்னணியில் உள்ளனர். இந்தியாவிடம் அப்படிப்பட்ட ஒருவர் இல்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு எஃபெக்டிவாகப் பந்துவீசிய ஜாகீர் கான் ஒரு மாபெரும் மேட்ச் வின்னர்.
அஷ்வினின் பந்துவீச்சும் எனக்குப் பிடித்திருந்தது. அவருக்கு இறுதி ஆட்டத்தில் வாய்ப்பளித்திருந்திருக்கலாம்.
ஹர்பஜன் ஏமாற்றம்தான். அவர் தன்னை மீண்டும் கண்டடையவேண்டும். இல்லாவிட்டால் வரும் நாள்களில் திண்டாடிப்போய்விடுவார்.
டெண்டுல்கர் ரிடயர் ஆகவேண்டுமா கூடாதா என்பது பற்றி இனி நான் பேசிப் பிரயோஜனம் இல்லை.
இந்த இந்திய அணியிடம் மேலும் மேலும் நிறைய சாதிக்கக்கூடிய ஒரு உட்கரு உள்ளது. சேவாக், கோலி, கம்பீர், யுவராஜ், ரெய்னா, தோனி, ஜாகீர் கான், அஷ்வின் ஆகியோர் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார்கள். இந்தியாவின் பந்துவீச்சு சுமார்தான். அங்குதான் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
17 hours ago
மாட்டுக்கறி திங்கிறவன் தான் பந்தை நல்லா வீச முடியும்னு ஒரு குரூப்பு சொல்லிகிட்டு திரிஞ்சுகிட்டு இருக்கு. அதே குரூப்பு பாகிஸ்தான் இந்தியாவை வெல்லவேண்டும் என்றெல்லாம் கூட சொல்லிச்சு. அடுத்தவனைத் திட்டுவதே அந்த குரூப்பின் பிரதானவேலை. வசவு டாட் காம் என்ற இணையதளம் நடத்தும் கம்யூனிஸ்டு. முற்போக்கு வயிற்றுப்போக்குவியாதி குரூப்பு தான் அது.
ReplyDeleteenna Saar!
ReplyDeleteno special mention about dhoni captaincy ?
You think nothing special about it?
அஷ்வினின் பந்துவீச்சும் எனக்குப் பிடித்திருந்தது. அவருக்கு இறுதி ஆட்டத்தில் வாய்ப்பளித்திருந்திருக்கலாம்.
ReplyDeleteஎல்லாம் சரி... உலகக் கோப்பையில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மாநில அரசும் மட்டை பந்தாட்ட வீரர்களுக்கு ஏன் கோடி கோடியாக கொட்டிக் கொடுக்க வேண்டும். அவர்கள் மாடலிங் துறையில் சம்பாதிப்பது இதைவிட நூறு மடங்கு அதிகம்.
ReplyDeleteமக்கள் இதையெல்லாம் யோசிப்பதே இல்லை. :-(
Krishna Prabhu,
ReplyDeleteWe all agree with your views.
"மக்கள் இதையெல்லாம் யோசிப்பதே இல்லை"-
It is the minister who signs these orders and the advisors to the minister(IAS officers) who need to apply logic before signing these. Since they didnt care as clearly seen,Shall we file a RTI/PIL against this?
பத்ரி,
ReplyDeleteடெண்டுல்கர் 2015 உலகக் கிண்ணத்திலும் ஆடலாம் என்று கேரி கொளுத்திப் போட்டு விட்டுப் போயிருக்கும் இந்த நேரத்தில் அவரது ரிடயர் பற்றிப் பேசுகிறீர்கள்..
ஒன்று தோனிக்கும் அவருக்கும் பிரச்னை வர வேண்டும் அல்லது பாம்பே லாபியின் ஆதிக்கம் இந்தியக் கிரிக்கெட்டில் குறையவேண்டும்.இரண்டுக்கும் சாத்தியங்கள் குறைவு..
மேலும் அவ்வப்போது(இன்னும்!) நன்றாகதானே ஆடிக் கொண்டிருக்கிறார்...ஆனால் என்ன ஒரு ஆதங்கம்,இடைக்காலத்தில் அவருக்குக் கொடுத்த அளவு சப்போர்ட் திராவிடுக்குக் கொடுக்காமல் தூக்கி விட்டார்கள்...
ஆமாம்,மேலே ஒருவர் கேட்டபடி தோனியைப் பற்றி நீங்கள் ஒன்றும் எழுதவில்லையே..
எனக்கென்னவோ,(கேரிக்குப் பிறகு)தோனிதான் இந்த வெற்றிக்கு ஆர்க்கிடெக்ட் என்று தோன்றுகிறது.
பார்க்க இந்தப் பதிவும்
WC 2007 - India Eliminated in Round 1 - Sachin should retire as he did not play well
ReplyDeleteWC 2011 - India Winners - Sachin should retire while he is playing well
# Hypocrites in Indian Cricket
# கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்
அறிவன்
ReplyDelete//இடைக்காலத்தில் அவருக்குக் கொடுத்த அளவு சப்போர்ட் திராவிடுக்குக் கொடுக்காமல் தூக்கி விட்டார்கள்...//
இது எப்பொழுது என்று ஆதாரம் தர முடியுமா
ஃபைனலில் சுமாராக தலைமை வகுத்த தோனி, சிறப்பாக பேட்டிங்க் செய்து கோப்பையை வென்று தந்தார். ஜகீர் கானின் முதல் ஐந்து ஓவர்களினால், இலங்கை முன்னூறு ரன்கள் பெரும் வாய்ப்பை இழந்தது - பல ரசிகர்கள் ஜகீரின் கடைசி ஒவர்களை மட்டுமே ஞாபகத்தில் வைத்துக்கொண்டு முதல் ஐந்து ஓவர்களை மறந்து விடுகிறார்கள். கம்பீரும் கோலியும் நிதானமாக ஆடி நல்ல நிலைக்கு கொண்டுவந்தனர்.
ReplyDeleteநிச்சயமாக செய்யலாம் வெங்கட். RTI/PIL - நேரில் சந்திக்கும் பொழுது இதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாகவும்.
ReplyDelete||இது எப்பொழுது என்று ஆதாரம் தர முடியுமா ||
ReplyDeleteபுரூனோ,மிகச் சரியாக வேண்டுமென்றால் புள்ளி விவரங்களைத் தேடித் தரவேண்டும்.
அவர் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய உடன் என்று நினைவு.
சிலகாலம் அவருக்குத் தடுமாற்றம் இருந்தது..
கம்பேரட்டிவ்லி அவருக்குக் இருந்த அளவு சுதந்திரம் அல்லது தொந்தரவின்மை ட்ராவிட்டுக்கு இருக்க வில்லை.
இந்தியா டுடேயில் கூட அச்சமயம் சச்சின் ரிடயர் ஆக வேண்டிய தருணமா இது என்று கவர் ஸ்டோரி வந்தது..
பத்ரி,
ReplyDeleteபுதிய முறை கற்பித்தல் பற்றி டெட்-சேலம் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்-பிரசங்கம் ஒன்று பதிந்திருந்தீர்கள்...
இப்போது அதைத் தேடி அதில் பதிய அவகாசமில்லாமில்லாமையால் இங்கு பதிகிறேன் மன்னிக்க..
பார்க்க இந்தப் பதிவு அல்லது செய்தி..உமக்கு தீர்க்க தரிசனம் ஏதாவது இருக்கிறதா என்ன??
புதுகைத் தென்றல் பதிவில் பதிவிட்டிருக்கிறார்..
புரூனோ,
ReplyDeleteவிக்கியிலிருந்து..
||In the 2002 series in the West Indies, Tendulkar started well, scoring 79 in the first test, and 117 in the first innings of the second. Then, in a hitherto unprecedented sequence, he scored 0, 0, 8 and 0 in the next four innings, getting out to technical "defects" and uncharacteristically poor strokes.||
||He returned to form in the last test scoring 41 and 86. However, India lost the series. This might have been the beginning of the "decline" phase in his career which lasted till 2006.||
||In the test series in Pakistan in 2006, Sachin failed to get going in all three innings despite the pitches being flat tracks. In the third of those three innings, he was bowled comprehensively after making 26, and ended up on all fours. This prompted The Times of India to publish an article entitled "Endulkar" in which TOI opined that Tendulkar's batting prowess had declined and his career had slid permanently.||
2002-2006 ல் அவ்வப்போது பேட் பேட்சில் இருந்தாலும் டெண்டுல்கர் டீமில் இருக்க முடிந்தது..ஆனால் ட்ராவிட் 1 வருடம் கூடத் தாக்குப்பிடிக்கமுடியவில்லை...
அதைத்தான் குறிப்பிட்டேன்.
உலகக் கோப்பை கெடக்குது .... ...ஊருக்கெல்லாம் ஒரு வழினா ஒன்றக்கண்ணனுக்கு தனி வழினு ..... வழக்கம் போல கூடிய சீக்கிரம் அன்னா ஹசாரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார், எனக்கு உடன்பாடு இல்லை, சனநாயக விரோதம், அ.ஹசாரேவைவிட அ.ராசா உயர்ந்த மனிதர் என்றெல்லாம் உங்களிடமிருந்து கட்டுரையை எதிர் பார்க்கிறோம் !!!!! எழுத ஆரம்பியுங்கள் !!!
ReplyDelete”Since they didnt care as clearly seen,Shall we file a RTI/PIL against this?”
ReplyDeleteI fail to understand what is the relevancy of RTI in this issue.
PIL? It is not the function of the Courts to decide what could be the policy of the Government regarding the promotion of Sports or the felicitation of the Sportspersons. Government is expected to be run by the Executive, which is answerable to the Public through the Representatives of the People.
//புரூனோ,மிகச் சரியாக வேண்டுமென்றால் புள்ளி விவரங்களைத் தேடித் தரவேண்டும்.
ReplyDeleteஅவர் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய உடன் என்று நினைவு.
//
புள்ளி விபரங்களின் அடிப்படையில் உங்கள் கருத்தை சொல்லாமல்,
சுய விருப்பு, வெறுப்பு அடிப்படையில் ஏதோ சொல்லி விட்டு, அதன் பிறகு புள்ளி விபரம் கிடைக்குமா என்று தேடுவது
என்னைப்பொருத்தவரையில் மிக மிக கேவலமான விஷயம்
//||In the 2002 series in the West Indies, Tendulkar started well,
ReplyDeletescoring 79 in the first test, and 117 in the first innings of the second.
Then, in a hitherto unprecedented sequence, he scored 0, 0, 8 and 0 in the next four innings,
getting out to technical "defects" and uncharacteristically poor strokes.||//
79,117 ஓட்டங்கள் எடுத்த ஒரு தொடரை பேட் பேட்ச் (bad patch) என்று கூறுகிறீர்களா
என்ன கொடுமை சார் இது
அப்புறம் நீங்கள் கூறிய அதே தொடரின் கடைசி இரு இன்னிங்ஸ்களில் அவர் பெற்றது 41 மற்றும் 86
அதை தெளிவாக சாதா எழுத்துகக்ளிலும், பெற்ற 0 ஓட்டங்களை மட்டும் bold எழுத்துக்களிலும் தந்துள்ளீர்கள்
உங்கள் நேர்மையை எண்ணி வியக்கிறேன் :( :(
ஒரே தொடரில் ஒருவர் 79,117,0,0,8,0,41,86 அடித்துள்ளார்
இதை bad patch என்று கூறுகிறீர்கள்
எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை
--
ReplyDelete// This might have been the beginning of the "decline" phase in his career which lasted till 2006.||//
2003ல் அவர் உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்களை பெற்றார்
அது decline ஆ
2004ல் அவர் இரண்டு 200 ஓட்டங்களையும் ஒரு 196 ஓட்டங்களையும் பெற்றார். (அணியில் இருக்கும் ஒரு துரோகி முதுகில் குத்தவில்லை என்றால் அது கூட 200 ஆகியிருக்கும்)
இது எல்லாம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா
//||In the test series in Pakistan in 2006, Sachin failed to get going in all three innings despite the pitches being flat tracks. In the third of those three innings, he was bowled comprehensively after making 26, and ended up on all fours. This prompted The Times of India to publish an article entitled "Endulkar" in which TOI opined that Tendulkar's batting prowess had declined and his career had slid permanently.||//
ReplyDeleteஓ
அப்படியா
அதே 2006ல், ஒரு நாள் போட்டிகள் நடந்தன
தெரியுமா தெரியாதா
தெரியாது என்றால் தெரிந்து கொள்ளுங்கள்
அதில் அவர் அடித்தது 100, 42, 95
இது bad patch ஆ
--
ReplyDeleteஅறிவன் சார்
உங்கள் பிரச்சனை தான் என்ன
உங்களுக்கு சச்சினை பிடிக்கவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். அதில் நான் தலையிட முடியாது
ஆனால் 100,42,95 ஐ bad patch என்றோ, அல்லது 2003 உலகக்கோப்பையை batpatch என்றோ சொன்னீர்கள் என்றால்
ஒன்று உங்களுக்கு கிரிக்கெட் அறிவு சுத்தமாக இல்லை
அல்லது
நேர்மை கொஞ்சம் கூட இல்லை
//2002-2006 ல் அவ்வப்போது பேட் பேட்சில் இருந்தாலும் டெண்டுல்கர் டீமில் இருக்க முடிந்தது..//
ReplyDelete2002 - 2006ல் பேட் பேட்ச் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக விளக்கிவிட்டேன்
வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா
//ஆனால் ட்ராவிட் 1 வருடம் கூடத் தாக்குப்பிடிக்கமுடியவில்லை...//
அவரது ஓட்டங்களை எடுத்து பாருங்கள்
உண்மை தெரியும்
அப்புறம்
ReplyDeleteஅறிவன் சார்
நீங்கள் கூறிய அதே விக்கியில் இருக்கும் மேலும் சில வரிகள்
பார்வை குறைபாடு, அல்லது நேர்மை குறைபாடு இருந்தால் இந்த் வரிகள் கண்களில் பட்டிருக்காது
Tendulkar made 673 runs in 11 matches in the 2003 Cricket World Cup, helping India reach the final. While Australia retained the trophy that they had won in 1999, Tendulkar was given the Man of the Tournament award.
He continued to score heavily in ODI cricket that year, with two hundreds in a tri series involving New Zealand and Australia.
The drawn series as India toured Australia in 2003/04 saw Tendulkar making his mark in the last Test of the series, with 241* in Sydney, putting India in a virtually unbeatable position. He followed up the innings with an unbeaten 60 in the second innings of the test. Prior to this test match, he had had an unusually horrible run of form, failing in all six innings in the preceding three tests. It was no aberration that 2003 was his worst year in test cricket, with an average of 17.25 and just one fifty.
Tendulkar scored an unbeaten 194 against Pakistan at Multan in the following series. India declared before Tendulkar reached 200; had he done so it would have been the fourth time he passed the landmark in Tests.[65] In meeting with the press that evening, Tendulkar stated that he was disappointed and that the declaration had taken him by surprise.[66] Many former cricketers commented that Dravid's declaration was in bad taste.[67][68] After India won the match, the captain Rahul Dravid stated that the matter was spoken internally and put to rest.[69]
Tennis elbow then took its toll on Tendulkar, leaving him out of the side for most of the year, coming back only for the last two tests when Australia toured India in 2004. He played a part in India's victory in Mumbai in that series with a fast 55, though Australia took the series 2–1.
On 10 December 2005 at Feroz Shah Kotla, Tendulkar scored his record-breaking 35th Test century, against the Sri Lankans.
In the test series in Pakistan in 2006, Sachin failed to get going in all three innings despite the pitches being flat tracks. In the third of those three innings, he was bowled comprehensively after making 26, and ended up on all fours. This prompted The Times of India to publish an article entitled "Endulkar" in which TOI opined that Tendulkar's batting prowess had declined and his career had slid permanently.
On 6 February 2006, he scored his 39th ODI hundred, in a match against Pakistan. He followed with a run-a-ball 42 in the second one-day international against Pakistan on 11 February 2006, and then a 95 in hostile, seaming conditions on 13 February 2006 in Lahore, which set up an Indian victory.
நான் அனைத்து வரிகளையும் தந்துள்ளேன்
சிலவரிகளை மட்டுமல்ல
//During this period from about 2002 to 2006–7, Tendulkar's batting often seemed to be a shadow of its former self. //
ReplyDeleteஇது உண்மை தான் என்றாலும் கூட
சச்சினை வெறுப்பவர்களால் மறைக்கப்படும் மற்றொரு உண்மை என்னவென்றால்
அந்த காலக்கட்டத்தில் கூட இந்திய வீரர்களிலேயே சச்சின் தான் அதிக ஓட்டங்களை எடுத்துக்கொண்டிருந்தார்
||புள்ளி விபரங்களின் அடிப்படையில் உங்கள் கருத்தை சொல்லாமல்,
ReplyDeleteசுய விருப்பு, வெறுப்பு அடிப்படையில் ஏதோ சொல்லி விட்டு, அதன் பிறகு புள்ளி விபரம் கிடைக்குமா என்று தேடுவது
என்னைப்பொருத்தவரையில் மிக மிக கேவலமான விஷயம் ||
2002-2006 காலகட்டத்தில் சிற்சில முறை மட்டும்தான் நன்றாக அடித்தார் என்பது கண்கூடு.நான் சொன்னது ஒட்டு மொத்த இந்தியாவின் பல கிரிக்கெட் எழுத்தாளர்கள்,வர்ணனையாளர்கள்-ஹர்ஷா போக்ளே உட்பட-பல சமயங்களில் அளித்த ஒப்பீனீயன்,கண்டனங்கள் அடிப்படையில்,அவற்றைப் படித்த அடிப்படையில்.
பொத்தாம் பொதுவாக ஏதோ கூறிவிட்டு அதை மெய்ப்பிக்க சான்று தேடுவதைப் போல அதைத் திரிக்காதீர்கள். அப்படித் திரிக்க முற்படுவதுதான் கேவலமான விதயம்.
எவரும் இந்திய கிரிக்கெட்டர்கள் அனைத்து ஸ்கோர்களையும் மண்டையில் ஏற்றிக் கொண்டு திரிவது இல்லை,நீங்கள் உள்பட.ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் படிக்கும் கேள்விப்படும்,செய்தித்தள்களில் தினமும் படிக்கும் விதயங்கள் மூளையில் ஒரு நினைவாகத்தான் பதிவாகும் என்பதும்,மிகச் சரியாக விவரங்கள் வேண்டும் போது குறித்து வைத்திருப்பதை ரெஃபர் செய்தோ அல்லது இணையத்திலிருந்தோதான் தேடித்தர வேண்டும் என்பது இயல்பான ஒன்றுதான்.இதை மருத்தவரான நீங்கள் அறியாதிருப்பதுதான் விநோதம் !
||ஆனால் 100,42,95 ஐ bad patch என்றோ, அல்லது 2003 உலகக்கோப்பையை batpatch என்றோ சொன்னீர்கள் என்றால்
ஒன்று உங்களுக்கு கிரிக்கெட் அறிவு சுத்தமாக இல்லை
அல்லது
நேர்மை கொஞ்சம் கூட இல்லை||
ஒரு சீரிசின் ஸ்கோர் மட்டுமே நீங்கள் சொன்னது.2006 ல் இலங்கை டூரின் அனைத்து டெஸ்ட்களிலும் அவர் சொதப்பினார்.26 ரன்களில் போல்ட் ஆனார்.அது போன்ற பேட் பேட்ச் அவ்வப்போது இருந்தது என்பதுதான் ஒட்டு மொத்த இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர்கள் பலர் எடுத்துக் காட்டியது,நானும் சுட்டியது..
இதற்கு கிரிக்கெட் அறிவில்லை,நேர்மை இல்லை என்றெல்லாம் ,உங்களது ட்ரேட்மார்க் சீண்டும் விவாத ஸ்டைலின் மூலம் என்னை படபடக்க வைக்கும் முயற்சி என்றால்,சாரி..இதை உங்களது பல விவாதங்களில் பார்த்தாயிற்று.
||இது உண்மை தான் என்றாலும் கூட
சச்சினை வெறுப்பவர்களால் மறைக்கப்படும் மற்றொரு உண்மை என்னவென்றால்
அந்த காலக்கட்டத்தில் கூட இந்திய வீரர்களிலேயே சச்சின் தான் அதிக ஓட்டங்களை எடுத்துக்கொண்டிருந்தார் ||
ஏதோ நான் சச்சினின் மாமியார் என்பது போலவும் அவரைக் வெறுத்து,கரித்துக் கொட்டுகிறேன் என்பது போன்ற சித்திரத்தையும் ஏற்படுத்த முனைகிறீர்கள்..அவரது ஆட்டத்தின் அழகை,ப்ரெசிஷனை,நுணுக்கத்தை ரசிக்கும் எண்ணற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போலவே நானும் ரசித்திருக்கிறேன்..ஆனாலும் அவரும் பாம்பே லாபியின் ஒரு அங்கம் எனவும்,அவருக்கு பாம்பே லாபி வேலை செய்த அளவுக்கு ட்ராவிட்டுக்கு யாரும் பின்புலத்தில் இல்லை எனவும் தான் நான் சுட்ட முனைந்தது..
அசார் மேட்ச் பிக்ஸிங்கின் போது விலக்கப்பட்டு வெகு காலம் அமைதியுடன் இருந்த பிறகு ஒரு இதழுக்கு ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார்.அதில் காவஸ்கர்,சாஸ்திரி,மற்றும் விசாரணையின் போது சச்சினின் ஒரு சாய்பு பிரமாணம் ஆகியவற்றை சுட்டிப் பேசியிருந்தார்.
அது கிரிக்கெட்டைப் பொறுத்த வரை இந்தியாவில் பாம்பேயின் லாபி எவ்வளவு பலம் பொருந்தியது என்பதை சுட்டியிருந்தது.
ட்ராவிட்,டெண்டுல்கர் இருவரும் ஒரு காலகட்டத்தில் பேட் பேட்சில் இருந்தார்கள் என்பது சுவற்றில் எழுதியது போல் வெளிப்படையானது.
என்னுடைய பின்னூட்டம் டெண்டுல்கருக்கு இருந்த கூடுதல் பாம்பே லாபியின் பலத்தினால் அதிகமான அவகாசம் தரப்பட்டது என்பதை சுட்டத்தான்.
\\டெண்டுல்கர் ரிடயர் ஆகவேண்டுமா கூடாதா என்பது பற்றி இனி நான் பேசிப் பிரயோஜனம் இல்லை.\\
ReplyDeleteஎன்ன சார் எப்போ பதிவெழுதினாலும் உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பிலே எழுதுறீங்க..? உண்மைலே உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருந்தா உங்களோட கிழக்கு பதிப்பகம் இந்நேரம் புத்தக பதிப்பக சூப்பர் ஸ்டாராக ஜொலித்திருக்கனுமே...!
உங்க மேதாவித்தனத்த கொஞ்சம் குறைச்சுக்குங்க சார்..! உலக கோப்பை தொடரில் இரண்டாவது அதிகப்படியான ரன்ஸ் எடுத்திருக்கார். இவருக்கும் முதலிடம் பிடித்த தில்ஷனுக்கும் வெறும் பதினெட்டு ரன்களே வித்தியாசம்... அவரைவிட ஸ்டிரைக் ரேட் அதிகம்...
வேறு என்னதான் சார் எதிர் பாக்குறீங்க...?
//2002-2006 காலகட்டத்தில் சிற்சில முறை மட்டும்தான் நன்றாக அடித்தார் என்பது கண்கூடு.//
ReplyDeleteஇல்லை
பல முறை நன்றாக அடித்தார் என்பதே கண்கூடு
ஆதாரங்களை அடுக்கியுள்ளேன்
அவரது 1998 அல்லது 2010 வருடங்களுடன் ஒப்பிடும் போது வேண்டுமானால் 2006 அவர் குறைவான ஓட்டங்களை பெற்றிருக்கலாம்
ஆனால் நீங்கள் கூறுவது தவறு
//நான் சொன்னது ஒட்டு மொத்த இந்தியாவின் பல கிரிக்கெட் எழுத்தாளர்கள்,வர்ணனையாளர்கள்-ஹர்ஷா போக்ளே உட்பட-பல சமயங்களில் அளித்த ஒப்பீனீயன்,கண்டனங்கள் அடிப்படையில்,அவற்றைப் படித்த அடிப்படையில்.//
ஆனால் நீங்கள் கூறியது தவறு என்று புள்ளி விபரங்களுடன் நிருபித்து உள்ளேன்
//பொத்தாம் பொதுவாக ஏதோ கூறிவிட்டு அதை மெய்ப்பிக்க சான்று தேடுவதைப் போல அதைத் திரிக்காதீர்கள்.//
ஐயா
நீங்களே என்ன கூறியுள்ளீர்கள் பாருங்கள்
புரூனோ,மிகச் சரியாக வேண்டுமென்றால் புள்ளி விவரங்களைத் தேடித் தரவேண்டும்.
அவர் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகிய உடன் என்று நினைவு.
நீங்கள் முதலில் பொத்தாம் பொதுவாக தவறுதலாக கூறிவிட்டு அதன் பிறகு தான் ஆதாரங்களை தேடினீர்கள் என்பதற்கு உங்கள் வரிகளே ஆதாரம்
அதாவது
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கருத்து கூறாமல், ஏதோ கூறிவிட்டு அதன் பிற்கு புள்ளி விபரங்களை தேடினீர்கள் என்பதற்கு உங்கள் வரிகளே ஆதாரம்
//அப்படித் திரிக்க முற்படுவதுதான் கேவலமான விதயம்.//
நீங்களே கூறிவிட்டு நான் திரிக்கிறேன் என்று கூறுவது நியாயமா
//எவரும் இந்திய கிரிக்கெட்டர்கள் அனைத்து ஸ்கோர்களையும் மண்டையில் ஏற்றிக் கொண்டு திரிவது இல்லை,நீங்கள் உள்பட.//
ReplyDeleteஉண்மை
அதனால் தான் பொது வெளியில் ஏதாவது எழுதும் போது தகவல்களை சரி பார்த்து எழுதுவது குறைந்த பட்ச நாகரிகம்
ஒரு வேளை தவறுதலாக எழுதிவிட்டால் கூட, யாராவது அதை மென்மையாக இது எப்பொழுது என்று ஆதாரம் தர முடியுமா என்று சுட்டிக்காட்டினால் உணர்ந்து கொண்டு திருத்துவது நல்லது
//ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் படிக்கும் கேள்விப்படும்,செய்தித்தள்களில் தினமும் படிக்கும் விதயங்கள் மூளையில் ஒரு நினைவாகத்தான் பதிவாகும் என்பதும்,மிகச் சரியாக விவரங்கள் வேண்டும் போது குறித்து வைத்திருப்பதை ரெஃபர் செய்தோ அல்லது இணையத்திலிருந்தோதான் தேடித்தர வேண்டும் என்பது இயல்பான ஒன்றுதான்.//
ஐயா
உண்மை
நீங்கள் இணையத்திலிருந்து தேடிப்பார்த்து, ஸ்கோர்களை எல்லாம் பார்த்து விட்டு கருத்து கூறியிருந்தால் பிரச்சனையில்லை
நீங்கள் ஆதாரங்களை பார்க்காமல், உங்கள் விருப்பு வெறுப்புக்ளின் அடிப்படையில் சொன்னது தான் பிரச்சனை
//இதை மருத்தவரான நீங்கள் அறியாதிருப்பதுதான் விநோதம் !//
நான் அறிவேன்
அதனால் தான் முதலில் Tue Apr 05, 07:20:00 PM IST உங்களிடம் ஆதாரம் கேட்டேன்
||ஆனால் 100,42,95 ஐ bad patch என்றோ, அல்லது 2003 உலகக்கோப்பையை batpatch என்றோ சொன்னீர்கள் என்றால்
ஒன்று உங்களுக்கு கிரிக்கெட் அறிவு சுத்தமாக இல்லை
அல்லது
நேர்மை கொஞ்சம் கூட இல்லை||
ஒரு சீரிசின் ஸ்கோர் மட்டுமே நீங்கள் சொன்னது.2006 ல் இலங்கை டூரின் அனைத்து டெஸ்ட்களிலும் அவர் சொதப்பினார்.26 ரன்களில் போல்ட் ஆனார்.அது போன்ற பேட் பேட்ச் அவ்வப்போது இருந்தது என்பதுதான் ஒட்டு மொத்த இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர்கள் பலர் எடுத்துக் காட்டியது,நானும் சுட்டியது..
இதற்கு கிரிக்கெட் அறிவில்லை,நேர்மை இல்லை என்றெல்லாம் ,உங்களது ட்ரேட்மார்க் சீண்டும் விவாத ஸ்டைலின் மூலம் என்னை படபடக்க வைக்கும் முயற்சி என்றால்,சாரி..இதை உங்களது பல விவாதங்களில் பார்த்தாயிற்று.
||இது உண்மை தான் என்றாலும் கூட
சச்சினை வெறுப்பவர்களால் மறைக்கப்படும் மற்றொரு உண்மை என்னவென்றால்
அந்த காலக்கட்டத்தில் கூட இந்திய வீரர்களிலேயே சச்சின் தான் அதிக ஓட்டங்களை எடுத்துக்கொண்டிருந்தார் ||
ஏதோ நான் சச்சினின் மாமியார் என்பது போலவும் அவரைக் வெறுத்து,கரித்துக் கொட்டுகிறேன் என்பது போன்ற சித்திரத்தையும் ஏற்படுத்த முனைகிறீர்கள்..அவரது ஆட்டத்தின் அழகை,ப்ரெசிஷனை,நுணுக்கத்தை ரசிக்கும் எண்ணற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போலவே நானும் ரசித்திருக்கிறேன்..ஆனாலும் அவரும் பாம்பே லாபியின் ஒரு அங்கம் எனவும்,அவருக்கு பாம்பே லாபி வேலை செய்த அளவுக்கு ட்ராவிட்டுக்கு யாரும் பின்புலத்தில் இல்லை எனவும் தான் நான் சுட்ட முனைந்தது..
அசார் மேட்ச் பிக்ஸிங்கின் போது விலக்கப்பட்டு வெகு காலம் அமைதியுடன் இருந்த பிறகு ஒரு இதழுக்கு ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார்.அதில் காவஸ்கர்,சாஸ்திரி,மற்றும் விசாரணையின் போது சச்சினின் ஒரு சாய்பு பிரமாணம் ஆகியவற்றை சுட்டிப் பேசியிருந்தார்.
அது கிரிக்கெட்டைப் பொறுத்த வரை இந்தியாவில் பாம்பேயின் லாபி எவ்வளவு பலம் பொருந்தியது என்பதை சுட்டியிருந்தது.
ட்ராவிட்,டெண்டுல்கர் இருவரும் ஒரு காலகட்டத்தில் பேட் பேட்சில் இருந்தார்கள் என்பது சுவற்றில் எழுதியது போல் வெளிப்படையானது.
என்னுடைய பின்னூட்டம் டெண்டுல்கருக்கு இருந்த கூடுதல் பாம்பே லாபியின் பலத்தினால் அதிகமான அவகாசம் தரப்பட்டது என்பதை சுட்டத்தான்.
//ஒரு சீரிசின் ஸ்கோர் மட்டுமே நீங்கள் சொன்னது.2006 ல் இலங்கை டூரின் அனைத்து டெஸ்ட்களிலும் அவர் சொதப்பினார்.26 ரன்களில் போல்ட் ஆனார்.அது போன்ற பேட் பேட்ச் அவ்வப்போது இருந்தது என்பதுதான் ஒட்டு மொத்த இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் எழுத்தாளர்கள் பலர் எடுத்துக் காட்டியது,நானும் சுட்டியது..//
ReplyDeleteஇல்லை ஐயா
நீங்கள் கூறியது தவறு
ஆதாரங்கள் மேலே உள்ளன
இப்பொழுதாவது படித்து பாருங்கள்
சச்சின் 1998ல் எடுத்ததை விட 2006ல் குறைவான ஓட்டங்களை, சதங்களை பெற்றிருக்கலாம், ஆனால் சச்சினை வெறுப்பவர்களால் மறைக்கப்படும் மற்றொரு உண்மை என்னவென்றால்
அந்த காலக்கட்டத்தில் கூட இந்திய வீரர்களிலேயே சச்சின் தான் அதிக ஓட்டங்களை எடுத்துக்கொண்டிருந்தார்
//இதற்கு கிரிக்கெட் அறிவில்லை,நேர்மை இல்லை என்றெல்லாம் ,உங்களது ட்ரேட்மார்க் சீண்டும் விவாத ஸ்டைலின் மூலம் என்னை படபடக்க வைக்கும் முயற்சி என்றால்,சாரி..இதை உங்களது பல விவாதங்களில் பார்த்தாயிற்று.//
ஹி ஹி ஹி
//ஏதோ நான் சச்சினின் மாமியார் என்பது போலவும் அவரைக் வெறுத்து,கரித்துக் கொட்டுகிறேன் என்பது போன்ற சித்திரத்தையும் ஏற்படுத்த முனைகிறீர்கள்.//
அதை நான் ஏற்படுத்த முயலவில்லை
நீங்கள் தான் ஏற்படுத்தியுள்ளீர்கள்
//அவரது ஆட்டத்தின் அழகை,ப்ரெசிஷனை,நுணுக்கத்தை ரசிக்கும் எண்ணற்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போலவே நானும் ரசித்திருக்கிறேன்//
நன்றி
//ஆனாலும் அவரும் பாம்பே லாபியின் ஒரு அங்கம் எனவும்,அவருக்கு பாம்பே லாபி வேலை செய்த அளவுக்கு ட்ராவிட்டுக்கு யாரும் பின்புலத்தில் இல்லை எனவும் தான் நான் சுட்ட முனைந்தது..//
ஒரே நேரத்தில் கர்நாடகத்திலிருந்து 5 பேர் அணியில் இருந்தார்களே, ஞாபகம் இருக்கா
சச்சின் பம்பாய் லாபி
திராவிட் கர்நாடக லாபி
கங்குலி டால்மியா லாபி
//அசார் மேட்ச் பிக்ஸிங்கின் போது விலக்கப்பட்டு வெகு காலம் அமைதியுடன் இருந்த பிறகு ஒரு இதழுக்கு ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார்.அதில் காவஸ்கர்,சாஸ்திரி,மற்றும் விசாரணையின் போது சச்சினின் ஒரு சாய்பு பிரமாணம் ஆகியவற்றை சுட்டிப் பேசியிருந்தார்.//
சுட்டி ப்ளீஸ்
//அது கிரிக்கெட்டைப் பொறுத்த வரை இந்தியாவில் பாம்பேயின் லாபி எவ்வளவு பலம் பொருந்தியது என்பதை சுட்டியிருந்தது.//
பாம்பே லாபி பலம் பொருந்தியதாக இருக்கலாம்
அதை நான் மறுக்க வில்லை (ஏற்கவும் இல்லை என்பது வேறு விஷயம்)
//ட்ராவிட்,டெண்டுல்கர் இருவரும் ஒரு காலகட்டத்தில் பேட் பேட்சில் இருந்தார்கள் என்பது சுவற்றில் எழுதியது போல் வெளிப்படையானது.//
ஆமாம்
ஆனால் சச்சினின் பேட் பேட்ச் என்று நீங்கள் குறிப்பிடும் நேரம் அவர் தான் இந்தியாவில் அதிக் ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தார் !!!
//என்னுடைய பின்னூட்டம் டெண்டுல்கருக்கு இருந்த கூடுதல் பாம்பே லாபியின் பலத்தினால் அதிகமான அவகாசம் தரப்பட்டது என்பதை சுட்டத்தான்.//
இல்லை
இதைத்தான் மறுக்கிறேன்
அவரது ஓட்டங்கள், மற்றும் சதங்களின் அடிப்படையிலேயே அவருக்கு இடம்
அதற்கு தான் ஆதாரங்களை தந்துள்ளேன்