Friday, October 11, 2013

இந்திய விவசாயம்

விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்றின்போது விவசாயம் குறித்து சிறிய விவாதம் நடைபெற்றது. இந்திய விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையவேண்டும் என்ற என் கருத்தை நான் முன்வைத்தேன். அதிலும் முக்கியமாக திறன்மிக்க விவசாயம் செய்யவேண்டுமானால் குறைந்தபட்ச நில அளவு என்று ஒன்று இருக்கவேண்டும்; அதற்குக் கீழான அளவில் உள்ள விவசாய நிலங்கள் பயனற்றவை; அவை ஒன்று சேர்க்கப்படவேண்டும் என்றும் சொன்னேன். விவசாயத்தில் ஈடுபடும் கூலியாள்கள் பலரும் வேறு திறன்களைப் பெற்றுக்கொண்டு உற்பத்தி, சேவை ஆகிய துறைகளுக்கு நகரும்போதுதான், இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்; நாட்டில் ஏழைமை குறையும் என்பது என் வாதம்.

விவசாயத்தில் தொடர்ந்து முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு விவசாயம் என்பது லாபகரமானதாக இருக்கவேண்டும். இன்று நான் விவசாயத்தில் இறங்கச் சாத்தியமே இல்லை. விவசாய நிலத்தின் விலை அதிகமானதாக உள்ளது. பூர்விகச் சொத்தாக எனக்கு நிலம் இருந்தாலொழிய விவசாய நிலத்தை அதிக விலைக்கு வாங்கி அதில் நெல்லோ, கரும்போ, கடலையோ, சோளமோ நடுவது அறிவுக்கு உகந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பணத்தை வங்கியில் போட்டுவைத்திருந்தால் அதிக வருமானம் கிடைக்கும்.

இன்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரும் இந்தத் தொல்லை தம் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று காடு கழனியை விற்று அவர்களுக்கு நல்ல படிப்பைச் சம்பாதித்துத் தர முனைகின்றனர். விளைபொருள்களை வாங்குவோரிடம் இருக்கும் நாசூக்கான வியாபாரத் திறன், விற்போரிடம் இருப்பதுபோலத் தெரியவில்லை. முக்கியமான தானியங்களுக்கு அரசுதான் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கிறது. இதனால் அரசிடம் எப்போதும் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்கவேண்டியுள்ளது. பயிர் இழப்புக் காப்பீட்டில் உள்ள குழப்பங்கள், விவசாயக் கூலி வேலைக்குத் தரமான ஆட்கள் எளிதாகக் கிடைக்காமை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஏற்படுத்தியுள்ள குழப்பங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துதல் குறித்த தெளிவின்மை, பருவ மழையையே பெரிதும் நம்பியிருத்தல், நீர் வளத் திட்டங்களில் அரசுகள் அதிகம் ஈடுபடாமை, அண்டை மாநிலங்களுடன் நீர் பகிர்மானத்தின் சச்சரவு, மின்சாரம் சரியாகக் கிடைக்காமை, குளிர்பதனக் கிடங்குகள் இல்லாமை என்று விவசாயத் துறையில் எக்கச்சக்க சிக்கல்கள்.

எனவேதான் இத்துறையை நம்பி அதிகம் பேர் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைப் பற்றிப் பேசினாலே நம்மை விரோதியாகப் பார்க்கிறார்கள். என்னவோ நாட்டில் விவசாயம் பிரமாதமாக இருப்பதுபோலவும் நான்தான் ஒரு கொலைகாரன்போல வந்து குழப்பம் செய்து அப்பாவிகளை சேவைத்துறையை நோக்கிக் கவர்ந்து செல்வதுபோலவும் நினைக்கிறார்கள்.

பொருள் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில், உபயோகமான சேவையையும் பொருள்களையும் உலகத்தரத்தில் உற்பத்தி செய்வதன்மூலம் மட்டுமே நம் நாட்டின் உற்பத்தியை (ஜிடிபி) அமெரிக்க டாலர் கணக்கில் அதிகரிக்க முடியும். அப்போதுதான் பெர் கேபிடா ஜிடிபி அதிகரிக்கும். தனி நபர்களின் உண்மையான சம்பளம் அதிகரிக்கும். அப்போதுதான் பொது மக்களால் விவசாயப் பொருளுக்கு அதிக விலை கொடுக்க முடியும். அப்போதுதான் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும். குறைந்த பேர் விவசாயத்தில் ஈடுபட்டு, அதிக லாபம் பெறும்போது, தானாகவே அதிக முதலீட்டை அவர்களால் விவசாயத்தில் மேற்கொள்ள முடியும்.

நீயா நானா விவாதத்தின்போது பலரும், இந்தியாவால் விவசாயப் பொருள்களைத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் எனவே விவசாயத்தில்தான் இந்தியா அதிக அளவு முதலீட்டைச் செய்யவேண்டும் என்றும் சொன்னார்கள். இதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இந்தியா முதலீடு செய்யவேண்டும்’ என்றால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளால் கட்டாயம் எந்த முதலீட்டையும் செய்ய முடியாது. அவர்களில் பெரும்பாலானோர் அன்றாடங்காய்ச்சிகளாகவே இருக்கிறார்கள். அரசு, அரசுப் பணத்தை எடுத்து விவசாயிகள் கையில் கொடுத்து முதலீடு செய்துகொள் என்று சொல்ல முடியாது. கூடாது. விவசாயிகள் வங்கிகளில் கடன் கேட்டால், நியாயமாகப் பார்த்தால் வங்கிகள் கொடுக்கவே கூடாது. எந்தவொரு கஷ்ட ஜீவிதருக்கும் கடன் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர்போல. அரசியல் அழுத்தம் காரணமாகவே விவசாயக் கடன்கள் கொடுக்கப்படுகின்றன; பல நேரங்களில் அரசியல் காரணங்களுக்காக தள்ளுபடியும் செய்யப்படுகின்றன.

உண்மையில் இந்தியா, உணவுப் பொருள்கள் பலவற்றையும் எண்ணெய் வித்துகள் போன்றவற்றையும் இறக்குமதிதான் செய்கிறது! எனவே, நான் ஏற்கெனவே கூறியதுபோல, இப்போது இருக்கும் நிலையில் இந்திய விவசாயத்தில் வளர்ச்சி காண்பது என்பது அரிதானது. எனவேதான் பொருள் உற்பத்தியை நோக்கி இந்தியா வேகமாகச் செல்லவேண்டும். அதைவிட வேகமாக சேவைப் பெருக்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். மென்பொருள் துறையில் அனைத்துவிதச் சாத்தியங்களையும் இந்தியா கவனிக்கவேண்டும். இது ஒன்று மட்டுமே இந்தியாவின் ஏழைமையைக் குறைக்கும் வல்லமை கொண்டது.

43 comments:

 1. உங்கள் பெயரை யாராவது நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளார்களா?

  ReplyDelete
  Replies
  1. நாமே பரிந்துரைக்கலாமே

   Delete
 2. சில குழப்பங்கள். தெளிவு படுத்தினால் நலம்..
  1. இந்தியா உணவு ஏற்றுமதி செய்வதில்லையா? பல தடவை கோதுமை ஏற்றுமதி போன்றவை பற்றி படித்திருக்கிறோமே..
  மேலும் உணவு பாதுகாப்பு மசோதாவினால் உலக நாடுகளுக்கு பங்கம் வராது என்று வேறு WTO-ல் வாதிட வேண்டியிருக்கிறதே?

  2. இப்போது நாம் பெரும்பாலும் உள்நாட்டு விவசாய உற்பத்தியை தான் சாப்பிடுகிறோம் (என்று நினைக்கிறேன்). நிறைய பேரை வேறு துறைகளுக்கு அனுப்பி விட்டால், நாம் இறக்குமதி செய்து சாப்பிட வேண்டுமா?
  calvin klien branded அரிசி: கிலோ ஐயாயிரம் என்று சொல்வார்களோ என்று பயமாக இருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. இந்தியா சில விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறது - பருத்தி முதல் மாம்பழம், மிளகு என்று பல பொருள்கள். சர்க்கரை போன்ற டெரிவேடிவ் பொருளும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது, பல நேரங்களில் இறக்குமதியும்கூட. ஆனால் பருப்பு, எண்ணெய் வித்து அல்லது எண்ணெய் ஆகியவை இறக்குமதிதான் செய்யப்படுகின்றன. ஏனெனில் இந்தியாவுக்குத் தேவையான அளவு உற்பத்தி நம் நாட்டில் இல்லை. கோதுமை போன்றவை மிகக் குறைவான அளவே நாம் ஏற்றுமதி செய்கிறோம். பல நேரங்களில் நம் சேமிப்பின் அளவு குறைவாக இருக்கும்போது ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். ஆனால் உணவு தானியங்களைப் பொருத்தவரை இப்போதைக்கு நாம் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கிறோம். பருப்பு, எண்ணெய் ஆகியவற்றில்தான் இல்லை.

   ஆட்கள் குறைந்தால் விளைச்சல் குறையும் என்பதில்லை. சொல்லப்போனால், ஆட்கள் அதிகமாக இருப்பதுதான் விளைச்சலைக் குறைக்கிறது என்பது என் வாதம். ஆட்களைக் குறைத்து விளைச்சலை அதிகப்படுத்தி, இறக்குமதியைக் குறைக்கவேண்டும், மாறாக ஏற்றுமதி செய்யவேண்டும் என்பதுதான் என் வாதம். எனவே கால்வின் க்ளீய்ன் அரிசி, 5000 ரூபாய் என்பதெல்லாம் அதீதக் கற்பனைகள்.

   Delete
  2. Dear Badri,
   Naam nam paarambariya muraiyilaana vivasayaththai maranthathaal thaan intha nilai. Meendum Iyarkai vivasayaththukku maarinal vivasaya selavukal kurainthu vivasayikkum makkalukkum laabam kidaikkum. per capita enbathu ellam maayai. Makkalukku kuraintha vilayil unavu proutkal kidaiththaal marra ellame kidaiththu vidum.

   Delete
 3. I agree Agriculture should be made profitable. But for that reason, it doesnt mean that we have to swith to service industry. A country cannot benefit or grow with specialization in one or two industries alone.

  Government should invest in agriculture - not by giving money, but by taking steps to make agricultarist moving towards better farming methods and reeping benefit.

  I value a lot of your opinions.. but this one seems very much absurd.

  ReplyDelete
  Replies
  1. Look at every developed country and the percentage of people who work in agriculture. Look at what they actually produce.

   Delete
 4. நமக்கு என்ன வருதோ அத மட்டும் ஒழுங்கா பண்ணினா போதும்.
  கொஞ்சம் பிரபலம் ஆகிட்டா எத பத்தி வேணும்னாலும் கருத்து சொல்றேன்னு கெளம்பிட கூடாது.
  உங்களுக்கு புத்தகம் நல்லா விக்க தெரிஞ்சா அத மட்டும் பண்ணுங்க.
  விவசாயம் பண்ணவும் அத பத்தி உருப்படியா பேசவும் நெறைய பேரு இருக்காங்க.

  ReplyDelete
  Replies
  1. In all fairness to Badri, he only gave his opinion when he was invited to a show and here also this is blog and he can write his opinion. He did not go to a street corner and started shouting. Reasonable people can always disagree with counter arguments and facts but personal attack on the other persons can be avoided.
   Regards!
   Srini

   Delete
  2. Highly irresponsible comment. If you don't agree to his viewpoints there's a way to tell that.
   I know very little about agriculture, but these kind of healthy(sparing you) discussions makes people like me who live in the urban jungle start atleast thinking about it in a different dimension.

   Delete
 5. விவசாயம் லாபகரமாக இருக்க வேண்டும் என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இடைத்தரகர்கள் ஒழிந்தால் ஒழிய இது சாத்தியமில்லை. நிறைய விளைச்சல் இருக்குமானால் விலை ஒரேயடியாக வீழ்ந்து விடுகிறது. இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.அதாவது அதிக விளைச்சல் ஏற்பட்டால் விலை வீழ்ந்து போட்ட பணத்தைக் கூட எடுக்க முடிவதில்லை. எவ்வளவு விளைத்தாலும் வாங்கிக் கொள்கிறோம் என்று கூறுகின்ற உத்தரவாதம் இருந்தால் விளசாயிகள் விலை வீழ்ச்சிக்குப் பயப்படாமல் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போவார்கள்.
  விவசாயிகளுக்கு அந்த உத்தரவாதத்தை யார் த்ருவார்கள் என்பது தான் கேள்வி

  ReplyDelete
 6. நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில் கூறுகிறேன். தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இன்று பள்ளியில் படிப்பவர்களில் எத்தனை மாணவர்கள் நான் விவசாயம் செய்யப்போகிறேன் என்று கூறுவார்கள். வேறு வழியில்லாததால்தான், விவாசாயத்துறையில் அதிகமானோர் இருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்.

  ReplyDelete
 7. Economic surplus can be created only by increasing productivity. Application of science and technology is the best way to increase productivity. Without productivity, competing in market is not going to be easy. Even if few decided to only use manual techniques for agricultural development, they would not be able to compete in the market. If people who practice agriculture manually are ready to just live a very frugal life for themselves, without competing in the market, they may be able to do so. But the harsh reality is everyone wants to have better living standard,which is defined, rightly or wrongly, as working less. The only way you can achieve this is by mechanization. We may not like the change. But it would be forced on them. With increasing population, if we have to increase agricultural production in large scale, modern mechanized scientific farming is the only way. Some of us may be emotional about this issue. But sooner than later, it would forced on us.

  ReplyDelete
 8. திரு.பத்ரி,
  விவசாயம் குறித்த உங்கள் ஒவ்வொரு வாக்கியமும் சரியானது. இதே கருத்தை வலியுறுத்த நான் 2 விவரங்களை தர விரும்புகிறேன். ஒன்று புரிதல் கணக்கு
  இரண்டு அசல் கணக்கு.

  (1) நான் கடந்த 8 வருடங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். நாட்டாமை பாஷையில் கூறுவதானால், சுற்றியுள்ள எட்டு-பட்டி
  கிராமங்களில் நான் பலரை சந்தித்துள்ளேன். இதுநாள் வரை ஒருவர் கூட விவசாயத்தை ஈடுபாட்டுடன், சந்தோஷமாக செய்வதாக என்னிடம் கூறியதேயில்லை.
  கவனியுங்கள். நான் இருப்பது தஞ்சாவூர் மாவட்டம். Fertile பிரதேசம். இங்கேயே இந்த நிலைமை என்றால், சட்டீஸ்கரிலோ, ஜார்கண்டிலோ வாழும்
  பழங்குடியினரின் நிலையை கணிப்பது மிகச்சுலபம். நீங்கள் எழுதியது போலவே, விவசாயத்தில் ஈடுபடுவோர் பெரும்பாலும்: ஒன்று கடைசி தலைமுறையினர்,
  அவர்களுக்கு பிறகு நிலங்கள் அவர்களின் வாரிசுகளால் விற்கப்பட்டுவிடும்.வாரிசுகள் நகரங்களுக்கு போயாயிற்று. இரண்டு, அசமஞ்ச, படிப்பு ஏறாத
  குழந்தை விவசாயத்தை ஏதோ பேருக்கு செய்து கொண்டிருப்பார்.

  அடுத்து சமூக அந்தஸ்து என்பதைப் பற்றியும் இங்கே கூறியாக வேண்டும். ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த விவசாயக்கூலி, கிராமத்தில் கீழ்த்தரமாக
  கருதப்படும் இதை செய்வதை விட, கும்பகோணத்திலோ, திருச்சியிலோ ஒரு ஹோட்டலில் Securityஆக வேலை செய்வதை பெருமையாக கருதுகிறார்.
  நில உரிமையாளர்களே பலர் என்னிடம், சார், விவசாயம் செய்கிறேன் என்று என்னால் பொது இடங்களில் கூறினால் தாழ்வு மனப்பான்மை வருகிறது.
  நமக்கு ரொம்ப சில்லியாகக் கூட இருக்கும். அவர்கள் கூறுவது, நீங்கள்ளாம், பேண்ட் சர்ட் போடுரீங்க,நாங்கள்ளால் வேட்டிதானே.

  கவனியுங்கள் இதையெல்லாம் எவ்வாறு சரிசெய்வது? So Simple. சரி செய்யவே முடியாது. இதை நான் புரிதல் கணக்கு என்கிறேன்.
  (நகைச்சுவையாக கூறுவதானால், சீனாவில் The Great Leap Forwardல் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் ஓட்டிக்
  கொண்டு செல்லப்பட்டார்களே! அதைப் போல, விவசாயத்தை முன்னேற்ற, சென்னை போன்ற நகரங்களிலிருந்து, பத்ரி போன்றவர்களுக்கு கடப்பாரை,
  மம்முட்டி போன்றவற்றை அளித்து எங்கள் கிராமத்திற்கு ஓட்டி வர வேண்டும். ஒத்துக்கொண்டால் சோறு, இல்லையேல் அதே கடப்பாரையினால் மரணம்.
  Hopefully என் ஆசான் Maoவின் பங்காளி ஒருவர் இந்தியாவில் அதிகாரத்தில் வராமல் இருந்தால் சரி. எனக்கு! சத்தியமாக கடப்பாரை மரணம்தான்)

  (2) நீங்கள் கூறும் விவரங்களையே ஒரு புள்ளிவிவரத்துடன் தருகிறேன். இந்திய மத்திய அரசின் புள்ளிவிவர கணக்கின்படி, இந்தியாவில் 100 பேர் வேலை
  செய்து 100 ரூபாயை உருவாக்குகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், 55 பேர் விவசாயம் மூலமாக 15 ரூபாயையும், வெறும் 45 பேர் விவசாயம் அல்லாத
  துறைகளில் 85 ரூபாயையும் உருவாக்குகிறார்கள். இந்த விவசாய அடிவருடிகள் தலைகீழாக நின்று பிரம்ம பிரயத்தனம் செய்து, விவசாய வருவாயை
  20 ரூபாயாக உயர்த்தினாலும், அவர்களில் பெரும்பான்மையானோர், ஏழ்மையில்தான் இருந்தாக வேண்டும். இது ஒன்றும் Algebra கணக்கு அல்ல.
  சாதாரண மனக்கணக்கு தான். ஆகவே வருவாயை பெருக்குவதை செய்ய முடியாத நிலையில், ஈடுபடுவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்
  என்பதும் எளிமையான கணக்குதான். (தொடரும்)

  R Balaji

  ReplyDelete
 9. (3) நீங்கள் கூறுவதைப் போலவே, சிறு விவசாயிகளுக்கு மானியம் அளிப்பதால் அவர்களுக்கும் உபயோகம் இல்லை. சமூகத்திற்கும் உபயோகம் இல்லை.
  விதை, உரம், மோட்டார், மின்சாரம், பூச்சி மருந்து என்று அனைத்துக்கும் மானியம் அளிப்பது போதாதென்று, கொள்முதல் விலை என்று இன்னொரு
  பெரிய மானியத்தையும் எவ்வளவு நாளைக்கு அளித்துக் கொண்டிருப்பது?

  சிறு விவசாயிகளிடம் உள்ள நிலங்களை எவ்வாறு ஒன்று சேர்ப்பது?
  (அ) நில உச்சவரம்பு திட்டத்தை நீக்கி விட வேண்டும். பணக்காரர்கள் பண்ணை விவசாயத்தை பெரிய ஸ்கேலில், வியாபார நோக்குடன், நஷ்டங்களையும்
  சில சமயங்களில் தாங்கிக் கொண்டு செய்திட ஊக்குவிக்க வேண்டும்.
  (ஆ) மானியங்களை பெருமளவில் குறைத்து விட வேண்டும். சிறு விவசாயிகள் நிலத்தை பணக்காரர்களிடம் விற்று விட்டு வேறு வேலைக்கு சென்று
  விடுவர்.
  (இ) பணக்காரர்கள், இயந்திரங்களின் உதவியோடு, கூலிக்கு ஆளில்லை என்ற பிரச்சினை இல்லாமல் விவசாயம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

  விவசாய பிரச்சினை முழுவதும் தீர்ந்து விடும் என்று நான் கூறவில்லை. ஆனால் பரிட்சார்த்த முறையில் சில மாவட்டங்களிலாவது இதை நடைமுறை
  படுத்தலாம் என்பது என் கருத்து.

  (4)அடுத்து இயற்கை விவசாயம் என்றொரு குழு சுற்றிக் கொண்டிருக்கிறது. "அறிவியலை ஆதரிக்கிறோம்-ஆனால்" என்று முன்னுக்கு பின்னால் உளறிக்
  கொண்டு, மாட்டு சாணி என்றெல்லாம் புலம்பிக்கொண்டு, "நிலம் மலடாகி விட்டது, விவசாய பொருட்கள் விஷமாகி விட்டது" என்று பேய்க்கூச்சல்
  போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது. இக்குழுக்கள் கூறுவது உண்மையானால், என் தாத்தா, என் அப்பா, நான் என்று 3 தலைமுறைகளாக,
  நன்றாக உரம் போட்டு உருவேற்றிய நெல்-அரிசியைத்தானே சாப்பிட்டு வருகிறோம். என்ன ஆயிற்று எங்களுக்கு?

  இக்குழுவினர் ஒரு வரலாறை மறந்து விட்டார்கள்-1961ல் ஒட்டு நெல் கோதுமை விதைகள் திரு.போர்லாக்கினால் அமேரிக்காவில் கண்டுபிடிக்கப்படுகிறது-
  அன்றும் விவசாயிகளின் பேய்க்கூச்சல்தான்-நேரு முயற்சியை கைவிடுகிறார்-1963 பஞ்சம், பட்டினி-அதே போர்லாகிடமிருந்து நம் சுவாமிநாதன் ஒட்டு
  விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறார்-20 மில்லியன் டன் உற்பத்தி இரண்டே ஆண்டுகளில் 200 மில்லியன் டன்னாக உயர்கிறது.-தானியங்களை
  சேமித்து வைக்க இடமே இல்லையாம்-அரசுப் பள்ளிகளிலெல்லாம் தானியங்கள் சேமிக்கப்படுகின்றன. பட்டினி சாவு என்பதே இல்லாமல் ஆக்கியது
  ஒட்டு விதைதான், அறிவியல்தான், இரசாயண உரங்கள்தான். ஒரு தொகுதி மக்கள் இறந்தாலும் பரவாயில்லை, இயற்கை விவசாயமே செய்யலாம் என்று
  கூறுமா இந்த அரை அறிவியல் எதிர்ப்புக்குழு.

  (5) மரபணு மாற்றப்பட்ட தானியங்கள் அமேரிக்காவில் 15 வருடங்களுக்கும் மேலாக நடைமுறை படுத்தியாகி விட்டது. யாரும் சாகவில்லை. எந்த
  சுற்றுசூழலுக்கும் எந்த மாசும் ஏற்படவில்லை என்று அனைத்து Peer Reviewed அறிவியல் சஞ்சிகைகளும், பெரும்பாலான அறிவியலாளர்களும்
  கூறியாகி விட்டது. அமேரிக்காவிலும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் உற்பத்தியை நிறுத்த முடியவில்லை. ஏனெனில் ஆதாரம் இல்லை. பயம்தான் இருக்கிறது.
  ஆனால், இந்தியாவிலுள்ள சில குழுக்கள் பேய்க்கூச்சல் போட்டுக் கொண்டு, மனிதனின் Primal Fearஐ எழுப்பிக் கொண்டு தாங்களும் கெட்டு மற்றவர்களையும்
  கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  அடுத்து திரு.மோடி ஆட்சிக்கு வந்தவுடன், இயற்கை விவசாய கூக்குரலை மசாஜ் செய்து, மரபணு மாற்றப்பட்ட தானிய விதைகளுக்கு எதிர்ப்புகளை மீறி
  அனுமதி அளித்தால் அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மக்கள் தொகைக்கு ஈடாக மகசூல் பெறலாம். இல்லையேல் இறக்குமதிதான்.

  கடைசியாக, தைரியமாக நீங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கு வாழ்த்துக்கள்.

  R Balaji

  ReplyDelete
  Replies
  1. 1) Please go through the following video for clarification in Natural or Organic or Zero budget farming.
   (https://www.youtube.com/watch?v=y0xmEDq3NIs&feature=player_embedded#t=252) .
   2)You h ave mentioned that 3 generation people are good by eating the rice produced with the help of fertilizers. So the same also can be produced by Natural farming without the cost you spent for fertilizers and for pesticides. On the basis of money and health Natural way of farming is best.
   One important point is that nature reveals things gradually or slowly so whatever the impact it will known to you slowly(in your body or in field).
   3)You have the mirage of production of more grains due to Green revolution.But what is the present scenario. More lands lost its fertility and Punjab got its special train it's name is Cancer train.
   (http://www.npr.org/templates/story/story.php?storyId=103569390)
   4) More and more you use seeds from labs(hybrid and genetically modified seeds) then you have to depend on companies, and you can't save seeds on your own.(it will be a crime) then companies impose intellectual property act on you.
   5) Those (lab)seeds can't withstand natural changes.So you have to again depend on fertilizers and pesticides.
   6) Why the European countries and United states have fixed more price for organically grown foods than other food items?
   I replied here because the clarification is necessary for us on an important issue, if there's any mistake point it to me sir.

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 10. யானைக்கும் அடி சாருக்கும்...

  ReplyDelete
 11. விவசாயம் பற்றி இன்று நாட்டில் பலருக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் விவசாயத்தை விட்டு விலகிபால ஆண்டுகள் ஆகின்றன. தங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான். லாபமில்லாத ஒரு காரியத்தை என் தொடரவேண்டும்? பக்கிரிசாமி அவர்கள் சொன்னதுபோல வேறு வழிஇல்லாதவர்கள் தான் விவசாயத்தில் இருக்கிறார்கள். இன்றைக்கு விவசாயம் செய்யும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களைக் கேளுங்கள்: தமது அடுத்த தலைமுறையினர யாரும் விவசாயத்திற்கு வரத் தயாரில்லை என்பதை உறுதி செய்வார்கள். விவசாயிகளின் கஷ்டத்தை மெயின்ஸ்ட்ரீம் மீடியாவில் யாருமே எழுதுவதில்லை என்பது தான் துரதிர்ஷ்டமானது. உங்கள் முயற்சி முதல் முயற்சியாக இருக்கட்டும். ஒரு நல்ல விவாதத்திற்கு வழிவகுக்கட்டும். - இமயத்தலைவன், சென்னை

  ReplyDelete
 12. அக்பர் ஜோசியம் போல் உள்ளது: “உங்கள் உறவினர் எல்லோரும் உங்களுக்கும் முன் இறந்துவிடுவார்” என்று ஜோசியர் சொன்னதில் அக்பருக்கு கடுங்கோபம் வந்ததாம். ஒரு வாரம் கழித்து மாறுவேடத்தில் அதே ஜோசியர், “உங்கள் குடும்பத்திலேயே மிகவும் நீண்ட நாள் வாழ்வீர்கள்” என்று சொன்னதை அக்பர் பாராட்டி பரிசு தந்தாராம். ஒரே கருத்து, சொல்லும் விதமே சுவை.

  கோடிக்கணக்கில் நெசவாளர்கள் இருந்த இந்தியா, ஐரோப்பியருக்கு அணிய துணி விற்ற இந்தியா, ஆங்கில விசை தரிகளாலும் நீராவி இயந்திர புரட்சியாலும் சில காலம் துணிகளை இறக்குமதி செய்யும் நாடாக மாறியது. இதை வில்லங்கத்தனமாக மட்டுமே காட்டி, நம் வரலாற்று பாடம் பாதி கதையை மட்டும் சொல்கிறது. இன்று இந்தியா விசைத்தரிகளை கொண்டு துணிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது. துணிப்பஞ்சம் எங்கும் இல்லை.

  ஓரு தலைமுறை நெசவாளிகள் சிறிது காலத்திற்கு ஏழைகள் ஆயினர். ஆனால் பணக்காரர்கள் மட்டுமே ஒரு வருடத்தில் பல துணிகள் வாங்கும் காலம் மறைந்து, நடுத்தர மக்கள் மட்டுமல்ல, ஏழைகள் கூட, மாதாமாதம் பல துணிகள் வாங்கும் நிலைக்கு உலகச் செல்வம் பெருகியுள்ளது.

  விவசாயமும் இது போல் தான். முப்பது கோடி மக்களுடைய அமெரிக்காவில் ஒரு கோடி மட்டுமே விவசாயம் செய்கின்றனர். ஆனால் 120 கோடி மக்களுடைய இந்தியாவில் 60 கோடி விவசாயத்தில் உள்ளனர். நெசவாளர்களின் எண்ணிக்கை என்ன?

  தொலைகாட்சிகள் படம் காட்டாமல், வார்த்தை விவாத கூடங்களாகவே உள்ளன. மக்கள் 12 வருடம் காங்கிரஸ் கல்வியின் பொய்களூட்டி, சோஷலிச கம்யூனிச பொருளியல் கருத்துக்கள் மட்டுமே கற்று கொடுக்கப்பட்டு தவறான கருத்துகளை கற்றுள்ளனர். சிந்தை மாற ஒரு சிறந்த அக்பர் ஜோசியர் வேண்டும்.

  ReplyDelete
 13. Sir,
  You have all the rights to speak out your opinion, but you are not an ordinary person. You are in the respectable position in this society and a well educated person. So what ever you say it will have it's impact, if......if (anyhow) the message is incorrect then also people will believe it. Up to now i read almost all of your postings and they were all much informative and has expressed your interest and clarity about the issues. But this article is not a complete one and and i think you don't have much experience in this field(except reading the statistical information from media sources). So there needs to be a rethinking about this topic.
  I strongly condemn the point( அரசு, அரசுப் பணத்தை எடுத்து விவசாயிகள் கையில் கொடுத்து முதலீடு செய்துகொள் என்று சொல்ல முடியாது. கூடாது. விவசாயிகள் வங்கிகளில் கடன் கேட்டால், நியாயமாகப் பார்த்தால் வங்கிகள் கொடுக்கவே கூடாது. எந்தவொரு கஷ்ட ஜீவிதருக்கும் கடன் கொடுப்பது விழலுக்கு இறைத்த நீர்போல.). I think govt should try to uplift the poor people with the help of rich people and with policy makers. A single person or single family is not willing to help poor, this is the current situation in society, why should govt should be like that? they have to help the needy and poor people. If you come to social media you have sometimes support and sometimes oppose.This is my simple opinion sir.

  ReplyDelete
 14. How many of you (who are against Badhri) know abt agriculture. He didn't say any thing wrong. He said that agriculture should be profitable like any other business and farmers should fix the price not the government.

  ReplyDelete
 15. Shri badri is saying that people should be taught to fish and not be fed with fish.

  ReplyDelete
  Replies
  1. Hello, He didn't say that. He says, agriculture is not profitable, so farmers should find better means of employment and income.

   We should find ways to making agriculture organically profitable and not forcing the farmers to take up alternate vocations. This sounds nice and gives picture of empathy towards farmers. but, not good for the country. A country of this population needs a balanced Agri-Manufacturing-Service sectors in the economy to provide gainful employment to all the strata of the society. What Badri advocates is wrong.

   Delete
 16. Mr.Somes,

  Before responding to your Clarifications aka your fears,let me tell you about myself.
  I believe in science and science only. No strings attached.

  Some days back, I was conversing with an old lady who has a good scientific academic background. I told her that during solar and moon eclipses, lot of indians do not eat and there is no scientific proof that food eaten during eclipse will do harm. She insisted that eventhough it will not show immediately, there will be side effects later in our life. I insisted that in USA, EU and middle-east or all over the world excluding india, people do eat during eclipses and they have not faced any problems.

  Have you got her problem? it is fear and faith. She wants to cling to a faith that was cling to by our ancestors. Even if we give proofs she won't change. Also she has fear that she may face problems if she eats during eclipse. Let me tell you simply. We can do nothing about her or anyone who have these fears and faiths. Only exposure to scientific facts for a long time may reform her. Also if she is adamant, she won't see any truths because she wants to live in fools-paradise.ok, She has her full freedom to live like that.

  Now coming to your response to this blog,

  You have asked me to point out the errors, I am doing it.
  (1)Regarding youtube video, Please point me to a peer-reviewed video and not some so called scietist's fantasies.I don't waste my time in seeing these videos, and i will read only New Scientist or Scientific American journals etc.. or point me to peer-reviewed article about natural farming by Indian Agricultural ministry or Scientifically authorised institution.

  Now to make it simple, the man in this video shall approach indian agricultural ministry's so many research project facilities and prove to impartial jury of experts and let it become a mechanism of farming. If someone says, he has cure to AIDS, will we believe him? he has to go to ICMR, prove his medicine to impartial experts and if accepted, the medicine will be recommended by Ministry of Health and family welfare and can be consumed by AIDS patients. This is the system that we are
  following. Even if this process is mind-blowing, unless it is accepted by
  Agricultural ministry, it is nothing and will be of no use.

  Simple Q? will you follow any rumours as weather reports if you live in Orissa? I will listen only to Indian Meterological Institute. The same applies true here.

  (2)"Fertilized farming can be replaced by natural farming" is it your view or any agri scientist's view? Do you have proof? How to scale Natural farming to 120 crore people's needs.
  "Fertiliser impact will be known to you slowly"-Again same Q?is it your view or Medical Scientist's view?

  (3)"mirage of more grains due to green revolution"-In Mr Rahul's bhasha-nonsense-I gave you proof. You can check indian agriculture ministry's website or your grand father to know the proof.
  "More lands lost its fertility"-Could be reasonably true. we should not play with words.It is not 100% infertile. Solutions can be found using new science and definitely not by traditional methods.
  To be Contd
  R Balaji

  ReplyDelete
 17. (4)"Dependence on seeds by corporate companies"-Reasonaly true-But again not fully true.It is socialistic fear of anti-americanism which is not the present world scenerio. After WTO agreements, indian companies also can do the same production. If we don't produce, we should suffer. It is as simple as that. Suffering means more imports of seeds.

  (5)"Lab seeds can't withstand natural changes-may depend on fertilisers"-Totally untrue. Read any peer-reviewed articles in New Scientist or Scientific American and you will know the facts (If you want to). Some people and groups are bull-dozing ordinary people with wrong-information, mis-information, half-truths, bull-shits, dubakoor-nonsense to society and due to fear, lot of people believe in them. Believe in science. If you do, You will get peace of mind and a good night sleep.

  (6)EU and USA fixed high-price for organic foods-Economic Q-If I get an answer, I will update here.

  As you have rightly pointed out, that clarifications are needed. But I believe, We need scientific-facts, also the current limitations of science, and future prospects to overcome them.

  Don't ever believe in Subjective Experience like "My uncle told me-How he can be wrong", "A Celebrity wrote a blog-It should be true" and very importantly "A Scientist wrote a book-How he can be wrong".

  Go always for objective proofs and Scientific consensus. Otherwise you have the whole freedom to believe in shits, nut-case internet sites which are in my terminology "Bull shits vomited by cave-men".

  I repeat again. For the past 15 years, USA is producing GMO seeds in Oil also and used in every food products and consumed by almost everyone in USA. No one died, No one had side effects. No proofs that this GMO farming destroyed environment.

  Lastly, humans ie. our ancestors's ancestors (tribals) about 10000 years ago started artificial farming. Do you know, nature did not ask us to deforest and start farming of grains. our ancestors did. Because we want to have more grains, fruits, vegetables for expanding population. If our ancestors did not do that about 10000 years ago, most probably, we will not be like this today. Also cross breeding was tried, tested, re-tested, again-tested continuously for generations together. The best example is today's corn. which is selectively mated, re-mated and achieved. What GMO does is, this is done with precision to change the DNA. Do you know also our ancestors cross-breed horses and donkeys to produce Koveru-donkeys which is used extensively even today by Indian army in Himalayas. Because they can withstand hostile environment and also can bear lot of weights.

  Now I am requesting you to see this youtube video which is produced by Scientific American journal which lists these 10000 years of cross-breeding history.
  http://www.youtube.com/watch?v=JMPE5wlB3Zk

  Also, I request you to subscribe to New-scientist or Scientific american or Live science internet websites science stories using any RSS reader and feel the science.

  If you think that science is weird, scientists are there to subjugate you, make you slave, you are not alone.

  There are groups in western world where there are people who say "Moon is made of Cheese", "No one stepped into Moon-It was a NASA trick", "Earth is flat" etc..

  You have a choice in modern scientific world. You can choose "bull shits vomited by cave men" or choose objective proofs with scientific consensus.

  If you choose the former, you can pack your bags and settle in Sathyamangalam or mudumalai forests because only there you can have perfect natural life.

  For us poor scientific oriented people, we accept limitations of today's science and not exaggerate them, ridicule them, and we hope that these limitations will be sorted out in future so that our next generation will live a more happy life.

  Choice is yours.

  With kind regards
  R Balaji

  ReplyDelete
 18. Dear Badri,
  I did watch that particular episode of 'Neeya Naana'. Ilango Kallanai was very critical of your view points. I was hoping to see your reply. Was it edited out?

  ReplyDelete
  Replies
  1. There was a long argument but only small portion has come out, but that is what you can expect in a program where nearly 5 hours of footage has to be brought within 1.5 hours for showing. That is why I have written this blog. I will write more on this.

   Delete
 19. முக்கியமான தானியங்களுக்கு அரசுதான் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்கிறது. இதனால் அரசிடம் எப்போதும் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலையிலேயே விவசாயிகள் இருக்கவேண்டியுள்ளது. ------------------------------------------------------ இது போன்ற காரனங்களால்தான் விவசாயம் லாபம் இல்லாமல் போய்விட்டது. மேலும் பீகார், உபி போன்ற மாநிலங்களில் மண்டிகளில் அயோக்கிய இடைத்தரகர்கள் உட்கார்ந்து வேண்டுமென்றே விவசாயிகளின் சரக்கைக் காக்கவைத்து அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள். இது எல்லாமே விவசாயத்தில் விவசாயிகளுக்கான ஆதரவையும் ஆர்வத்தையும் குலைக்கும் முயற்சியே. இதை எப்படி சரி செய்வது என்று பாருங்கள். கூட்டுறவு என்ற அற்புதமான முறையை குலைத்துப்போட்ட சுயநல அரசியல்வியாதிகளல்தான் பல பிரச்சனைகள். இதையெல்லாம் சரிசெய்யாமல் சர்வீசுக்குப் போ , மெக்கானிக்காப் போ என்று சொல்வது சரியல்ல. உங்கள் மகள் படிக்கும்போது ஏதாவது கவனக்குறைபாடோ, பள்ளியில் ஏதேனும் சிறு இடரோ இருந்தால் .... அதை முதலில் எப்படியாவது சரிபண்ண முயற்சிப்போமா என்று செயலாற்றாது , அம்மா உனக்குப் படிப்பே வேணாம் பேசாமல் நாட்டியம் கற்றுக்கொள் , இல்லை சினிமாவில்தான் நல்ல காசு, பேசாமல் சினிமாவில் நடி என்று சொல்வீர்கள் போலிருக்கிறது.

  ReplyDelete
 20. குவாண்டிட்டி vs குவாலிடி என்பததுதான் நீங்கள் தொட நினைக்கும் ஆதார சுருதி என்றால் நாம் இன்னும் அந்த இடத்துக்கு வர வில்லை.

  இந்தியா விவசாய நாடு என்று கத்திக்கொண்டிருப்பது வெறும் வாய் வீராப்பில்லை; இந்தியாவின் சீதோஷணம் இயற்கை அமைப்பு மிகவும் வரப்ரசாதமானது அதை நாம் உணராமல் நாமும் தொழில் முன்னேற்றம் என்ற வேற பாதையில் சென்றோமானால் காந்தியை குத்தி கொன்று போதித்த நேருவிய காங்கரஸ் போல் இந்தியாவின் மக்களை சரியாக தவறான வழிக்கு சென்றவர் ஆவோம்.விவசாயம் சார்ந்த தொழில் முன்னேற்றம் சரியான பார்வையை கொண்டு வரும் ..

  ReplyDelete
  Replies
  1. முதலில் விவசாய நிலங்களைக் குறைக்கவேண்டும் என்பதாகவோ விவசாயம் என்பதையே குறைக்கவேண்டும் என்பதாகவோ நான் சொல்லவில்லை. விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையவேண்டும் என்று மட்டும்தான் சொல்கிறேன். விவசாயம் என்பது பிற தொழில்துறைகளைப் போன்று லாப நட்டக் கணக்கின் வரையறைக்குள் வரவேண்டும். இந்தியாவில்தான் பல குழுவினரும் தங்களுக்கும் ஒரு சிறு துண்டு நிலமாவது வேண்டும் என்று போராடுகிறார்கள். (உதாரணம்: நிலச் சீர்திருத்தம், பஞ்சமி நிலம், பஞ்சமி நிலம் திருடப்படுதல், பஞ்சமி நிலத்தை மீட்டுத்தா என்று கோரல்) குட்டிக் குட்டித் துண்டு நிலங்களை வைத்துக்கொண்டு என்னதான் பயிர் செய்து வாழ்ந்துவிட முடியும்? நான் சமீபத்தில் சென்னைக்கு அருகில் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள தலித்துகள் பலரிடமும் நிலம் அருகிலேயே உள்ளது. ஆனால் யாரும் பயிர் செய்யவில்லை. சிலர் நிலத்தை விற்றுவிட்டார்கள்; ஆனால் வாங்கியவர்களும் பயிர் செய்யவில்லை. ஆக, நிலம் பயிர் செய்யப்படாமல் தரிசாகத்தான் உள்ளது. (தலித் என்றால் பயிர் செய்யமாட்டார் என்று நான் சொன்னதாக ஒரு புது ஈக்வேஷனை யாரும் போடாமலிருந்தால் நல்லது.) பயிர் செய்யாதவர்களைக் குற்றம் சொல்லமாட்டேன். அவர்கள் நிலத்தில் நல்ல விளைச்சல் காணவேண்டும் என்றால் என்ன முதலீடு தேவை என்று நான் ஆராயவில்லை. முதுகொடிய என்ன வேலை செய்யவேண்டுமோ, தெரியவில்லை. எனவே வேறு வேலை கிடைத்தால் நிலத்தை விற்றுவிட்டுப் போவதுதான் சரியான வழி.

   நான் சொல்வதும் இதைத்தான். நிலம் என்பது விவசாய உற்பத்திக்கான ஓர் அடிப்படைப் பொருள், அதிலிருந்து லாபம் ஈட்ட முடியாது என்ற நிலை வருமானால் அந்த நிலத்தைக் கட்டி அழுதுகொண்டிருப்பது அபத்தம் என்று அனைவரும் உணரவேண்டும். இங்கு செண்டிமெண்டுக்கு எந்த இடமும் இல்லை. அதேபோல விவசாயக் கூலிகளாக இருப்போர் அனைவரும் கவனமாகச் சிந்திக்கவேண்டும். நாலுக்கும் ஐந்துக்கும் விவசாயக் கூலிகளாக இருந்து வேலை கிடைக்கும்போது வருமானம் என்று வாழ்வதா அல்லது வேறு திறனைப் பெற்று விவசாயத்திலிருந்து விலகி நல்ல வாழ்க்கையை நடத்துவதா?

   இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் கொடுத்தால் போதும்.

   Delete
  2. ஐயா,
   ஒரு விவசாயியாக ஒருவருடைய வாழ்க்கையையும், பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒருவருடைய வாழ்க்கையையும் பார்க்கும் போது நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி. நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கருத்துகளை பறிமாறிகொள்ளலாம், வாழ்க்கை என்று வரும் போது பொருள் சேர்க்க என்ன வழியோ அதைதான் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம். (குட்டிக் குட்டித் துண்டு நிலங்களை வைத்துக்கொண்டு என்னதான் பயிர் செய்து வாழ்ந்துவிட முடியும்?) இதுவே யதார்த்தம்.

   Delete
 21. I saw that particular episode of Neeya Naana - though it was a good discussion for a TV show on economics, people jumping between macro and micro economic problems and solutions. While your perspective on agriculture (to be specific, agricultural economics) was from a top to bottom view, with a policy framework in consideration of resource allcoation across multiple sectors, Ilango et.al. were talking from a bottom to top perspective i.e. stakeholder views on agriculture rather than agricultural economics. A healthy debate has to include both these perspectives and in that sense, it was one. A proper policy should have a broader framework that can accomodate multiple stakholder inputs - framework meaning economic objective and constraints (social, cultural and political). Of course, the devil is in the detail - what is the objective function and what are the constraints.

  When you and others (Balaji) say that some of the farmers want their children to take up jobs in service (IT) sector or that some people do not want to identify themselves with farming, you represent one section of the stakeholders. At the same time, there is a section of people who identify with farming - for these people, moving out of agriculture to take up a factory job (because of a labor surplus) is as alien and insulting for a computer science graduate asked to work as Electrical Engineer in substations or farming (people may take up bank clerk post but not field work), due to economic slowdown and labor surplus IT labor - No insult to Electrical Engineers ( I am one myself) but then it is a fact.

  Coming to your questions, there are no black and white type of answers and one cannot think in isolation of economic considerations alone and this is true for all sectors and not just agriculture. And also, Economics is not about rationalization alone.

  Regards
  -Srini

  ReplyDelete
 22. As per Ministry of Statistics data, more than 600 million people are engaged directly in Indian Agriculture sector. Do you think India's Manufacturing & Service sectors have competitiveness and Innovation to employ atleast 60 million (10% of 600 Mn) in next 10 years?

  ReplyDelete
  Replies
  1. You make it sound like, "hey, the agri gives them a job at least and pays them,; is your manufacturing and service sector capable of that?" The answer is, "NO, the sectors are not concerned. It is the job of the people who are in the Agri sector to be concerned and leave the sector and go to manufacturing and ask for a job there." For that they have to upgrade their skills. The onus is on those who are in the agricultural sector to quit.

   Actually this is going to happen in India anyway. I think more than 60 million will move into manufacturing and service sectors over the next 10 years.

   My idea is to see if this can be speeded up. Not all manufacturing has to be cutting edge, competitive or innovative. Run of the mill will do to start with. Anything that will fill the gaps in our system. Then, over time, like Japan and Korea, quality will happen, innovation will happen.

   Also, Agri sector has to be de-stressed by reducing the people depending on it.

   Delete
 23. This is wrong direction. Badri is suggesting corporate culture in agriculture. Who will decide the price for agriculture products after this is been implemented. A lobby will start in agriculture products and slowly the government will allow corporates to decide the price for agriculture products. if the government allow farmers to decide the price the for the products they can make profit now.

  Corporates know that agriculture cannot be profitable department with current situation else they would some how entered into agriculture field.

  I am basically from a agriculture family, i know how my father and grand father were happy 20 years before when they were actively doing agriculture, the piece of mind, health, lively life that we cannot get in corporate culture. i am in USA now and earning in dollars but i am not living a good life in corporate culture.

  But, you suggest it or not, that's what happening now. Current generation is not interested in doing agriculture. I know lot families sold their agriculture lands for their children studies. No one can stop this.

  ReplyDelete
 24. Dear Badri, the possibilities of your ideas getting implemented are equally difficult. Even at large aggregated levels, farming is unviable. Corporates like Tatas have moved out of highly organised farming like Tea and Coffee. The question of farming profitable from a typical business view itself probably need to be looked differently. The fact that a stable market for a basic product like milk has, over a period of time produced a reasonably viable agricultural enterprise (compared to other possibilities in agriculture). The solution i think is far more complicated beyond the ideas of consolidation and moving people out of agriculture. Principles of economics and business do not give sustainable solutions.

  ReplyDelete
 25. // விவசாய நிலத்தின் விலை அதிகமானதாக உள்ளது. அந்தப் பணத்தை வங்கியில் போட்டுவைத்திருந்தால் அதிக வருமானம் கிடைக்கும்.//

  // உற்பத்தி, சேவை ஆகிய துறைகளுக்கு நகரும்போதுதான், இந்தியாவில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்//

  முட்டாள் தனமான வாக்கியம். விவசாய அறிவு கிஞ்சித்தும் இல்லாமல் வெறுமமே பத்திரிக்கை/டிவி செய்திகள் காதில் கேட்டவைகளை மட்டும் வைத்து எழுதப்பட்ட வாக்கியம்.

  இன்றைய நிலவரப்படி நன்செய் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் வருடத்திற்கு செலவு போக "ஒரு லட்சம்" ரூபாய் சம்பாத்தியம் செய்ய முடியும். புன்செய் என்றால் இதில் பாதி.

  நிலத்தின் விலை ஏக்கர் 2/3 லட்சம் முதல் 7/8 லட்சம் வரை. நிலத்தை விற்பதால் வரும் வட்டி வீகிதத்தை கணக்கிட்டுக் கொள்ளவும்.

  சமீபத்தில் எங்கள் 1.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்து [8 மாதப்பயிர்] 2.5 லட்சம் கிடைத்தது. செலவு சுமார் 1 லட்சம் . நிகர லாபம் 1.5 லட்சம். இரண்டு வருடத்தில் தாராளமாக 4 லட்சம் சம்பாதிக்கலாம். எங்கள் நிலத்தின் மதிப்பு சுமார் 10 லட்சம் வட்டி கணக்கு பாத்துக்கோங்க பத்ரி.

  தனி மனிதனால் குறைந்த பட்சம் ஆறு ஏக்கர் சமாளிக்க முடியும். அதிக பட்சம் 10/12 ஏக்கர்.

  ஒரு பையன் அவனுக்கு பூர்வீக தொழில் விவசாயம். கூடுதலாக மளிகை கடையும் உண்டு. 2 ஏக்கர் நிலம்.
  படிச்சது எம்.சி.ஏ 15ஆயிரத்துக்கு சென்னையில குப்பை கொட்டுறான். செலவு போக 7/8 ஆயிரத்துக்கு மேலே மிச்சம் செய்ய முடியாது.
  உற்பத்திதுறை வாழ்க்கை எல்லாம் பேண்ட் சட்டை என்னும் கெளரவத்துலதான் ஓடிக்கிட்டு இருக்கு.

  விவசாயத்தில் நஷ்ட்டம் என்று புலம்புபவர்கள் எல்லாம் அரசிடம் கடன் தள்ளுபடிக்காக கையேந்தி நிற்கும் போலி பிச்சைக்காரர்களே, இவர்கள்தான் சேனல்கள் காட்டும் மைக் முன்னால் வீர உரை ஆற்றுபவர்கள்.

  மேலே கூறியது நிலமுள்ள விவசாயின் நிலை.

  இனி விவசாயக் கூலியின் நிலையை பார்ப்போம்.

  ஆண் என்றால் தினக்கூலி - 300
  பெண் என்றால் தினக்கூலி - 200

  பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் கூலிக்கு செல்பவர்களே; சிறு நிலம் உள்ளவர்களும் கூலிக்கு செல்வதுண்டு. மதியம் வரை வேலை. வீட்டிற்கு வந்த பிறகு தீப்பெட்டி ஒட்டுவது போன்ற வேலைகளை பெண்கள் செய்வதுண்டு. பெரும்பாலும் சொந்தவீடு.

  இவர்களுக்கு இன்றைய உற்பத்தித்துறை[example garment export sector] தரும் சம்பளம் என்ன? மாதம் ஐந்தாயிரம் ஆறாயிரம். கூடுதல் போனஸாக வேட்டி சேலைக்கு பதில்பேண்ட் சட்டை சுடிதார்.

  வாடகைக்கு அழவேண்டும். தண்ணிக்கு அழவேண்டும் இன்னும் என்ன என்னத்துக்கோ அழவேண்டும்.தனிநபர் வருவாயை பார்க்கும் நீங்கள் தனிநபர் செலவையும் பார்க்க வேண்டும் அல்லவா?

  பெங்களூரில் ஒரு உளுந்தவடை -ரூ15
  ஸ்ரீவில்லிபுத்தூரில் அதே உளுந்தவடை -ரூ5

  // குறைந்தபட்ச நில அளவு என்று ஒன்று இருக்கவேண்டும்; அதற்குக் கீழான அளவில் உள்ள விவசாய நிலங்கள் பயனற்றவை. விவசாயத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறையவேண்டும் என்று மட்டும்தான் சொல்கிறேன்.//

  அதாவது விவசாயம் கார்பரேட் கைகளுக்கு செல்ல வேண்டும் அதாவது விவசாயத்துறையும் கார்பரேட்டாக மாற வேண்டும் நீங்கள் கூற வருவதாக எடுத்துக் கொள்ளலாமா?

  நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் யதார்த்தம். விவசாயிக்கு தெரியவில்லை பொன்முட்டையிடும் வாத்தை அறுத்துக் கொண்டிருக்கிறோம் என்று; நாளை அவனது சொந்த நிலத்தில் கார்பரேட்டிடம் அவனது வாரிசுகள் டிராக்டர் ஓட்டுவார்கள் அல்லது சூப்பர்வைசர்களாக இருப்பார்கள் அல்லது அக்ரோ கெமிஸ்ட்களாக இருப்பார்கள்.

  ++++++++++

  விவசாயம் வளர;
  1. இது போன்ற வெந்நீர் ஊற்றும் கட்டுரைகள் பேச்சுகளை தவிர்க்க வேண்டும்.
  2. இணையத்திலும் ஃபேஸ் புக்கிலும் விவசாயம் செய்பவர்களின் இடுப்பெலும்பை ஒடிக்க வேண்டும்.
  3. விவசாயத்தை சிறு அளவில் இயந்தரமயமாக்கினாலே போதும், உள்நாட்டிலேயே விவசாய எந்திரம் & டெக்னாலஜியை உருவாக்க வேண்டும். அதற்கு அக்ரி படிப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.

  இதெல்லாம் சாத்தியமில்லை ஏனென்றால் நாம் ஆட்டு மந்தை கூட்டம்தானே............
  கணிப்பொறி நோக்கி ஓடுகிறோம்;
  அமெரிக்கா நோக்கி ஓடுகிறோம்;
  ஓடுவோம் ஓடுவோம்
  செவ்வாய்க்கு ராக்கெட் விட்டாச்சு
  அங்கேயும் ஓடுவோம்.


  பி.கு:
  இணையத்திலும் ஃபேஸ் புக்கிலும் வெட்டியாக விவசாயம் செய்பவன் அல்ல நான். படித்தது கிண்டியில் பி.டெக். பெங்களூரில் எம்.டெக் / எம்பிஏ. கார்மெண்ட் செக்டாரில் வேலை செய்துவிட்டு [CTC 5L p.a] அதைவிட்டு விட்டு விவசாயம்[சாதாரண விவசாயம்தான், நவீன இயற்கை போன்ற முன் ஒட்டு எல்லாம் கிடையாது] செய்து வருகிறேன். அதைவிட லாபம் அதிகம். சந்தோஷம் அதிகம். நிம்மதி அதிகம். சுவாசிக்கும் சுத்தமான காத்து அதிகம். இப்படி எத்தனையோ அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. சமீபத்தில் எங்கள் 1.5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்து [8 மாதப்பயிர்] 2.5 லட்சம் கிடைத்தது. செலவு சுமார் 1 லட்சம் . நிகர லாபம் 1.5 லட்சம். இரண்டு வருடத்தில் தாராளமாக 4 லட்சம் சம்பாதிக்கலாம். எங்கள் நிலத்தின் மதிப்பு சுமார் 10 லட்சம் வட்டி கணக்கு பாத்துக்கோங்க பத்ரி.

   this is possible, if land is our own...

   Delete
  2. yes possible. the own land with good ground water.

   Delete
  3. I like your post Kathavarayan but still we need to discuss more about this. We can't accept Badri's points and even we can't throw. We need to spend more and more time to do research and find proper solutions because agri is our family profession for at least 2000 years. We can't just throw this within one month/year. It may take time to get clear picture about this. I agree with Badri on one point "reduce the number of people in agri sector" but still we need to spend time to do more study and come up with one good solution.

   Delete
 26. Mr.Badri,

  If any industry which is not running profitably to be shutdown ..?
  Especially Agriculture is a backbone of us. If we reduce its potential, whats our future feeding ... are we going beg for food ... ?

  I do agree your point, ppl moving to service industry would be profitable... but this is not going to give a permanent solution. And pls dont make this stupid statement again and again.

  ReplyDelete