Monday, March 30, 2015

குரோம்காஸ்ட்

கடந்த ஒரு வாரமாக குரோம்காஸ்டைச் சோதனை செய்துவருகிறேன். இந்தியாவில் ரூ. 2999/- ஆகிறது. குரோம்காஸ்ட் என்பது கூகிள் விற்கும் ஒரு குட்டி டாங்கிள். HDMI போர்ட்டில் நுழையக்கூடியது. தனியாக மின் இணைப்பு வேண்டும். மின் இணைப்புக்கு டிவியில் உள்ள USB போர்ட்டையேகூட பயன்படுத்திக்கொள்ளலாம். என்னிடம் உள்ள டிவியில் இரண்டு HDMI, இரண்டு USB போர்ட்டுகள் உள்ளன. உங்கள் செல்பேசி அல்லது பலகைக் கணினியில் பார்க்கும் வீடியோக்களை குரோம்காஸ்ட் மூலமாக உங்கள் டிவிக்கு அனுப்பலாம். பெரிய திரையில் பார்க்கலாம்.

பேண்ட்வித் அதிகமாகி, இணைய மாதக் கட்டணம் குறையும்போது கேபிள் டிவி என்பது சரித்திரமாகிப் போய்விடும். ஒருசில சானல்கள், அவற்றிலும் அவர்கள் எதை எப்போது காண்பிக்கிறார்கள் என்பதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை ஆகியவை போய்விடும். நெட்பிலிக்ஸ் அல்லது அவர்களைப் போன்றோர் இந்தியாவில் கால் பதிக்கும்போது இது வேகமாக நடக்கத் தொடங்கும். குறைந்தபட்சம், இணையத்துக்குச் செல்வழிக்க அஞ்சாத மத்திய தர, நகரக் குடும்பங்களிலாவது கேபிள்/டிடிஎச் காணாமல் போய்விடும்.

என் ஐபோன், ஐபேட் ஆகியவற்றிலிருந்து யூட்யூப் (YouTube), டெட் (TED) குறுஞ்செயலிகளில் வரக்கூடிய வீடியோக்களை குரோம்காஸ்ட் செய்துபார்த்தேன். டெட் மிகவும் தொல்லை தந்தது. அது எதிர்பார்க்கும் பேண்ட்வித் என்னிடம் இல்லையோ என்னவோ. ஆனால் யூட்யூபில் பிரச்னை ஏதும் இல்லை. ஆனால் FastForward, Rewind ஆகியவற்றைச் செய்யமுடியவில்லை. எனவே TV Cast என்ற குறுஞ்செயலியைத் தருவித்து, அதற்கான சில கட்டுப்பாட்டுப் பட்டைகளை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன். இப்போது வேண்டிய இடத்துக்குத் தாவ முடிந்தது. யூட்யூப் போன்றவற்றில் வரும் விளம்பரங்களைத் தொலைக்க முடிந்தது.

இப்போது டெட் வீடியோக்களை மிகவும் ஆனந்தமாகப் பார்க்க முடிகிறது. நேற்று 3டி பிரிண்டிங் தொடர்பான நான்கு வீடியோக்களைப் பார்த்தேன். இப்போதைக்கு 3டி பிரிண்டிங் குறித்த ஒரு தெளிவான கருத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது. இனி வாரத்துக்கு 1-2 மணி நேரம் டெட் வீடியோக்களைப் பார்க்கச் செலவிடுவேன். 3டி பிரிண்டிங் குறித்து அடுத்து எழுதுகிறேன்.

12 comments:

  1. அற்புதமான ஆலோசனை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. It costs approx. 3225 Rupees in Saudi Arabia. I purchased one & testing in my native place Kumbakonam.

    ReplyDelete
  3. Using chrome cast mimic Chinese ezcast :-)). Costs just thousand rupees in many Chinese shopping sites. But have to wait for one month. Very useful

    ReplyDelete
  4. Very useful information. Thanks a TON..

    ReplyDelete
  5. Is it avlbe ay chennai?
    Subbu thatha

    ReplyDelete
    Replies
    1. Available on Amazon.in; you may get it in Ritchie Street too.

      Delete
  6. We can cast directly from mobile apps and chrome browser has a plugin. It is easy to cast from mobile app as chromecast streams directly from WIFI.

    ReplyDelete
  7. குரோம்காஸ்ட் நானும் உபயோகிக்கிறேன்
    இங்கே மகன் வீட்டில் சியாட்டிலில் திரைப்படங்கள் பார்க்க, மிகவும் உதவியாய் உள்ளது. நேற்று மைரோசாப்ட் ஸ்டோருக்கு சென்றோம் அங்கே 3 D Printer பார்த்தேன் அதைக் காணொளியாகவும் ஆக்கியிருக்கிறேன்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    rkc1947@gmail.com

    ReplyDelete
  8. chromecast மற்றும் tvcast ஆகிய இரண்டையும் வாங்கி உப்யோகிக்க வேண்டுமா?கட்டுப்பாட்டுப் பட்டைகளை விலை கொடுத்து வாங்கிக்கொண்டேன் என்று சொல்லி உள்ளீர்கள்.அவை என்ன,என்ன விலை?

    ReplyDelete
    Replies
    1. குரோம்காஸ்ட் என்பது கருவிக்கும் பெயர். அதனை இயக்கக்கூடிய செல்பேசிக் குறுஞ்செயலிக்கும் பெயர். குரோம்காஸ்ட் குறுஞ்செயலி மட்டுமே போதும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய. தவிர, விண்டோஸ் லாப்டாப்பில் குரோம் பிரவுசர் கொண்டும்கூட நேரடியாக வீடியோக்களை குரோம்காஸ்ட் கருவிக்கு அனுப்ப முடிகிறது.

      இப்போது டிவிகாஸ்ட் குறுஞ்செயலி. சில வகை ஸ்ட்ரீம்களை (உதாரணம்: புதிய தலைமுறை டிவி இணையத்தளத்தில் வரும் ஸ்ட்ரீமிங்) குரோம்காஸ்ட் குறுஞ்செயலி வழியாக ஐஃபோன், ஐபேடிலிருந்து குரோம்காஸ்ட் கருவிக்கு அனுப்ப இயலவில்லை. ஆனால் டிவிகாஸ்ட் அதனை சரியாகச் செய்தது. டிவிகாஸ்ட் அடிப்படைச் செயலி இலவசமே. எனவே காசு செலுத்து எதையும் நீங்கள் வாங்கவேண்டியதில்லை. ஆனால் ஒரு வீடியோவைப் பார்க்கும்போது அதில் வேண்டிய ஒரு இடத்துக்கு நகர்த்திச் சென்று பார்க்கவேண்டும் என்றால் அந்த வசதியை டிவிகாஸ்ட் ஒரு in-app purchase மூலம் செய்கிறது. அந்த மேலதிகத் தேவையைப் பெற சுமார் 400 ரூபாயோ என்னவோ செலவழிக்கவேண்டியிருந்தது. இது வேண்டியதில்லை என்றால் நீங்கள் செலவு செய்யவேண்டாம். மேலும் வேறு ஏதேனும் செயலி இதனை இலவசமாகவே உங்களுக்குச் செய்து தரலாம்.

      Delete