Tuesday, August 04, 2015

என்.எச்.எம் ரைட்டர் - விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10-ல் வேலை செய்ய

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1+ல் என்.எச்.எம் ரைட்டர் (NHM Writer) மூலம் தமிழில் (பிற இந்திய மொழிகளில்) எழுதுவது சரியாக நிகழவில்லை. ஷிஃப்ட் விசையை அழுத்தினால் அதன்பின் நடக்கவேண்டிய மாற்றங்கள் சரியாக நடக்கவில்லை. இது ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நுழைக்கப்பட்ட ஒரு அப்டேட்டினால் நிகழ்ந்த குளறுபடி. (Windows update KBKB2975719 changed the way of translating virtual key codes involving shift combinations into characters.) இதனை அவர்கள் சரி செய்வார்களா என்று பார்த்ததில் அந்த மாற்றம் நிகழவில்லை. விண்டோஸ் 10-இலும் இந்தப் பிரச்னை தொடர்ந்தது.

எனவே என்.எச்.எம் ரைட்டரில் மாற்றங்கள் செய்து, விண்டோஸ் 8.1+, விண்டோஸ் 10 ஆகியவற்றிலும் சரியாக இயங்கும் வண்ணம் புதிய ரிலீஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அதனை http://software.nhm.in/products/writer என்ற பக்கத்தில் சென்று இறக்கிக்கொள்ளுங்கள். தற்போதைய என்.எச்.எம் ரைட்டர் வெர்ஷன் 2.9.

என்.எச்.எம் ரைட்டர் செயலி குறித்த சந்தேகங்களை மின்னஞ்சல் வாயிலாகக் கேட்க software@nhm.in என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

9 comments:

  1. Dear Mr Badri
    மிக்க நன்றி. எனக்கு பல மாதங்களாக இருந்து வந்த பிரச்சினை தீர்ந்து விடும்.

    ReplyDelete
  2. தெலுங்கில் தட்டச்சு செய்யும் போது (ஒலிபெயர்ப்பு) ச என்கிற எழுத்து ந என்று மாறிவிடுகிறது. மிகச் சிறிய உருவ வேறுபாடு தான் இ்வ்விரு எழுத்துக்களிலும். ச - స ந - న மேலே இருக்குற டிக் மார்க், அதாவது ஒட்டு கீழே உள்ள மெய்யெழுத்தை ஒட்டாமல் இருந்தால் ச, ஒட்டியிருந்தால் ந.

    அன்பன்,
    விஜய்கோபால்சாமி

    ReplyDelete
  3. மிகவும் நன்றி :)

    ReplyDelete
  4. இந்த மாற்றம் மிகப் பெரிய உதவி.

    சிக்கல் தீர்ந்தது சிரமம் அகன்றது

    ReplyDelete
  5. Dear Sir

    I have been the regular user of NHM Writer software for the last 3 years and as I know Tamil Typewriting it is very helpful for me to write my letters, articles, comments, messages directly in Tamil.

    When I downloaded NHM Writer Version 2.9 from NHM Website and trying to install in my PC, it shows following error message

    Access Violation at address 0052205E in module ‘ NhmWriter.exe’. Write of address 00000054.

    Kindly guide me how to overcome this error for successful installation of NHM Writer software in my Laptop.

    Request your support and help.

    ReplyDelete
  6. nhm writer என்பது மிக மிக பயனுடையது. அதிலும் முறைப்படி டைப்பிங் படிக்காதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    ஆனால் டைப்பிங் கிளாஸ் போய்விட்டு New Typewriter முறையில் அதாவது புள்ளி, கொக்கி போன்றவற்றை எழுத்து எழுதிய பின்பு போடுவது பழகி விட்டோம். ஆனால் NHM Writerல் பழைய டைப் ரைட்டர் முறைதான் இருக்கிறது. அதாவது புள்ளி, கொக்கியை போட்டுவிட்டு பிறகு மெய்யெழுத்துக்களை எழுதுவது. சாப்ட்வேர் டெவலப்பர்கள் New Typewriter லே அவுட் உருவாக்குவார்களா?

    ReplyDelete