Friday, October 16, 2015

இந்திய நாத்திகர்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்ற இரு மராட்டியர்களும் மிகச் சமீபத்தில் கல்புர்கி என்ற கன்னட எழுத்தாளரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை இவர்களைக் கொன்றது யார் என்று துப்பு துலக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் தங்களுடைய நாத்திக அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான அல்லது இந்துமத விரோதக் கருத்துகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதில் தபோல்கர்தான் மிகத் தெளிவாக நாத்திகத்தை முன்வைத்து, மூடநம்பிக்கைக்கு எதிரான குரலைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறவர். இந்தியாவில் இம்மாதிரியான குரல்கள் இதற்குமுன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கோபராஜு ராமச்சந்திர ராவ் (கோரா), தமிழகத்தில் பெரியார், கேரளத்தில் ஆபிரஹாம் கோவூர் போன்றோர் மத மறுப்பு, நாத்திகம், மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பெரியாரின் இயக்கம் தமிழக அரசியலையே ஆட்டம் காணச் செய்தது. கோரா, கோவூர் போன்றோர் அரசியல் தளத்தில் பெரிய மாறுதலைக் கொண்டுவரவில்லை.

கோராவின் An Atheist with Gandhi என்ற சிறு நூல் சமீபத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்தது. மிக ஆச்சரியமான புத்தகம். அதைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை வரலாறு ஒன்றை வாங்கியிருக்கிறேன் (The Life and Times of Gora, Mark Lindley, Popular Prakashan, ISBN: 978-81-7991-457-1).

இன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

கோரா, கோவூர் போன்றவர்களின் உயிருக்கு வராத ஆபத்து, இன்று தபோல்கருக்கு என் வந்தது? இந்துத்துவ உதிரி இயக்கம் எதற்காவது இதில் பங்கு உள்ளதா? இது ஆராயப்படவேண்டிய ஒன்று. யார் இச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்படவேண்டும்.

கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மூவரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது சிலருக்கு இன்று அரசியல் காரணங்களுக்காக ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையைக் கண்டறிவதற்கு உதவாது என்று நினைக்கிறேன்.

***

கோராவின் நாத்திகக் கருத்துகளை இவ்வாறு சாராம்சப்படுத்தலாம்: மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது கடவுளுக்கான தேவை என்பது இல்லை. சூப்பர்நேச்சுரல் (அமானுஷ்யம்) என்று எதுவுமே இல்லை. மதங்களைத் தாண்டிய மனிதமே அவசியம். இந்துமதத்தின் சாதிக் கட்டுமானமும் தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.

இதையேதான் தமிழகத்தின் பெரியாரும் கூறினார். ஆனால் இருவரும் கூறும் முறைகளில் மிகப் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.


கோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.

13 comments:

  1. வரவேற்கத் தக்க யோசனை

    ReplyDelete
  2. கோவூர் அவர்களின் ஒரு புத்தகம் தமிழில் வெளி வந்துள்ளது. பதிப்பகம் நினைவில்லை. அவரது வாழ்க்கை இலங்கை கேரளம் என விரிந்தபோதும் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய் பாபா செய்யும் சில வித்தைகளை அறிவியல்பூர்வமாக எதிர்த்து இருக்கிறார். அவரை சந்திக்க இவர் விரும்பி இருக்கிறார். அவர் அனுமதிக்கவில்லை. இவரே அவர் நம்பமுடியாத படிக்கு அவர் முன்னே ஆஜராகி இருக்கிறார். அப்போது அவர் வியக்கும் வகையில் சில பல ஜாலங்களை நடாத்தி இருக்கிறார்.நிற்க.... நீங்கள் குறிப்பிடுவது போல நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்ப எத்தனித்தாலே அது ஒரு வித முரட்டுத்தனமாகத்தான் தோன்றும் ஆத்திகர்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. "பெரியார் புத்தக நிலையம்" itself have publishied ஆபிரஹாம் கோவூர்'s book(s) in Tamil.

      Delete
  3. '' irai nambikkai'' is purely personal. it is the last straw for the suffering soul.
    there is no necessity for interfering with this.

    ReplyDelete
  4. http://dravidianbookhouse.com/index.php?route=product/product&path=75&product_id=251

    ReplyDelete
  5. http://dravidianbookhouse.com/index.php?route=product/product&product_id=270&search=%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+

    ReplyDelete
  6. /இன்றைய தேதியில் மதமும் மதவாதமும் வலுவாக இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் வருங்காலச் சமுதாயம் அறிவியலை ஆழ்ந்து கற்கும்போது, அனைத்து மதங்களுமே பொய்யானவை, மனிதர்களால் உருவாக்கப்பட்டவை, அவற்றின் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்./ சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நானும் உங்களைப் போல் தான் சாதியும் கடவுளும் நம் நாகரீக சமூகத்தில் இருந்து சீக்கிரமே காணாமல் போய் விடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இரண்டுமே இந்திய சமூகத்தில் இன்னும் பல்கிப் பெருகி யிருக்கின்றன என்பது தான் வேதணையான நிதர்சனம். கடல் கடந்து வேலைக்குப் போனாலும் அங்கும் தன்னுடைய சாதியையும் கடவுளையும் சுமந்து கொண்டு போய் அங்கும் அதை நிறுவி வழிபடும் இந்திய மனோபாவம் அவ்வளவு சீக்கிரம் மாறாது என்று தான் தோன்றுகிறது. மாறினால் மிகச் சந்தோஷமே!

    ReplyDelete
  7. Dear Badri,
    EVR was not against religions/ caste system or caste discrimination, but only against Brahmins.
    He was also advocating people to join Islam.
    He only usurped the cause of caste hindus to make them revolt against Brahmins and didn't bother about suppression of Dalits by those caste hindus.
    This is a major reason why casteism has continued so strongly in Tamil nadu.
    Dravidian politics will never allow caste system to get abolished/ vanish from people of Tamil Nadu.

    K.Ganapathi Subramanian

    ReplyDelete
    Replies
    1. ஈ வெ ரா - தலித்களுக்கு ஆதரவாக பேசவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை. மு. கருணாநிதியின் கேலிச்சித்திரமே அதற்க்கு சான்று. அவரது ஒரே இலக்கு பிராமணர்கள் தான். Its nothing but his own personal agenda. நீதி கட்சியில் இருந்த தலைவர்கள் அனைவரும் உயர்சாதி இந்துக்களே.

      Delete
  8. அனபின் பத்ரி,
    இறைமறுப்பு என்பது தன்னளவில் இறை நம்பிக்கையை மறுப்பது, மற்றும் இதை
    அறமுறையில் பிரச்சாரம் செய்வது, அவ்வளவே., ஆனந்த மூர்த்தி செய்த்து போல
    கடவுள் திருமேனிகள் மீது சிறுநீர் கழித்து, அதனால் எனக்கு ஏதும் நடக்கவில்லை
    என்று கொக்கரித்து, அதை குல்பர்க்கியும் எள்ளி நகையாடி மேலும் அவதூறு செய்த்தாக கிடைக்கு ம் செய்திபற்றி என்ன கூறுகிறீர்கள்?நம் நாட்டில் படையெடுத்து
    வந்து, நம் அரிய கோயில் சிலைகளை உடைத்து அவற்றின் மீது ஏறி நின்று,
    எனக்கு ஒன்றும் நடக்கவில்லை, பார், அதனால் இந்துக்கடவுள்கள் சக்தியற்றவர்கள்
    என்று ஆர்பரித்து, கத்தி முனையில் மதமாற்றம் செய்த மூட முகமதியர்கள் பற்றி
    என்ன சொல்கிறீர்கள்?சற்று யோசியுங்கள்.

    ReplyDelete
  9. முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியமாகிறது.
    Please read http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=27444&ncat=2:
    ஜார் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமான பின், ரஷ்ய அதிபரான லெனின், கம்யூனிச ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அப்போது, தன் நெருங்கிய சகாக்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி இது...
    'நாம், நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால், மானிட இயலுக்கு ஒத்து வருகிற ஒரு வாழ்வியலைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய, வெறும் ரொட்டி மட்டும் போதாது.
    'அவன் ஆத்மாவைத் திருப்திப்படுத்த, ஒரு மதமும் தேவைப்படுகிறது. நான் எல்லா மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிச சித்தாந்தங்களுடன் ஒத்து வருவது போல் எந்த மதமும் என் அறிவுக்கு புலப்படவில்லை ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர!
    'தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப் பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். அவசரப்படாமல் ஆற, அமர நன்றாக சிந்தியுங்கள்!
    'இந்தக் கேள்வி, கம்யூனிசத்திற்கு வாழ்வா, சாவா என்ற கேள்வி. எந்த அளவு நேரம் வேண்டுமோ, அந்த அளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் கொண்டுள்ள கருத்து, தவறாக இருக்கலாம். ஆனாலும், நாம் நிதானமாக, பொறுமையாக யோசிக்க வேண்டும்.
    'கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என, நான் நினைக்கிறேன்...' என்றார் லெனின்.
    லெனினின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு.
    லெனின் குறுக்கிட்டு, 'ஓராண்டு கழித்து, இதே இடத்தில் நாம் கூடுவோம். அப்போது எந்த மதத்தை நாம் ஏற்றுக் கொள்வது என்பது பற்றி ஒரு முடிவுக்கு வருவோம்...' என்று கூட்டத்தை முடித்தார்.

    ReplyDelete
  10. கோரா, கோவூர் ஆகியோரின் சில புத்தகங்களையாவது தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். முரட்டுத்தனமாக இல்லாமல், நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டியது இன்றைய காலத்தில் அவசியம....முன்னது சரி...கலைச்செல்வங்களை கொண்டு வாருங்கள்..பின்னது????நிறைய யோசிக்கணூம்

    ReplyDelete