Tuesday, March 22, 2016

பேலியோ டயட் புத்தக விற்பனை

ஒவ்வொரு பதிப்பாளரும் ஒரு கனவுப் புத்தகத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறார். அந்தப் புத்தகம் பல பத்தாயிரம் பிரதிகள் விற்கவேண்டும் என்பது அவரது பெருவிருப்பம். அதுவும் அச்சாகி அடுத்த இரண்டு நாள்களில் ஆயிரம் பிரதி விற்பனை ஆகவேண்டும்.

அப்படி எங்களுக்குக் கிடைத்திருக்கும் கனவுப் புத்தகம்தான் நியாண்டர் செல்வன் எழுதியுள்ள “பேலியோ டயட்”.

நியாண்டர் செல்வன், பேலியோ டயட் எனப்படும் ஸ்டார்ச் இல்லாத, கொழுப்பு முதன்மையான உணவுமுறையை இணையத்தில் தமிழில் பிரபலப்படுத்தியவர். ஆரோக்கியம் & நல்வாழ்வு என்னும் ஃபேஸ்புக் குழுமத்தின் முக்கியப் பொறுப்பாளராக இருப்பவர். இந்தக் குழுமத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கொழுப்பு உணவுமுறை குறித்து தினமணி.காம் இணைய இதழில் நியாண்டர் செல்வன் தொடர்ந்து எழுதிவந்ததன் தொகுத்து மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் “பேலியோ டயட்” கிழக்கு வெளியீடு.

இந்தப் புத்தகத்தை ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம் செய்து எத்தனை பேர் வாங்குவார்கள் என்று பார்க்க முடிவு செய்தோம். புத்தகம் வரப்போகிறது என்ற தகவல் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழும உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஞாயிறு காலை இந்திய நேரப்படி தகவல் வெளியானதும், முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 400 புத்தகங்களுக்குமேல் இணையம் வழியாக ஆர்டர் வந்துவிட்டது. முதல் இரண்டு நாள்களில் 1,000 புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துவிட்டது. இன்றுமுதல் புத்தகங்கள் ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

அடுத்தவாரம் முதற்கொண்டுதான் புத்தகம் தமிழகத்தின் கடைகளுக்கே செல்லப்போகிறது. ஆஃப்லைன் வாசகர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றியோ அல்லது இந்த உணவுமுறை பற்றியோ கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

பொதுவாக இணையக் குழுக்கள் புத்தகம் விற்க உதவா என்று பலர் பேசி நாம் கேட்டிருக்கிறோம். இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் பேசுவதற்குத்தான் லாயக்கு; புத்தகம் வாங்குபவர்கள் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் வேறு எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் கன்வென்ஷனல் விஸ்டம். ஆனால் “ஆரோக்கியம் & நல்வாழ்வு” போன்ற இணையக் குழுக்கள் மிகுந்த ஃபோகஸ் கொண்டவை. பேலியோ உணவுமுறையைப் பயன்படுத்திப் பயனடைந்தவர்கள் பலர் அங்கிருக்கிறார்கள். இந்த உணவுமுறைமூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா, ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியுமா, நீரிழிவு நோயை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியுமா என்று விரும்பும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஒரு மதம்போல இந்த உணவுமுறை “எவாஞ்சலைஸ்” செய்யப்படுகிறது. அதனால்தான் இந்த அளவுக்கு விற்பனையில் வெற்றிகண்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் விற்பனை வரலாறு படைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789384149680.html (ரூ. 150 மதிப்புள்ள இந்தப் புத்தகம் மார்ச் 26 வரை ரூ. 100-க்குக் கிடைக்கும்.) அடுத்த வாரத்துக்குள் டிஜிட்டல் வடிவில் டெய்லிஹண்ட், கூகிள் புக்ஸ் போன்ற இடங்களிலும் இந்தப் புத்தகம் கிடைக்கும். ஃபோன்மூலம் வாங்க விரும்புபவர்கள் 94459-01234 என்ற எண்ணை அழையுங்கள்.

5 comments:

 1. dear sir, i wish to buy the book today.
  morning 10am onwards i tried the phone no
  94459 01234, 9445979797, 9500045609.
  many times. no answer. only computerized reply.
  will you please give the address where i can buy
  five copy. thank you. you send sms to 9486100803.
  please dont take this as a complaint.
  thank you sir.
  chenniyappan.

  ReplyDelete
 2. Hi Sir,

  Thanks for the info.

  I have already ordered the copy.

  Regards,
  Bala

  ReplyDelete
 3. இந்த உணவு முறையில் என்னுடைய கொலஸ்டிராலை மாத்திரை எதுவும் எடுக்காமல் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன்.ஸ்டாடினுக்கு பை பை சொல்லியாச்சு.

  ReplyDelete
 4. மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்துவிட்டது. 30% தள்ளுபடிவேறு. நன்றி.

  ReplyDelete
 5. சண்முகநாதன்Tue Mar 29, 11:26:00 AM GMT+5:30

  எனக்குப் பத்து புத்தகங்கள் உடனடியாகக் கிடைத்தன. பேலியோ உணவு முறையில் பெரும் நாட்டம் கொண்டவன் நான். புத்தக வடிவமைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குறை. புத்தகத்தில் அடைப்புக்குறிகளில் உள்ள ஆங்கிலச் சொற்களின் எழுத்துரு தமிழ் வடிவிலேயே உள்ளது. ஒரு வேண்டுகோள் - விரைவில் நீங்கள் வகை வகையான பேலியோ உணவுப் பதார்த்தங்கள் சமைக்கும் முறைகளை விளக்கும் புத்தகம் ஒன்றையும் சமையல் குறிப்புகளுடன் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். நன்றி.

  ReplyDelete