1. டிஷ்நெட் டி.எஸ்.எல் என்னும் நிறுவனம் தரும் சேவை.
இது 64 kbps டி.எஸ்.எல் சேவை. சென்னை மற்றும் கோவையில் நகரின் மத்திய பகுதிகளில் கிடைக்கிறது. மாதம் ரூ. 1,000 ஆகும். நான் வீட்டில் வைத்திருக்கும் (கோபாலபுரம்) இந்தச் சேவை மிகவும் வசதியானது. இதற்கு தொலைபேசி இணைப்பு தேவையில்லை. இந்த நிறுவனத்தாரே தொலைபேசிக் கம்பி போன்று ஒரு இணைப்பை வீடு வரை கொடுக்கிறார்கள்.
இந்த தளத்தில் இதைப் பற்றிய மற்ற செய்திகளை அறியலாம். மிகவும் நம்பகமான சேவை. ஆனால், முன்பணம் செலுத்த வேண்டியிருக்கலாம் (நான் இரண்டு வருடங்கள் முன்பு சேர்ந்த போது, கிட்டத்தட்ட ரூ. 30,000 கட்டி, மாதம் ரூ. 2,000 என்று இருந்தது, பின்னர், மாதம் ரூ. 1,000 ஆனது.)
இதிலேயே தினம் ஒரு மணி நேரம் மட்டும் உபயோகிக்கும் மாதிரியான திட்டங்களும் உண்டு. ஒரு நாளில் குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது வீட்டில் இணையத்தை உபயோகிப்பவர்களுக்கு இது செலவைக் குறைக்கும். 1 மணி நேரத்திற்கு தொலைபேசிக் கட்டணம் ரூ. 30 + இணையக் கட்டணம் குறைந்தது ரூ. 5 = ரூ. 35; எனவே 30 மணி நேரத்திற்கு ரூ. 1,050 ஆகும்.
2. BSNL வழங்கும் DIAS சேவை
இது கோவை மற்றும் சென்னையில், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தொடங்கப் பட்டது. இந்தியா முழுவதும் ஒவ்வொரு telecom circle-இலும் ஒரு ஊரிலாவது தொடங்க வேண்டும் என்று ஆரம்பித்தது. இதுவும் மேற்கூறிய DSL என்னும் தொழில் நுட்பம் ஆகும். 128 kbps வேகத்தில், மாதத்திற்கு ரூ. 850 ஆகிறது. IIT-Madras தொழில் நுட்பத்தில் தயாரானது. Banyan என்னும் சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தால் செய்யப்படும் கருவிகள் மூலம் வேலை செய்கிறது.
ஆனால், எல்லா இடங்களிலும் இப்பொழுது கிடைப்பதில்லை. சென்னையில் கூட அண்ணா சாலை exchange-இல் மட்டும்தான் இப்பொழுது இந்த வசதி உள்ளது. அங்கும், உள்ள இணைப்புகள் எல்லாம் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் பெரு நகரங்கள் பலவற்றில் வரக்கூடிய சேவை.
இது BSNL தொலைபேசி இணைப்புக் கம்பிகள் வழியாகவே வந்தாலும், தொலைபேசிக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஒரே நேரத்தில் தொலைபேசியையும், இணைய இணைப்பையும் உபயோகிக்கலாம்.
இதை நான் நேரடியாக பரிசோதனை செய்து பார்த்தது இல்லை.
மேலும் விவரம் அறிய செல்லவும்.
3. டச்டெல் (பார்த்தி) DSL சேவை:
இப்போது சென்னையில் கிடைக்கிறது. எங்கெல்லாம் டச்டெல் தொலைபேசி இணைப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மேற்கூறிய DIAS மாதிரியேதான். இப்பொழுதுதான் வீட்டில் வாங்கியுள்ளேன் (பரிசோதனைக்காக). ஒரு திட்டத்தில், மாதம் ரூ. 1,000க்கு 64 kbps வேகத்தில், மொத்தம் 350 MB வரை கீழிறக்க அனுமதி.
டிஷ்நெட் சேவையை விட தரம் சற்று கம்மிதான், இப்பொழுதைக்கு.
தற்போது டச்டெல் சென்னை, மதுரை, திருப்பூர், வேலூர், பாண்டிச்சேரி மற்றும் கோவையில் உள்ளது. மேலும் விவரம் அறிய செல்லவும்.
4. ஹாத்வே கேபிள்
இது, மற்றும் பல கேபிள் இணைய இணைப்முகள் (KMR?) சென்னையில் இந்த கேபிள் நிறுவனம் உள்ள இடங்களில் கிடைக்கிறது.
இது போன்ற 24-மணி நேர சேவை இப்பொழுது தமிழ் நாட்டின் மற்ற நகரங்களில் கிடைக்க சில வருடங்க்கள் ஆகும்.
5. என்-லாக் (n-logue)
இது IIT-Madras மூலம் உருவாக்கப்பட்ட ISP. இந்நிறுவனம் பெருநகரம் அல்லாத மற்ற இடங்களில் corDECT என்னும் தொழில் நுட்பம் மூலம் இணைய இணைப்பைக் கொடுக்கும் முயற்சியில் உள்ளது. தற்போது நெல்லிக்குப்பம், மதுரையை ஒட்டிய மேலூர், போன மாதம் முதல் திருப்பூர் போன்ற இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவள்ளூரில் வேலை நடக்கிறது. மயிலாடுதுறை, அறந்தாங்கி, ஒரத்தநாடு, முசிரி, வேடசந்தூர், ஆரணி, அருப்முக்கோட்டை, அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் இந்த சேவையைத் துவக்க உள்ளனர். இதன் மூலம், இந்த ஊர்களிலும், இதச் சுற்றியுள்ள சிறு கிராமங்களிலும் wireless மூலமான இணைய இணைப்பு வரும். இதைப் பற்றி மேலும் தகவல் அறிய செல்லவும்.
தமிழகம் முழுதும் உள்ள தொலைபேசிக் கம்பிகள் பழைய செப்புக் கம்பிகளாக இருப்பதாலும், இந்த இணைப்பகங்களில் உள்ள கருவிகள் இன்னும் புதுப்பிக்கப் படாமல் இருப்பதாலும், dial-up என்னும் முறையில் பல தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இவை மாற பல வருடங்கள் ஆகும். மற்றும், dial-up மூலம் செலவும் அதிகமாகும். (2 நிமிடத்திற்கு ரூ. 1.20 + இணைய இணைப்புக்கான கட்டணம்)
மற்றுமொரு இணைப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் தொலைபேசி மூலம் செய்யலாம். ஆம், உண்மை. கடந்த 10 தினங்களாக இதை பரிசோதனை செய்து வருகிறேன்.
ரிலையன்ஸ் மொபைல் வாங்கும்போது இணையத்தில் இணைக்கும் USB அல்லது serial port இணைப்பானையும் சேர்த்து வாங்குங்கள். இது ரூ. 1,200க்குக் கிடைக்கும். இதை உங்கள் கணினியில் பொருத்தினால், ஒரு நிமிடத்திற்கு 40 பைசாவிற்கு இணைய இணைப்பு கிடைக்கிறது. பின்னர் அதே மொபைல்-பேசியை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாகவும் அலையலாம். இது தமிழகத்தில் பல ஊர்களில் கிடைக்கிறது. உங்கள் ஊரில் கிடைக்கிறதா என்பதை அறிய செல்லவும்.
115 kbps வேகம் என்று "உடான்ஸ்" விட்டாலும், முழு வேகம் கிடைப்பதில்லை. சில சமயம் இணைய தளங்களைப் பார்ப்பதில் தொல்லை ஏற்படுகிறது. ஆனாலும், இதை விட குறைந்த விலையில் BSNL கூட இணைய இணைப்பு கொடுப்பதில்லை. கடந்த பத்து நாட்களில் ஒரு சில தொல்லைகளைப் பார்த்திருக்கிறேன். அதனால் இதை நான் இன்னும் முழு மனதோடு பிறருக்கு 'வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூற மாட்டேன். ஆனால், வேறு வழியே இல்லை என்பவர்கள் இதை பரிசோதித்துப் பார்க்கலாம்.
மேலும் தகவல் அறிய செல்லவும்.
Pac-Man வீடியோ கேம்
5 hours ago
No comments:
Post a Comment