பல நாள் கழித்து blog பக்கம் மீண்டும் பார்வை. கடந்த 4 வாரங்களில் பல சுவையான விஷயங்கள்.
அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம். முதலில் பேச வேண்டியது குறைந்த விலைக் கணினி பற்றி.
Via Technologies, INC. என்ற நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் கணினி விற்க ஏற்பாடு செய்துள்ளது. 733 MHz வேகத்துடன் கூடிய chip மற்றும் அனைத்து உபகரணங்களோடு நமக்கு ரூ. 17,000 க்குக் கிடைக்கிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரவி பிரதானை நேற்று சந்தித்துப் பேசினேன். இன்னும் கூட விலை குறைக்கலாம் என்று சொன்னார்.
இந்த கணினியை Linux மூலம் இயக்குவது பொருத்தமானது.
மேலும் விவரம் அறிய பிரியா நிறுவனம் இணைய தளத்தை அணுகவும்.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
9 hours ago
No comments:
Post a Comment