Saturday, October 02, 2010

காந்தியின் சத்தியாக்கிரகத்தைப் புரிந்துகொள்ளல்

மற்றொரு காந்தி பிறந்தநாளை நெருங்குகிறோம். அன்றைய தினம் விடுமுறை என்பது பெரும்பாலும் மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தரும் நிகழ்வு. மற்றபடி அவர் நமக்குச் சுதந்தரம் வாங்கித் தந்தார் என்றும் அவர் நம் தேசத் தந்தை என்றும் அவரது படம் ரூபாய் நோட்டுகளில் உள்ளது என்றும் நாம் அறிவோம்.

காந்தி, சத்தியாக்கிரகம் என்றதோர் ஆயுதத்தைத் தந்தார் என்று படித்திருக்கிறோம். ஆயுதத்தைக் கையில் ஏந்திப் போராடாமல் சத்தியத்தைக் கையில் ஏந்திப் போராடுவதுதான் சத்தியாக்கிரகம்.

இன்று நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல போராட்டங்களைப் பார்க்கிறோம். கடை அடைப்பு, தடையை மீறி நடத்தப்படும் கூட்டங்கள் அல்லது கண்டன ஊர்வலங்கள், ஒத்துழையாமை, வேலைக்குச் செல்லாமல் இருத்தல் போன்ற பலவும் காந்திய வழியிலிருந்து பெறப்படும் போராட்ட வடிவங்களே. ஆனால் காந்திய வழியிலானவை அல்ல.

சமீபத்தில் நடந்த இரண்டு போராட்டங்கள் மனத்தை மிகவும் பாதித்தன. ராஜஸ்தானில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் சில உயிர்கள் பலியாகின. பின்னர் அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போன உயிர்கள்? தொடர்ந்து தில்லியிலும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்; பின்னர் விலக்கிக்கொண்டனர். அங்கும் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும். இவை நியாயமான போராட்ட வடிவங்களா?

காந்திய வழியில் முதலில் போராட்டத்துக்கு அடிப்படையில் சத்திய உணர்வு இருக்கவேண்டும். அடுத்து, பிற அனைத்து சட்டபூர்வமான முறைகளையும் பின்பற்ற வேண்டும். அதாவது கடிதங்கள் எழுதி, விண்ணப்பங்கள் போட்டு, பேச்சுவார்த்தை சாத்தியமா என்று பார்த்து, பேச்சுவார்த்தையில் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்து, எங்கும், எதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால் கடைசியாக எடுத்துக்கொள்ளக்கூடிய போராட்டம்தான் சட்ட மறுப்பு, ஒத்துழையாமை, சிறை நிரப்பல் போன்றவை.

ஆனால் அங்கும் காந்தி மிக முக்கியமாக ஒரு கொள்கையைக் கொண்டிருந்தார். போராட்டம், அதில் ஈடுபடும் ஒருவனைப் பாதிக்கலாமே தவிர, அதற்கு வெளியில் உள்ள ஒருவரையும் பாதிக்கக்கூடாது. ஏன், சொல்லப்போனால், யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அந்த எதிரியைக்கூட உடல் அளவில் அல்லது வேறு வடிவில் நம் போராட்டம் பாதிக்கக்கூடாது. அந்த எதிரியின் மனத்தை நம் போராட்டம் அறுத்து, மாறவைக்கவேண்டும்.

இதுதான் காந்தியின் அறவியல். இதனை அவர் செய்தும் காட்டினார். எங்கே? அவரது சத்தியாக்கிரகப் போராட்ட வடிவம் அப்போதுதான் உருவாகிவந்த, இன்னமும் கனிந்திருக்காத தென் ஆப்பிரிக்கக் காலகட்டத்தில்.

அப்போதைய தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள் இந்தியச் சிறுபான்மையினர்மீது எண்ணற்ற சிரமங்களைச் சட்டபூர்வமாகச் சுமத்தியிருந்தனர். இந்தச் சட்டங்கள் அனைத்துமே இந்தியர்மீதான இன வெறுப்பால் தோன்றியவை. உதாரணமாக இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு மனைவியை தென் ஆப்பிரிக்கா அழைத்துவந்தால் அந்த மணம் சட்டப்படி செல்லுபடியாகாது என்றது ஒரு சட்டம். இந்தியர்கள் அனைவரும் பதிவாளர் அலுவலகத்தில் கைரேகைகளுடன் பதிந்துகொண்டால்தான் அவர்கள் சட்டபூர்வமாக அந்த நாட்டில் வசிக்கலாம் என்றது இன்னொரு சட்டம். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இந்தத் தேவை இல்லை. நன்கு கற்ற இந்தியர்கள் ஒரு மாகாணத்துக்குள் நுழையவே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றது ஒரு சட்டம். இப்படி எல்லாமே மோசமான சட்டங்கள். இவற்றை விலக்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான் இந்தியர்களின், காந்தியின் அறவழிப் போராட்டம்.

பல பேச்சுவார்த்தைகள், சில சிறைசெல்லல்கள், பல ஏமாற்றங்கள். ஆனாலும் காந்தியின் தலைமையில் இந்தியர்கள் மனம் தளரவில்லை.

இந்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலர், கரும்புத் தோட்டத்தில் வேலை செய்யும் கொத்தடிமைகள். அப்போது கரும்பை வெட்டும் பருவம். வெட்டவில்லை என்றால் பயிரை நட்ட ‘எதிரிகள்’ நஷ்டப்படுவர். எனவே இந்தியத் தொழிலாளர்கள், கரும்பை வெட்டிக் கொடுத்துவிட்டு, வேலை நிறுத்தம் செய்யவந்தனர்.

மாபெரும் போராட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் தென் ஆப்பிரிக்காவின் ஆங்கிலேய ரயில்வே தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி ஒரு வன்முறைப் போராட்டத்தில் இறங்கினர். உடனடியாக காந்தி தம் போராட்டத்தை ஒத்திப்போடுவதாக அறிவித்தார். இந்தியர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தால் தென் ஆப்பிரிக்க அரசு கடுமையான சிக்கலைச் சந்தித்திருக்கும்.

இந்த ஒரு முடிவே இந்தியர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க ஆட்சியாளர் ஜெனரல் ஸ்மட்ஸின் உதவியாளர் ஒருவர் சொன்னாராம்: ‘எனக்கு இந்தியர்களைப் பிடிக்கவில்லை. அவர்களுக்குத் துளியும் உதவி செய்ய நான் விரும்பவில்லை. ஆனால் என்ன செய்வது? எங்களுக்குக் கஷ்டம் வந்திருக்கும் நேரம் நீங்கள் எங்களுக்கு உதவுகிறீர்கள். உங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்களும் ஆங்கிலேயர்களைப் போல வன்முறையில் இறங்கினால் நான் சந்தோஷப்படுவேன். அப்படியானால் உங்களை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்களோ எதிரிக்கு எந்த விதத்திலும் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று செயல்படுகிறீர்கள். சுயத்தைத் துன்புறுத்தி வெற்றியை அடைகிறீர்கள். அதனால் நாங்கள் செயலற்றுப் போய்விடுகிறோம்.’

இதுதான் காந்திய வழி. இந்திய மருத்துவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வழி.

14 comments:

  1. இந்த சத்தியாகிரகம் இப்போதைய நடைமுறைக்கு சரி வருமா என்பதுதான் கேள்வி? யாருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறதோ அவருக்கு எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால் இதை அந்த எதிர்தரப்புவாதி தவறாக பயன்படுத்திக் கொள்வார் தற்காலத்தில், இல்லையா?

    ReplyDelete
  2. Really a simple and different perspective.

    ReplyDelete
  3. தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவர்கள் போராட்டத்தில் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் . (அவசர சிகிச்சை , அறுவை சிகிச்சை , பிரசவம் ...). elective surgery போன்ற ஒருசில மட்டுமே நிறுத்தப்படும் . நீங்கள் சொன்ன மனு கொடுத்தல் எல்லாம் முடிந்த பின்பே போரட்ட தேதியை அறிவிப்பார்கள் . அரசாங்கத்தின் மெத்தன முடிவு எடுக்கும் நடவடிக்கை மூலமே உயிர் இழப்பு ஏற்படுகிறது .

    எல்லாருக்கும் வேலை நேரம் 8 மணி நேரம் .ஆனால் எங்களுக்கோ 24 மணி நேரம் கூட உள்ளது .

    மற்ற துறை குறித்தும் எழுதி இருக்கலாம் . எனினும் பதிவுக்கு நன்றி !!

    ReplyDelete
  4. Gandhis Sathyagraha had failed on several counts.
    He termed only physical violence only as violence.When you are being ghereoed,that exerts mental violence.He had changed his stances suitably for various people .As an objective analyst he was not so great that Indian Government and the powers that be were trying hard to suppress controversial facts about him being circulated like his brahmacharya experiments etc

    ReplyDelete
  5. நம்ம தாத்தா தங்கம்ங்க , நினைத்தே பார்க்க முடியாத முடுவுகளை உள்ளுணர்வை நம்பி எடுத்திருக்கிறார் , அது சரியாகவும் இருந்திருக்கிறது.

    ReplyDelete
  6. //இவை நியாயமான போராட்ட வடிவங்களா?//

    கண்டிப்பாக நியாயமான போராட்ட வடிவங்களே. அதில் எந்த சந்தேகமும் இல்லை

    தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையிலேயே உயிருக்கு பாதுகாப்பு வேண்டியே அந்த போராட்டம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

    மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவது குறித்து முன்னரே அறிவித்து தான் செய்கிறார்கள்

    அப்படி இருக்கும் போது

    ஒன்று அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்
    அல்லது
    மாற்று ஏற்பாடாக பிற மாநில மருத்துவர்களை / மத்திய அரசு மருத்துவர்களை அழைத்திருக்க வேண்டும்

    ---

    எனவே முன்னறிவிப்புடன் செய்யப்படும் வேலை நிறுத்தம் நியாயமான போராட்டமே

    ReplyDelete
  7. //இதுதான் காந்திய வழி. இந்திய மருத்துவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய வழி//

    வன்மையான கண்டனங்கள்

    நடந்தது என்னவென்று தெரிந்து கொள்ளாமல் எழுதியிருந்தால் அதற்கு கண்டனம்

    அல்லது தெரிந்தே விஷமத்தனமாக எழுதியிருந்தால் அதற்கும் கண்டனம்

    சத்தியாகிரக அடிப்படையில் நடந்த ஒரு பேரணியில் காவல்துறை தாக்கியதை அடுத்தே வேலை நிறுத்தம் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியாதா

    அல்லது தெரிந்து அதை விஷமத்தனமாக மறைத்தீர்களா

    ReplyDelete
  8. என்ன நடந்தது என்று தெரியுமா

    On Saturday, at MDM Hospital in Jodhpur, nearly 15-20 attendants of an emergency patient allegedly assaulted a nursing employee as a fan near their patient was not working.

    The incident took an ugly turn and police was called in. "The police did no good, as a resident doctor was attacked by one of the attendants in the presence of police. The police returned around 2 in the morning with heavy force and assaulted medical staff. Later they entered the hostel of undergraduate students and assaulted them," said Dr Nitin Diwedi, a resident doctor in Jodhpur.

    Read more: Resident doctors in state launch indefinite strike - The Times of India http://timesofindia.indiatimes.com/city/jaipur/Resident-doctors-in-state-launch-indefinite-strike/articleshow/6502859.cms#ixzz11Ehoph8C

    The strike was called in protest against the alleged police atrocity at MDM Medical college in Jodhpur where over 60 students, resident doctors and teachers were injured in a lathicharge on Saturday. According to sources, the incident was a fallout of a minor scuffle among a few doctors and attendants of a patient. Nearly 33 residents were apprehended, who were released later.



    Read more: Resident doctors in state launch indefinite strike - The Times of India http://timesofindia.indiatimes.com/city/jaipur/Resident-doctors-in-state-launch-indefinite-strike/articleshow/6502859.cms#ixzz11Ehee1Fu33

    ReplyDelete
  9. புருனோ: நான் எழுதியது சென்றமாதம் ராஜஸ்தானிலும் தில்லியிலும் நடைபெற்ற மருத்துவர் வேலை நிறுத்தங்களைப் பற்றி. இப்போதெல்லாம் மருத்துவர்கள் கிட்டத்தட்ட நாளுக்கு ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வதால் நான் எதைச் சொன்னேன் என்று கண்டுபிடிப்பது சிரமமாகிவிட்டது போலும்.

    மருத்துவர்களில் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் அடித்தால் அதற்கு அவர் செய்யவேண்டியது காவல்துறையில் புகார். உடனடியாக மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்டவேண்டும் என்ற வேண்டுகோள். நிச்சயம் அந்த உறவினர்கள் கண்டிக்கப்பட, கைதுசெய்யப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்காக ஒரு ஸ்டிரைக்? அதனால் அப்பாவி ஜனங்கள் பலர் திண்டாடவேண்டிய நிலை? ஏன், உயிரே போய்விடலாமே?

    ReplyDelete
  10. Dear Sir,
    I have installed Firefox recently. Since, my Internet Explorer and Google Chrome browsers are crashed. After installing the Firefox the browser is working slowly. Moreover the videos of the Youtube, Google Videos and many others are not working. It shows that the Flashplayer is crashed. I uninstalled the flashplayer and re-installed for restoration. But I could not get the video. So, Kindly help me to solve the problem how to watch video and improve the speed of the browse. I am using BSNL -512Kbps. Pl. reply by return e-mail.

    Thanking you,
    Yours,
    G.Munuswamy,
    Chennai Thuraimugam,
    gmunu_2008@rediffmail.com.

    ReplyDelete
  11. //புருனோ: நான் எழுதியது சென்றமாதம் ராஜஸ்தானிலும் தில்லியிலும் நடைபெற்ற மருத்துவர் வேலை நிறுத்தங்களைப் பற்றி. இப்போதெல்லாம் மருத்துவர்கள் கிட்டத்தட்ட நாளுக்கு ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வதால் நான் எதைச் சொன்னேன் என்று கண்டுபிடிப்பது சிரமமாகிவிட்டது போலும்.//

    உண்மைதான் பத்ரி

    நீங்கள் தெளிவாக எழுதாதது என் பிழையல்ல



    மருத்துவர்களில் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் அடித்தால் அதற்கு அவர் செய்யவேண்டியது காவல்துறையில் புகார். உடனடியாக மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்டவேண்டும் என்ற வேண்டுகோள். நிச்சயம் அந்த உறவினர்கள் கண்டிக்கப்பட, கைதுசெய்யப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்காக ஒரு ஸ்டிரைக்? அதனால் அப்பாவி ஜனங்கள் பலர் திண்டாடவேண்டிய நிலை? ஏன், உயிரே போய்விடலாமே?

    ReplyDelete
  12. //மருத்துவர்களில் ஒருவரை நோயாளியின் உறவினர்கள் அடித்தால் அதற்கு அவர் செய்யவேண்டியது காவல்துறையில் புகார். //

    காவல்துறை மருத்துவர்கள் மீது லத்திசார்ஜ் செய்கிறதே

    அடி வாங்கிக்கொண்டே யாராலும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது

    அதனால் தான் வேலை நிறுத்தம்

    //உடனடியாக மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்டவேண்டும் என்ற வேண்டுகோள். நிச்சயம் அந்த உறவினர்கள் கண்டிக்கப்பட, கைதுசெய்யப்பட, தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.//

    இங்கு கோரிக்கை கைது அல்ல
    கோரிக்கை பாதுகாப்பு

    //ஆனால் அதற்காக ஒரு ஸ்டிரைக்?//

    வேறு என்ன செய்ய முடியும்
    தொடர்ந்து அடி வாங்கிக்கொண்டே இருக்க முடியுமா

    // அதனால் அப்பாவி ஜனங்கள் பலர் திண்டாடவேண்டிய நிலை? ஏன், உயிரே போய்விடலாமே? //

    சம்பள உயர்விற்காகவோ வேலை நிறுத்தம் செய்து அதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது

    அதே போல் இடப்பங்கீட்டிற்கு எதிராக சாதி வெறியன் வேணுகோபல் தூண்டிவிட்டு நடந்த ஏய்ம்ஸ் வேலை நிறுத்தத்திற்கு எதிராக நீங்கள் கருத்து கூறியிருந்தால் நான் உங்களுடன் உடன்பட்டிருப்பேன்

    ஆனால் ராஜஸ்தானில் நடந்டது முற்றிலும் வேறு விஷயம்

    இங்கு தங்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே அந்த போராட்டம்

    ReplyDelete
  13. Dear Badri,
    There is no point in comparing Gandhi's way of managing and the current state of affrais in the country.
    There are various reasons
    a)Gandhi was genuine and he admitted his mistakes also
    b)Gandhi had team to sacrifice continosuly and that was his power of followers
    c)British was also trying to be fair or so I understand. They could have just killed Gandhi in an encounter. As we know we have satyendra Dubey (of NHAI) and Senthil ( of IOC )as classic examples. 11 RTI actvisits are killed in our country so far.
    d) Media hype is so much nowadays that a common man can not understand what is right and wrong..Unless you are there on the spot.
    In My opinion we should not use Gandhi anywhere except for individuals who belevive him and his way of life.

    ReplyDelete
  14. இன்று சென்னையில் பல இடங்களில் பேரூந்து போக்குவரத்து இல்லை
    இந்த போராட்டம் ஊதிய உயர்விற்காக இல்லை

    ReplyDelete